top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 262 - பிரச்சனைக்கு விடைதேடாவிட்டால்….?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-262

பிரச்சனைக்கு விடைதேடாவிட்டால்...?


  • வியாபாரச் சந்தையில் உள்ளூர் அரசு நிர்வாகம் சில குளறுபடிகளை செய்கிறது. அரசாங்க வதிகளை செயல்படுத்துவதில் மெத்தனப்போக்கு காட்டுகிறது. பலவிடயங்களில் பாரபட்சமாக நடந்துகொள்கிறது. இந்த நிலை சில வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் உங்களுக்கு இப்போதைக்கு எந்த பாதிப்பும் இல்லை. வளர்ந்துவரும் பாதிப்பை உணர்ந்த வியாபாரிகள் சங்கம், இந்த பாரபட்சங்களை எதிர்த்து குரல் கொடுக்கிறது. எல்லா வியாபாரிகளையும் ஒன்றாக நிற்க அரைகூவல் விடுக்கிறது. சக வியாபாரிகளுடன் நீங்கள் கைகோர்த்து நியாயத்தை நிலைநாட்ட போராடுவீர்களா? அல்லது இப்போதைக்கு உங்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை என்று விலகிநிற்கப் போகிறீர்களா?

  • கொரோனா பெருந்தொற்றை தவிர்க்க, அரசாங்கம் எண்ணற்ற பாதுகாப்பு விதிகளை, கட்டுப்பாடுகளை விதித்தது. முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளை கழுவுதல் என பல விதிமுறைகள் சொல்லப்பட்டன. அந்த கடினமான காலத்தில், நீங்கள் தடுப்பூசி போட்டுவிட்டதால் உங்களுக்கு பாதிப்பில்லை என்று பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காமல் சுற்றினால், நீங்களேகூட அந்த நோயை கடத்தும் காரணியாகக்கூடுமல்லவா! முறையான பாதுகாப்புவிதிகளை கடைபிடிக்காவிட்டால், நீங்கள் விடையின் அங்கமாக இல்லாமல், பிரச்சனையின் அங்கமாக நிற்பீர்களே! எது உங்கள் விருப்பம்?

என்னதான் மக்களாட்சியானாலும், சில அரசியல் பிரமுகர்களும், உயர் அதிகாரிகளும் ஆங்காங்கே சிற்றரசர்கள் போலத்தான் செயல்படுகிறார்கள். அரசு இயந்திரங்களை கட்டுப்படுத்தி, வர்த்தகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க சில பிரயத்தனங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். அந்த தவறுகளை சுட்டிக்காட்டி சரிசெய்ய, வியாபார வளர்ச்சிக்கான தேவைகளை அரசாங்கத்திடம் பேச, எல்லா வியாபாரிகளும் கூட்டாக சங்கம் அமைத்து கோரிக்கை வைக்கிறார்கள். இப்போதைக்கு உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அந்த கூட்டு முயற்சியில் இருந்து விலகி நிற்பது சரியா? வியாபாரிகளைப்போலத்தான் ஊழியர் சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் அவ்வப்போது போராடுகின்றன. அவற்றில் நீங்கள் பங்கெடுக்காமல் விலகி நின்றால், உங்களைப் போல இன்னும் சிலர் நின்றால், எப்படி தர்ம-நியாயங்களை நிலைநாட்டுவது. ஒருநாள் அந்த பாதிப்பு உங்களுக்கு வரும்போது, உங்களுக்காக யார் குரல் கொடுப்பார்கள்?

உலகமே நோய்தொற்றால் அவதிப்பட்டு, மருத்துவ அவசரநிலை உலகெங்கும் பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த நோய்தொற்றிலிருந்து தற்காலிகமாக தங்களை காத்துக்கொள்ளவும், பின் தடுப்பூசி மூலம் நிரத்தரமாக காத்துக்கொள்ளவும் அரசாங்கங்கள் படிப்படியாக முயற்சித்து திட்டங்களை செயல்படுத்தியது. அரசாங்கம் சொல்வதை எல்லோரும் சரியாக கேட்டு நடந்தார்களா? ஒருவேளை முதல் மாதத்திலேயே, அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகளை 100% கடைபிடித்திருந்தால், இந்த நோய் தொற்று அந்தளவிற்கு பாதித்திருக்குமா? வருகின்ற பிரச்சனைக்கு நீங்கள் விடைதேடி கண்டுபிடிக்காவிட்டாலும், மற்றவர்கள் குழுவாக விடைதேடும்போது அவர்களோடு நீங்கள் பயனிக்கிறீர்களா? அப்படி விடையின் அங்கமாக இல்லாமல், நீங்கள் விலகிநின்று இஷ்டம் போல செய்தால், ஒருகட்டத்தில் நீங்களே பிரச்சனைக்குரியவர் ஆகிடுவீரே!


ஒன்றை மறந்துவிடாதீர்கள்! ஒன்று நீங்கள் விடையின் அங்கமாக இருக்கவேண்டும், அல்லது பிரச்சனையின் அங்கமாக இருக்கவேண்டும். இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை என்று ஒன்றில்லை. ஆக்கப்பூர்வமாக விடைதேட முயற்சிப்பவர்கள் விடையின் அங்கமாகிறார்கள். எதுவும் செய்யாமல் இருப்பவர்கள், அந்த பிரச்சனையை ஏற்றுக்கொண்டு அதன் அங்கமாகி விடுகிறார்கள்.


ஒரு நிதிநிறுவனத்தில் வேலைசெய்கிறீர்கள். மக்களிடம் பணத்தை வைப்பு நிதிகளாக பெற்று பணபரிவர்த்தனை செய்யும் அந்த நிறுவனத்தில் எண்ணற்ற முறைகேடுகளை பார்க்கிறீர்கள். இந்த நிலை நீடித்தால், அந்த நிறுவனம் மூடப்பட்டு, மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்று உங்களுக்கு தெரிகிறது. ஆனால், நீங்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலை, ஊதியம் என்று இருந்துவிடுகிறீர்கள். ஒருநாள் அந்த நிறுவனம் மூடப்படுகிறது. அன்றைய தினம் உங்களுக்கு வேலையிழப்பு ஏற்படுவதோடு, புலனாய்வுத்துறை வழக்கிலும் சேர்க்கப்படுகிறீர்கள்!


தேசமானாலும், வியாபாரமானாலும், குடும்பமானாலும், தவறுகளின் அளவு பெரிதோ, சிறிதோ, அப்போதைக்கப்போது அவற்றை சரிசெய்ய முயற்சி எடுக்காவிட்டால், அந்த தவறுகள் வளர்ந்து ஒருநாள் பூதகரமாகி எல்லாவற்றையும் அழித்துவிடும். அப்படித்தான் பிள்ளைகள் கெட்டுப்போகிறார்கள். வியாபார சாம்ராஜ்யங்களும் அழிந்திருக்கின்றன. தேசமும் நாசக்கேடாகியிருக்கிறது.

  • உங்கள் நிறுவன ஊழியர்களுக்குள் சில கருத்துவேறுபாடுகள். அவற்றை ஆரம்பத்தில் சரிசெய்யாமல் வளரவிட்டால்?

  • உங்கள் வீடுள்ள பகுதியில் சுற்றுச்சூழலை பாதிக்கும்வகையில் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதை தடுக்க நீங்கள் அனைவரும் கூட்டாக முயற்சி எடுக்காவிட்டால்?

  • ஆள்பவர்களின் இயலாமையினால் தேசத்தின் வளரச்சி பின்தங்கிவிடுகிறது. அடுத்துவரும் தேர்தலில் உங்கள் ஜனநாயக கடைமையான வாக்களிப்பைத் நீங்கள் தவறவிட்டால்?

  • உங்கள் சமுதாயத்தில் ஜாதிய வேற்றுமைகளும், ஏற்றத்தாழ்வுகளும் அதிகரிப்பதை உணர்கிறீர்கள். அதை எதிர்த்துக்குரல் கொடுக்கும் தொண்டு இயக்கம் உங்கள் பங்களிப்பை கேட்கும்போது, நீங்கள் விலகி நின்றால்?

  • கல்லூரியில் பெரிய மாணவர்கள், இளையவர்களை மிரட்டுவது [ரேகிங்] நடக்கிறது. அதை கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் சுட்டிக்காட்டத் தவறினால்?

  • கொரோனா போன்ற பெருந்தொற்றுக்கள் வருகின்றபோது, அரசாங்கம் பரிந்துரைக்கும் பாதுகாப்பு விதிகளை நீங்கள் மதிக்காவிட்டால்?

  • உங்கள் பிள்ளைகள், ஒருசில பாடங்களை புரிந்துகொள்ள முடியாமல் திணறுவது தெரிகிறது. அவர்களுக்கு அதை நீங்களோ, ஆசிரியரோ புரியவைக்க முயிற்சி எடுக்காவிட்டால்?

  • உங்கள் பகுதியில் பசி, பட்டினியில் பலர் துன்பப்படுகிறார்கள். உங்களிடம் போதுமான செல்வ வளம் இருப்பதால், சேவை அமைப்புக்கள் உங்களிடம் உதவிகேட்கும்போது, நீங்கள் எதுவும் செய்யாவிட்டால்?

  • உங்கள் வீட்டில் தேவையில்லாத சில பிரச்சனையும், வாக்குவாதமும் துவங்குகிறது. அந்த பிரச்சனையின் அடிப்படையை அறிந்து, அதை தீர்க்க முயற்சிக்காமல் விட்டால்?

இப்படி நிறைய பிரச்சனைகள் உங்களின் வேலை, வியாபாரம், குடும்பம் என்று எல்லா இடத்திலும் வரும். அவற்றை நீங்கள் கண்டும் காணாமல் சென்றால், அந்த பிரச்சனை ஒருநாள் பூதாகரமாக வளர்ந்து நிற்கும். அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. உங்களை தனிப்பட்ட முறையில் பாதிக்காத வரை எதையும் செய்யமாட்டேன் என்று நீங்கள் இருந்தால், அந்தப் பிரச்சனை தேவையில்லாமல் வளர்ந்துவிடும். ஒருநாள் அந்த பிரச்சனை உங்களை பாதிக்கும்போது, உங்களுக்கு உதவ யாரும் வரமாட்டார்கள்.


ஒன்று நீங்கள் பிரச்சனைகளை களைய ஆக்கப்பூர்வமாக விடைதேட வேண்டும். இல்லாவிட்டால், அந்த பிரச்சனையின் அங்கமாகி, அதனூடே நீங்களும் அழிந்துவிட நேரும்.


பிரச்சனை எல்லோருக்கும் வரும்! போகும்!

பிரச்சனைக்கு விடைதேடுபவர்கள்

அவற்றிலிருந்து விடுபட முயிற்சிக்கிறார்கள்!

பிரச்சனைக்கு விடைதேடாமல் வெறுமனே பேசுபவர்கள்

அதை ஊதிஊதி பெரிதாக்குகிறார்கள்!!


சமுதாய சீர்கேடுகளுக்கு எதிர்த்து குரல் கொடுக்கலாம் – அல்லது

அவற்றை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லலாம்;

யதார்த்தத்தில், எதுவும் செய்யாமல் கடந்து செல்பவர்கள்

அவற்றை ஏற்றுக்கொண்டு அதன் அங்கமாகி விடுகிறார்கள்;


நிறுவனத்தில் ஏற்படும் தவறுகளை சுட்டிக்காட்டி சரிசெய்யாவிட்டால்

அந்து தவறுகள் உங்கள் நிறுவனத்தோடு உங்களையும் வீழ்த்திவிடும்;

மாற்றத்திற்கு முன்வருபவர்கள், முன்னேற்றத்தின் அங்கமாகிறார்கள்;

அமைதி காப்பவர்கள் அழிவிற்கு அடுகோடிடுகிறார்கள்;


- [ம.சு.கு 28.06.2023]

10 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page