top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 357 - வியாபார இணைப்பு & கையகப்படுத்தல்...!"

Updated: Oct 2, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-357

வியாபார இணைப்பு & கையகப்படுத்தல்..!


  • எங்கள் ஊரில் நிறைய பிரசித்திபெற்ற உணவகங்கள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு உணவகங்கள் 1960-களில் ஆரம்பிக்கப்பட்டவை. ஒரு உணவகம், ஒரே இடத்தில் கட்டிடத்தை பெரிதாக்கி இன்றும் சிறப்பாக அவரது பேரப்பிள்ளையால் நடத்தப்படுகிறது. இன்னொரு உணவகம், நகரத்தைச் சுற்றி கிட்டத்தட்ட 10+ கிளைகளுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. இரண்டுமே பிரசித்தி பெற்ற உணவகங்கள்தான். ஆனால் யார் இங்கு நிறைய வர்த்தகம் செய்வது? யார் அதிக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வது? யார் அதிக இலாபம் சம்பாதிப்பார்கள்? கட்டாயம் 10 கிளை வைத்திருக்கும் நிறுவனம் தானே!

  • இந்திய டாடா நிறுவனம், பிரிட்டன் உருக்காலையை கைப்பற்றியது. ஆர்சிலர் மிட்டலின் நிறுவனம் எஸ்ஸார் இரும்பு நிறுவனத்தை வாங்கியது. ரிலையன்ஸ் நிறுவனம் 100 மேற்பட்ட நிறுவனங்களை வாங்கயுள்ளது. கூகுள் நிறுவனம் 100-க்கும் மேற்றபட்ட நிறுவனங்களை வாங்கியுள்ளது. முகநூல் நிறுவனம் வாட்ஸ்அப் நிறுவனத்தை வாங்கியது. இலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார். இப்படி வாராவாரம் ஏதாவதொரு நிறுவனத்தை, இன்னொரு பெரிய நிறுவனம் வாங்குவதற்கு என்ன காரணம்? சில நிறுவனங்களின் இணைப்பு பணபரிவரத்தனையில் நடக்கிறது. சில நிறுவனங்களின் இணைப்பு பங்குப் பரிவர்தனையில் நடக்கிறது. பரிவர்தனை எப்படி இருந்தாலும், இந்த இணைப்பும், கையகப்படுத்தலும் நமக்களிக்கும் பாடம் என்ன?

உணவகங்கள் பிரசித்தி பெற்றிருக்கலாம். ஆனால் பெரிய நகரத்தில், ஒரு இடத்தில் மட்டும் இருந்தால், எல்லோரும் எப்படி வர முடியும். மக்களின் வீடுகளின் அருகில் அமைந்தால் தானே வாடிக்கையாளர் வரவு அதிகரிக்கும். ஒரு நிறுவனம், நகரின் முக்கிய இடங்களில் இயங்கிய சிறிய கடைகளையும், சில நொடிந்த உணவங்களையும் விலைபேசி இணைத்தது. அவற்றை தங்கள் உணவகத்தின் பாணியில் புதுப்பித்து வாடிக்கையாளர்களை கவர்ந்தது. இன்று தினமும் இருபதாயிரம் வாடிக்கையாளர்களுக்குமேல் சேவை அளிக்கிறது. அதேசமயம் ஒரு உணவகம் மட்டும் நடத்தும் இன்னொரு நிறுவனம், தினமும் 1500 வாடிக்கையாளர் வரை சேவை செய்கிறது. இதில் யாரை நீங்கள் வெற்றியாளர் என்று கூறுவீர்கள்!


இன்றைய போட்டி நிறைந்த உலகில் நீங்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கவேண்டும். வளர்ச்சி போதும் என்று நீங்கள் தங்குவீர்களானால், உங்களின் வீழ்ச்சி அங்கு துவங்கிவிடுகிறது. இங்கு ஒவ்வொரு நாளும் புதிய மாற்றங்கள் வந்துகொண்டேதான் இருக்கிறது. எல்லாவற்றையும் ஒரே நிறுவனத்தால் செய்ய முடியாது. அதேசமயம் புதிய கண்டுபிடிப்புக்களை சந்தைக்கு கொண்டுவருபவரிடம் பெரிதாய் முதலீடு இருப்பதில்லை. பெரு நிறுவனங்கள் அப்படிப்பட்ட சிறு நிறுவனங்களை விலைக்கு வாங்கிவிடுகிறது. அல்லது தன் நிறுவனத்தடன் இணைத்து பங்குதாரர் ஆக்கிவிடுகிறது. தொடர்ந்து வெவ்வேறு நிறுவனங்களை இணைப்பது, ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரப்பது, அதன் வர்த்தகத்தை கூட்டி சந்தையை கட்டுப்படுத்த வழிவகுக்கிறது.


இங்கு நடக்கும் எல்லா இணைப்புகளும், கையகப்படுத்தலும் ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் “தங்கள் நிறுவனம் சந்தையை கட்டுப்படுத்த வேண்டும்” என்ற ஒரே நோக்கம்தான். இப்படி பெருநிறுவனங்கள் எல்லா சிறுநிறுவனங்களையும் அழித்து சந்தையில் ஏகாதிபத்தியம் செய்யக்கூடாது என்பதற்காக தனிச்சட்டம் வகுத்து கட்டுப்படுத்துகிறது. உலக அரங்கில், பெருநிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகளை அபராதமாக இந்த சட்டங்களின் கீழ் கட்டியுள்ளன. ஆனாலும் தொடர்ந்து கையகப்படுத்துதல் நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஏனென்றால், அவர்களுக்கு தெரியும் – “தங்கள் நிறுவனத்தை விரிவாக்கம் செய்யத் தவறினால், போட்டியாளர்கள் சந்தையை ஆக்கிரமித்து முன்னேறுவதோடு, தங்கள் நிறுவனத்தை முடித்துவிடுவார்கள் என்று”.


எண்ணற்ற வியூகங்கள், யுத்திகளை வகுத்து பல சிறிய-பெரிய நிறுவனங்களை இணைப்பதனால் எற்படும் சாதக-பாதகங்கள் என்ன?

  • ஒரு நிறுவனம் விற்பனை செய்யும் சந்தையின் அளவு சீக்கிரத்தில் விரிவடைகிறது;

  • நிறைய புதிய வாடிக்கையாளர்களை நிறுவனம் பெறுகிறது; வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த முடிகிறது;

  • பணம் அதிகம் கொண்டிருக்கும் நிறுவனம், புதிய துறைகளில் காலபதிக்க இந்த இணைப்புக்கள் வழிவகுக்கிறது;

  • ஒரே தொழிலில் இருக்கும் இரண்டு நிறுவனங்கள் இணையும்போது, எண்ணற்ற பொருள் / நேர விரையம், போட்டிகள் தவிர்க்கப்படுவதோடு, செலவீனங்கள் பெருமளவு குறைகிறது.

  • புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்க முடிகிறது;

உங்கள் நிறுவனத்தை பெரிய அளவில் வளர்க்க ஆசைப்படுகிறீர்களா? அதற்கான வாய்ப்பு தானாக வராது. நீங்கள்தான் சந்தையில் தேடவேண்டும். எப்படி சந்தையில் உங்கள் இருப்பை பலப்படுத்துவது, விரிவுபடுத்துவது, என்று யோசியுங்கள்!

  • உங்கள் தேவையென்ன? இலக்கு என்ன? என்பதை தெளிவாக திட்டமிடுங்கள்;

  • சந்தையை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது சந்தை ஆய்வு, வாடிக்கையாளர் ஆய்வு தொடர்ந்துகொண்டே இருக்கட்டும்;

  • போட்டி நிறுவனங்களின் திட்டங்கள் என்ன? அவர்களின் அனுகுமுறைகள் என்ன? என்பதை அலசிக்கொண்டே இருங்கள்;

  • சந்தையில் வரும் புதிய தொழில்நுட்பம், உற்பத்தி முறைமைகளின் மாற்றம், வாடிக்கையாளர் எதிர்பார்ப்புக்களில் ஏற்படும் மாற்றம் என்று எல்லாவற்றையும் கவனித்துவாருங்கள்;

  • புதிய சந்தைகள் எங்கு இருக்கிறது? அங்கு உங்களுக்கான வாய்ப்பு எப்படி என்று தொடர்ந்து அலசிப் பார்த்து, விரிவாக்க வாய்ப்புக்களை தவறவிடாமல் செய்யுங்கள்;

  • நீங்களாக முழுமையும் முதலீடு செய்ய முடியாத இடங்களில், மற்ற நிறுவனங்களுடன் இணைந்து உங்கள் இருப்பை பலப்படுத்துங்கள்.

விரிவாக்கம் செய்வது வளர்ச்சியின் அத்தியாவசியத் தேவை. அதற்கு நீங்கள் பல நிறுவனங்களை இணைக்கலாம், கையகப்படுத்தலாம். ஆனால், அந்த முடிவுகளை, உங்கள் நிதி நிலைமை முழுவதுமாக கருத்தில் கொண்டு செய்யுங்கள். இன்றைய சந்தையில், நிதிநிலையை கருத்தில் கொள்ளாமல், அளவுக்கதிகமாக விரிவாக்கம் செய்து, கடன் சுமையில் எல்லாவற்றையும் இழந்துநிற்கும் முதலாளிகள் ஏராளம்.


சரித்திரம் படைக்க, தொடர்ந்து கவனமாக விரிவாக்கம் செய்துகொண்டே இருங்கள்! வெற்றி நிச்சயம்!


ஒரு மாடு கன்று ஈன்று, அவை அடுத்த கன்று ஈன்று

என்று நீங்கள் பண்ணை வைப்பது?

பெரிய பண்ணை உருவாக்க வேண்டுமானால்

சந்தையில் இருக்கும் சிறிய பண்ணைகளை

உங்களோடு இணைக்க வேண்டும்!

இணைப்பு சாத்தியமில்லாத இடங்களில்

சாமர்த்தியமாக கையகப்படுத்த வேண்டும்!


இங்கு நீங்கள் முதலாவதாக இருந்தால்

நீங்கள் வியாபாரங்களை இணைக்கலாம், கையாகப்படுத்தலாம்!

முதலிடத்தில் நீங்கள் இல்லாவிட்டால்

உங்களை வியாபாரத்தை ஒருவர் இணைப்பார், கையகப்படுத்துவார்!

இதுதான் இன்றைய வியாபார விதி!


பலம் பொருந்தியவன் சந்தையை ஆள்கிறான்!

அரசியல் சானக்கியன் உலகை ஆள்கிறான்!

இங்கு ஆளவேண்டுமானால்

நீங்கள் விரிவடைந்துகொண்டே இருக்க வேண்டும்

விரிவடைய நீங்கள்

பலவற்றை தொடர்ந்து இணைக்க வேண்டும்!

பணியாதவற்றை கையகப்படுத்த வேண்டும்!


- [ம.சு.கு 01.10.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page