top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 281 - கிசுகிசுக்களை தவிர்த்திடுங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-281

[கிசுகிசுக்களை தவிர்த்திடுங்கள்!


  • பள்ளி மாணவர்கள் இடையே கிசுகிசுக்களுக்கு பஞ்சமே இருக்காது சமீபத்தில் ஒருமாணவன் தனக்கு பிடித்தமான ஒரு மாணவியிடம் தன் காதலைப்பற்றி வெளிப்படுத்த, அந்த மாணவி, மறுத்தவிட்டார். மேலும் மேற்கொண்டு தொந்தரவு செய்தால் ஆசிரியர் / பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என்று சொல்லியிருக்கிறார். இதனால் கோபம் கொண்ட மாணவன், அந்த மாணவியைப்பற்றி அவதூறாக நிறைய கிசுகிசுக்களை மாணவர்கள் மத்தியில் பேசியதோடு, பள்ளிச்சுவற்றிலும் சிலவற்றை கிறுக்கியிருக்கிறான். மனமுடைந்த மாணவி, வீட்டில் தற்கொலை முயற்சி செய்திருக்கிறாள். பின்னர் விடயம் தெரிந்து, பெற்றோர்கள் பள்ளியில் முறையிட, நீண்ட விசாரணைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட மாணவன் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளான்.

  • இன்றைய முதலாளித்துவ சந்தையில் போட்டிகள் அதிகம். ஒரே பொருளை பலரும் சந்தையில் விற்க முயற்சிக்கும்போது, போட்டியில் விலைகுறைப்பது, வாடிக்கையாளரைக் கவர எண்ணற்ற கவர்ச்சி விளம்பரங்களை செய்வதென்று போட்டிகள் தீவரமடையும். ஆனால் கூடவே பொறாமையும் அவர்கள் மத்தியில் வளருவது பெரிய ஆபத்தாகிறது. எங்கள் ஊரில் ஒரு நகைக்கடைக்காரர், தன் தெருவில் கடைவைத்திருக்கும் வேறொரு கடையில் விற்கப்படும் நகைகள் போலியானவை என்று தவறானதொரு செய்தியை சந்தையில் பரப்பினார். சில சித்தரிக்கப்பட்ட நிகழ்வுகளை உருவாக்கி சமூகவளைதளத்தில் பரப்பினார். இந்த கிசுகிசுக்கள் அந்த கடைக்காரரின் காதுகளை எட்டியபோது, அவர் காவல்துறை உதவியை நாடினார். நீண்ட விசாரனைக்குப் பிறகு, அதன் காரணகர்த்தாக்கள் கைதுசெய்யப்பட்டனர். இப்போது அந்த கிசுகிசுக்களின் மூலகர்த்தா வழக்குவிவகாரங்களை தவிர்க்க, பெரிய தொகையை அபராதமாக கொடுத்தோடு அல்லாமல், அவர்களது சங்கத்தில் பெரிய மண்ணிப்பு கடிதமும் எழுதிக்கொடுக்க நேர்ந்தது.

தேவையற்ற கிசுகிசுக்களால், அந்த மாணவன் தன்னுடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது மட்டுமல்லாமல், அந்த மாணவிக்கும் தேவையற்ற மனஉளைச்சலையும் ஏற்படுத்திவிட்டான். ஏதோ அன்றைய தினம் எதேச்சசையாக அவளது பெற்றோர்கள் கவனித்ததால், அந்த தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டது. ஒருவேளை தவறியிருந்தால், அந்த மாணவியின் வாழ்வு அன்றோடு முடிந்திருக்குமல்லவா? மேலும் ஒரு தவறான செய்தியால், அன்றிலிருந்து அந்த மாணவி, பள்ளிக்கு வந்துபோக, எப்போதும் அவர்களின் வீட்டு நபர்கள் யாராவது ஒருவர் உடன் வந்தார்கள். பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்ட மாணவனால், அந்த மாணவிக்கு ஏதாவதொரு தீங்க வந்துவிடுமோ என்ற பயத்தினால்! ஏதோ வெளிவிவகாரங்கள், திரைப்படங்கள் பற்றி கிசுகிசுக்கள் பேசும்போது எந்தவொரு பெரிய பாதிப்பும் இருக்காது. ஆனால் மாணவர்கள் தங்களின் சகமாணவர்கள் குறித்து போலியான கிசுகிசுக்களை உருவாக்கும் போது, சில விபரீதங்களுக்கு அது வழிவகுக்கக்கூடும். இது பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு மட்டுமல்லாமல், சக நண்பர்கள், உறவுகள், அண்டை வீட்டார் என்று எல்லோரிடத்திலும் மிகவும் கவனமாக கையாளப்படவேண்டிய விடயம்.


வியாபாரத்தில், தன் சகபோட்டியாளர்கள் மீது தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பிவிட முயற்சிப்பது தொன்றுதொட்டு இருந்துவரும் மிகவும் கீழ்தரமான வியாபார உத்தி. தன்னால் போட்டியாளருக்கு நிகராக சாதிக்க முடியவில்லை என்றால், உடனே முன்னேறிவருபவரைப்பற்றி தேவையற்ற அவதூறுகளை கிசுகிசுத்து, அவர்களது வளர்ச்சியை பாதிக்க முயற்சிப்பார்கள். இந்தமாதிரியான புரளிகள் எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்த வேண்டுமானாலும் கிளம்பும். எல்லா சமயத்திலும் அதன் காரணகர்த்தாவை கண்டுபிடித்து தண்டிக்க முடியாது. அவற்றை எப்படி திறம்பட சமாளிக்கிறோம் என்பதில் தான் நம்முடைய அடுத்தகட்ட வளர்ச்சி அடங்கியிருக்கிறது. அவற்றை சமாளிக்கத்தெரியாமல் திணறினால், அந்த கிசுகிசுக்கள் உண்மையென்று சந்தை நம்பிவிடும். அவற்றிற்கு எதிர்த்து குரல்கொடுக்க ஆள்பலமும், பொருள் பலமும் தேவைப்படும். இதுதான் சந்தை யதார்த்தம்.


இப்படி சந்தையில் கிசுகிசுக்களை தவிர்க்க வேண்டுமானால், முதற்கண் அதற்கான வாய்ப்புக்கள் உருவாகாமலிருக்க என்ன செய்யவேண்டுமென்று யோசிக்க வேண்டும். உத; “பணைமரத்தடியில் நின்று பால் சாப்பிட்டாலும் அதை கல்லென்றுதான் உலகம் சொல்லும்” என்ற பழமொழியை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட கிசுகிசுக்களை நீங்களும் பேசாமல் இருக்கவேண்டும். நீங்கள் ஒருமுறை தவறுதலாக பேசினாலும், உங்கள் உடன் இருந்தவர்கள் அதை அப்படியே பிடித்துக்கொண்டு, பின்னொருநாளில் உங்களைப்பற்றி அதையே இன்னொருவரிடம் பேசுவார்கள். புறம் கூறுதலும், புரளு பேசுதலும் மக்களின் இரத்தில் ஊறிவிட்ட பழக்கங்கள். அவற்றை யாராலும் போராடி ஒழிக்க முடியாது. கூடியவரை அவற்றிலிருந்து விலகியிருப்பதற்கான வழிமுறையை காண்பது உங்களின் புத்திசாலித்தனம்.

  • வியாபார சந்தையில், உங்கள் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொள்பவர்கள், சில புரளிகளை அவ்வப்போது கிளப்புவது தவிர்க்கமுடியாது. ஆனால் அவற்றிற்காண பதிலை சந்தையில் உடனுக்குடன் தெளிவுபடுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு. நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும், அந்த கிசுகிசுக்கள் மக்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பறவும்;

  • உங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் வரக்கூடாது என்று விரும்பினால், முதற்கண் நீங்கள் யாரைப்பற்றியும், எதைப்பற்றியும் கிசுகிசுக்களை பேசக்கூடாது. நீங்கள் உங்கள் நண்பர்களிடம் தேவையற்ற கிசுகிசுக்கள் பேசினால், இன்னொருநாள் அவர்கள் உங்களைப்பற்றி உங்கள் முதுகிற்கு பின்னால் பேசுவார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது;

  • ஒருவேளை உங்கள் காதுகளுக்கு தேவையற்ற கிசுகிசுக்கள் வந்தால், அதன் உண்மைத்தன்மையை நன்றாக ஆராய்ந்து பாருங்கள். மற்றும் உங்கள் சக ஊழியர்கள், நண்பர்கள் பேசினால், அவர்களுக்கு அவற்றின் நன்மை-தீமைகளை விலக்கி, மேற்கொண்டு கிசுகிசுக்கள் பேசவேண்டாம் என்று அறிவுரை கூறுங்கள்;

  • எப்போதும், யாரிடமும் எந்தவொரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை முறைகுறித்து விமர்சிக்காதீர்கள். மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறைமை, அவர்களின் ஒழுக்க முறைமைகளில் நமக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களது செயல்கள் சமுதாயத்தை பாதிக்காத வரை, மனித நேயத்தை பாதிக்காதவரை, அவற்றில் மூக்கை நுழைக்கும் உரிமை நமக்கு கிடையாது என்ற தெளிவு நமக்கு இருக்கவேண்டும்.

பொதுவாக, தேவையில்லாதவற்றிற்கு, தேவையில்லாமல், தேவையற்ற நபர்கள் மூக்கை நுழைத்து தேவையில்லாத கருத்துக்களை தெரிவிப்பதில்தான், எண்ணற்ற கிசுகிசுக்கள் துவங்குகின்றன. இந்த தேவையற்றவைகள் ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் திட்டமிட்டு உங்களை வீழ்த்த, போட்டியளார்கள் சில புறளிகளை பரப்புவார்கள். இந்த இரண்டுவகைகளையும் நீங்கள் சந்தையில் எப்போதும் எதிர்கொள்ள வேண்டும். கூடியவரை இந்த புரளிகள் உருவாகாமல் இருக்க முன்ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஒருவேளை புரளிகள் துவங்கினால், உடனுக்குடன் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.


நீங்கள் மற்றவர்களை பற்றி கிசுகிசுப்பதானாலும்

உங்கள் பற்றி மற்றவர்கள் கிசுகிசுப்பதானாலும்

கூடுயவரை இரண்டுக்கும் வாய்ப்பளிக்காமல் தவிர்த்திடுங்கள்;


கிசுகிசுக்கள் எல்லாவகையிலும்

தேவையற்ற நேரம் வீணாக்கிகள்;

தவறான முன்னுதாரணங்கள்;

தர்மத்தை திசைதிருப்பும் காரணிகள்;


எதைப்பற்றி பேசுகிறோம்

எதைப்பற்றி செய்யப்போகிறோம்;

என்ற தெளிவோடு ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால்

ஆக்கப்பூர்வமான செயலில் மட்டும் நாட்டம்செலுத்நினால்

உங்கள் சொல்லும் செயலும்

மற்றவர்களின் சொல்லும் செயலும்

எல்லாவகையிலும் எல்லோருக்கும் பயன்தரும்!



- [ம.சு.கு 17.07.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page