top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 273 - பழக்கப்பட்ட விதத்திலேயே யோசிக்கிறீர்களா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-273

பழக்கப்பட்ட விதத்திலேயே யோசிக்கிறீர்கள்!!


  • ஒரு மென்பொருள் தயாரிக்கும் பொறியாளர், மிகச்சிறந்த செயலிகள் சிலவற்றை உருவாக்கி பல செயல்களை எளிதாக்கினார். அவரது செயலிகள் பலருக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தியது. அந்த நிபுனரை, இரண்டு-மூன்று நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் ஆலோசனை இயக்குனராக [சுயாதீன இயக்குனர்] நியமித்தது. பல இயக்குனர் கூட்டங்களில், சந்தை நிலவரங்கள், நிர்வாகப் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை வரும்போது அவர், அந்த சிக்கல்களை எப்படி புதிய மென்பொருள் & செயலிகள் மூலம் தீர்க்கலாம் என்று வழிவகை சொன்னார். ஊழியர்கள் மேலாண்மை, வாடிக்கையாளர் குறைதீர்ப்பு, ஒழுக்கக் கட்டுப்பாடென்று எல்லாவற்றிற்கும் ஏற்ற செயலிகள் கூறினார். ஆனால், இரண்டாண்டுகளில் அவரது இயக்குனர் பதவி புதிபிக்க வாய்ப்பு வரும்போது, அவரை அதிலிருந்து விடுவித்துவிட்டனர். ஏன்?

  • இரும்பு வேலைகள் செய்யும் ஒரு ஊழியர், எப்போதும் சுத்தியலையே பெரிய கருவியாக தன் அன்றாட பணியில் பயன்படுத்தி வந்தார். தான் செய்யும் எல்லா செயல்களையும், சுத்தியலைக்கொண்டே முடித்தார். அவர் வீட்டில் எந்த வேலையை செய்து தரச்சொன்னாலும், உடனே முதல் உத்தரவாக தன்சுத்தியலை எடுத்துவரச் சொன்னார். ஒரு திருகாணியை கலட்டுவதானாலும், மேசையை சரிசெய்வதானாலும், பாத்திரத்தின் ஒடுக்கை எடுப்பதானாலும், தேங்காயை உடைப்பதானாலும் அவருக்கு அவருடைய சுத்தியல் மட்டுமே கைவந்த கருவியாக இருந்தது. எந்த வேலையையும், சுத்தியலைக்கொண்டு எப்படி செய்துமுடிப்பதென்றே யோசித்தார்!

அந்த மென்பொருள் நிபுணர், தன் முன் வைக்கப்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் தனக்கு பழக்கப்பட்ட மென்பொருள் செயலிகள் தயாரிப்பது மூலம் எப்படி தீர்க்கலாம் என்று மட்டுமே யோசித்தார். ஆனால் அந்த செயலிகள், அந்தந்த துறைகளுக்கு பொருந்துமா? ஊழியர்கள் & வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது குறித்து பெரிதாய் அவர் பொருட்படுத்தவில்லை. எல்லாவற்றிற்கும் தன் கணிணியும், செயலிகளுமே ஒரே தீர்வென்று குதிரைக்கு கடிவாளம் போட்டவிதமாய் அவர் யோசித்தார். ஆரம்பத்தில் அது பொருந்துவது போன்று தோன்றினாலும், அடுத்தடுத்த கூட்டங்களில், நிர்வாக குழுவினர் அவரது குறுகிய கண்ணோட்டத்தை புரிந்து கொண்டனர். அதனால், இரண்டாண்டு முடிவில், அவரது இயக்குனர் பதவியை புதுப்பிப்பதை தவிர்த்து விட்டனர். அவரைப்போல நீங்கள் என்னென்ன விடயங்களில் தொடர்ந்து ஒரே மாதிரியான தீர்வை யோசிக்கிறீர்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள்?


மனநல மருத்துவர் அபிரகாம் மாஸ்லோ கூறியது – “உங்களுக்கு பழக்கப்பட்ட கருவி சுத்தியலாக இருந்தால், உங்கள் எல்லா பிரச்சனைக்கான முடிவுகளும் அதைச் சுற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும்! சுத்தியலைக்கொண்டு எப்படி சரிசெய்யலாம் என்று சிந்திக்கத் துவங்கிவிட்டால், எண்ணற்ற மாற்று வழிகள் குறித்து யோசிப்பது நின்றுவிடும்; சுத்தியலைக்கொண்டு பல வேலைகளை செய்யலாம். ஆனால் அதைவைத்தே எல்லாவற்றையும் முடித்துவிட முடியாது.


இப்படித்தான் நம் அன்றாட வாழ்வின் நம் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. உங்களால் எல்லாவற்றையும் எதிர்கொள்ள முடியும். எல்லாவற்றிற்கும் நல்லதொரு தீர்வை கொடுக்கமுடியும் என்று நீங்கள் நம்பலாம். ஆனால் உங்களுக்கு பழக்கப்பட்ட துறையை தாண்டி, உங்களால் முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் தீர்வுகளை யோசிக்க முடிகிறதா?


ஏன் உங்களுக்கு பழக்கப்பட்ட துறையை தாண்டி, உங்கள் பிரச்சனைக்கான தீர்வு குறித்த மற்ற துறைகளின் கண்ணோட்டத்தில் யோசிக்க வேண்டும்;

  • உங்களுக்கு பழக்கப்பட்ட துறையில், நன்கு பழக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு யோசிப்பதும், வேலையை செய்வதும் உங்களுக்கு சுலபமாக இருப்பதால், நீங்கள் அதை தேர்ந்தெடுக்கிறீர்கள். ஆனால் அது எல்லா சமயத்திலும் சரியாக இருக்குமா? என்று யோசியுங்கள்!

  • உங்களுக்கு பழக்கப்பட்ட கருவியை கையாள்வதில் உங்களுக்கு நிறைய தைரியமும், நேர்த்தியும் இருக்கலாம். ஆனால் அது நீங்கள் செய்யப்போகும் புதிய துறைக்கு பொருந்தாத கருவியாக இருந்தால், உங்கள் நேர்த்திகளும், திறமையும் எந்த பயனுமளிக்காதே!

  • ஒரு பிரச்சனைக்கு, ஒவ்வொரு துறை சார்ந்தவரும் எண்ணற்ற வழிமுறைகளை அவர்ளின் துறைசார்ந்த அறிவைக்கொண்டு யோசிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட முறையால், ஏற்படும் வெவ்வேறு விபரீதங்கள் குறித்து அவர்களுக்கு போதிய அறிவு இருப்பதில்லை. புதிய முறைமைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் பலரிடம் இருப்பதில்லை. இந்த முரண்பட்ட நிலை, பல புதிய சிக்கல்களை உருவாக்கி விடக்கூடும்;

இந்த குறுகிய கண்ணோட்டத்திலிருந்து வெளிவர ஆசைப்பட்டால், நீங்கள் செய்யவேண்டியது;

  • நீங்கள் ஒரு துறைசார்ந்து, ஒரு கருவிசார்ந்து மட்டும் யோசிக்கிறீர்கள் என்ற புரிதல் உங்களுக்குள் வரவேண்டும்;

  • வளர்ச்சியை நோக்கிய எண்ணத்தை அதிகரிக்க வேண்டும். கூடியவரை பல்துறை வல்லுனர்களின் ஆலோசனைகளை பெறுவது மிக்கநன்று;

  • உங்களுக்கு தீர்வு தெரியலாம், ஆனால் உங்களுக்கு தெரிந்ததைவிட, சிறந்த தீர்வு வேறொன்று இருக்கலாம். அது யார்மூலம் வேண்டுமானாலும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு வந்துசேரலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்;

  • சில சிக்கல்களுக்கான தீர்வுகளை சின்னச் சின்ன சோதனைகள் மூலம்தான் சரிசெய்ய முடியும்; உங்களுக்குத் தெரிந்த முடிவுகளை அவ்வப்போது பரிசோதுயுங்கள்;

ஆக்கத்தை நோக்கிய பயனத்தில், உங்கள் திறமைகளைத் தாண்டி, பல்வேறுபட்ட துறைவல்லுனர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுப்பது, தேவையற்ற சிக்கல்களை தவிர்த்து, பல பிரச்சனைகளை தீர்த்திருக்கிறது;


கணிணித்துறையை சார்ந்தவருக்கு

எல்லா பிரச்சனையும் செயலிகளால் தீர்க்கமுடுயுமென்ற தோன்றும்;

மனிதவளத் துறையை சேர்ந்தவருக்கு

எல்லா பிரச்சனையையும் பேசித் திர்க்கலாம் என்று தோன்றும்;

எல்லாம் அவரவர் பாணியில்

அவரவருக்கு தெரிந்த கருவிகளைக்கொண்டு யோசிக்கின்றனர்;


அவர்கள் சிந்தனையில் தவறில்லை – அதேசமயம்

ஏன்? எதற்கு? எப்படி? எதனால் என்று ஆய்ந்து

ஒரு துறையில் மட்டும் யோசிக்காமல்

பல்வேறு வழிமுறைகளை சிந்திப்பவர்களால் மட்டுமே வெற்றிவாய்ப்ப் கிடைக்கும்”


- [ம.சு.கு 09.07.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page