top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 250 - உங்கள் குழுவின் திறமைகள் தெரியுமா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-250

உங்கள் குழுவின் திறமைகள் தெரியுமா?


  • ஒவ்வொரு விளையாட்டு போட்டியிலும், அன்றைய போட்டிக்கான அணியை, போட்டி துவங்கப்போகும் நேரத்திற்கு சில நிமிடங்கள் முன்னர் தான் அறிவிப்பார்கள். எதிரணியின் பலம்-பலவீணம், ஆடப்போகின்ற வீரர்கள், அன்றைய களத்தின் தன்மை, சீதோசன நிலை, வீரர்களின் உடல் தகுதி என்று எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, அணியை தேர்வு செய்து அறிவிப்பார்கள். அன்றைய தினம் தாக்குதல் ஆட்டமா? தடுப்பாட்டமா? வேகப்பந்து வீச்சா? சுழற்பந்தி வீச்சா? என்ற முடிவுகளுக்கு ஏற்ப, வீரர்களில் மாற்றங்களை செய்வார்கள். சரியாண அணித்தேர்வு, வெற்றிக்கான வாய்ப்பை 5%-10% அதிகரிக்கிறது. இப்போதெல்லாம், மக்கள் விளையாட்டில் யார் ஜெயிப்பார்கள் என்று பந்தயம் கட்டுவதை தாண்டி, யார் இன்றைய போட்டியில் ஆடுவார்? யார் ஆடமாட்டார்கள்? என்று கூட பந்தயம் கட்டத் துவங்கிவிட்டனர்;

  • உங்கள் அலுவலகத்தில், அரசாங்கம் சம்மந்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட வேலையை யாரிடம் கொடுத்து செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பதில் சிக்கல். அரசாங்க அலுவலர்களுடன் பேசி, சில சிக்கலான விடயங்களை சுமுகமாக தீர்க்கவேண்டிய கட்டாயம். அதற்கேற்ற ஆளை அனுப்ப வேண்டும். ஒருவேளை பிசகினால், வியாபார இழப்பும், அபராதங்களும் வரக்கூடும் என்ற நிலையில் யாரை அனுப்புவதென்று குழப்பம். மேலாளர் ஒரு குறிப்பிட்ட ஊழியர் பெயரை பரிந்துரைத்தார். அந்த ஊழியரின் தெருங்கிய நண்பர் அந்த அரசாங்க அலுவலகத்தில் முக்கிய பொருப்பில் பணிபுரிகின்ற காரணத்தால், அவரால் பெரிய சிக்கல் இல்லாமல் வேலையை பேசித்தீர்க்க முடியுமென்று பரிந்துரைத்தார். அதேபோல, அந்த வேலை முடிக்கப்பட்டது. அந்த ஊழியருக்கு அந்த வேலைபற்றி முழுவதுமாக தெரியாது. ஆனால் அவருக்கு அந்த அலுவலகத்தில் தெரிந்த நபர்களின் உதவியைக்கொண்டு, சிக்கலை சமாளித்தார். அப்படி உங்கள் வாழ்வில் ஏற்பட்ட பல சிக்கல்களை யார்யாரைக்கொண்டு தீர்த்திருக்கிறீர்கள் என்று யோசித்துப்பாருங்கள்!

கால்பந்தோ, கைப்பந்தோ, மட்டைப்பந்தோ, விளையாட்டு எதுவானாலும், குழுவாக விளையாட வேண்டிய போட்டியில், அந்த குழு சரியானதாக அமைக்கப்பட வேண்டியது பயிற்சியாளர், மற்றும் குழுவின் தலைவரின் தலையாய கடமை. அன்றைய போட்டியின் சூழ்நிலைகளுக்கேற்ப, யாருக்கு ஓய்வளிக்கலாம், யாரை களத்தில் இறக்கலாம் என்று தன் அணி வீரர்களின் பலம்-பலவீணத்திற்கு ஏற்ப முடிவு செய்வார்கள். அப்படி அந்த அணி நபர்களின் தனிப்பட்ட ஆற்றல்கள் என்னென்ன என்று அந்த அணியின் பயிற்சியாளருக்கு தெரியவில்லை என்றால், குழுவின் நிலை என்னவாகும்?


எல்லா பிரச்சனைகளுக்குமான தீர்வையும் நீங்கள் ஒருவரே அளிப்பது சாத்தியமில்லை. அதேசமயம், நீங்கள் எடுக்கின்ற காரியங்களில், உங்கள் இலடசியங்களில் வெற்றி பெற வேண்டுமானால், எதிர்வரும் எல்லா வகையான சவால்களையும் நீங்கள் சமாளித்து முன்னேற வேண்டும். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த திறமை உள்ள நபரை இணங்கண்டு உங்கள் குழுவில் தயாராக வைத்திருந்தால், அவரிடத்தில் பணியை ஒப்படைத்து எளிதாக முடிக்கலாம். அப்படி உங்கள் குழுவில் இருப்பவர்கள் எந்தெந்த விடயங்களில் திறமையானவர்கள், எது அவர்களின் பலவீனம் என்பது தெரியாவிட்டால், உங்களால் எப்படி சரிவர திட்டமிட்டு வெற்றிகாண முடுயும்?


உங்கள் வெற்றிக்கு, நீங்கள் திறமைசாலியாக மட்டும் இருந்தால் போதாது. சிறிய அளவில் செய்கின்ற வரை நீங்கள் ஒருவரே களத்தில் நின்று சாதிக்கலாம். பெரியளவில், பல கிளைகளைக்கொண்டு செயல்படும்போது, எல்லா இடத்திலும் உங்களால் இருக்கமுடியாது. அப்போது உங்கள் ஊழியர்களின் திறமைகள் தான் உங்களிடம் இருக்கும் சொத்து. உங்கள் ஊழியரின் பலம்-பலவீனம் அறிந்து செயல்பட்டால்;

  • யார்யாருக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என்று சரியாக திட்டமிட்டு கொடுப்பதன் மூலம் வெற்றிக்கான வாய்ப்பை உறுதி செய்யலாம்;

  • ஊழியர்களுக்கு இடையே பரஸ்பர புரிந்துணர்வும், கூட்டு உழைப்பையும் முறைபடுத்தலாம்;

  • இருக்கின்ற சிக்கல்களுக்கும், இடையிடையே வரும் புதிய சிக்கல்களையும் தீர்த்து அந்த குழுவால் முன்னேற முடியும்;

  • அவரவர்களுக்கு நன்றாக வருகின்ற பணிகளை செய்வதால், அவை சிறப்பாக செய்யப்படுவதோடு, அவர்களின் தனிப்பட்ட திறமைகள் வளரவும் வாய்ப்பு அதிகரிக்கிறது;

  • அணியின் பலம்-பலவீனங்களுக்கு ஏற்ப, அடுத்தடுத்த பணிக்களுக்காண மாற்று ஏற்பாடுகளைச் செய்யவும் வழியேற்படுகிறது;

அதேசமயம், ஆள்பார்த்து வேலையை கொடுத்து முடிக்கின்ற இடங்களில், சில ஊழியர்கள் மத்தில் பொறாமையும், வஞ்சகமும் வளர வாய்ப்பு இருக்கிறது. ஒருவருடைய பலவீனத்தை அதீதமாக குறிப்பிடும் போது, அவர் தன்னம்பிக்கையை இழக்கவும் நேரிடலாம்; ஒரு சில ஊழியர்கள் மீதுமட்டும் நிர்வாகம் பாரபட்சமான முறையில் நடந்துகொள்ள நேரிடலாம்; சில சமயம், ஊழியரின் திறமைகள் பற்றிய சில அனுமானங்கள் தவறாக இருந்து, இழப்புக்கள் நேரவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி ஆள்பார்த்து வேலை கொடுப்பதில் ஒருசில அபாயங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த சூழ்நிலைகளை கவனமாக கையாள்வது தான் இங்கு தலைமையில் இருப்பவருக்கு இருக்கும் பெரிய சவால்!


எத்தனை வேலை செய்கிறோம் என்பதைவிட, செய்கின்ற வேலையை எவ்வளவு சாமர்த்தியமாக செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்று எல்லா வெற்றியாளர்களும் நமக்கு பலமுறை பாடம் நடத்திவிட்டனர். எல்லாவற்றையும் கேட்ட பின், இன்னும் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல், வாய்ப்புக்களை கிரகித்துக் கொள்ளாமல், நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று நின்றால், அப்படியே அதே இடத்தில் நிரந்தரமாக தங்க வேண்டியதுதான்.


“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற வள்ளுவனின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, உங்கள் குழு உறுப்பினர்களின் திறமைகளுக்கேற்ப, பணிகளை ஒதுக்கி முடிப்பது உங்கள் வெற்றியை உறுதிசெய்து அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்;


உங்கள் வேகத்தையும் திறமையையும் மட்டும்

கருத்தில் கொண்டு களத்தில் போராடினால் போதாது!

உங்கள் குழுவின் பலம்-பலவீனம் தெரிய வேண்டும்!

எதிராளியின் பலம்-பலவீனம் தெரிய வேண்டும்!


ஆடுகின்ற ஆட்டத்தில்

உயிரைக் கொடுத்து இரட்டிப்பு வேகத்தில் ஆடி வெல்லலாம்!

அல்லது எதிராளியை விட வெறும் 1% முன்னின்றும் வெல்லலாம்!

இரண்டும் வெற்றிதான்!

ஆனால் ஆடுகின்ற பாணி ஆளுக்கு ஆள் வேறுபடுமே!


எவ்வளவு தான் தெரிந்துவைத்திருந்தாலும்

அன்றைய தினம், அந்தக்கனம் நீங்கள் என்ன முடிவெடுக்கிறீர்கள்

என்பதுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்!

குறிப்பிட்ட நேரத்தில், சரியான முடிவை எடுக்க - உங்களைக் கடந்து

உங்கள் குழுவின் சாமர்த்தியத்தையும்.

உங்கள் சகபோட்டியாளரின் திறமையையும்

முழுவதுமாக ஆய்ந்தறிந்து வைத்திருக்க வேண்டும்;


ஆய்ந்து உரிய மாற்றங்களை செய்தவர்கள் வெல்கிறார்கள்!

ஏனையவர்கள் அவர் பின் அடிமையாய் தொடர்கறார்கள்!




- [ம.சு.கு 16.06.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page