top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 242 - பாரபட்சமாக இருக்கிறீர்களா?..

Updated: Jun 9, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-242

பாரபட்சமாக ஏன் இருக்கிறீர்கள!


 • சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சற்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்தது. வேலைக்கு விண்ணப்பிக்கப்பட்டவர்களில், ஆங்கிலேயர் போல பெயருடையவர்கள் அதிகமாக நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். கருப்பினத்தவர்களின் பெயர் போன்றிருந்தவைகள் குறைவாகவே அழைக்கப்பட்டிருந்தனர். கல்வித் தகுதியும், முன்அனுபவமும் சமமாக இருந்தாலும், பல அமெரிக்கர்கள் ஆழ்மனதில் இன்னும் கருப்பு-வெள்ளை என்ற இனப்பாகுபாடு முற்றிலும் அகலவில்லை. அவர்கள் என்னதான் வெளியுலகிற்கு அப்படி பிரிவினை ஏதுமில்லை என்று சொன்னாலும், அவர்கள் ஆழ்மனதில் பதிந்துள்ள தனிப்பட்ட பிரிவினையும், பாரபட்சமும் அவர்களின் செயல்களில் தானாக வெளிப்படுகிறது. அதனால், நல்ல தகுதிவாய்ந்த பல கருப்பினத்தவர்களை எடுத்து வேலையை மேம்படுத்தும் பொன்னான வாய்ப்புக்களை இழக்கின்றனர். அப்படி என்னமாதிரியான நிறம், இனம், மதம், மொழி சார்ந்த பிரிவினைகளை நீங்கள் கடந்து வந்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்?

 • நிறுவனங்களில் பணிபுரியும் மேலாளர்கள், தங்கள் குழு உறுப்பினர் ஒவ்வொருவர் மீதும் ஏதேனுமொரு அபிப்ராயத்தை உருவாக்கிக் கொள்வார்கள். ஊழியரின் பணித்திறன், கடமையுணர்ச்சி, கண்ணியம் என்ற பல்வேறுபட்ட அடிப்படைகளில் அந்த அபிப்பராயங்கள் உறுவாகும். படிப்படியாக உருவாகும் இந்த அபிப்ராயம், காலப்போக்கில் ஒரு பாரபட்ச நிலையை அவர்கள் எண்ணத்தில் கட்டமைத்துவிடுகிறது. ஒரு குறிப்பட்ட ஊழியர் சொன்னால், மேலாளர் அப்படியே கேட்டுவிடுவார். மற்றவர் சொன்னால் பரிசோதிப்பார். குழுவின் முன்னிலையில் ஒரு சிலரை மட்டும் திட்டுவார், தனக்கு பிடித்தமானவரை பாராட்டுவார். இப்படிப்பட்ட பாரபட்ச நிலை உங்கள் குழுவில் இருந்தால், ஒரு குழுவாக நீங்கள் எப்படி ஒன்றிணைந்து செயல்படுவது சாத்தியமாகும்?

என்னதான் கல்வியறிவு மேம்பட்டிருந்தாலும், காலங்காலமாய் ஊறிய சில பிரிவினைகள் படிப்படியாகத்தான் விலகும். நான் சாதியை ஒழிக்கிறேன் என்று ஒருநாளில் ஒழிப்பதற்கு அது எளிதான பொருளல்ல. அந்த பிரிவினைகளும், பாரபட்சமும் மக்கள் மனதில் ஊறித்திளைத்துவிட்டதொரு வழக்கம். அடுத்த தலைமுறை படிப்படியாய் கல்வியறிவு பெருவதன் மூலமும், மக்களின் வாழ்க்கை முறை படிப்படியாக மேம்படுத்தப்படுவதன் மூலமுமே, இரத்தத்தில் ஊறிவிட்ட சில பிரிவினைகளை குறைக்க முடியும்.


மேலாளர், ஊழியர் மத்தியில் பாரபட்சம் காட்டத் துவங்கினால், படிப்படியாக தேவையற்ற பொறாமையும், பொல்லாப்புக்களுமே அதிகரிக்கும். ஊழியர்கள் மத்தியிலான ஒற்றுமையும், இணக்கமான செயல்பாடும் பெரிய அளவில் பாதிக்கும். ஊழியர்களின் ஒன்றிணைந்த செயல்பாடு பாதித்தால், உங்களால் எப்படி பெரிய சாதனைகள் நிகழ்த்த முடியும்?


உங்களின் அன்றாட வாழ்வில், எந்தமாதிரியான பாரபட்சம் காட்டும் மனிதர்களை சந்திக்கிறீர்கள்?

 • தான் ஏற்கனவே யூகித்துவைத்த கருத்துக்கு எதிர்பதமாக யாராவது கூறினால், அதை முழுமையாக கேட்டு அலசிப்பார்க்காமல், தன் அனுமானம் தான் சரியென்று பிடிவாதமாக இருப்பவர்கள் சிலர்;

 • அதிகம் பரிட்சயமில்லாத ஒரு குழுவில், யாராவது ஒருவர் தவறு செய்துவிட்டார் என்று தெரிந்தவுடன், அந்த குழுவே தவறான குழு என்று அரைகுறையாக தீர்மானிக்கும் சிலர்;

 • தாங்கள் வளர்க்கப்பட்ட சூழ்நிலை, கலாச்சாரம் போன்ற சமுதாய கட்டமைப்பு, மக்களின் ஆழ்மனதில் நிறைய பாரபட்சங்களை விதைத்திருக்கும். அப்படி உள்ளூர படிந்திருக்கும் சில ஏற்றத்-தாழ்வுகளை கருத்தில்கொண்டு இன்றும் ஜாதி, மத பிரிவினைகள் பார்த்து பாரபட்சமாக நடத்தும் பலர்;

 • தன் பென்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்று எல்லாம் தனக்கு மட்டுமே முதலில் கிடைக்கப் பெற வேண்டுமென்று எல்லாவற்றிலும் சுயநலமாகவும், அதீத பாரபட்சத்துடனும் நடந்துகொள்ளும் சுயநலவாதிகளாக் பலர்;

 • தானாக சிந்தித்து முடிவெடுக்காமல், எந்த கருத்தின் பக்கம் பெரும்பான்மை இருக்கிறதோ, அது சரியானதென்று கூட்டத்தைபார்த்து பாரபட்சமாக முடிவெடுக்கும் சிலர்;

 • எந்த தகவல் முதலில் வருகிறதோ, அதை சரியானதென்றும், பின்னால் வரும் தகவல்கள் ஏமாற்று வேலைகள் என்றும் தவறான கருத்தோடு தகவல்களை கையாளும் சிலர்;

மேற்குறிப்பிட்டவை சிறு பட்டியல் தான். யதார்த்தத்தில் குடும்பத்திற்குள், உறவுகளுக்குள், நிறுனத்தின் உள்ளும்-புறமும், சமுதாயத்தில், அரசியலில், நாடுகளுக்கிடையில் என்று, எல்லா மட்டத்திலும் எண்ணற்ற பாரபட்சங்கள் இருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அவற்றை உங்களால் மாற்ற முடியாது. ஆனால் அப்படிப்பட்ட பாரபட்சம் உங்களிடம் இல்லாமல் நீங்கள் பார்த்துக் கொள்வது சாத்தியம்.

 • உங்கள் அனுமானங்களை, முன்கூட்டிய முடிவுகள் சரியானதா என்று உங்களை நீங்களே அவ்வப்போது திறந்த மனதுடன் அலசிப்பாருங்கள்;

 • நீங்களாக யூகித்து தீர்மானிக்கும் முன், பலதரப்பட்ட மக்களின் கருத்துக்களை கேட்டறியுங்கள்;

 • ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை தவறாமல் கேளுங்கள். மற்றவர்கள் பாரபட்சமாக இருக்கிறார்களா என்பதை தொடர்ந்து சோதித்துப் பார்த்துக்கொண்டே இருங்கள்;

 • உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், செலவிடும் சிறிது நேரத்தை திறந்த மனதுடன் செலவிடுங்கள். உங்களின் முன்கூட்டிய அனுமானங்கள், அனுபங்களை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு முழுமையாக கேளுங்கள்.மக்களின் நிறம், ஜாதி, இனம் மொழியென்று

ஏதேனுமொரு காரணத்திற்காக நீங்கள் பாரபட்சம் காட்டுவது சரியா??


பாரபட்சத்தோடு நடப்பவர்களிடன் எப்படி

நியாயத்தை எதிர்பார்க்க முடியும்;

பாரபட்சத்தையும், தவறான அனுமானங்களையும் கொண்டவரிடம்

நீங்கள் என்னதான் விளக்கினாலும்

அவர்களின் முன்கூட்டிய தீர்மானங்களிலிருந்து

அவ்வளவு எளிதில் வெளிவருவார்களா என்பது ஐயமே?


புதியவர்களோ, பழகியவர்களோ

முந்தைய அனுபவம் இனித்ததோ, கசந்ததோ,

எதிலும் பாரபட்சத்தை முன்நிறுத்தாதீர்கள்;

பாரபட்சம் உங்கள் கண்களை மறைத்துவிடும்;

நிஜத்தை தவிர்த்துவிடும்;

தேவையற்ற பொல்லாங்கையும் ஏற்றத் தாழ்வையும்

நிறுவனத்தில் வளர்த்துவிடும்;- [ம.சு.கு 08.06.2023]


Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page