top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 255 - மனஅழுத்தத்தை கையாளப் பழகுங்கள்!

Updated: Jun 22, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-255

மன அழுத்தத்தை கையாளப் பழுகுங்கள்?

 • அலுவலகத்தில் நிறைய வேலைப்பழு, குறித்த நேரத்தில் எல்லாவற்றையும் முடிப்பது சாத்தியமற்றதாக இருக்கிறது, சகஊழியர்கள் ஒத்துழைப்பதில்லை, மேலாளர் திட்டுகிறார் என்று எண்ணற்ற மன அழுத்தம் ஏற்படுத்தும் அலுவலக சூழ்நிலை ஒருபுறம். வீட்டில் தம்பதியருக்குள் மனவொற்றுமை இல்லை, மாமியார்-மருமகள் சண்டை, குழந்தைகளால் பிரச்சனை, சொத்துப் பிரச்சனை, சொந்தங்களால் பிரச்சனை என்று மனஉளைச்சல் ஏற்படுத்தும் குடும்ப சூழ்நிலை மறுபுறம். இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறுகின்ற சமயத்தில், இதை மறக்க நண்பர்களோடு சேர்ந்து குடிப்பதற்கு சென்றால், உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடுமா? பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமாக அனுகி தீர்ப்பதற்கு பதிலாக, அப்போதைக்கு மறந்துவிட, குடிக்க ஆரம்பித்தால், எல்லையில்லாமல் குடித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். போதை பழக்கம் உங்கள் மனஅழுத்தத்திற்கு நிரந்தர தீர்வாகிவிடுமா?

 • சமீபகாலங்களில் பெரிய நிறுவனங்களின் நிர்வாக அலுவலர்கள் சிலர், தங்கள் 40-50 வயதுகளில் மாரடைப்பால் காலமாகின்றனர் என்ற செய்தி பெரிதாக பேசப்பட்டது. அதிலும், அவர்கள் போதுமான உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியவர்களாக இருந்தும், மாரடைப்பு ஏற்பட்டிருப்பது எல்லோருக்கும் பயத்தை உருவாக்குகிறது. அப்படி ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து, சரியாக உடற்பயிற்சி செய்து, உணவுக்கட்டுப்பாட்டுடன் வாழ்ந்த அந்த பெரிய நிர்வாகிகள் ஏன் தங்களின் நடுத்தர வயதில் மரணமடைகின்றனர்?

இன்று குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்ளிடம், ஏன் குடிக்கிறாய் என்று கேட்டுப்பாருங்கள், தன் மனஅழுத்தத்தை சமாளிக்க என்று பதில் சொல்லுவார். அப்படி என்ன மனஅழுத்தம் உனக்கு என்று கேட்டுப் பாருங்கள். தெளிவான பதில்வராது. என்றோ நடந்தவற்றை இன்றைக்கும் காரணமாக சொல்லி தன் குடியை நியாயப்படுத்துவார். குடித்துவிட்டால் அப்போதைக்கு உங்களை மறந்து கனவுலகில் மிதக்கலாம். ஆனால் அது ஓரிரவிற்கு மட்டும் தானே. மறுநாள் நீங்கள்தானே அந்த சிக்கலை சந்தித்து தீர்க்க வேண்டும். மது எந்த வகையில் அதை தீர்க்க உதவியது உங்களுக்கு?


உங்கள் ஆரோக்கியம் காக்க சத்தான உணவுகளை சாப்பிடுவதோடு, போதுமான உடற்பயிற்சியும் செய்யலாம். ஆனால் உங்கள் உயிரை வளர்க்க, அந்த புற முயற்சிகள் மட்டும் போதுமா? உங்கள் பணியில், வியாபாரத்தில், குடும்பத்தில் ஏற்படும் சிக்கலையும், அதன் விளைவாக ஏற்படும் மனஅழுத்தத்தையும் எப்படி உங்கள் மனம் கையாள்கிறது. அந்த பிரச்சனைகளைப் பற்றியே அதீதமாக யோசித்து மனம் நொந்துகொள்கிறீர்களா? அல்லது நடப்பது நடக்கட்டும், போகிற போக்கில் எல்லாவற்றையும் கையாளலாம் என்று தைரியமாக எதிர்கொள்கிறீர்களா? ஆரோக்கியத்தில் அக்கரை எடுத்துக்கொண்ட அளவு அவர்களின் பணிச்சுமை, மனஅழுத்தத்தை கையாள்வதில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் காணமுடியாததால், அந்த மனஅழுத்தம் அவர்களுக்கு நாளடைவில் மாரடைப்பிற்கான வழிவகை செய்துவிட்டதாக பல ஆலோசகர்கள் கூறுகின்றனர்.


பொதுவாக, எப்படியெல்லாம் மனஅழுத்தம் ஏற்படுகிறது?

 • வேலை சம்பந்தப்பட்ட நெறுக்கடிகளால்

 • குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் நம்பிக்கையிழப்பால், புரிந்து கொள்ளாமையினால்

 • அதீத சத்தம், மக்கள் கூட்டம், மாசு போன்ற புறச் சூழ்நிலைகளால்

 • எதிர்பார்ப்புக்களில் பெரிய ஏமாற்றங்கள் ஏற்படுவதால்

 • உடல் நலக் குறைபாடுகளால்

 • தன்னம்பிக்கை இன்மையினால்

 • விபத்து & கைமீறிய அசம்பாவிதங்களால்

 • பொறாமையினால்

இவை வெறும் மேலோட்டமான மனஅழுத்தம் ஏற்படுத்தும் சில சூழ்நிலை உதாரணங்களே. ஒவ்வொருவருக்கும் விதம்விதமாக பிரச்சனை வந்து போய்கொண்டேதான் இருக்கிறது. இந்த மனஅழுத்தத்தை எப்படி கையாள்வது?


· உங்கள் இல்லறத்தில், எது முக்கியம் என்று தீர்மாணியுங்கள் – உங்கள் அகங்காரமா? அன்யோன்யமான உறவா? அன்பான உறவை விரும்பினால், மற்றவரின் தவரை மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள், உங்கள் தவறுகளுக்கு உடனுக்குடன் மன்னிப்பு கோரிவிடுங்கள்;

 • உங்கள் வியாபாரத்தில், உங்கள் வேலையில் எங்கெல்லாம் தேவையில்லாமல் நேரம் வீணாகிறதென்று அலசிப்பாருங்கள். உங்கள் நேரத்தை திறம்பட கையாள முடிந்தால், எந்த வேலையும் சிரமமில்லாமல் நடந்தேறும். அன்றாட செயல்ளை முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கைமீறி போகும் அவசர நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தாதீர்கள். முன்கூட்டியே அனுமானித்து, தகுந்த ஏற்பாடுகளுடன் இருந்தால், எந்தவகை மனஅழுத்தத்தையும் எளிதாக கையாண்டுவிடலாம்;

 • உங்களுக்கு வழி தெரியவில்லை என்றால், தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். அவர்கள் அனுபவம் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும்;

 • எப்போதும், போதுமான அளவு ஓய்வெடுங்கள். சரியான உறக்கம் உங்கள் பாதி மன உளைச்சலை குறைத்துவிடும்;

சூழ்நிலைக்கு ஏற்ப, என்ன செய்யவேண்டுமென்று தெளிவான முடிவெடுங்கள். மன அழுத்தங்களெல்லாம், உங்களுக்கு நீங்கள் ஏற்படுத்திக் கொள்வது மாட்டுமே. நீங்கள் கண்டுகொண்டால் அது மனஅழுத்தம், கண்டுகொள்ளாமல் விட்டால் ஒன்றுமில்லாமல் சாதாரணமாக போய் விடும்; உங்கள் மனஅழுத்தத்தை போக்க, எது சிறந்தவழி என்று உங்களுக்கு நீங்களே கண்டுபிடியுங்கள்;


இன்றைய அவசர வாழ்க்கைமுறையே

ஒருவகை மனஅழுத்தத்தை தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்க

குடும்ப விவகாரங்களால் மன அழுத்தம்

வியாபாரம் & பண விவகாரங்களால் மன அழுத்தம்

சக ஊழியரால் / மேலாளரால் மன அழுத்தம்

இப்படி வகைவகையாய் மனஅழுத்தமும், உளைச்சலும்

வந்து கொண்டேதான் இருக்கிறது;


இவற்றை சமாளிக்க போதை வழியாகிவிடுமா? – அல்லது

உயிரை மாய்ப்பது முடிவாகிவிடுமா?


மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் யோசிக்கும் நீங்கள்

உங்கள் மனம் கேட்கும் கேள்விகளுக்கு ஏன் பதில் யோசிப்பதில்லை?

உங்களுக்கான தீர்வு போதிய ஓய்வாக இருக்கலாம்,

ஆன்மீகம் / தியானம் / யோகமாக இருக்கலாம்,

மன்னித்தலாக இருக்கலாம், மனம்திறந்த பேச்சாக இருக்கலாம்,

உங்கள் அன்றாட சூழ்நிலையில் – திரும்பத்திரும்ப வரும்

உங்கள் மன உளைச்சலையும் / அழுத்தத்தையும் சமாளிக்க

உங்களுக்கான வழிஎன்ன என்பதை நீங்கள்தான் கண்டுணர வேண்டும்!


உங்களின் எல்லா உழைப்பும், எல்லா பொருள்சேர்ப்பும்

நிம்மதியான வாழ்க்கையை நோக்கியதாக இருக்கும்போது

ஏன் இந்த மனஉளைச்சலுக்கும், தேவையற்ற மன அழுத்தத்திற்கும்

தேவையில்லாமல் இடமளித்து கஷ்டப்படுகிறீர்கள்?


- [ம.சு.கு 21.06.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comentários


Post: Blog2 Post
bottom of page