top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 365 - “நீங்கள்” மட்டுமே நிஜம்......!"

Updated: Oct 10, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-365

"நீங்கள் மட்டுமே நிஜம்..............!


  • 2003-ஆம் ஆண்டு, ஆரன் ரால்ஸ்டன் என்ற மலையேற்ற வீரர், 127 மணிநேர போராட்டத்திற்கு பின்னர், இறுதியாக உயிர் பிழைப்பதற்காக, பாறை இடுக்கில் சிக்கிய தன் ஒரு கையை வெட்டிவிட்டு தப்பிவந்தார். சரியான கத்தியில்லாமல் ஒருநாள் கையை அறுக்க முயற்சித்து, மறுநாள் எழும்பு மஜ்ஜைகள் தானாய் பாதிக்கப்பட்டு அதை உடைத்து, அவர் தப்பி வந்தார்.

  • இன்று பெரிய வெற்றியாளராக உழைப்பால் உயர்ந்திருக்கும் எண்ணற்ற செல்வந்தர்கள், விளையாட்டு வீரர்கள் எல்லோருமே, “உன்னால் முடியாது” என்ற வார்த்தையை பலமுறை கேட்டு கடந்து வந்தவர்களாகவே இருக்கிறார்கள். “யார் என்ன சொன்னால் என்ன, இங்கு இதை செய்ய வேண்டியது நான் மட்டுமே. இதைச் செய்ய நான் தயாராக இருக்கும்போது, ஏன் மற்றவர் சொற்களுக்கு செவிசாய்த்து விலக வேண்டும்?” என்று தன் திறமைகள் மீது நம்பிக்கைகொண்டு போராடியவர்கள் மட்டுமே வென்றார்கள்;

தனியாய் மலையேற்றத்தின் போது பாறைகள் நகர்வில் மாட்டிக்கொண்ட அவருக்கு தன் உயிரைவிட கையொன்றும் அவ்வளவு பெரிதாக இருக்கவில்லை. இதுதான் வாழ்வின் நிஜம். எதுவொன்றானாலும், அங்கு நீங்கள் இருந்தால்தான் அது உங்களுக்கானது. நீங்கள் இல்லாவிட்டால், அந்த நிகழ்வு வெறும் உலகத்தின் இயக்கம் மட்டுமே. இருப்பிற்கு இணையாக வேறெதுவும் இருக்கப்போவதில்லை என்பதை உணர்ந்ததால், அந்த மலையேற்ற வீரர், கைகளை தானே அறுத்துவிட முனைந்தார். இறுதியில் உயர்பிழைத்தார்.


இங்கு நீங்கள் உயிரோடு இருப்பதுதான் அதிமுக்கியம். நீங்கள் இருந்தால், நீங்கள் எண்ணியதை சாதிக்கமுடியும். உங்கள் கனவுகளை சுமக்க இங்கு யாரும் தயாராக இல்லை. நீங்கள் இருந்தால்தான், உங்கள் கனவுகள் செயல்படும். உங்கள் கனவுகளை கலைக்க ஆயிரம் பேர் வருவார்கள். அவற்றைக் கடந்து நீங்கள் உங்கள் கடமைகளைச் செய்து வெற்றிபெற வேண்டும். வென்றால் பாராட்டு மழை, ஒருவேளை தோற்றால், நிறைய தூற்றல்கள். விளைவு எதுவானால் என்ன, எல்லாவற்றையும் பார்க்கவும், அனுபவிக்கவும் நீங்கள் இருப்பது மட்டுமே இங்கு முக்கியம்.


  • உங்கள் பிறப்பிற்கு நீங்கள் காரணமில்லை. உங்கள் பெற்றோரின் காரணத்தால் நீங்கள் பிறந்தீர்கள். அவர் பெற்ற கடனுக்கு, உங்கள் நல்ல படியாய் படிக்கவைத்து, நல்ல பிள்ளையாய் வளர்த்துவிடுகிறார்கள். அவர்கள் அன்போடு வளர்த்ததற்கு இணையாக நீங்கள் அவர்களின் இறுதிகாலத்தில் அன்போடு அவர்களை பார்த்துக்கொண்டால், அவர்கள் பால் உங்களின் கடனும், கடமையும் பூர்த்தியாகிவிடும்;

  • உங்கள் துணை வாழ்வின் இடையில் பார்க்கிறீர்கள். இடையில் வந்தாலும், உங்களுடன் இறுதி வரை பயனிக்கு ஒரே ஜீவன் இவர்தான். அதனால், உங்களின் எல்லாவற்றிலும் அவரை பங்குதாரர் ஆக்குகிறீர்கள். அவரின் சுகதுக்கங்களில் அவர்நலனில் நீங்கள் கடைசிவரை அக்கரை கொள்வதன்மூலம், அவரின் மீதான உங்கள் கடைமையை நிறைவாக செய்கிறீர்கள்;

  • உங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் விடயத்தில், எப்படி உங்கள் பெற்றோர் உங்களை வளர்த்தனரோ, அதேபோல உங்கள் பிள்ளைகளை பாராட்டி, சீராட்டி வளர்த்து நல்லபடியாக அவர்கள் வாழ்க்கை அமைக்க வழிகாட்டுகிறீர்கள். நல்ல பிள்ளைகளாக வளர்ப்பதும், அவர்களுக்கு ஏற்புடையதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதன்மூலம், உங்களின் பிள்ளைக் கடனை முடிக்கிறீர்கள்;

  • நீங்கள் வாழும் சமுதாயம், உங்களுக்கு வாழ்வின் பொருளை கற்றுக்கொடுக்கிறது. அந்த சமுதாயத்தினுள் எல்லோருடனும் அனுசரித்து வாழ்வதன் மூலம், உங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்வதன் மூலம், சமுதாயத்திற்கு நீங்கள் பட்ட கடனை அனைக்கிறீர்கள்;


இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை உங்களைச் சுற்றி எத்தனை பொறுப்புகள் வந்த சேர்கிறது. அவற்றை எல்லாம் சரிவர செய்ய, இங்கே இருக்கும் ஒரே நபர் நீங்கள்தானே! நீங்களே இல்லாவிட்டால் இது எதுவுமே உங்களைப் பொறுத்தமட்டில் இருக்காதே! அப்படியானால், இவை எல்லாவற்றிற்கும் முழுமுதற் காரணமும், பொறுப்பாளியும், செயல்பாட்டாளரும் “நீங்கள்” மட்டுமே.


மேற்கூறியவை எல்லாமே உங்கள் வாழ்வின் வந்து போகலாம். ஒருவேளை திருமணமாகமலோ, பிள்ளைகள் இல்லாமலோ, சமுதாயத்துடன் சரிவர உறவில்லாமலோ, நல்ல பெற்றோர் அமையப்பெறாமலோ போகலாம். எது நடந்தாலும், நடக்காவிட்டாலும், பூமியில் பிறந்துவிட்டால் உங்கள் வாழ்வில் “நீங்கள்” மட்டுமே நிஜம். ஏனையவையெல்லாம் உங்கள் வாழ்க்கைப்பாதையில் வந்து போகின்றவைகளே!!


முதலில் உங்களை கருத்தில்கொண்டு செயல்படுங்கள். உங்கள் ஆரோக்கியம், உங்கள் மனநிறைவு தான் எல்லாவற்றிலும் முக்கியமானது. 100 கோடி ரூபாய் தராத மகிழ்வை ஒரு குடிசை வீடுதரும் என்று நீங்கள் நினைத்தால், தயங்காமல் குடிசைக்கு சென்றுவிடுங்கள். ஏனெனில், உங்கள் வாழ்வில் “நீங்கள்” மட்டுமே நிஜம்.


உங்களை கருத்தில் கொண்டு சுற்றத்தை அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் இருப்புதான் இங்கு எல்லாவற்றிலும் முதன்மையானது, மற்றும் உங்களுக்கான நிஜமும் கூட.


வாழ்வில் எதுவேண்டுமானாலும் வந்துபோகலாம்

ஆனால் உங்களைப்பொருத்தமட்டில்

அவையனைத்தும் உங்களை சுற்றித்தான்;

உங்களுக்காக வந்துபோகாத எதுவும்

பொதுவாய் வந்துபோவதில் உங்களுக்கு பயனில்லை!


உங்கள் பெற்றோருக்கு நீங்கள் வேண்டும்

உங்கள் மனைவி மக்களுக்கு நீங்கள் வேண்டும்

உங்கள் உறவுகளுக்கும் நட்புக்கும் நீங்கள் வேண்டும்

எல்லாவற்றிற்கும் நீங்கள் வேண்டுமெனும்போது

இங்கே முக்கியமானாவர் யார் – நீங்கள் தானே!

இவையனைத்தும் மையப்புள்ளியான நீங்கள்தானே நிஜம்!


எல்லா இழப்புக்களிலிருந்தும் ஒருவனால் மீளமுடியும் – ஆனால்

தன்னுடைய இழப்பிழிருந்து மீனவே முடியாதெனும்போது

இங்கு நீங்களும், உங்களுக்கான இருப்பும் தான் எல்லாம்.

உங்கள் இருப்புக்கான் எல்லாமே நீங்ளெனும் நிஜத்தைச் சுற்றித்தானே!!



- [ம.சு.கு 09.10.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

Post: Blog2 Post
bottom of page