top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 343 - பொது அறிவுதான் எல்லாமே.....!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-343

பொதுஅறிவுதான் எல்லாமே...!


  • குழந்தை நெறுப்பைத் தொட்டுப்பார்த்து ஒருமுறை சூட்டை உணர்ந்தது. அடுத்த முறையில் இருந்து நெறுப்பிடம் இருந்து விலகியே இருந்தது. ஏனெனில் நெருப்பு சுடும் என்ற பொதுஅறிவை தெரிந்துகொண்டது. நூலகத்திற்கு சென்றால், அங்கு அறிவிப்பு பலகை இல்லாமலிருந்தாலும், எல்லோரும் அமைதி காக்க வேண்டுமென்பது பொதுஅறிவு. சாலையில், போக்குவரத்து குறியீட்டில் சிகப்பு விளக்கு எரிந்தால், வாகனங்கள் நிற்கவேண்டுமென்பது பொதுஅறிவு. ஒருவரது உடலுக்கு ஒவ்வாதவற்றை உண்ணகூடாது என்பது பொதுஅறிவு. முறையான பயிற்சியும், அங்கீகராமும் இல்லாமல் வாகனங்களை ஓட்டக்கூடாதென்பது பொதுஅறிவு. இதில் எத்தனை செயல்களை நீங்களும், உங்களைச் சார்ந்த சமுதாயாமும் சரியாக செய்துவருகிறது!

  • எந்தவொரு முக்கிய காரியத்தை செய்ய திட்டமிடும்போதும், அதற்கான முன்னேற்பாடுகள், ஒருவேலை தவறானால் என்ன செய்வது, தேவையான தற்காப்புக்கள் என்ன என்று எல்லாவற்றையும் முன்கூட்டியே யோசித்து திட்டமிட்டு வைப்பதுதான் பொதுஅறிவு. என்ன நடக்கும் என்று கொஞ்சம்கூட யூகிக்க முடியாமல், நடப்பதை அப்படியே கண்மூடி ஏற்றுக்கொள்வது முட்டாள்தனம். மனிதரில் உயர்வென்ன-தாழ்வென்ன என்று பொதுஅறிவோடு கேள்விகேட்டதில் தான் ஜாதிபேதங்கள் குறைய ஆரம்பித்தன. பிறப்பில் ஆணென்ன-பெண்னென்ன என்று பொதுஅறிவு கேட்க ஆரம்பித்தபின்தான் ஆணும்-பெண்ணும் சமம் என்ற சிந்தனை சமுதாயத்தில் வேறூன்ற ஆரம்பித்தது. கொத்தடிமைத்தனத்தை ஒழிக்க உழைப்பாளர் பொதுஅறிவோடு சங்கங்கள் அமைத்து போராட ஆரம்பித்தபின்தான், உழைக்கும் வர்கமும் தலைநிமிர்ந்து வாழ முடிந்தது. நீங்கள் அப்படியென்ன பொதுஅறிவு விடயத்தை சமுதாயத்திடம் ஆணித்தரமாக எடுத்துச் சென்றுள்ளீர்கள்?

ஒரு சிலவற்றை குழந்தைகளும், பெரியவர்களும் அனுபவத்தில் அடிபட்டு கற்றுக்கொள்கிறார்கள். அதன்மூலம் அவர்களின் பொதுஅறிவு பலம் பெறுகிறது. ஒருசிலவற்றை, மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றும், சான்றோர்கள் எழுதிவைத்த நூல்கள் வாயிலாகவும் கற்றுத் தெரிந்து பொதுஅறிவை வளர்த்துக் கொள்கிறார்கள். எது எப்படியானாலும், பொது அறிவு வளர்ந்தால் சரி. ஆனால் யதார்த்த உலகில் எல்லோருக்கும் பொது அறிவு சரியாக வேலை செய்கிறதா?

  • உங்களில் எத்தனை பேர் போக்குவரத்து குறியீடுகளை சரியாக மதித்து, வேகக்கட்டுப்பாடு, பாதை கட்டுப்பாடு என்று எல்லாவற்றையும் சரியாக கடைபிடிக்கிறீர்கள்?

  • உங்களில் எத்தனை பேர், பொது இடங்களில் எச்சில் துப்பாமல், மலம் கழிக்காமல், சாலைகளை சேதப்படுத்தாமல் பத்திரமாக பார்த்துக்கொள்கிறீர்கள்?

  • உங்களில் எத்தனைபேர், பணத்தை பண்டபரிமாற்றத்திற்கான கருவியாக மட்டும் பார்த்து, உறவுகளை உரிய கவனத்துடன் போற்றி வளர்க்கிறீர்கள்?

பொது அறிவோடு செயல்பட்டால் தான், சமுதாய கட்டமைப்பு நல்ல படியாய் இயங்கும். எல்லோரும் பொது அறிவை முன்னிறுத்தி, வீட்டு நலனைத்தாண்டி, சமுதாய நலனில் அக்கரை செலுத்த ஆரம்பிக்கும்போது, இங்கு எல்லாமே கட்டுப்பாட்டில் இயங்க ஆரம்பிக்கிறது. எதுவும் யார்கையும் மீறுவதில்லை. யாரொருவர் பொது அறிவைக்கடந்து, சமுதாய நலனைக்கடந்து, தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும், சுயலாபத்திற்கும் முடிவுகளை எடுத்து இயங்க ஆரம்பிக்கிறாரோ, அங்கு எல்லாவகையான சமுதாய சீர்கேடுகளும் துவங்க ஆரம்பிக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாய் இருந்த மனிதகுலத்தின் ஒவ்வொரு பொதுஅறிவுக் கேள்வியில் உருவானதுதான் இந்த சக்கரம், விவசாயம், பூஜ்ஜியம், எல்லாமே. பொதுஅறிவில்தான் எல்லா கண்டுபிடிப்புக்களுக்குமான அடிப்படை ஆரம்பமாகிறது.

ஏன்? எதற்கு? எப்படி? எப்பொழுது? எங்கு? யாரால்? என்ற கேள்விகள் எல்லாம் பொதுஅறிவின் ஆரம்பகட்ட வெளிப்பாடுகள்தான்.

  • இங்கு எல்லாவற்றிற்கும் காரண-காரியங்கள் இருக்கும்;

  • இங்கு எல்லாவற்றிற்கும் சாதக-பாதகங்கள் இருக்கும்;

  • இங்கு எல்லாவற்றிலும் ஏற்றத்-தாழ்வுகள் இருக்கும்;

  • இங்கு எல்லாவற்றிலும் வெற்றி-தோல்விகள் இருக்கும்;

  • இங்கு எல்லாவற்றிலும் எல்லாமே இருக்கும்

இந்த அடிப்படை புரிதல்தான் பொதுஅறிவு. ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்ன நடக்கும்? என்ன நடக்காது? என்று சூழ்நிலைக்கேற்ப முன்கூட்டியே யூகித்து, சாத்தியக்கூறுகள் எல்லாவற்றிற்கும் மாற்று வழிகள் யோசித்து வைப்பதுதான் யதார்த்த பொதுஅறிவு. அதை சரிவர செய்தால், எல்லா சூழ்நிலைகளையும் உங்களால் சமாளித்து வெற்றிகொள்ள முடியும். உங்கள் பொதுஅறிவை பயன்படுத்த தவறினால், உங்கள் எதிரிகள் அவர்களின் பொதுஅறிவை பயன்படுத்தி உங்களை எளிதில் சிக்கலில் சிக்கவைத்து விடுவார்கள்.


உங்கள் கல்வியோ, வேலையோ, பயனமோ, சேமிப்போ. போராட்டமோ, களம் எதுவானாலும், நீங்கள் அதிமுக்கியமாக கவனிக்கவேண்டிய முதல் விடயம், நீங்கள் பொதுஅறிவுடன் யோசித்து சரியாக செயல்படுகிறீர்களா? என்பதுதான். உங்கள் செயல்பாடும், சமுதாயத்தின் செயல்பாடும் முறைமை தவறாமல் பொதுஅறிவுடன் நடந்தேறினால், இந்த பூமியே சொர்க்கபூமியாகிவிடும்!


இங்கு எல்லாமே பொதுஅறிவுதான்!

விஞ்ஞானமும் பொதுஅறிவுதான்!

மெய்ஞானமும் பொதுஅறிவுதான்!

பொதுஅறிவை கவனித்தவன் வெல்கிறான்!

பொதுஅறிவை கவனிக்காதவன் தோற்கிறான்!


வெற்றியும் தோல்வியும் இருக்கின்ற சூழ்நிலையில்

பொதுவாக என்னநடக்கும் என்று

முன்கூட்டியே யோசித்து திட்டமிடுபவன்

எல்லாவற்றையும் சமாளித்து வெல்கிறான்!!


இந்தச் சூழ்நிலையில் இதுதான் நடக்க வாய்ப்பதிகம் என்று

மூன்கூட்டியே யூகிப்பதுதான் பொதுஅறிவு!

பெரியவர்கள் என்ன செய்வார்கள்

குழந்தைகள் என்ன செய்வார்கள்

எதிரிகள் என்ன செய்வார்கள்

பணம், குணம், மனம், என்ன செய்யும்

என்று அனுபவத்தின் மூலம் யூகிப்பதும்

சூழ்நிலைக்கேற்ற பாதுகாப்பை உறுதிசெய்வதும்

உங்கள் பொதுஅறிவு தான்!


உங்கள் பொதுஅறிவில் கவனம் செலுத்துங்கள்!

உங்கள் வெற்றி தானாக உங்கள் கைகளில் இருக்கும்!


- [ம.சு.கு 17.09.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page