top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 214 - அதீத போதையில் எல்லாம் இழப்புதான்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-214

அதீத போதையில் எல்லாம் இழப்புதான்!


  • விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், பாடகர்கள் என்று எண்ணற்ற புகழ்பெற்ற மனிதர்கள், தங்கள் புகழின் உச்சியில் இருந்த காலத்தில், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, தொடர் போதையின் காரணமாய் தான் சேர்த்த நற்பெயரையும், அங்கீகாரத்தையும் முற்றிலுமாய் தொலைத்து சீரழிந்திருக்கும் கதையை இணையத்தில் தேடிப்பாருங்கள். உலகெங்கிலும் நிறைய நிஜக்கதைகள் கிடைக்கும். மது மட்டுமல்லாது, பலநூறு கோடிகளை சூதாட்ட போதையில் தொலைத்து, மகாபாரத தர்மனை மிஞ்சிய நிறைய ஜாம்பவான்களின் கதைகளும் இங்கு ஏராளம். தினம் தினம் வலைதள சூதாட்டத்தில் இலட்சங்களை தொலைத்து கடனாளியாய் தற்கொலை செய்யும் இளைஞர்களும் இங்கு ஏராளம். இதுதான் காலங்காலமாய் மனிதன் உருவாக்கிய நெரியா?

  • பொருட்களின் மீதான போதை ஒருபுறமிருக்க, இன்று இளைய தலைமுறையின் எண்ணங்களை எல்லாம் ஆக்கிரமித்து அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஒரு மாய உலகம் இணையமும், சமூக வளைதளமும். காலையில் கைபேசி எடுத்தது முதல், இரவு படுக்கையில் உறங்கும்வரை, சதாசர்வகாலமும், கைபேசியையே பார்த்துக்கொண்டிருக்கும் இந்த மாய உலக அடிமைகளை என்ன செய்வது? இவர்கள் கற்பனை உலகில் ஆயிரமாயிரம் நண்பர்களை வைத்துக்கொண்டு, அவர்கள் சொடுக்கும் ஒரு “விருப்பு” தேர்வுக்காக எல்லையில்லாம் உழைக்கும் இந்த முட்டாள்களை எப்படி திருத்துவது?

விளையாட்டு, திரைத்துறை, அரசியல் என்று புகழின் உச்சியில் இருப்பவர்கள், தங்களின் அதீத மன அழுத்தத்தை, மன உளைச்சலை சமாளிக்க, மதுப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். மது அப்போதைய மன உளைச்சலுக்கு ஒரு வடிகாலாகத் தோன்றினாலும், அது அவர்களின் வீழ்ச்சிக்கான ஆரம்பம் என்பதை உணர்வதில்லை. ஒருசிலர் உணர்ந்திருந்தாலும், பரவாயில்லை என்று தொடர்ந்து மது போதையில் அறிந்தே மிதக்கின்றனர். மதுவின் மீதான நாட்டம் ஆரம்பத்தில் இரவில் மட்டுமாக துவங்கி படிப்படியாக மதியம், காலை என்று எல்லா நேரங்களிலும் விரிவடைந்து விடுகிறது. பகல் பொழுதில் மது தன் ஆட்டத்தை காட்டத் துவங்கியதும், எவ்வளவு கோடி செல்வமானாலும், போகும் வழி தெரியாமல் சிலமாதங்களில் கரைந்து போகிறது. இதில் பெரும்பகுதி ஏமாற்றுக்காரர்களால் பரிபோனாலும், இதற்கான முதல் குற்றவாளி யார்?


இணையமெனும் மாய உலகம். மனிதர்களின் கட்டுப்பாட்டை என்றோ கடந்துவிட்டது. இன்று செயற்கை சிந்தனைத்திறனை வெற்றிகரமாக உருவாக்கி சோதித்து வருகின்றனர். கணிணியோ, கைப்பேசியோ, இணைய உலகத்தில் புகுந்தால் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் எண்ணற்றவை உண்டு. சமூக வளைதளத்தில் பரஸ்பர பரிமாற்றங்களுக்கு எல்லையே இல்லை. எங்கோ இருக்கும் யாரோ ஒருவர் கொடுக்கும் “விருப்பு” சொடுக்குக்காக எத்தனைப் நேரத்தை, பொன்னான தருணங்களை வீணடிக்கின்றனர்.


இன்றைய சமுதாயம் எந்த மாதிரியான போதையில் சிக்கித்தவிக்கின்றன என்றால்;

  • போதைவஸ்துக்களின் மீதான போதை [மது, கஞ்சா, புகைபிடித்தல் ?]

  • சூதாட்டத்தின் மீதான போதை [தனிமனித நடவடிக்கையில் சீக்கிரம் பணம் சம்பாதிக்க ஆசை]

  • உண்ணும் உணவின் மீதான ஒருவகை போதை

  • நிஜமில்லாத கற்பனை மாய உலகத்தின் மீதான போதை!

  • அளவுக்கு அதிகமாய் வேலை செய்து களைத்துப்போய் நிற்கும் வேவைபோதை!

இப்படி போதைகளில் எண்ணற்ற வகைகளை நீங்கள் கண்டும், கேட்டும் இருப்பீர்கள்;


இன்றைய தினம், 10%-20% பேர்மட்டுமே எல்லா இக்கட்டான சூழ்நிலைகளிலும் தங்களையும், தங்களின் நிறுவனத்தையும் தட்டுத்தடுமாறி காத்துவருகின்றனர். இப்படி அதீதமாக சிந்திக்கும்போதும், செயல்படும்போதும், எண்ணற்ற இதர புதிய சி்க்கல்களும் உருவாகின்றன. அதீதமாக மாத்திரைகளை உட்கொண்டு ஆரோக்கியத்தை கெடுத்தவர்கள் இங்கு ஏராளம்;

  • வாழ்வில் போதையில் திளைத்தவர்கள் மீண்டுவர வழியுண்டா? அவர்கள் என்ன செய்தால் அது சாத்தியப்படும் என்று யோசியுங்கள;

  • சூதாட்ட போதையில் விட்டதை பிடிக்கிறேன் என்று அடுத்தடுத்த கடன் பெற்று விளையாடுவதும், பெற்ற கடனை அடைக்கமுடியாமல் கம்பிஎண்ணுவதும் இங்கு ஏராளம்;

உங்கள் பொருட்களை, செல்வத்தை, நற்பெயரை காக்க உங்களுக்கிருக்கும் ஒரே வழி, எந்த ஒரு பழக்கத்திற்கும் அதீதமாக அடிமையாகாமல் தப்பிப்பதுதான். ஒருவேளை தவறுநேர்ந்திருந்தால், உடனுக்குடன் அதை சரிசெய்து எல்லாவற்றையும் சராசரிக்கு சற்று மேலாக வைத்துக்கொண்டிருங்கள். உங்கள் பழக்கவழக்கம் தான் உங்களின் தலையாய சொத்து. போதையை ஒழிக்கும் ஒரே வழி, உங்கள் மனம் வலுப்பெறுவதுதான்.


போதையில் பலவகை

வாசிப்பில் போதை பைத்தியமாக்கும்!

மது/மாதுவில் போதை உடலைக் கொள்ளும்!

புகழ்ச்சியில் போதை பொருளை தொலைக்கும்!

உணவில் போதை ஊளைச்சதையை பெருக்கும்!

இணையத்தில் போதை யதார்த்தத்தை இழக்கும்!


எந்த பழக்கமும் போதையாகி

அதீதம் என்ற எல்லையைக் கடந்தால்

நல்லது-கெட்டது எல்லாம் இழப்பாகி

இருந்ததும் பெற்றதும் வரலாறாகிவிடும்;



- [ம.சு.கு 11.05.2023]





Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page