top of page
  • Writer's pictureம.சு.கு

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

Updated: Oct 11, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-366

முடிவுரை............!


தூங்காமல் உழைக்கச் சொல்லியிருக்கிறேன் – அதேசமயம்

தூக்கத்தை கெடுத்துக்கொள்ளாதே என்று சொல்லுகிறேன்!


யாரையும் நம்பாமல் உன்மீது நம்பிக்கை வைக்கச்சொன்னேன் – அதேசமயம்

உன்னை சுற்றியுள்ள மனிதர்களை நம்பச் சொல்லுகிறேன்!


எப்போதும் எதையாவது வாசித்துக்கொண்டிருக்கச் சொல்கிறேன் – அதேசமயம்

எப்போதும் எதையாவது யோசித்துக்கொண்டிருக்க சொல்லுகிறேன்!


மறக்காமல் எல்லாவற்றையும் நினைவில் வைக்க சொன்னேன் – அதேசமயம்

அனுபவத்தை மட்டும் வைத்துக்கொண்டு துன்பங்களை மறக்கச் சொல்கிறேன்!


தேவைப்படுவோருக்கு முடிந்தவரை தானம் கொடுக்கச் சொல்கிறேன் – அதேசமயம்

எப்போதும் யாரிடமும் இலவசங்களை பெற வேண்டாம் என்கிறேன்;


புதிய தொழில்நுட்பத்திற்கு வேகமாக மாறச் சொல்கிறேன் – அதேசமயம்

தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி வாழ்க்கை இழக்க வேண்டாம் என்கிறேன்;


உங்கள் பேச்சத் திறமையை வளர்க்க நிறைய பேசச் சொல்கிறேன் – அதேசமயம்

பேச்சை குறைத்து மற்றவர்களின் பேச்சை கவனிக்கச் சொல்கிறேன்;


உன்னால் முடியாது எதுவும் இல்லை என்று போராடச் சொல்கிறேன் – அதேசமயம்

கைமீறும் நேரங்கள், மாற்றமுடியாதவைகளை ஏற்கச் சொல்கிறேன்;


எப்போதும் இருப்பதைக்கொண்டு இக்கணத்தில் மகிழச் சொல்கிறேன் – அதேசமயம்

எப்போதும் எதிர்காலத்திற்கு திட்டம் வகுத்து உழைக்கச் சொல்கிறேன்;


செயல்களை சரியாகவும், அதிவேகமாகவும் செய்யச் சொல்கிறேன் – அதேசமயம்

அவசரம் வேண்டாம், அமைதியும், பொறுமையும் காக்கச் சொல்கிறேன்;


இப்படி இங்கு எழுதப்பட்டுள்ளவற்றில் நிறைய முரண்பாடு இருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் கட்டுரையையும், கருத்துக்களையும் ஏதோ கதைவாசிப்பதுபோல வாசித்திருப்பதாக நான் எண்ணுகிறேன். ஏனெனில், இங்கே கூறப்பட்டுள்ளவைகள் எல்லாம் முரண்பாடில்லாத முரண்பாடுகள். புரிந்தவர்களுக்கு எந்த சமயத்தில் எதை செய்யவேண்டும் என்று தெரியும்.


என்னுடைய அனுபவங்களை, எனக்கு கற்பிக்கப்பட்டதை, நான் படித்தறிந்தவற்றை எனக்குத் தெரிந்த வகையில் உங்களுக்கு எழுதினேன். இவைகள் எல்லாம் உங்களுக்கு வெறும் புள்ளிகள் மட்டுமே. இவற்றை வைத்து கோலம்போட வேண்டியது நீங்கள் தான். எதை எதோடு இணைக்கவேண்டுமென்பதுதான் நீங்கள் அனுபவத்தில் கற்கப்போகும் பாடம். இலக்கு, பணம், ஊழியர், குடும்பம், வாசித்தல், விளையாட்டு, உணவு, ஆரோக்கியம், பயணம், பொழுதுபோக்கு என்று நீங்கள் தினம்தினம் பங்கெடுக்கவேண்டிய 8-10 விடயங்களில் எதற்கு எவ்வளவு முக்கியத்துவம் எப்போது கொடுக்கவேண்டும் என்று சரியான முடிவெடுக்கவேண்டியது தான் இப்போதும், எப்போதும் உங்கள்முன் இருக்கும் சவால்?

  • இந்த சவாலில் வென்றவர்கள், வாழ்வின் வெற்றியாளர்கள்!

  • இந்த சவாலில் விடைதேடி ஒடுபவர்கள் போராளிகள்!

  • இந்த சவாலைப் பற்றி கவலைப்படாதவர்கள் சோம்பேறிகள்!

  • இவர்களின் நீங்கள் எந்த வகை?


நூறாண்டு காலம் வாழ்ந்து மறைந்த பாரதியின்

தந்தையும், பாட்டனும் யாருக்கும் தெரியாது - ஆனால்

39 ஆண்டுகள் மட்டுமே பட்டினியில் வாழ்ந்து பாரதி

ஆயிரம் ஆண்டுகால அழியாத சரித்திரத்தை தனக்கு எழுதிவிட்டான்!!


எவ்வளவு ஆண்டுகாலம் வாழ்ந்தோம் என்பது

வாழும்வரை மட்டுமே கணக்கிடுவோம்!

உயிர்பிரிந்தபின், நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள் என்பதை

இந்த உலகமே கணக்கிட வேண்டும்!


உங்கள் வாழ்க்கை அர்த்தமுடையதாக

நீங்கள் முதற்கண் மனநிறைவு பெற்றிருக்கவேண்டும்!

உங்கள் மனநிறைவில் இந்த சமுதாயம் பயன்பெற்றிருக்க வேண்டும்!


பணத்தின் பின்னால் ஓடுங்கள்

போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்!

எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால்

திரும்பிவர பாதையும் இருக்காது!

தேடிவந்தாலும் அரவனைக்க யாரும் இருக்கமாட்டார்கள்!


என்னால் முடியும் என்று ஓடுங்கள்!

எதுமுடியும்-முடியாதென்று கணக்கிட்டு ஓடுங்கள்!

எல்லாவற்றிற்கும் மாற்றுவழி தயார் செய்து ஓடுங்கள்!

பணத்தை பரிமாற்றப்பொருளாக மட்டும் பார்த்து ஓடுங்கள்!

நம்மைச் சார்ந்த சமுதாயமும் வளரவேண்டி ஓடுங்கள்!


ஒடுவது உங்கள் கடமை!

எப்படி ஓடவேண்டுமென்பது உங்கள் உரிமை!

உரிமையோடு கடமையை தவறாமல் செய்தால்

நாற்திசையிருந்தும் எல்லாவெற்றியும்

உங்களைத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்!



- [ம.சு.கு 10.10.2023]

19 views0 comments

Recent Posts

See All

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

Post: Blog2 Post
bottom of page