top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 248 - நேரத்தை கட்டுப்படுத்துபவன் வெல்கிறான்!"

Updated: Jun 15, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-248

நேரத்தை கட்டுப்படுத்துபவன் வெல்கிறான்!!


  • உங்கள் தாத்தா-பாட்டி காலங்களில், அம்மிக்கல்லில் சட்னி செய்தது சுவையாக இருந்ததென்று சொல்வார்கள். ஆனால் அன்றைய தினம் பாட்டி ஒரு வேளைக்கு வெறும் இட்லியும், ஒரு சட்னிமட்டுமே செய்வார். இன்றைய தினம் காலை 7 மணிக்குள் உங்கள் துணை ஒருவருக்கு இட்லி, இன்னொருவருக்கு தோசை, இரண்டு வகை சட்னி, சாம்பார், மதியத்திற்கு உணவென்று எல்லாவற்றையும் ஒருவரே தயார் செய்துவிடுகிறார். அத்தனையும் 1-2 மணிநேரத்தில் செய்து கொடுத்தாலும், அந்தக் காலத்தைப் போல பெண்கள் இன்று வேலை செய்வதில்லை என்று ஆண்கள் குறைசொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காலை 7 மணிக்கு பிள்ளைகள் தயாராகி பள்ளிக்கு செல்வதற்கும், வேலைக்குச் செல்லும் பெண்கள் இயங்கும் வேகம் ஆச்சரியப்பட வைக்கும்;

  • 2500 ஆண்டுகளுக்கு முன், கிரேக்கம் மாராத்தான் போரில் வென்றதை தெரிவிக்க, பிலிப்பைட்ஸ் 26.2 மைல்களை ஓடினார். ஆனால் இன்று 2000 மைல்களுக்கு அப்பால் நடக்கும் நிகழ்வுகள் நொடிக்குநொடி கண்முன்னே தெரிய வழியேற்படுத்தப்பட்டு விட்டது. அன்று 26 மைல் ஓடிய பிலிப்பைட்ஸ் அங்கேயே இறந்துவிட்டார். இன்று அதை 1000 பேர் அதிவேகமாக ஓடிக்கடந்து கொண்டிருக்கிறார்கள்.

50 ஆண்டுக்கு முன் அட்டிலில் 3-4 பேர் சேர்ந்து செய்துவந்தவற்றை, இன்றைக்கு தனிக்குடித்தனங்களில் ஒருவரே அதிவேகமாக செய்வதற்கு காரணம், எல்லாவற்றையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்ய எண்ணற்ற இயந்திரங்கள் வந்துவிட்டன. உங்கள் துணைவியாரால் நேரத்தை நிறுத்தி வேலையை முடிக்க முடியாது. ஆனால் இருக்கின்ற 30 நிமிடத்திற்குள் செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்து முடித்துவிடுகிறார்.

காலச்சக்கரத்தின் வேகம் மாறவில்லை. ஆனால் அந்த சக்கரத்திற்குள் இயங்கும் நம்முடைய வேகம் அதிகரித்து விட்டது. அன்று 10% பேர் நூறாண்டு வாழ்ந்தாலும், குழந்தை மரணங்களும், இளம் வயது மரணங்களும் மிக அதிகமாக இரந்ததால், மனிதனின் சராசரி வாழ்க்கை 40-45 வயதாக இருந்தது. இன்றைய மருத்துவ அறிவியல் 90% பேர் 60-ஐ கடக்க வழிகண்டுவிட்டது. அறிவியல் முன்னேற்றம் மனிதனின் வாழ்க்கையை நீடித்துவிட்டது. அடுத்ததாக நடந்துகொண்டிருக்கும் ஜீன்கள் ஆராய்ச்சி, மனிதனின் வாழ்வை இளமையோடு 100-ஐ கடக்க வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


நேரம் ஓடுவதை உங்களால் நிறுத்தவோ, வேகத்தை குறைக்கவோ முடியாமல் இருக்கலாம். ஆனால் இருக்கின்ற நேரத்திற்குள் எதையெல்லாம செய்ய வேண்டும், எப்படி செய்து முடிக்க வேண்டும், யாரைக் கொண்டு செய்ய வேண்டும் என்று செயல்களை கட்டுப்படுத்தி முடிக்க உங்களால் முடியும் தானே!

  • 40-50 மைல் வேகத்தில் இயங்கிய இரயில்கள் இன்று 200 மைல்கள் வேகத்திற்கும் அதிகமாக இயங்குமளவிற்கு அறிவியல் வளர்ந்துவிட்டது;

  • மணிக்கு 10 பொருட்கள் தயாரான இடத்தில் 1000 பொருட்கள் தயாராக இயந்திரங்கள் வந்துவிட்டன;

  • உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், எல்லாவற்றையும் நொடிக்குநொடி பார்க்கவும், தகவல்களை பரிமாரிக்கொள்ளவும் தகவல் தொடர்பு வளர்ந்துவிட்டது.

கடவுள் நேரத்தை கட்டுப்படுத்துகிறார். அந்த நேரத்திற்குள் ஏனையவற்றை எல்லாம் மனிதன் கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறான். கடவுளின் இடத்திலிருந்து நேரத்தை கட்டுப்படுத்த மனிதனுக்கு நிறைய ஆசையிருக்கிறது. அதை புனைவுகளாகவும், திரைப்படமாகவும் [time machine] எடுத்து சந்தோஷப்படுகிறான். ஆனால் இன்றுவரை நிஜத்தில் அது முடியவில்லை.ஆனாலும் விடுவதாய் இல்லை.


நேரத்தைத்தான் கட்டுப்படுத்த முடியவில்லை, குறைந்தபட்சம் நேரத்திற்குள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தலாம் என்று மனிதன் எல்லா முயற்சிகளையும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறான். அறிவியல் கண்டுபிடிப்புக்கள் எல்லாமே ஒருவகையில் மனிதனுக்கு நேரத்தை மிச்சப்படுத்தத்தான். அன்றாட சமையல் முதல், வின்வெளி செயற்கைக்கோள் வரை, எல்லாம் மனிதன் செய்யும் செயலின் வேகத்தை அதிகரிப்பதற்கும், நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும், உற்பத்தியை பெருக்குவதற்கும், கேளிக்கைக்கும் தான். ஓராண்டுக்கு முன்னால் நீங்கள் செய்த செயல்களில் என்னென்னவற்றை எல்லாம் நீங்கள் வேகப்படுத்தி, மேம்படுத்தியுள்ளீர்கள்?


ஒருபுறம் மனிதன் நேரத்தை கட்டுப்படுத்த கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கிறான். மறுபுறம் ஒருகூட்டம் நேரம் வீணாவதைப்பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் சோம்பேறிகளாக காலம் கடத்திக் கொண்டிருக்கின்றனர். இரண்டுக்கும் இடைப்பட்ட விதமாக ஒருசிலருக்கு செய்ய வேண்டுமென்ற ஆசையும், திறமையும் இருக்கிறது. ஆனால் எப்போதும் தாமதமாக துவங்கி, அவசரகதியிலேயே செய்து சாதிக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.


ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள், உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி செயல்படுத்த முடிந்தால்

  • உங்கள் நேரக்கட்டுப்பாட்டுடனான உற்பத்தி பெறுக்கம், செலவைக் குறைத்து, இலாபத்தை அதிகரிக்கும்;

  • உங்கள் போட்டியாளர்களைவிட ஒருபடி முன்னால் உங்களால் எப்போதும் முன்னேற முடியும்;

  • குறித்த நேரத்தில் துவக்கினால், அவசரகதியில்லாமல், திட்டமிட்டு சரியாக செய்யமுடிவதோடு, தேவையற்ற மன அழுத்தமும் தவிர்க்கப்படும்;

  • செயலும், நேரமும் கட்டுப்பாட்டிலு இருக்கும் போது, நீங்கள் பொறுமையாக யோசித்து முடிவெடுக்க முடியும். அவசரகதியானால், முடிவுகள் தவறாக வாய்ப்பதிகம்;

நேரத்தின் கட்டுப்பாட்டில் நீங்கள் சிக்கித் தவிப்பதை தவிர்க்க வேண்டுமானால், நேரம் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இயங்க வேண்டுமானால், நீங்கள் செய்யவேண்டியவை;

  • எல்லாவற்றையும், திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்; தேவையற்ற செயல்களை இணங்கண்டு தவிர்க்க வேண்டும்;

  • எல்லா காரியங்களையும் குறித்த நேரத்திற்கு சற்று முன்னதாகவே துவங்கிவிட வேண்டும் [தேவையற்ற தாமதங்கள் அவசரகதிக்கும் அரைகுறை வேலைக்கும் வழிவகுத்துவிடும்];

  • உங்கள் நேரத்திற்கான திட்டத்தை வகுத்து செயல்படும்போது, உங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் நன்றாக புரிந்துகொண்டு, சரியாக செய்வதற்கு நீங்கள் கவனமாக அவர்களை வழிநடத்த வேண்டும்;

  • கூடிய வரை ஊழியர்களுக்கு முறையாக பயிற்சி கொடுத்து, வேலைகளை பகிர்ந்தளித்து சீக்கிரத்தில் முடிக்க வழி வகை செய்ய வேண்டும்;

  • தேவையற்ற கவனச்சிதறல்களை தவிர்க்க வேண்டும்;

  • தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படி உங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதென்று தொடர்ந்து சோதனைகள் செய்துகொண்டே இருக்கவேண்டும்;

  • எந்தச் சூழ்நிலையிலும், எதைக்காட்டிலும் பொருளின் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விலை அதிகமோ, நேரம் தாமதமோ – அவை சில நாட்களில் மறந்துபோகும், ஆனால் தரம் சரியில்லை என்றால், காலத்திற்கும் வாடிக்கையாளர் குறைகூறிக் கொண்டே இருப்பார் என்பதை மறந்து விடாதீர்கள்;


நேரம் ஓடுவதை யாராலும் நிறுத்தமுடியாதென்று தெரியும்

நேரம் என்பது எல்லோருக்கும் பொதுவாகிவிட்டபின்

எப்படி வெற்றியில் மட்டும் மனிதர்களுகிடையே இத்தனை மாற்றங்கள்?


நேரத்தை நிறுத்தத்தான் முடியாது – ஆனால்

நேரத்தை எப்படி கட்டுப்பாட்டுடன் செலவிடுவதென்ற

தெளிவு உங்களிடம் இருக்கிறதா?


முதல் முறை செய்த போது 1 மணிநேரத்தில் செய்ததை

அடுத்தடுத்த முறைகளில் நேரத்தை குறைக்க முடிகிறதா?

ஒவ்வொரு செயலிலும் எது தேவை, எது தேவையற்றது,

எதை எப்படி மாற்றிச் செய்தால்

எளிமையாகவும், வேகமாகவும் இருக்குமென்று யோசியுங்கள்!

முன்னேற்றத்திற்கு எல்லைக்கோடு என்றுமே இல்லை!


உங்களால் நேரத்தை கட்டுப்படுத்த முடிந்தால்

செய்கின்றவற்றை மிகக் குறுகிய காலத்தில் செய்துமுடித்தால்

உங்களுக்கு இணை நீங்கள் மட்டுமே!


- [ம.சு.கு 14.06.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page