top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 224 - பேரம் பேச கற்றுக்கொள்ளுங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-224

பேரம் பேச கற்றுக்கொள்ளுங்கள்!


  • சமீபத்தில், நண்பர் ஒருவர் கடைவீதியில் ரூ.2500/- மதிப்புள்ள ஒரு புதிய காலணி வாங்கிவந்தார். அதை பார்த்தவுடன், அவர் ஏமாற்றப்பட்டிருப்பது நன்கு தெரிந்தது. ஏனெனில் அது போன்ற காலணி ஒன்றை ரூ.1000/- க்கு நீங்கள் சில வாரங்களுக்கு முன்வாங்கி இருக்கக்கூடும்; உங்கள் நண்பருக்கு சந்தைகுறித்த விழிப்புணர்வு இல்லாத்தால், மிக எளிதாக ஏமாற்றப்பட்டு விட்டார். இதை எப்படி தடுப்பது?

  • ஒரு ஊழியர் புதிய வேலை நேர்காணலுக்கு சென்றார். நல்ல முன்அனுபவம் வாய்ந்த அந்த ஊழியர், அந்த புதிய நிறுவனம் குறித்து சந்தையில் நிறைய விசாரித்து புரிந்து வைத்திருந்தார். மேலும், தன் கல்வியறிவு, அனுபவம் ஆகியவற்றில் துவங்கி, அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு எந்தவகையில் இருக்கும் என்பது வரை, நேர்காணலில் தெளிவாக எடுத்துரைத்திருந்தார். அந்த வேலைக்கு அவர்கள் திட்டமிட்டிருந்த அடிப்படை சம்பளம் 50,000 ரூபாய் மட்டுமே. ஆனால் அந்த ஊழியர், தனக்கு 1,00,000 வேண்டுமென்று பேரம் பேசினார். அவரது திறமைகளையும், நிறுவனத்தின் தேவையையும் மறுஆய்வு செய்த நிறுவனம், அவரை மாதம் 1 இலட்ச ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு எடுத்தது. இது சாத்தியமா? என்று யோசிக்கிறீர்களா?

எந்தவொரு பொருள் குறித்தும் தெளிவானஅறிவு இல்லாமல் அந்த பொருளை வாங்க முயற்சித்தால், உங்களின் முடிவு தவறாகக் கூடும்; உங்களுக்கு விஷயம் தெரியாது என்பதை விற்பவர் கண்டுகொண்டால். மேற்கொண்டு மிக ஏளிதில் உங்களை ஏமாற்றிவிடுவார். மலிவான பொருளை, மிக சிறந்ததென்றும், நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றும் உங்களை புகழ்ந்து, உங்கள் தலையில் அதை கட்டிவிடுவார். இப்படிப்பட்ட ஏமாற்றங்களை தவிர்க்க, முதற்கண், நீங்கள் அந்த பொருள் குறித்த அறிவை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அதன் சந்தை நிலவரம் குறித்த தெளிவான பார்வை உங்களுக்கு இருக்க வேண்டும்;


வேலைக்காண நேர்காணலில், உங்கள் திறமைகளை நீங்கள் சந்தை படுத்துகிறீர்கள். அந்த நிறுவனத்திற்கு தேவையான தகுதிகள் உங்களிடம் இருந்தால், நிறுவனம் உங்களுடனான அடுத்தகட்ட பயனத்திற்கு தயாராகும். அந்த நிறுவன அதிகாரிகளிடம் உங்கள் திறமைகளை விற்க முடியவில்லையென்றால், ஒன்று உங்களை தேர்வு செய்யமாட்டார்கள் (அல்லது) குறைவான ஊதியத்தையே வழங்குவார்கள். உங்கள் திறன்களை உங்களுக்கு சந்தைபடுத்த தெரியவேண்டும். எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு பேச ஆரம்பித்தால், உங்களை யாரும் அவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியாது.


நீங்கள் பொருட்களை வாங்க பேரம்பேசுவதானாலும் சரி, கைதிகளை விடுவிக்க பேரம் பேசுவதானாலும் சரி, எல்லா பேரத்திலும் நீங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

  • நீங்கள் வாங்கும் / விற்கும் பொருள் குறித்தும், சந்தை குறித்தும் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

  • அன்றைய பொருள் இருப்பு, விலை மாற்றம் குறித்து முழுவதும் தெரிந்திருக்க வேண்டும்;

  • எதிரில் இருப்பவரின் பலம்-பலவீணம் குறித்து விசாரித்து அறிந்து வைத்திருக்க வேண்டும்;

  • மற்றவரை முழுவதுமாக பேச விட வேண்டும். அவர் சொல்வதை முழுவதுமாக கேட்டு, அதில் கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்;

  • உங்கள் தேவை என்ன? உங்கள் நிறுவனத்தின் தேவை என்ன? மற்றவரின் தேவை என்ன? என்பது குறித்த தெளிவு உங்களுக்கு வேண்டும்;

  • உங்கள் சொற்களின் மீது நம்பிக்கை வளர்க்க வேண்டும். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பேரம் பேசுங்கள். ஒரு முறை பேசி முடித்தபின், ஒத்துக்கொண்டபடி நடந்துகொள்ளுங்கள்;

  • நீங்கள் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். எதை, எப்போது, யாரிடம், எப்படி பேசவேண்டுமென்பது தெரிந்தால் தான், உங்களால் பேரத்தை உங்களுக்கு சாதகமாக முடிக்கமுடியும். இல்லாவிட்டாலும் பேரம் முடியும். ஆனால் உங்களுக்கான ஆதாயம் ஏதுமிருக்காது;

  • புதிய உத்திகளை தொடர்ந்து யோசியுங்கள்.

  • சூழ்நிலைக்கேற்ற மாற்றத்திற்கு எப்போதும் தயாராக இருங்கள்;

  • ஒவ்வொரு அனுபவமும் உங்களுக்கான கள வகுப்பு. ஓரிருமுறை செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்று அடுத்தடுத்த முறைகளில் வெற்றிகாணுங்கள்;

பேரம் பேசுவதென்பது ஒரு தனிப்பட்ட கலை. இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருக்கிறதென்றும் பல கற்பனை பொருட்களை பற்றி பேசுவார்கள் சிலர். எல்லாவற்றின் நோக்கமும் ஒன்றுதான். விற்பவருக்கு, தன் பொருளை நல்ல விலைக்கு விற்க வேண்டும், அதேசமயம், வாங்குபவருக்கு நல்ல தரமானபொருளை ,குறைந்த விலைக்கு வாங்க வேண்டும். இது என்றுமே தீராத ஒரு போட்டிநிலை. யாருக்கு சாமர்த்தியம் இருக்கிறதோ, அவர் வெல்கிறார். உங்களுக்கு சாமர்த்தியம் இருக்கிறதா? உங்ளால் பேரம் பேசுதலை சிறப்பாக செய்ய முடியுமா?


விற்பவருக்கு அதிக விலை வேண்டும்

வாங்குபவருக்கு குறைந்த விலை வேண்டும்

இரண்டையும் ஓரிடத்தில் சந்திக்கச் செய்து

இருவருக்கும் ஏற்றதொரு வகையில்

தீர்வுகாண்பதுதான் பேரத்தின் சாமர்த்தியம்;


உங்கள் திறமைகள் அங்கீகரிக்கப்பட

முதலில் உங்கள் திறமைகளை திறம்பட

வெளிப்படுத்த உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்;

அவற்றை தெரியப்படுத்தும் முயற்சியில் ஒன்று

உங்களுக்கு சிறப்பாக பேரம் பேச தெரிந்திருப்பது!


பேரம் பேசி விஷயத்தை சாதகமாக முடிப்பது

ஒரு உளவியல் சார்ந்த கலை – அதற்கு

நீங்கள் மனிதர்களை நிறைய படிக்கவேண்டும்!

உலக நடப்பை, சந்தையை, சூழ்நிலைகளை

முற்றிலுமாய் அறிந்துவைத்திருக்க வேண்டும்;


நிறைய விடயங்கள் தெரிந்தால்

நிறைய மனிதர்களை தெரிந்தால்

தெளிவாக பேசத் தெரிந்தால்

சுயமாக சிந்தித்து முடிவெடுக்க முடிந்தால்

பேரம்பேச கற்றுக்கொள்வது மிக எளிது!




- [ம.சு.கு 21.05.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page