top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 303 - உங்கள் தனித்துவத்தில் கவனம்செலுத்துங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-303

உங்கள் தனித்துவத்தில் கவனம்செலுத்துங்கள்..!


  • இன்றைய தொழில்நுட்ப உலகில் நிறைய செயலிகள் வந்தவண்ணம் இருந்தாலும், “வாட்ஸ்அப்”, “டிவிட்டர்” போன்று ஒரு சில செயலிகள், வாடிக்கையாளரின் குறிப்பிட்ட தேவையை மட்டும் கருத்தில்கொண்டு, அதை தொடர்ந்து மேம்படுத்தி பெரிய வெற்றியை பெற்றுள்ளனர். நண்பர்களுடன் தொடரந்து தொடர்பில் இருப்பது, தகவல்களை, புகைப்படங்களை பகிர்வதற்கு உருவான முகநூல், அதன் சேவையை தொடர்ந்து மேம்படுத்தி மிகப்பெரிய வளர்ச்சி பெற்றது. இந்த செயலிகளை தொடங்கியவர்கள் எல்லோரும் சாமானியரே. மக்களின் குறிப்பிட்ட தேவையை புரிந்துகொண்டு, அதற்கான சந்தை காலியாக இருப்பதை பெரிய வாய்ப்பாக எடுத்துகொண்டு தங்களுக்கான புதிய சந்தையை வெற்றிகரமாக நிறுவினர். அவர்கள் பல செயலிகள், பல வாடிக்கையாளர் தேவைகள் என்று பலவற்றில் கவனம் செலுத்தாமல், தங்களின் தனித்துவமான ஒரு செயலியில் முழுக்கவனத்தையும் செலுத்தி பிரம்மாண்ட வெற்றிபெற்றனர்.

  • பள்ளியில் பயில்கின்ற மாணவர்கள், மேற்படிப்பிற்கு அவரவர்கள் விரும்பும் துறைகளை தேர்வுசெய்து படிக்கின்றனர். ஆனால் அவர்களில் பலர், படித்ததுறைக்கு சம்பந்தமில்லாத சில துறைகளில் பணியில் சேருகின்றனர். அப்படி ஈடுபாடில்லாமல், கிடைத்த வேலையில் சேருபவர்கள் பெரிதாய் எதையும் சாதிப்பதில்லை. கொடுத்ததை செய்துகொண்டு காலத்தை ஓட்டுகிறார்கள். அதேசமயம், ஒரு குறிப்பிட்ட துறையில் சாதிக்கவேண்டுமென்று துடிப்புடன் ஆரம்பிப்பவர்கள், பல போராட்டங்கள், சிக்கல்களை தாண்டி நிற்கின்றனர். இங்கு அவர்கள் தங்களுக்கான தனித்துவத்தை அறிந்து, அதன் வழியில் முழுமனதுடன் பயனிப்பதுதான் முக்கியம். அப்படி பயனித்தவர்கள் உருவாக்கியதுதான் இன்று நாம் பயன்படுத்தும் எல்லாவிதமான அறிவியல் முன்னேற்றங்கள், கலை படைப்புக்கள், காவியங்களுமாகும்.

மக்களின் அன்றாட வாழ்வில் இன்று தொழில்நுட்பத்தின் பங்கு 75% கடந்துவிட்டது. நிறைய தேவைகள் இருக்கின்ற சந்தையில், எல்லாவற்றையும் ஒரே நிறுவனம் தீர்க்கமுயற்சி செய்தால் முடியுமா? மக்களின் தேவைகளை புரிந்து, ஒரு குறிப்பிட்ட தேவையை கருத்தில்கொண்டு அதற்கான சிறந்த செயலியை உருவாக்கினால், அதன் பயன்பாடு தானாக பெரிய வெற்றியை பெற்றுத்தருகிறது. நண்பர்களுக்குள் பகிர்வதற்காக தொடங்கப்பட்ட முகநூல், இன்று வியாபார உலகிற்கும் சிறந்த விளம்பரக் களமாகிவிட்டது. நண்பர்கள் செய்தி பரிமாற்றத்திற்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப், இன்று எண்ணற்ற மேம்பாடுகளுடன், வியாபார உலகின் முக்கிய தகவல் பரிமாற்ற கருவியாகிவிட்டது. இன்று எண்ணற்ற வியாபாரங்களே வாட்ஸ்அப் செயலியில் நடந்துகொண்டிருக்கிறது; ஒரு தனித்துவமான விடயத்தை கையிலெடுத்து, அதில் முழுக்கவனத்தையும் செலுத்தி, சந்தையின் குறிப்பிட்ட தேவைகளை உடனுக்குடன் அறிந்து, தங்களின் சேவையை மேம்படுத்திய எல்லா நிறுவனங்களும், கட்டாயம் வெற்றிபெற்றிருக்கின்றன.


தனக்கென தனித்துவமான துறையில் ஊறித்திளைத்தவர்கள் படைக்கும் பிரம்மாண்டத்திற்கு இணையாக இன்னொன்று வர, வேறொரு தனித்துவமானவர்கள் வரவேண்டும். சாமானியனாய் திரிபவர்களுக்கு அவை எட்டாக கனியாகவே இருந்துகொண்டிருக்கும். எங்கும் எதிலும் தனித்துவம்தான் பிரம்மாண்டத்தின் ஆரம்பப் புள்ளி. தனித்துவமான திறமை, தனித்துவமான பொருட்கள், தனித்துவமான சந்தை என்று எங்கும், எதிலும் ஒரு தனித்துவத்தை நிறுவினால், காலத்தால் அழிக்கமுடியாத புகழை பெறமுடியும்;


நீங்கள் வியாபார உலகில் பெரிய வெற்றி பெறவிரும்பினால், உங்கள் தனித்துவம் என்னவென்பதை அறிந்து செயல்படத் துவங்குங்கள். உங்கள் தனித்துவமான திறமைக்கு சந்தையில் வாய்ப்பிருக்கிறதா என்று ஆய்வு செய்துபாருங்கள். உங்களுடைய போட்டியாளர்கள் யார்? அவர்களைவிட உங்கள் பொருளில், சேவையில் என்ன தனித்துவம் இருக்கிறது? அந்த மேம்பட்ட சேவைக்கான அதிக விலையை கொடுக்க சந்தை தயாராக இருக்கிறதா? என்று எல்லா விடயங்களையும் யோசித்து முடிவுசெய்யுங்கள்.

உங்களுக்கான தனித்துவத்தை அறிந்து அதில் கவனம் செலுத்தும்போது

  • மற்றவர்களைவிட நீங்கள் எளிதில் கைதேர்ந்தவராக, நிபுணராக அதில் தனிப்பட்டு விளங்க வாய்ப்பு ஏற்படும்; உங்களின் நிபுணத்துவம், உங்களை அடுத்தகட்ட வெற்றிக்கு எளிதில் வழிநடத்தும்;

  • ஒரு குறிப்பிட்ட சந்தையில், குறிப்பிட்ட வாடிக்கையாளர் கூட்டத்தில் நீங்கள் கவனம் செலுத்தும்போது, அவர்களின் தேவைகளை சரியாக புரிந்தகொண்டு அவற்றிற்கான தீர்வுகளை உடனுக்குடன் வழங்கும்போது, உங்களது பொருள் சந்தையில் பெரிய வரவேற்பை உறுதிசெய்யும்;

  • உங்களின் நிபுணத்துவமும், வாடிக்கையாளர் சேவையும், உங்களுக்கு தனிப்பட்ட அங்கீகாரத்தையும், தலைமைத்துவத்தையும் ஏற்படுத்திக்கொடுக்கும்; புதிய போட்டியாளர்களின் வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது;

  • குறிப்பிட்ட சந்தையில், உங்களின் தனித்துவம் மிளிரும்போது, சந்தை விலையைப் பற்றி கவலைப்படாது. தரமான பொருளை, தரமான சேவையை கருத்தில்கொள்ளும்போது, உங்களுடைய இலாபம் போதுமான அளவு உறுதியாகும்;

மனிதராய் பிறந்த எல்லோருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அறிவியல் ஆராய்ச்சி சிந்தனையில், மருத்துவத் துறையில், கணிதத்தில், வின்வெளி ஆய்வில், இயல்-இசை-நாடகம் என்று ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் ஏதேனுமொன்றில் எல்லோருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அவர்கள் சிறந்துவிளங்க, அதற்கான ஒரு தனித்துவமான ஒரு சந்தையும், வாடிக்கையாளர் கூட்டமும் இருக்கும். அந்த தனித்துவத்தை அறிந்து, அதன் பாதையில் இடர்களைக் கடந்து பயனிப்பவர்கள் மட்டுமே வெற்றி காணுகிறார்கள். சிறுசிறு தடங்கள்களைக் கண்டு அஞ்சி ஒதுங்குபவர்கள், சாமானியர்களாகவே வாழ்ந்து மடிகிறார்கள்.


உங்களின் தனித்துவம் என்ன?

உங்களுக்கான சந்தை எது?

உங்களுக்கான வாடிக்கையாளர்கள் யார்? – என்ற

கேள்விகளுக்கான விடை உங்களுக்கு தெரியுமா?


வெந்ததை திண்று விதிவழி சாகும்

சாமானியனாக காலத்தைகழிக்க யோசிக்காதீர்கள்!


உங்கள் தனித்துவத்தில் வெற்றிக்கு போராடுங்கள்!

வென்றால் சரித்திரம்! தோற்றால் அனுபவம்!

அனுபவம் அடுத்த வெற்றிக்கு ஆரம்பப்புள்ளி!- [ம.சு.கு 08.08.2023]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comentários


Post: Blog2 Post
bottom of page