top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-362

தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்...!


  • மருத்துவமனைகளில் ஒவ்வொரு படுக்கைக்கு அருகிலும் 2-3 மூன்று வெவ்வேறு நிற குழாய்கள் இருக்கும். ஒருகுறிப்பிட்ட நிறத்தில் பிராணவாயு, இன்னொரு நிறத்தில் நைட்ரோஜன் என்று எல்லாவற்றிற்கும் ஒரு சீரான முறைமை அமைத்திருப்பார்கள். அந்த மருத்துவமையில் இருக்கும் கடைக்கோடி பாதுகாவலர், சுத்தம் செய்பவர் வரை அது தெரிந்திருக்கும். ஏன் அப்படி குறிப்பிட்ட நிறத்தை நிர்ணயிக்கிறார்கள்?

  • பல உற்பத்தி நிறுவனங்களில், பொருட்களை தயாரிப்பதற்கு அச்சுகளை உபயோகிக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் கையினால் தயாரித்த பல பொருட்களை இன்று அச்சு தயாரித்து, அதன் மூலம் செய்கின்றனர். எதற்காக இந்த அச்சு முறைமை?

மருத்துவ முறைகளில் சிறு தவறு நேர்ந்தாலும், அது உயிர் சேதம் வரையிலான ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். அங்கு தவறை சரிசெய்துகொள்ள வாய்ப்பு கிடைக்காமலே போகக்கூடும். ஒரு நோயாளயின் உயிர் போனால் யாராலும் மீட்க முடியாதே. அதனால், தவறுகள் எக்காரணம் கொண்டும் நேராமால் இருக்க, கூடுமானவரை எல்லாவற்றையும் வெளிப்படையாக தெரியும் வண்ணம் கட்டமைக்கிறார்கள். பிராணவாயு எந்த குழாயில் வரும், அதன் அழுத்தம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது வரை எல்லாவற்றையும் ஒரு குறிப்பிட்ட முறைமையில் கட்டமைத்து, எல்லோருக்கும் பயிற்சியளித்து விடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு மருத்துவ முறைமைகளிலும் அவ்வாறான தவற்றை தவரிக்கும் கட்டமைப்புக்களால்தான், எதேச்சையாகக்கூட தவறுகள் நேராமல் உயிர்களை காக்க மருத்துவமனைகள் முயிற்சிக்கின்றன;


பொருட்களை குறிப்பிட்ட அச்சு கொண்டு தயாரிக்கும்போது, பொருளின் அளவுகள் ஒரே சீராக இருக்கும். உதாரணத்திற்கு கையினால் செய்யப்பட்ட 10 மண்விளக்கு வாங்கினால், ஒவ்வொன்றிலும் சிறுசிறு அளவு வேறுபாடு இருக்கும். ஆனால் அச்சுக்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மண்விளக்குகளை இன்று வாங்கினால், ஒரு சிறுபுள்ளி வேறுபாடு கூட இருப்பதில்லை. மேலும் கையில் செய்வதற்கு அதிக அனுபவம் தேவை. ஆனால் அச்சுக்களில் செய்வதற்கு அவ்வளவாக அனுபவம் தேவைப்படுவதில்லை. அச்சுக்களை பயன்படுத்தும்போது, தவறுகள் தவிர்க்கப்படுவதோடு, உற்பத்தியும் அதிகரிக்கிறது. பொருட்களும் ஒரே சீராகவும், தரமாகவும் இருக்கிறது.


எந்தவொரு வேலையிலும், தவறுகள் நேராமல் இருக்க, என்னென்ன மாதிரியான கட்டமைப்புக்களை நிறுவ வேண்டும் என்று ஆய்வு செய்து, அதை கட்டமைப்பதில் தான் அந்து நிறுவனத்தின் நிலையான வளர்ச்சி அடங்கியிருக்கிறது. நிறவனங்கள் வளரும்போது, முதலாளியால் எல்லா பொருட்களையும், எல்லா மனிதர்களையும் கண்ணும் கருத்துமாக கவனிக்க முடியாது. அதேசமயம் கண்காணிக்க முடியவில்லை என்பதற்காக வளர்ச்சியை நிறுத்திவைக்கவும் முடியாது. தரமான பொருட்களை, உரிய நேரத்தில் கொண்டுசெல்ல தேவையான உட்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த உட்கட்டமைப்பை எந்தவொரு தவறும் நேராமல் இருக்கும்வகையில் அமைத்துக்கொள்ளவேண்டியது முக்கியம். அதற்கான வழிமுறைகள் என்னென்ன?

  • அச்சுக்கட்டுப்பாடு: பொருட்கள் குறிப்பிட்ட உபகரணங்களில் வாயிலாக செல்லும்போது, அதற்கான அளவு குறித்த சோதனைகள் அந்தந்த உபகரணங்களுக்குள் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டால், உற்பத்தியாகும் தருணங்களில் பெரும்பாலான தவறுகள் தானாக தடுக்கப்பட்டுவிடும்;

  • உணரிகள்: இன்று நிறைய உணரிகள் [சென்சர்] வந்துவிட்டன. பொருட்கள் இருக்கிறது-இல்லை, அளவு சரியாக இருக்கிறது-இல்லை, வடிவம் சரியாக இருக்கிறது-இல்லை, வெப்ப அளவு, காற்றின் அளவு, அழுத்தத்தின் அளவு என்று பலவிடயங்களுக்கு எண்ணற்ற உணரிகள் இருக்கின்றன. தேவைப்படும் இடங்களில் அவற்றைப் பொறுத்தி, தவறுகள் நேர்வதை அதன் அடிப்படையிலேயே கண்டுணர்ந்து சரிசெய்துவிடலாம்;

  • பட்டியல்முறை: ஒவ்வொரு செயலுக்கு, அதை துவங்குவதற்கு முன் சரிபார்க்க வேண்டிய வேலைப்பட்டியல், செய்கின்றபோது சோதிக்கவேண்டிய பணிகளுக்கான பட்டியல், செய்துமுடித்ததும் சோதிக்க வேண்டியதற்கான பட்டியல் என்று எல்லாவற்றிற்கும் உரிய பட்டியலை தயாரித்து, அதை எல்லோரும் கட்டாயம் பயன்படுத்தும் வகையில் பணிமுறைகளை கட்டமைக்க வேண்டும்;

  • தானியங்கி: உற்பத்தி & செயல் முறைமைகளில், கூடுமானவரை எல்லாவற்றையும் தானியங்கி ஆக்கிவிட வேண்டும். தானியங்கி முறைமைகளில் இயந்திரத்தினுள்ளேயே தரக்கட்டுப்பாடுகளை நிர்ணயித்துவிட்டால், உற்பத்தி ஒரே சீராக இருக்கும்;

  • கட்டுப்பாட்டு அறை: இன்றைய தொழில்நுட்பத்தில், மொத்த உற்பத்திச் சாலையும், ஒரு கட்டுப்பாட்டு அறையில் இருந்து நிர்வகிக்கும் அளவிற்கு கட்டுப்பாட்டு முறைமைகள் வந்துவிட்டன. அவ்வாறாக ஒருஇடத்தில் இருந்து கட்டுப்படுத்தும்போது, கழுகுப்பார்வையில் முழுக்கட்டுப்பாடும், இயந்திர அளவில் இயக்கக்கட்டுப்பாடும் ஒரேஇடத்தில் சிறப்பாக செய்ய முடிகிறது;

  • நிற அடையாளங்கள்: பல்வேறு பொருட்களுக்கு குறிப்பிட்ட நிற அடையாளங்களை நிர்ணயித்து, அந்த நிறுவனம் முழுவதும் ஒரே சீராக அமைக்கும்போது, எல்லோருடைய புரிதலும், செயலும் எளிமையாகிறது. முறைமைகள் எளிமையாக்கப்படும்போது, தவறுகளுக்கான வாய்ப்பு குறைகிறது;

  • இரண்டு முறை: முக்கிய தகவல்களை உள்ளீடு செய்யும் இடங்களில், அவற்றை இரண்டுமுறை பதிவிடும் முறையை புகுத்துதல். இதன்மூலம் ஒருமுறையில் தவறுதலாக ஏற்படும் கவனக்குறைவுகள் முற்றிலும் தவிர்க்கப்படும்;

  • பயிற்சி: ஊழியர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில், தொடர்ந்து பயிற்சியளித்துக்கொண்டே இருக்க வேண்டும். எதையும் காலப்போக்கில் மறக்கும் இயல்பை கொண்டது மனித இயல்பு. அதனால் தொடர்ந்து பயிற்சியைத் தவிர வேறு எதனாலும் ஒழுக்கத்தை நிலைநிறுத்த முடியாது;

  • கண்பார்வையில்; கூடுமானவரை எல்லாவற்றையும் யாராவதொருவரின் கண்பார்வையில் / கண்காணிப்பில் வந்து போகும்வண்ணம் கட்டமைக்க வேண்டும்;

இந்த அடிப்படைகள் யாவும் ஒரு சிறு பட்டியல்தான். நிறுவனத்தின் தன்மைக்கும், அளவிற்கும் ஏற்ப, எண்ணற்ற வழிகளில் தவறுகள் நேராமல் செயல்பாடுகளை கட்டமைக்க முடியும். அதற்கான முயற்சியை, தொழில்முனைவோராக நீங்கள் தான் தேடித்தேடி செயல்படுத்த வேண்டும். தவறுகள் அடிப்படையிலேயே தவிர்க்கப்படும்போது, உங்களால் தைரியமாக எங்கும் வாக்குறுதி அளிக்க முடியும். உங்கள் பொருளின் தரம் நிரந்தரமானால், உங்கள் வளரச்சியின் வேகமும் தானாக அதிகரிக்கும்.

கட்டுப்பாடுகளை சரிவர கட்டமைத்து, தவறுகள் ஏற்பட வாய்ப்பில்லாத முறைமைகளை செயல்படுத்தி உற்பத்தியை பெருக்குங்கள்! வெற்றி நிச்சயம்!


சரியாகச் செய்வதற்குத்தான் அதிகம்

மெனக்கெட வேண்டி இருக்கிறது!

ஒன்றும் செய்யாவிட்டாலே போதும்

தவறுகள் தானாக நடந்துவிடுகின்றன!


என்னதான் விளக்கமும் பயிற்சியும் கொடுத்தாலும்

ஊழியர்கள் தவறு செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்!

உற்பத்தியின் அளவு அதிகரிக்கும்போது

இந்த தவறுகளை கண்டு களைவது சாத்தியமில்லை;

அப்படியானால் தரத்தை எப்பதி உறுதிப்படுத்துவது?


ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்!

பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்!

ஒரே வழி, ஒரே முறைமை என்றால்

தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு!

எல்லாவற்றிலும் தானியங்கி தரக்கட்டுப்பாடு இருக்கட்டும்!


தரமே அதிமுக்கியம் என்பதால்

உங்கள் எல்லா திட்டமிடலும் தரத்தை முன்னிறுத்தி

அதை முழுமையாக அடையும் பாதையிலேயே இருக்கட்டும்!

தரம் 100% உறுதிபடுத்தப்பட்டால்

காலப்போக்கில் உங்கள் வெற்றியும் கிட்டத்தட்ட உறுதிசெய்யப்படும்!



- [ம.சு.கு 06.10.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page