top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 325 - பேரிடர் மேலாண்மை...!!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-325

பேரிடர் மேலாண்மை...!!


 • ஒரு சிறிய சேவை நிறுவனத்தின் சேவையக கட்டமைப்பு [சர்வர் கட்டமைப்பு] முற்றிலும் சட்டவிரோதமாய் ஊடுருவப்பட்டு [ஹேக்கிங்] எல்லாத் தகவல்களும் திருடப்படுவதோடு, அந்த சேவையக கணிணி [சர்வர்] முடக்கப்பட்டுவிடுகிறது. அதை விடுவிக்க, அந்த சட்டவிரோத கும்பல் பல இலட்ச ரூபாய்கள் கேட்டன [பிட்காயினாக கேட்டன]. அந்த சிறிய நிறுவனம், ஒவ்வொரு நாளும் தங்கள் மென்பொருள் & தகவல்களை மற்றொரு தற்காப்பு பிரதி எடுக்கும் வழக்கத்தை கொண்டிருந்ததால், அந்த சேவையக கட்டமைப்பு முற்றிலுமாய் அழித்துவிட்டு, முந்தைய தின பிரதியைக் கொண்டு மறுசீரமைத்து வேலையை தொடர்ந்தது!

 • ஒரு உற்பத்திச் சாலையில், திடீர் விபத்துக்கள், பேரிடர்கள் ஏற்படும் போது என்னென்ன செய்யவேண்டும், எங்கே எல்லோரும் பத்திரமாக கூட வேண்டுமென்று முறையான வரையறைகள் வகுக்கப்பட்டன. எல்லாவற்றையும் முறையாக தயார் செய்தவர்கள், அதன் அடுத்தகட்ட முக்கிய பணியான களப்பயிற்சியை கண்டு கொள்ளாமல் விட்டனர். ஒருநாள் இரவில் பெரிய தீ விபத்து ஏற்பட்டபோது, அன்று பணியில் இருந்தவர்களுக்கு எந்த எண்ணுக்கு அவசர அழைப்பு கொடுக்க வேண்டும், எப்படி தீயணைக்க வேண்டும், அபாய ஒலியை எப்படி எழுப்ப வேண்டும் என்று எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதனால், சிறியளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய நெருப்பு, மிகப்பெரிய தீ விபத்தாக வளர்ந்து 2 உயிர்களையும் பலிகொண்டது. பேரிடர் மேலாண்மையை இயக்குனர்கள் காகிதத்தில் திட்டமிட்டால் மட்டும்போதுமா? களத்தில் ஊழியர்களுக்கு, இந்த அபாயங்களை எப்படி சமாளிக்க வேண்டுமென்று எப்படி தெரியும்?

நிறுவனங்கள் தங்களின் மென்பொருள் மற்றும் தகவல்களை போதிய அளவு பாதுகாப்புடன் வைக்க வேண்டும். தகவல் திருட்டு, சட்டவிரோத ஊடுருவல் முயற்சிகளிலிருந்து தற்காத்துக் கொள்ள, நிறுவனங்கள் போதுமான உட்கட்டமைப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதையும் தாண்டி, ஒருவேளை திருட்டு நடந்தால், மாற்று உபாயங்கள் என்னென்ன என்ற திட்டமிடல் முன்கூட்டியே செய்யப்பட்டிருக்க வேண்டும். எல்லாப் பேரிடர்களும் புயல், வெள்ளம் என்றுதான் வரவேண்டுமென்றில்லை. தகவல் தொழில்நுட்பத் துறையில், வங்கியில், அதன் தகவல்கள் திருடப்படுவதும் மிகப்பெரிய பேரிடர் சூழ்நிலைதான். அந்தப் பேரிடர்களை சமாளிக்க என்ன மாதிரியான முன்னேற்பாடுகளை உங்கள் நிறுவனம் செய்திருக்கிறது?


தொழிற்கூடங்களில் அவ்வப்போது சிறிதும்-பெரிதுமாக ஏற்படும் விபத்துக்கள், பல சட்ட சிக்கலைகளையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தும். சில விபத்துக்கள் அந்த நிறுவனத்தையே நிரந்தரமாக மூடும் நிலைக்கு தள்ளிவிடும். எல்லா தொழிற்சாலைகளும் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும், எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை பயிற்சி & ஒத்திகைகள் செய்ய வேண்டும் என்று சட்டங்களும் இருக்கின்றன. இவற்றிற்கும் சற்று பணமும், நேரமும் செலவாகும் என்பதற்காக, அவற்றை ஒருசில முதலாளிகள் தவிர்க்கின்றனர். அவர்களின் கவனக்குறைவு, அந்த நிறுவனத்தையும், ஊழியர்களையும், சுற்றுயுள்ள மக்களையும் அபாயத்தில் நிறுத்துகிறது.


வியாபாரமோ, வாழ்க்கைப் பயனமோ, எதிலும் பேரிடர் மேலாண்மை என்பது நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் காத்துக்கொள்ள தேவைப்படும் முக்கியமான திட்டமிடல் / பயிற்சி முறைமையாகும். தீயணைப்பு பயிற்சி, மருத்துவ முதலுதவிப் பயிற்சி, அபாயகால அறிவிப்பு முறைமைகள் போன்றவற்றை ஒவ்வொருவரும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.


நீங்கள் ஒவ்வொரு முறை விமானப் பயணம் தொடங்கும்போதும், சிப்பந்திகள் அவசரகால செயல்முறைகளை தவறாமல் விளக்குவதை பார்த்திருப்பீர்கள். உங்களுக்கும் அதைக் கேட்டுக்கேட்டு மனப்பாடம் ஆகி இருக்கும். அவர்கள் எதிர்பார்ப்பும் அதுதான். பயனியர் அனைவருக்கும் அவசர கால செயல்பாடுகள் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும் ஒவ்வொரு பயனத்தின் தொடக்கத்திலும் செய்முறை விளக்கம் கொடுப்பதன் மூலம் உறுதிசெய்கிறார்கள்.


இதுமாதிரி அபாயகரமான சூழ்நிலைகளை, விபத்துக்களை, பேரிடர்களை, சமாளிக்க, உங்கள் நிறுவனத்தில்

 • எந்தளவிற்கு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது?

 • எவ்வளவு கால இடைவெளியில் பயிற்சி ஒத்திகைகள் நடக்கின்றன?

 • புதிதாய் சேர்பவர்களுக்கு எப்படி பயிற்சி உறுதி செய்யப்படுகிறது?

 • போதுமான அபாயகால தற்காப்பு கட்டமைப்பும், பயிற்சியும் இல்லாவிட்டால் என்ன நேரும்;

 • ஒருபகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதை மற்றொரு பகுதி ஊழியர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வழியில்லாமல், விபத்து பெரிதாக வாய்ப்பு அதிகரிக்கும்;

 • அபாய ஒலி எழுப்பும் மணி, தீயணைப்பு இயந்திரம் எங்கிருக்கிறதென்று தெரியாமல் திண்டாடுவார்கள்;

 • எந்தமாதிரியான தீ விபத்துக்கு, எந்த கருவியை பயன்படுத்த வேண்டும், அதை எப்படி கையாள வேண்டும் என்று தெரியாமல் தவறு செய்யக்கூடும்;

 • அபாய மணி ஒலித்தால், எந்தப்பக்கம் ஓடவேண்டும், எது பாதுகாப்பான இடம், எங்கு கூட வேண்டும் என்று தெரியாது;

 • அடிப்படையில் உயிர்களை காக்கவே போராட்டமாகும்போது, பொருளிழப்புக்கள் கட்டுப்பாடின்றிப் போகும்;

அரசாங்கங்கள் தேசிய அளவு, மாநில அளவு, மாவட்ட அளவு மற்றும் உள்ளூர் அளவுகளில் நிறைய பேரிடர் மேலாண்மை அமைப்புக்களை கட்டமைத்து, அவ்வப்போது ஒத்திகைகள் நடத்திவருகின்றனர். இதுபோல, உங்கள் தொழிற்கூடத்தில் விபத்துக்கள் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டுமென்ற முறைமைகளை வகுத்து, பொதுமான பயிற்சிகளை தொடர்ந்து வழங்கிவந்தால், அசம்பாவிதங்களால் ஏற்படும் பெரிய இழப்புக்கள் தடுக்கப்படலாம். அதேபோல கணிணி சார்ந்த தகவல் தொழில் நுட்பத்துறையில், உயிர்-உடமைகளைத் தாண்டி, தகவல்கள் பாதுகாப்பும் அதிக கவனம் செலுத்தவேண்டியதாக உள்ளது. அந்த நிறுவனமே அந்த தகவல் கட்டமைப்பை சார்ந்திருக்கும்போது, அதில் ஏற்படும் ஒவ்வொரு ஊடுருவல் முயற்சியும், திருட்டும், அந்த நிறுவனத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கக்கூடும். அந்த பேரிடரை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டுமென்று உங்கள் நிறுவனம் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறதா?


பஞ்ச பூதங்களால் ஏற்படும் பேரிடர்கள் ஒருபுறம்!

தீவிரவாதிகளால் ஏற்படும் அபாயங்கள் ஒருபுறம்!

சட்டவிரோத ஊடுருவல் & திருட்டு ஒருபுறம்!

திடீர் மருத்துவ அவசரநிலைகள் ஒருபுறம்!


எண்ணற்ற அவசரநிலைகள், எல்லோரையும்,

எல்லாவிதங்களிலும், எப்போதும் சூழ்ந்தே இருக்கிறது;

இவற்றை சமாளிக்க உங்களுக்கு என்னென்ன தெரியும்?


தீயணைப்பு இயந்திரங்களை பயன்படுத்த தெரியுமா?

அவசரகால முதலுதவி சிகிக்கை தெரியுமா?

தகவல் திருட்டை தடுக்கும் கட்டமைப்புகள் தெரியுமா?

தெரியாதென்றால், எல்லாவற்றையும் ஒருநாள் இழக்க தயாராகிவிடுங்கள்!

இழப்பு வேண்டாமென்றால், உடனடியாக இவைகளை தெரிந்துகொள்ளுங்கள்!


- [ம.சு.கு 30.08.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page