top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 257 - எளிமையாக இருங்கள்!!"

Updated: Jun 24, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-257

எளிமையாக இருங்கள்!!


  • நம் நாட்டில், புகழின் உச்சத்தை தொட்ட பலர், ஏனோ எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல் எல்லா வகையிலும் எளிமையாக இருந்திருக்கின்றனர். மகாத்மா காந்தி துவங்கி, இந்த நூற்றாண்டில் நம்மை விட்டு பிரிந்த அப்துல் கலாம் வரை, சாதனையாளர்கள், எப்போதும் சாமானியர்களுடன் பயனித்து அவர்கள் தேவையை பூர்த்தி செய்து மக்கள் வாழ்வை மேம்படுத்த வழிவகுத்தனர். சாதித்துவிட்டோம் என்ற தலைக்கணத்தோடு திரிந்தவர்கள் யாரும் நீண்ட நாள் நிலைத்திருக்கவில்லை. சாதனைகளை பரம்பொருளின் கொடையாக கருதி எளிமையை முன்னிறுத்தியவர்கள், எல்லோராலும், எல்லா சமயங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்;

  • மென்பொருள் நிறுவனத்தில் பல பெரிய திட்டங்களுக்கான வேலைகள் பல்வேறு குழுக்களாக, தனித்தனி மேலாளர்கள் தலைமையில் நடந்து கொண்டிருந்தன. அந்த திட்டசெயல்பாடுகள் எல்லாமே ஏரத்தாள குறித்த நேரத்திற்கு அருகாமையில் முடிக்கப்பட்டாலும், ஒரு சில திட்டங்களில் இருக்கின்ற ஊழியர் ஈடுபாடு, மற்றவற்றில் அவ்வளவாக இல்லை. அந்த ஈடுபாடு குறைவு, திட்ட செயல்பாட்டின் தரத்தில் நன்றாக வெளிப்பட்டிருந்தது. அதற்கான காரணங்களை மனிதவளத்துறையினர் ஆராய ஆரம்பித்ததில், எல்லாவற்றிற்குமான ஆரம்பப்புள்ளி திட்டத்தின் மேலாளர் மேசைக்கு வந்து நின்றது. எந்த மேலாளர் எளிமையாக இருந்து, ஊழியர்கள் அனுகுவதற்கு எளிதாக இருந்தாரோ, அந்த குழுவில் ஊழியர்களின் ஒற்றுமை அதிகரித்திருந்தது. அவ்வப்போது மேலாளரிடம் ஊழியர்கள் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலின் மூலம், சின்னச்சின்ன முன்னேற்றங்களை ஏற்றுக்கொள்ளப்பட்டு திட்டத்தின் தரம் உயர்த்து. அதே சமயம் அனுகுவதற்கு கடுமையான மேலாளர்களின் திட்டத்தில் அந்த சின்னச்சின்ன முன்னேற்றங்கள் எதுவும் இருக்கவில்லை. உங்கள் நிறுவனத்தில், நீங்கள் எப்படி?

பகட்டிற்கும், விளம்பரங்களுக்கும் மத்தியில், தன் தனித்திறமைகளால் படிப்படியாக முன்னுக்கு வருபவருக்கு, தன்னை அலங்கித்துக்கொள்ள நேரம் இருப்பதில்லை. எங்கும், எப்போதும் ஒரேமாதிரி இருப்பதற்கு எளிமையைத் தவிற வேறுவழியில்லை. நீங்கள் எளிமையாக இருந்தால், அவர் அப்படித்தான் என்று ஒரு வார்த்தையில் சொல்லி முடித்துவிடுவார்கள். மாறாக நீங்கள் பகட்டானவர் என்றால், உங்களின் எல்லா பகட்டும் மற்றவர்களுக்கு அசைபோட நல்லதொரு பேசுபொருளாகிவிடும். எளிமையானவர்கள் எங்கும், எப்போதும், எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கின்றனர். உங்களை தயார்படுத்த 1 மணிநேரம் தேவைப்பட்டால் எங்கிருந்து மற்ற வேலைகளை கவனிப்பது.


ஊழியர்கள் அனுகுவதற்கு எளிமையானவர்களாக மேலாளர்கள் இருக்கும் பட்சத்தில், ஊழியர்களுக்கு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கிறது. நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை, வேலையில் ஈடுபாட்டையும், ஊழியர்களுக்குள் ஒற்றுமையையும் அதிகரிக்கிறது. அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் அவ்வப்போது நேரடியாக கேட்கப்பட்டு தீர்வுகாணப்படுகிறது. ஊழியர்கள் தாங்களாக முன்வந்து முன்னேற்றங்களுக்கான ஆலோசனைகளை விவாதிக்கின்றனர். அவர்களின் பங்களிப்பு, வேலையை வேகப்படுத்துவதுடன், எளிமையாக்கவும் முடிகிறது. இது அனைத்தும், ஊழியர் விரும்பும் மேலாளர் இருந்தால்தான் சாத்தியம். மேலாளர் தன் ஊழியரிடம் அதீத அதிகாரம் செய்தால் ஊழியர்கள், நமக்கென்ன என்று, சொன்ன வேலையை மட்டும் செய்துவிட்டு அளவோடு நின்றுவிடவார்கள். முன்னேற்றத்திற்கான வழிகளை விவாதிப்பதில் அவர்களின் பங்களிப்பு பூஜ்ஜியமாகிவிடும். ஊழியர் பங்களிப்பில்லாமல், முன்னேற்றன் எப்படி சாத்தியமாகும்? உங்கள் நிறுவனத்தில், மேலாளர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? உங்கள் மேலாளர்களிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள்?


நீங்கள் அனுகுவதற்கு எளிமையானவராக இருந்தால்

  • உங்களால் எல்லோரிடமும் நேரடியாக பேசி, பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியும்;

  • உங்கள் ஊழியர்கள் தைரியமாக தங்களின் ஆலோசனைகளை, கருத்துக்களை உங்களிடம் தெரிவிப்பார்கள்;

  • உங்களால் உங்கள் கொள்கைகளின் படி வாழமுடியும். நேர்மையை கடைபிடிக்க முடியும்;

  • சகமனிதர்கள் பயமின்றி பழகுவார்கள்

  • தேவையற்ற மனஅழுத்தமும், மன உளைச்சலும் இருக்காது;

  • மற்றவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும்;

  • ஏன்? எதற்கு? எப்படி? என்ற தெளிவு உங்களிடம் இருக்கும். அந்த தெளிவு, எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க உங்கள் குழுவிற்கு சிறப்பாக வழிகாட்டும்;

உங்களின் எளிமை வெற்றிக்கு வழிவகுத்தாலும், ஒருபுறம் நீங்கள் அனுகுவதற்கு எளிமையானவராக இருந்தால், சிலசமயம் உதவி என்கிற பெயரில், சில தேவையற்ற வேலைகளும் உங்களிடம் வந்து சேரக்கூடும். சில ஊழியர்கள், தொட்டதற்கெல்லாம் உங்களிடம் வந்து நிற்கக் கூடும். அவற்றை தவிர்க்க, அவ்வப்போது உங்கள் எளிமையோடு ஒரு சிறு கண்டிப்பும் தேவைப்படும். உங்களின் அதீத எளிமை தேவையற்றவற்றை உங்கள் தலையில் ஏற்றிவிடக்கூடாது. எது தேவையற்றதென்ற விடயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.


வெற்றி பெறுவதற்கும், அந்த வெற்றியை நீண்டகாலம் தக்கவைப்பதற்கும் முதற்கண் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கான ஒரேவழி, உங்கள் ஊழியர்களுள் ஒருவராக நீங்கள் உணரப்பட வேண்டும். உங்கள் ஊழியர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்க, நீங்கள் எளிமையானவராக, அனுகக்கூடியவராக இருக்க வேண்டும். உங்களின் தற்போதைய அனுகுமுறையை சுய பரிசோதனை செய்யுங்கள். தேவைப்படும் மாற்றங்களை படிப்படியாக செயல்படுத்துங்கள். வெற்றி நிச்சயம்!!


எங்கும், எப்போதும், எதிலும்

எளிமையாக இருங்கள்!

பகட்டும், பாசாங்கும்,

சீக்கிரத்தில் சாயம் வெளுத்துவிடும்!


நீங்கள் எளிமையாக இருந்தால்

எல்லாம் உங்களிடம் தைரியமாக வரும்

எல்லோரும் உங்களிடம் தைரியமாக வருவார்கள்!


எளிமையாக இருப்பவர்களுக்கு

எல்லா சூழ்நிலைகளும் பொருந்தி வரும்!

ஏனெனில் அவர்கள்

எல்லா சூழ்நிலைகளிலும் அவர்கள்

அனுசரித்து எளிமையாக சாதித்துவிடுவார்கள்!


- [ம.சு.கு 23.06.2023]

11 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page