top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 243 - கருத்து சுதந்திரம் இருக்கிறதா?"

Updated: Jun 10, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-243

கருத்து சுதந்திரம் இருக்கிறதா?

  • ஜப்பான் நாட்டு தொழிற்கூடங்களின் உற்பத்தியின் அளவு, பிற தேசத்து சமமான தொழிற்கூடங்களை விட அதிகமாக இருந்தது. அவர்கள் உற்பத்தி நிர்வாகம், தர நிர்வாகம், பொருட்களை கையாளும் முறையை என்று எல்லாவற்றிற்கும் தங்களுக்கென தனி முறைமையை ஏற்படுத்தினர் [TPM, TQM, 5S…]. அதன் முதல் கட்டமாக, தங்கள் நிறுவன ஊழியர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தொடர்ந்து கேட்டு செயல்படுத்தினர். ஒரு உற்பத்தி முறைமையை அதிகரிக்க, நிறைய சின்னச்சின்ன மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். அந்த மாற்றங்கள் என்ன என்பதை கண்டு சொல்ல அந்த களத்தில் பணிபுரியும் ஊழியர்தான் தகுதிவாய்ந்தவர். அந்த ஊழியர்களின் கருத்துக்களை தொடர்ந்து பெருவதிலும், அவற்றை அலசிப்பார்த்து செயல்படுத்துவதிலும் நிர்வாகம் நிறைய அக்கறை காண்பித்தது. ஊழியர்கள் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை, ஆலோசனைகளை வழங்க வாய்ப்பளிக்கப்பட்டபோது, அது உற்பத்தியளவை, நிர்வாகத்தின் திறனை வளர்க்க மிகவும் வசதியாக இருந்தது.

  • இன்றும் சிலவீடுகளில், சில சமுதாய கட்டமைப்புக்களில், ஆணாதிக்கச் சிந்தனையும், சாதிய ஏற்றத்-தாழ்வுகளும், பாரபட்சங்களும் நிறைய இருப்பதை பார்க்கலாம். தன் இல்லாலின் கருத்துக்களை கேட்காமல் ஒருதலைபட்சமாக முடிவெடுக்கும் ஆண்களும், தன் குடும்பத்தினரின் விருப்பு-வெறுப்புக்களை பொருட்படுத்தாத நபர்களும் இருக்கும் வரையில், குடும்பத்தில் எப்படி மன ஒற்றுமையும், அமைதியும் சாத்தியமாகும்? தன் தொண்டர்களின் கருத்துக்களை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாகவும், சுயநலமாகவும் முடிவெடுக்கும் தலைமை யார் விரும்புவார்கள்? தன் ஊழியர்களை மதிக்காத, அவர்கள் கருத்துக்களை கேட்காத மேலாளரிடம் யார் நீண்டகாலம் பணிபுரிவார்கள்?

நீங்கள் உலகின் மிகச்சிறந்த தொழில் நுட்பத்துடன்கூடிய தொழிற்கூடம் அமைத்தாலும், அதிலும் சில குறைகள் இருக்கலாம். அவற்றை கண்டுணர்ந்து மேம்படுத்தினால் உற்பத்தி அதிகரிக்கும். அந்த மேம்படுத்தும் வழிமுறைகள் என்ன என்பதை களத்தில் இருப்பவர்களால் எளிதில் கண்டு சொல்லமுடியும். ஊழியர்களின் கருத்துக்களை சேகரிக்க, பரிசோதிக்க ஜப்பானியர்கள் தனியொரு முறைமையை ஏற்படுத்தி ஊழியர்களை ஊக்குவித்தனர். ஊழியர்களின் சிறந்த ஆலோசனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதோடு, அவற்றை செயல்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதோடு, வேலையை எளிதாக்கினர். ஊழியர்களின் களப்பணி கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல் அதிகாரிகள் குளிர்சாதன அறைகளில் மட்டுமே சிந்தித்து முடிவெடுத்து வந்தால், முன்னேற்றத்திற்கான பல வழிமுறைகள் தெரியாமலே போயிருக்கும்.


வீட்டில் எது அவசியத் தேவை, எது பயனற்றதென்று வீட்டை நிர்வகிக்கும் குடும்பத்தலைவிக்கு தெரியும். ஆனால் அந்த இல்லாலின் கருத்துக்களை கேட்காமல், ஆணாதிக்கத்தில் முடிவுகளை எடுத்தால், தவறுகளும், பொருள் நஷ்டமும் ஏற்பட வாய்ப்புண்டு. உரியவரிடம் ஆலோசனை கேட்காமல் நீங்களாக முடிவெடுத்தால், எப்படி முன்னேற்றம் சாத்தியமாகும். ஒரு தலைவன், தன் தொண்டர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் எப்படி அவர்களை வழிநடத்த முடியும். தேர்தல் களநிலவரமும், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கருத்துக்களை தெரிந்துகொள்ளாமல், தலைமை எடுக்கும் முடிவுகளால் பல கட்சிகள் சீரழிந்திருக்கின்றன.


உங்கள் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு கருத்து சுதந்திரம் வழங்கப்பட்டால், அவர்களின் ஆலோசனைகளுக்கு செவிசாய்க்கப்பட்டால்,

  • உற்பத்திமுறை மேம்படுத்துவதற்கும், சேவை முறை மேம்படுத்துவதற்கும் எண்ணற்ற புதிய ஆலோசனைகள் கிடைக்கும். அவை ஊழியர்கள் வழங்கியதால், அதை அவர்கள் ஆர்வமுடனும், மிகுந்த ஈடுபாட்டுடனும் செயல்படுத்துவார்கள்;

  • நிறுவனத்தின் பலம்-பலவீணம், வாய்ப்புக்கள், வளங்கள், அச்சுறுத்தல்கள் யாவும் பல கோணங்களில் தெரியவரும்;

  • நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வும், நம்பிக்கையும், ஈடுபாடும் அதிகரிக்கும்;

  • நிறுவனத்தின் இலட்சியத்தோடு ஊழியர்களும், ஊழியர்களின் நலனோடு நிர்வாகமும் இணைந்து முன்னேற வாய்ப்பாகும்;

  • ஊழியர்களின் திறன் மேம்படுவதோடு, நிறுவனமும் சுயஅலசல் செய்து போதுமான திருத்தங்களைச் செய்து முன்னேற்றம் காணும்;

உங்கள் இல்லத்தில், உறவுகள் மத்தியில், நண்பர்களுக்கிடையில் நல்ல கருத்து பரிமாற்றங்களும், அவர்களின் ஆலோசனைகளை ஏற்று அலசிப்பார்க்கும் ஆக்கப்பூர்வமான கண்ணோட்டமும் இருந்தால், எல்லா உறவுகளும் படிப்படியாக பலம் பெறுவதோடு, ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருந்து கூட்டாக வளர முடியும்; மற்றவர்களின் ஆலோசனைகளை, கருத்துக்களை உதாசீனப்படுத்தினால், படிப்படியாக அவர்கள் உங்களை விட்டு விலகிவிட நேரும்.


கருத்து சுதந்திரும் இருக்கும் இடத்தில் கடமை உணர்ச்சியோடும், ஈடுபாட்டுடனும் வேலை நடக்கும். அந்த சுதந்திரம் இல்லாத இடத்தில், ஆலோசனைகளுக்கு செவிசாய்க்காத இடத்தில், எந்தவொரு ஈடுபாடும் இல்லாம், கடனுக்குத்தான் வேலை நடக்கும். உங்கள் நிறுவனம் எப்படி இயங்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?


உங்கள் பணியிடத்தில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா?

உங்கள் வீட்டில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா?

உங்கள் நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா?

கருத்து சுதந்திரம் இல்லாவிட்டால்

அடிமைக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?


நீங்கள் கருத்து சுதந்திரம் வழங்கவில்லை என்றால்

உங்கள் ஊழியரும், குடும்பத்தினரும் அடிமைகளாகும்போது

அவர்கள் மனமுவந்து உங்கள் வெற்றிக்கு என்ன செய்வார்கள்!

சகமனிதர்கள் மனமுவந்து உதவாமல் எப்படி

பெரிய வெற்றிகள் சாத்தியமாகும்?


கருத்து சுதந்திரம் இல்லாவிட்டால்

புதிய யோசனைகள் எப்படி வரும்?

நீங்கள் வெற்றிபெற எப்படி நீங்கள் சுதந்திரமாக சிந்திக்கிறீர்களோ

உங்களைச் சுற்றியுள்ளவர்களும் அப்படி சிந்தித்து உதவினால்தானே

உங்கள் வெற்றி சாத்தியமாகும்?


- [ம.சு.கு 09.06.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page