top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 335 - பணக்காரர்களின் தத்துவம் எதுவரை?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-335

பணக்காரர்களின் தத்துவம் எதுவரை.?


  • ஒரு பணக்கார பெண்மனி, ஒரு குருவிடம் தனக்கு மனநிம்மதியில்லை என்று முறையிட்டார். தன்னிடம் நிறைய பணம் இருக்கிறது, ஆனால் அந்த பணத்தினால் எந்த பயனுமில்லை, மனதில் நிம்மதியில்லை என்றார். கூடவே, நிம்மதியை கெடுக்கும் பணத்திற்காக ஏன் இந்த உலகம் இவ்வளவு பாடுபட்டு முயற்சிக்கிறது என்று தத்துவம் வேறு சொன்னார். அந்து குரு, அந்த பெண்மனியிடம், குரு, அந்த பெண்மனியிடம் உங்கள் மீதமுள்ள வாழ்க்கையின் செலவிற்குத் தேவையான ஒரு கோடி ரூபாயை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றை அருகில் இருக்கும் இலவச கல்வி நிறுவனத்திற்கு தானாமாக கொடுத்துவிட்டு, நாளை வாருங்கள் என்றார். அதன் பின் அந்த பெண்மனி அந்த குருவிடம் வரவேயில்லை;

  • மக்கள் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், சேவை நிறுவனங்கள் பலவற்றில் தலைவராக இருக்கும் ஒரு பணக்காரர், எல்லா மேடைகளிலும் மக்கள் எப்படி வாழ்க்கையை அனுகவேண்டும், சட்டங்களை மதிக்க வேண்டும், நம்பிக்கை-நாணயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுவார். ஆனால் அவரது நிறுவன வியாபாரத்தில், அவரது சொந்த வாழ்க்கையில் இந்த உபதேசங்கள் எதையும் பொருட்படுத்துவதே இல்லை. அவரிடம் கேட்டால், இந்த சின்னச்சின்ன அனுசரனைகளை செய்யாமல் எப்படி வியாபாரம் செய்ய முடியும் என்று தன் தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பார். ஏன் இப்படி முரண்பட்டு நடக்கிறார்கள்?

“பணத்தினால் நிம்மதி இருக்காது”, “பணத்திற்காக ஏன் இத்தனை போராடுகிறீர்கள்”, “பணத்தைத் தாண்டி உறவுகளைப் பாருங்கள்”, “பணம் உங்கள் அமைதியை கெடுக்கும்” என்று நிறைய தத்துவங்களை பணக்காரர்கள் சொல்வார்கள். ஆனால் அவர்களில் 99.99% பேர், தனக்கு நிம்மதிதராத பணத்தை உதரிவிட்டு வருவதில்லை. ஏன் உலகிற்கு பணம் தேவையில்லை என்று உபதேசம் சொல்லிவிட்டு, தங்கள் பணத்தை மட்டும் கட்டி அழுகிறார்கள்? அந்த பெண்மனி, தன் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ளதை பிறருக்கு கொடுக்க மனமில்லை. அதேசமயம் பணத்தினால் தனக்கு நிம்மதியில்லை என்று குருவிடம் ஆலோசனை கேட்கிறது. என்னவொரு முரண்பட்ட நிலை!!


தலைவர்களாக இருக்கக்கூடிய பலர், மேடையில் பேசுவதற்கும், அவர்களின் அன்றாட வாழ்வில் நடந்துகொள்வதற்கும் ஏனோ எண்ணற்ற முரண்பாடுகள் இருக்கின்றன. குறிப்பாக, பணக்கார தலைவர்கள் மத்தியில் தான் இந்த முரண்பாடுகள் மிக அதிகம். ஏன் பணக்காரர்களாக இருப்பவர்களில் பலர் சொல்வதொன்றும், செய்வதொன்றுமாக இருக்கிறார்கள். ஊருக்கு மட்டும் பெரிய உபதேசங்கள் சொல்லிவிட்டு தங்கள் சொந்த வாழ்க்கையில் அவற்றை கடைபிடிக்க ஆர்வம் காட்டுவதில்லை.


நிறைய பணம் சம்பாதித்த பின், பணத்தினால் நிம்மதி கிடைக்காது என்று தத்துவம் பேசுவதெல்லாம் சரிதான். ஆனால் அவர்கள் அந்த பணத்தை உதரிவிட்டு வரமாட்டார்கள். ஏனெனில் பணம் இல்லாமல், அவர்களின் ஆடம்பர வாழ்க்கையை நகர்த்த முடியாது, சமுதாய அங்கீகாரமும், மரியாதையும் அவ்வளவாக கிடைக்காது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.


பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாவிட்டாலும், வாழ்வில் வரும் துயரங்களை சுகமாக எதிர்கொள்ள முடியும் என்ற ஸ்பைக் மில்லிகன் வார்த்தைகளை இந்த பணக்காரர்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். நோயும், வலியும் எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனால் பணமிருப்பவருக்கு உயரதர சிகிசையும், தனிப்பட்ட கவனிப்பும் கிடைக்கிறது. இல்லாதவர்கள் வரிசையில் காத்துக்கிடந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கிறது;


நீங்கள், நிறைய இலட்சியங்களோடும், கனவுகளோடும் வாழ்க்கையில் வெற்றிபெற ஆசைப்பட்டால், முதலில் இந்த

  • பணக்கார ஞானிகளின் தத்துவங்களை தூரத்தில் வையுங்கள்;

  • அவர்களிடமிருந்து கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் கற்றுக் கொள்ளுங்கள்;

  • பணம் மகிழ்ச்சியை தராவிட்டாலும், துயரமான சூழ்நிலைகளை சுகமாக எதிர்கொள்ள முடியும் என்ற நிதர்சனத்தை புரிந்து கொள்ளுங்கள்;

  • எங்கும் தர்ம-நியாயங்களையும் மட்டும் தவறவிடாமல், ஆக்ரோஷமாக களமிறங்குங்கள்;

பணத்தை சம்பாதித்த பின், உங்கள் தத்துவங்களை, உபதேசங்களை உலகிற்குச் சொல்லுங்கள். உங்களிடம் பணமில்லாமல், நீங்கள் என்ன உபதேசம் சொன்னாலும், யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். உங்களிடம் பணம் இருக்கும்போது, நீங்கள் எதைச் சொன்னாலும், அதை அமர்ந்து கேட்க ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த வாழ்வின் யதார்த்தங்களை புரிந்துகொள்ளமால், நீங்கள் என்ன முயற்சி செய்தாலும், யாருடைய ஞான உபதேசங்களை கேட்டாலும் அது நீங்கள் ஒரு துறவியாக போவதற்கு வேண்டுமானால் பொருந்தலாமே தவிர வாழ்க்கையில் எண்ணிய வெற்றியை அடைய ஒருபோதும் ஒத்துவராது!!


பணத்தால் நிம்மதியில்லை என்று பணக்காரர்கள்

வாய்கிழியச் சொல்வார்கள் – ஆனால்

அதை தூக்கியெரிய யாரும் முன்வர மாட்டார்கள்!


பணத்தின் பின் ஓடாதே என்று

தோற்றுப்போனவர்கள் நூறுபேர் சொல்வார்கள்;

பணமில்லாமல் உங்கள் பேச்சை

உங்கள் மனைவி-பிள்ளைகள்கூட கேட்கமாட்டார்கள்

என்ற வாழ்வின் யதார்த்தத்தை மறந்துவிடாதீர்கள்!


பணம் உங்கள் வாழ்வை சுகமாக நடத்த அத்தியாவசியத் தேவை

அதை சம்பாதித்த விதத்தைப் பொருத்தும் – அதைவைத்து

நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை பொருத்தும்

உங்கள் மனநிம்மதியும், அமைதியும், ஆனந்தமும் நிர்ணயமாகிறது!


சுகம் வேறு! மனநிம்மதி வேறு!

என்ற அடிப்படையை புரிந்துகொள்ளுங்கள்!

சுகமான வாழ்க்கைக்கு

போதுமான பணத்தை தொடர்ந்து தேடுங்கள்!

நிம்மதியான வாழ்க்கைக்கு

பணத்தை தலைக்கு ஏற்றாமல் தூரத்தில் வையுங்கள்!


- [ம.சு.கு 08.09.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page