top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 261 - சராசரிகளை அளவோடு எடுத்துக்கொள்ளுங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-261

சராசரிகளை அளவோடு எடுத்துக்கொள்ளுங்கள்!!


  • மொத்தம் ஆறு ஊழியர்களை கொண்ட இரண்டு கடைகள் இருந்தன. இந்த 6 விற்பனை ஊழியர்களின் விற்பனை அளவு என்னவென்றால் – முதல் ஊழியர் ஒரு பொருள், 2-வது ஊழியர் இரண்டு பொருள்,....., 6-வது ஊழியர் ஆறு பொருட்கள் வீதம் விற்று வந்தனர். முதல் மூன்று ஊழியர்கள் முதல் கடையில் இருந்து சராசரியாக ஊழியருக்கு 2 பொருள் வீதம் விற்றனர் (1+2+3 = 6 / 3 = 2). இரண்டாவது கடை ஊழியர்களின் விற்பனை சராசரி 5 ஆக இருந்தது (4+5+6 = 15 / 3 = 5). முதலாளி இரண்டு கடை மேலாளர்களுக்கும் இந்த சராசரியை மேம்படுத்தினால் கூடுதல் சம்பளம் / வெகுமதி அளிக்கப்படும் என்று உத்தரவிட்டார். இரண்டு மேலாளர்களும் யோசித்து, வியாபாரத்தை அதிகரிக்காமல் சராசரியை மட்டும் அதிகரித்து விட்டார்கள். அது எப்படி வியாபாரம் அதிகரிக்காமல் சராசரி மட்டும் அதிகரிக்கும்?

  • இந்திய பங்குச்சந்தை முக்கிய குறியீடான சென்செக்ஸ் குறியீடு 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளை உள்ளடக்கியது. அந்த குறியீட்டின் 35 ஆண்டுகாள வளர்ச்சியை பார்த்து, பங்கு முதலீடு நல்ல இலாபம் ஈட்டும் என்று பொத்தாம் பொதுவாக முடிவு செய்துவிட முடியுமா?அந்த குறியீடானது 30 குறிப்பிட்ட பங்குகளின் வளர்ச்சியின் ஒரு சராசரி. ஆனால் அந்த குறியீட்டில் 30 ஆண்டுகளாக அதே 30 பங்குகள் தான் இருக்கின்றனவா? புள்ளிவிவரத்தை சற்று அலசிப்பார்த்தால், அந்த 30 பங்குகளில் 7 மட்டுமே ஆரம்பம் முதல் இருக்கிறது. ஏனைய 23 பங்குகள் வளர்ச்சியின்மையின் காரணமாக வேறு வளரும் நிறுவன பங்குகளுக்கு இடமளித்து வெளியேறிவிட்டது. ஒருவேளை முதல் 30 பங்குகளில் நீங்கள் முதலீடு செய்திருந்தால், உங்கள் முதலீட்டின் பெரும்பகுதி வளர்ச்சியின்றி போயிருக்குமே!!

வியாபாரம் அதிகரிக்காமல் எப்படி சராசரி அதிகரிக்கும் என்று யோசிக்கிறீர்களா? இரண்டாவது கடையிலிருந்து 4 பொருள் விற்கும் 4-வது ஊழியரை கடை ஒன்றுக்கு மாற்றினால் சராசரிகள் என்னவாகும்?


முதல் கடை – நான்கு ஊழியர் – [1+2+3+4 = 10 / 4 = 2.5] = 0.5 அதிகரித்தது

இரண்டாம் கடை – இரண்டு ஊழியர் – [5+6 = 11/2 = 5.5] = 0.5 அதிகரித்தது


இப்படி எண்களை வைத்து விளையாடி அதிக சம்பளமும், வெகுமதியும் வென்றனர். ஆனால் கடையின் இலாபம் குறைந்துவிட்டது. இப்படி உங்கள் ஊழியர்கள் செய்தால் உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி என்னாவது?


பங்குச்சந்தையானது நொடிக்குநொடி ஏற்ற-இறக்கங்களுடன், பல அதிர்ச்சிகளையும், ஆச்சர்யங்களையும் தாங்கி பயனிக்கிறது. அந்த பங்குச்சந்தை வெளியிடும் சராசரி குறியீட்டை மட்டும் பார்த்து உங்கள் முதலீட்டு முடிவுகளை எடுக்கமுடியாது. உங்கள் முதலீட்டு அளவு, முதலீட்டு அபாயம் / துணிவின் அளவு, இலாப எதிர்பார்ப்பு என்ற விடயங்களுக்கு ஏற்ப பங்குகளை தேர்வு செய்ய வேண்டும். இன்று சென்செக்ஸில் இருக்கும் பங்குகள் நாளை இருப்பது உறுதியில்லை. வளர்ச்சிகானாது பங்குகள் வெளியேற்றப்பட்டுவிடும். அதேபோல நீங்களும் வளர்ச்சியற்ற பங்குகளிலிருந்து சீக்கிரம் வெளியேறாவிட்டால், உங்கள் முதலீட்டின் வளர்ச்சியும் தேங்கிப் போகும். வெறும் பங்குச் சந்தை குறியீடுகள், சராசரிகளை மட்டும் மேம்போக்காக பார்த்து முதலீடு செய்தால், உங்கள் முதலுக்கேகூட மோசம் ஏற்படலாம். சராசரிகள், புள்ளிவிவரங்களின் உள்ளிருக்கும் பங்குகளை, அவற்றின் எண்களை சரிவர கவனிக்காவிட்டால், உங்கள் முடிவுகளில் தவறு நேரக்கூடும்.


வீட்டுப் பொருளாதாரம் முதல், உலகப் பொருளாதாரம் வரை எல்லா இடத்திலும் சராசரிகள் பெரிய அளவில் பேசப்படுகின்றன. அந்த சராசரிகளுக்கு அடிப்படையான பின்னூட்ட எண்கள் ஆயிரமாயிரமாய் இருந்தால், எந்தவொரு தனிப்பட்ட எண்ணாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. அதேசமயம், அந்த சராசரியானது, வெறும் 2-3 எண்களைக் கொண்டு கணக்கிடப்பட்டிருந்தால், அவற்றில் ஏற்படும் சிறிய மாற்றமும் சராசரியை வெகுவாக பாதிக்கும்.


வியாபாரச் சந்தையின் சராசரிகள் என்னவென்று தெரிந்திருப்பதன்மூலம் என்ன பயன் கிடைக்கும்;

  • சந்தையின் சராசரிகள், வியாபாரத்தின் போக்கை தெளிவுபடுத்தும்.

  • போட்டியாளர்கள் & உங்கள் வியாபாரத்தின் வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்க உதவிகரமாக இருக்கும்;

  • உங்கள் ஊழியர்களிம் உற்பத்தித் திறனை அளவிட, அவர்களின் சிறந்தவர்களை அடையாளம் காண ஏதுவாக இருக்கும்;

  • சந்தையின் தேவைகள், இருப்புக்கள் குறித்த சராசரி புள்ளவிபரங்கள், உங்கள் எதிர்கால திட்டங்களை வகுக்க உறுதுணையாக இருக்கும்;

சராசரி புள்ளவிவரங்கள் ஒருபுறம் உங்கள் வியாபார முடிவுகளுக்கு உறுதுணையாக இருந்தாலும், அதன் மறுபுற அபாயங்கள் என்னவென்று தெரிந்துகொண்டு, அதை மிகவும் ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும்;

  • சராசரிகளின் பின்னூட்ட எண்களின் அளவு குறித்து தெரியாமல் முடிவுகளை எடுத்தால், சிலசமயம் தவறாகிவிடும். 2-3 எண்களின் சராசரியில், ஒரு எண் மாறினாலும் சராசரி எந்தபக்கம் வேண்டுமானாலும் மாற்றம் காணும்;

  • 1-க்கும், 10-க்குமான சராசரி 5. ஆனால் அந்த 5-க்கு அருகாமையில் யாருமில்லை. நீங்கள் சராசரியை கருத்தில் கொண்டு முடிவெடுத்தால் சிக்கலாகிவிடும். உங்கள் சராசரி கணக்கீட்டில், இரு துருவங்களில் அதிக எண்கள் இருந்தால், உங்கள் முடிவுகளில் அதீத கவனம் தேவை; துருவ எண்கள் உங்கள் முடிவை எப்படி வேண்டுமானாலும் திசைதிருப்பலாம்!

  • சராசரிகள் வெறும் புள்ளிவிவரங்கள் தான். அவை வாடிக்கையாளர்களின் தன்மையை, எண்ணங்களை, விருப்பு-வெறுப்புக்களை முழுமையாக வெளிப்படுத்தாது.

எண்களும், கணிதமும் வியாபாரத்தின் முக்கிய அம்சம். ஆனால் அந்த எண்களின் விளையாட்டில் எப்போதும் ஒரு கவனம் இருக்க வேண்டும். பல சரியான முடிவுகளும், விபரீத முடிவுகளும் எண்களின் மீதான நம்பிக்கையில்தான் வரலாற்றில் எடுக்கப்பட்டிருக்கின்றன. எண்கள், சராசரிகளைக்கொண்டு நீங்கள் எப்படி கவனமாக முடிவெடுக்கிறீர்கள் என்பது உங்கள் கையில்!!


1-க்கும், 10-க்குமான சராசரி 5,

4-க்கும், 6-க்குமான சராசரியும் 5,

3-க்கும், 7-க்குமான சராசரியும் 5-தான்;

இந்த மூன்றின் சராசரியும் ஒன்றுதான்

ஆனால் அதைசார்ந்து எடுக்கும் முடிவுகள் ஒன்றாகுமா!!


எண்களின் விளையாட்டை புரிந்துகொள்ளுங்கள்!

சராசரியின் இருதுருவங்களை புரிந்துகொள்ளுங்கள்!

புள்ளிவிவரங்களின் பின்னூட்டத்தை புரிந்துகொள்ளுங்கள்!


எண்ணும், கணிதமும் வாழ்வின் அங்கம்;

அதை ஆக்கப்பூர்வமாக வளர்ச்சிக்குப் பயன்படுத்த

அதன் தன்மையை, தாக்கத்தை தெரிந்துகொள்ளுங்கள்!


- [ம.சு.கு 27.06.2023]




Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page