top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 354 - அடையக்கூடிய இலக்குகலாக்குங்கள்..!"

Updated: Sep 29, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-354

அடையக்கூடிய இலக்குகலாக்குங்கள்...!


 • 1960-களின் ஆரம்பத்தில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி, தன் நாசா விஞ்ஞானிடம், அமெரிக்காவிற்கான இலக்கைக் நிர்ணயித்தார். இன்னும் 10 ஆண்டுகளுக்குள், நிலவில் அமெரிக்கர் ஒருவர் நடந்து திரும்பிவர வேண்டுமென்று! நிலவிற்கு அனுப்பிய இராக்கெட்டுகள் போய் சேராத காலத்தில், மனிதன் போய் திரும்பிவருவது சாத்தியமற்றதாய் தெரிந்தது. ஆனால் ஜனாதிபதி சொன்னது மறுப்பில்லா இலக்கானது நாசா விஞ்ஞானிகளுக்கு. அது 1969 ஆம் ஆண்டு ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும் முதலில் நடந்த மனிதர்கள் ஆனார்கள்! திடீரென்று 8-9 ஆண்டுகளில் அது எப்படி சாத்தியமானது?

 • போலியோ என்னும் கொடிய நோயிலிருந்து மனித குலத்தை காக்கவேண்டியது கட்டாயம் என்று உலகம் உணரந்தது. ஆனால், உலகெங்கிலும் எப்படி சாத்தயப்படும் என்று யோசித்தார்கள். போலியோ ஒழிப்பு இயக்கமாக உருவெடுத்தது. அரசாங்கத்தோடு எல்லா தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து களம் கண்டன. இன்று போலியோவினால் குழந்தைகள் பாதிப்பு என்ற பேச்சிற்கே இடமில்லாமல், முற்றிலுமாய் அது ஒழிக்கப்பட்டுவிட்டது; போலியோ ஒழிப்பு மலைபோன்ற செயலென ஒதுங்கியிருந்தால்,இன்னும் தினம் 100 குழந்தைகள் இறக்கும். ஆனால் இன்று, ஊர்ஊராய், பட்டிதொட்டியெல்லாம் தடுப்பூசி கொண்டு செல்லப்பட்டு யதார்த்தத்தை புரிந்துகொண்டனர்;

நிலவுப் பயனமென்ற இலக்கு, பலநூறு படிநிலைகளாக பிரிக்கப்பட்டது. அதற்கான இராக்கட் வடிவமைப்பு துவங்கி, ஆளில்லா விமான சோதனை, விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி என்று எண்ணற்ற மைல்கற்கள் நிர்ணயிக்கப்பட்டு, ஒவ்வொன்றாய் கவனித்து கடந்தார்கள். இறுதியில் அவர்களின் ஜனாதிபதி சொன்ன கனவு நிஜமாக்கப்பட்டது. நிலவிற்கு போவதற்கே சாத்தியமில்லை என்றென்னிய காலத்தில், போய் நடந்துபார்த்துவிட்டு திரும்பி வரவேண்டுமென்று கனவு கண்டு சாதித்தனர். அவர்கள் கனவை எப்படி படிப்படியாய் செய்யவேண்டுமென்று திட்டமிட்டனர். ஒவ்வொரு மைல்கல்லாய் கடந்து, இலக்கை குறிதவறாமல் சென்றடைந்தார்கள். அப்படியொரு கனவை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா? அதை சாதிப்பதற்கான படிநிலைகளை வகுத்துவிட்டீர்களா?


எண்ணற்ற புதிய வியாதிகளை, பாரதம் தொடர்ந்து கண்டுவந்துள்ளது. அவற்றை ஒழிக்கமுடியாது, விதியென்று எண்ணியிருந்தால், இன்று நாமில்லை. ஒவ்வொரு நோயை ஒழிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திற்கும் அந்த இலக்கு கொண்டுசெல்லப்பட்டது. மருத்துவ செவிலியர்கள் போதாதபோது, ஆசிரியர்களும், அரசு பணியாளர்களும் களம்வந்து உதவினார்கள். ஒவ்வொரு பெரிய இலக்கும் அன்றாட இலக்குகளாக மாறின. ஒவ்வொரு இழக்கும் தொடர்ந்து கவனிக்கப்பட்டது. ஒவ்வொரு சிறிய இலக்கை கடப்பதும், அடுத்த கட்ட முயற்சிக்கு அதுவே உற்சாகமானது. இன்று போலியோ இல்லை. சமீபத்தில் உலகையே உலுக்கிய கோவிட்-19 தொற்றும் கட்டுக்குள்வந்தது. இப்படித்தான் எல்லா இமாலய இலக்குகளும், மிகப்பெரிய திட்டமிடுதலுடன், படிப்படியாக செயல்படுத்தப்பட்டு, முடிக்கப்படுகிறது. அதுபோல, இப்போது நீங்கள் கொண்டிருக்கும் மிகப்பெரிய இலக்கு என்ன?

 • உங்கள் எடையை குறைக்க வேண்டும். ஒரே நாளில் சாத்தியமா? சிறுசிறு இலக்குகளாக பிரித்து, ஒவ்வொரு வாரமாக முன்னேற்றம் கண்டால், எடை கட்டாயம் குறையும்;

 • அன்றாட பணிச்சுமைகளுக்கு நடுவே, புத்தகம் படிக்கவேண்டும். 500 பக்கம் கொண்ட புத்தகத்தை ஒருநாளில் படித்துமுடிக்க முடியுமா? தினம் 20-30 பக்கங்கள் என்று இரவு உறங்குவதற்குமுன் 10-20 நிமிடங்கள் ஒதுக்க வாசித்தால், வேலைகள் தடைபடாமல், புத்தகம் ஒரு மாதத்தில் முடிக்கப்படும்;

 • ஒரு நாவல் எழுத விரும்புகிறீர்கள். இசைக் கருவி வாசித்துப்பழக விரும்புகிறீர்கள். இப்படி நீங்கள் செய்ய விரும்புவது எதுவானாலும், அவையெதுவும் ஒருநாளில் முடிந்துவிடப் போவதில்லை. தினம் ஒரு சிறு இலக்காக, படிப்படியாக அடைந்தால் மட்டுமே எந்தவொரு பெரிய இலக்கும் சாத்தியப்படும்;

உங்கள் இலக்கு எதுவானாலும், அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அதை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட நீங்கள் அடிப்படையில் என்ன செய்ய வேண்டும்?

 • உங்கள் இலக்கு தெளிவுற நிர்ணயிக்கப்பட வேண்டும் [இலக்கு அளவிடக்கூடியதாக, குறிப்பிட்ட நோக்கம் கொண்டதாக, மனிதர்களால் சாத்தியப்படக் கூடியதாக, குறிப்பிட்ட நேர எல்லைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்]

 • அந்த இலக்கை நோக்கிய பாதையில் உள்ள எல்லா முக்கிய மைல்கற்களையும் பட்டியலிட வேண்டும்;

 • ஒவ்வொரு மைல்கல்லையும் கடக்க, என்னென்ன செய்ய வேண்டுமென்று முழுமையான செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும்;

 • ஒவ்வொரு மைல்கல்லை அடைவதற்கும் ஒரு குறிப்பிட்ட நேர எல்லை நிர்ணயிக்கப்பட்டு, அந்த நேரத்திற்குள் வெற்றிகரமாக செய்துமுடிக்க முயற்சிக்க வேண்டும்;

 • கையிலெடுத்துள்ள வேலையை எந்த வரிசையில் செய்ய வேண்டும், எந்தெந்த வேலைகளுக்கு என்னென்ன உபகரணங்கள், வளங்கள், ஆட்கள் தேவை என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, அவற்றிற்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்;

 • திட்டமிட்டபடி செயல் சரியாக செல்கிறதா? இப்போது எங்கு இருக்கிறோம்? இன்னும் எவ்வளவு நேரத்தில், என்னென்ன செய்து முடிக்க வேண்டும்? என்று முன்னேற்றத்தை அளவிட்டு, வேலைகளை வேகப்படுத்த வேண்டும்;

 • இலக்கின் பாதையில் வரும் இடையூறுகளை, அனுபவங்களை நல்ல பாடமாக ஏற்று, உங்கள் திட்டமிடலை மேம்படுத்தி வெற்றியை உறுதிப் படுத்தவேண்டும்;

எப்படி பெரிய இலக்கை, பிரித்து படிப்படியாக செய்ய வேண்டுமென்று இங்கே சொல்வதற்கு எனக்கு சுலபமாக இருக்கும். இதை படிப்பதும் உங்களுக்கு சுலபமாக இருக்கும். ஆனால், களத்தில் அதை செயல்படுத்துவதில் தான் எல்லா சிக்கல்களும் வரும். அதை திறம்பட கையாள்பவர்கள் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். முடியாதவர்கள், சூழ்நிலைகளுக்கு அடிபணிந்து காலத்தை கடக்கிறார்கள்;


உயரிய இலக்கு வேண்டும் – ஆனால்

நேரடியாய் அதை அடைவது சாத்தியமா?

இலக்கை நோக்கிய பயனத்தில்

படிநிலை வகுத்து இலக்கை பிரியுங்கள்!


ஒவ்வொரு சிறிய இலக்கை அடைவதும்

உங்கள் பயனத்தை ஊக்குவித்து உற்சாகமூட்டும்!

ஒருமாதத்தில் முடிக்கவேண்டியதை

நாளொன்றுக்கு இதுவிதுவென பிரித்துமுடித்து

இறுதியிலக்கை சாத்தியப்படுத்துங்கள்!


முழுதாய் பார்க்கும்போது எல்லாம் கடினம்தான்;

எவரஸ்டை நேராய் நோக்கினால் யாரும் ஏறமுடியாது!

இன்றைய முதல் அடியை கவனமாக வைத்தால்

நாளை அடுத்த முன்னேற்றத்தை சாத்தியப்படுத்தினால்

சீக்கிரத்தில் எவரெஸ்ட் சிகரமும் உங்கள் காலடியில் இருக்கும்!


இலக்குகள் தினம்தினம் அடையக்கூடியதாய்

சிறிதுசிறிதாய் பிரித்து முடித்துக்காட்டுங்கள்!

ஒவ்வொரு முடிவும், அடுத்த

வெற்றிகரமான துவக்கத்திற்கான ஊக்கமாகட்டும்!


- [ம.சு.கு 28.09.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page