top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 272 - உதவியாளர் / செயலாளர் தேவை!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-272

உதவியாளர் / செயலாளர் தேவை..!!


  • ஒரு நிறுவனத்தின் தலைமை இயக்குனர், “திறமையானவர்”, “வேலைக்காரர்”, “சாமர்த்தியசாலி” என்று பேர்பெற்றிருந்தார். அவரது அன்றாட செயல்பாடுகள் குறித்து இரண்டு கல்லூரி மாணவர்கள் ஒரு ஆய்வறிக்கை செய்தனர். அவர்களுடன் சிறிது நேரம் செலவிட்டு அவர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். எப்படி உங்களால் எல்லா ஊழியர்களையும் வழிநடத்தி, எடுத்த காரியத்தை சரியாக பார்த்து முடிக்க முடிகிறதென்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இப்படி பதிலளித்தார். “எங்கள் நிறுவன ஊழியர்கள், நிர்வகிக்கும் மேலாளர்கள் என்று எல்லோருமே திறமைசாலிகள். அதைவிட, அவர்களின் அன்றாட பணியாற்றலையும், எண்ணையும் இணைக்கும் பாலமாக இருக்கும் என் உதவியாளர்களும் / செயலாளர்களும் தான் இந்த வெற்றிக்கு ஒருமுக்கியமான காரணம்” என்றார். தான் திட்டமிட்டதையும், முடிவெடுத்ததையும், தொடர்ந்து கண்காணித்து, அவ்வப்போது அவருக்கு தகவல் அளித்து, திட்டங்கள் செவ்வனே நடப்பதை கண்காணிப்பதற்கு பக்கபலமாக இருந்த தன் செயலாளர்கள் / உதவியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்!!

  • நீங்கள் ஒருபெரிய பிரபலமான பெரிய மருத்துவர் ஒருவரை பார்க்கச் செல்கிறீர்கள். நேராக அவரிடம் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். முதலில் செவிலியர்கள் எடை, உயரம் போன்றவற்றை சோதிப்பார்கள். பின் பயிற்சி / இளைய மருத்துவர் ஒருவர் உங்களுக்கு இருக்கும் நோய் உபாதைகள் என்னென்ன? இதுவரை என்னென்ன வகையான மருந்துகளை எடுத்துள்ளீர்கள், என்று முழுமையாக கேட்டு குறிப்பெழுதுவார்கள். அதன் பின்னர்தான், நீங்கள் அந்த பெரிய மருத்துவரை பார்க்க அனுமதிக்கபடுவீர்கள். பெரிய மருத்துவர், வெறும் 4-5 நிமிடத்தில் உங்களை பரிசோதித்து, மருந்து பட்டியலை எழுதிக்கொடுத்து அனுப்பிவிடுவார், ஒருவேளை அவரே எல்லாவற்றையும் கேட்டு, எழுதி பார்ப்பதானால், தினமும் எத்தனை நோயாளிகளை அவரால் கையாள முடியும்?

இத்தனை மணிக்கு இவரை அழைத்து உறுதி செய்துவிடு, அடுத்தவாரம் போக வேண்டிய பயனத்திற்கு முன்பதிவுகள் செய்துவிடு, இவருடைய கடிதத்திற்கு இப்படியாக பதில் எழுதிவிடு, நாளைய கூட்டத்திற்கான எல்லா அறிக்கைகளும் தயாராக இருக்கிறதா என்று எல்லா மேலாளர்களிடமும் ஒருமுறை கேட்டுவிடு,.... என்று தினம்தினம் நீங்கள் பலவேலைகளை சொல்ல, அவையனைத்தையும் பட்டியலிட்டு முடிப்பதோடு, அந்தத் தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் திறமையான உதவியாளர்களும் / செயலாளர்களும் இருந்தால், நீங்கள் எவ்வளவு வேலைகளை கையாள முடியும்? அதே சமயம் இந்த வேலைகள் எல்லாமே நீங்களே செய்துகொள்ள வேண்டுமென்றால், உங்களின் அன்றாட உற்பத்தித்திறம் எப்படி இருக்கும்? இவை இரண்டிற்கும் எந்த அளவிற்கு வேறுபாடு இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்கள்?


பல நிபுணத்துவம் பணியில் [மருத்துவர், வழக்கறிஞர், பட்டயக் கணக்காளர்,...] பெரிய அளவில் இருப்பவர்களை கவனித்திருக்கிறீர்களா? அவர்களைச் சுற்றிலும் எப்போதும் 4-5 உதவியாளர்கள் இருப்பார்கள். பணியின் உதவியாளர்கள் போக, தனிச்செயலாளர்களும் ஓரிருவர் இருப்பார்கள். ஏன் என்று யோசிக்கிறீர்களா? எண்ணற்ற சின்னச்சின்ன விடயங்கள் அவ்வப்போது வந்துகொண்டேதான் இருக்கும்; அவற்றையெல்லாம் அந்த நிபுணர்களே பார்த்து பதிலளிக்க வேண்டுமென்றால், அவர்களின் 24 மணி நேரத்தில் எல்லாவற்றையும் பார்க்க முடியாது. அப்படி சின்ன விடயங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தால், எப்படி பெரிய சாதனைகள் செய்வது. அவர்களின் அன்றாடப் பணிகளை, அவர்களின் உதவியாளர்களும், செயலாளர்களும் பார்த்துக்கொள்வதால் தான், அவர்களால், பெரிய விடயங்களில் அதிக கவனம் செலுத்தி சாதிக்க முடிகிறது!


உங்களுக்கென்று தினச்செயலாளர்கள் இருந்தால், உங்களுக்கான பயன் என்ன?

  • அன்றாடம் நீங்கள் செய்ய வேண்டிய நிர்வாகப் பணிகள் சிலவற்றை அவர்கள் உங்களுக்காக செய்து, உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவர்;

  • யாருக்கெல்லாம், எதையெல்லாம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டுமோ, அவற்றை நீங்கள் நினைவில் வைத்து அழைப்பதற்கு பதிலாய், அவர்கள் அதை உங்களுக்கு செய்துவிடுவர்;

  • உங்கள் பயன தினம், நேரத்தை சொல்லிவிட்டால், அன்றைய தினம் என்னென்ன இரயில், விமானங்கள், இருக்கிறதென்றும், எதில் இடம் இருக்கிறதென்றும் சோதித்துப்பார்த்துவிட்டு உங்களிடம் தேர்வுகளை கொடுப்பார்கள்;

  • உங்கள் கோப்புகளை, முக்கிய ஆவனங்களை பத்திரமாக பாதுகாப்பதோடு, உங்கள் வரவு-செலவுகளை அன்றாடம் குறித்துக்கொள்வார்கள்;

  • உங்களுக்கு தேவையில்லாத அழைப்புக்கள் வருவதை குறைத்து, உங்கள் நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த உதவிபுரிவார்கள்;

  • கடிதங்களுக்கான பதில்களை நீங்கள் அவசரத்தில் வாய்மொழியாக சொன்னால், அவற்றை முறையாக தட்டச்சு செய்து உரியவருக்கும் கிடைக்கும் வகையில் செய்வார்கள்;

இப்படி உங்கள் அன்றாட பணிகள் பலவற்றை அவர்கள் செய்து, உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் உதவியாளர்கள் / செயலாளர்கள் இருக்க வேண்டியது முக்கியம். ஆனால் நல்ல உதவியாளர்களை வேலையில் அமர்த்துவது கூடதல் செலவீனத்தை கொடுக்கும் என்பர். சில சமயங்களில், அவர்கள் விடுப்பெடுத்தால், உங்கள் வேலைகள் எல்லாமே பாதிக்கப்படும் என்பர். எதை செய்வதானாலும், அதில் சில நிறை-குறைகள் இருக்கத்தான் செய்யும். குறைகளைவிட நிறைகள் எவ்வளவு மடங்கு அதிகம் என்று பாருங்கள். உங்கள் வேலைக்கும், வருவாய்க்கும் ஏற்ப போதுமான உதவியாளர்களையும், செயலாளர்களையும் பணியமர்த்தி உங்கள் உற்பத்தித் திறனை பண்மடங்காக்குங்கள்!


நீங்கள் வேகமாக வளர வேண்டுமா?

நிறைய வேலைகளையும், நிறைய மனிதர்களையும்

நீங்கள் கையாள தயாராகிவிடுங்கள்!


உங்கள் ஒருவராலே எல்லாவற்றையும்

துள்ளியமாக கையாள முடியுமா?


ஏன் பெரிய அலுவலர்கள் எல்லோரும் தங்களுக்கென

தனிச்செயலாளர்கள் / உதவியாளர்கள் வைத்திருக்கின்றனர் என்று

எப்போதாவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

பதவிகள் மேல போகப்போக

தனிச் செயலாளர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதேன்?


நீங்கள் எவ்வளவுதான் திறமைவாய்ந்தவராக இருந்தாலும்

உங்களால் எல்லாவற்றிற்கும் விடை கொடுக்க முடிந்தாலும்

எல்லா நேரங்களிலும், எல்லாவற்றையும் நீங்களே

பின் தொடர்ந்து செய்துவிட முடியாது!

நீங்கள் அடுத்தடுத்த விடயங்களுக்கு போனால்தான்

பெரிய வெற்றிகள் சாத்தியப்படும்!


நீங்கள் முடிவுசெய்து கொடுத்த காரியத்தை

உங்களுக்காக யாராவது ஒருவர் பின்தொடர்ந்து

அவை நடந்தேறுவதை உறுதிசெய்ய வேண்டும்!

அதற்கு உங்கள் பணிச்சுமைக்கேற்ப போதுமான

உதவியாளர்களும் / செயலாளர்களும் இருப்பது அவசியம்!!



- [ம.சு.கு 08.07.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page