top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 207 - சில வாடிக்கையாளர்களை விலக்கிவிடுங்கள்!"

Updated: May 5, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-207

சில வாடிக்கையாளர்களை விலக்கிவிடுங்கள்!


  • ஒரு பலசரக்கு கடையில், அன்றாட வியாபாரம் ரொக்கத்திற்கும், கடனுக்கும் நடந்து கொண்டிருந்தது. வாடிக்கையாளர்கள் கடனுக்கு வாங்கியதை அடுத்தமாத ஆரம்பத்தில் அடைத்துவிடுவார்கள். ஓரிரு வாடிக்கையாளர்கள், பொருட்களை மிக குறைந்த அளவே வாங்குவார்கள். அதையும் பத்தும் முறை சோதித்துப் பார்ப்பார்கள். கடனுக்கு வாங்கும் அவர்கள், திருப்பி செலுத்த தாமதப்படுத்துவார்கள். அவர்களிடம் வசூல் செய்ய பலமுறை செல்ல வேண்டும். மேலும் வாங்கிய பொருளையும் அவ்வப்போது ஏதேனுமொரு காரணம்சொல்லி திருப்பிக் கொடுப்பார்கள். அந்த ஓரிரு வாடிக்கையாளர்களுடன் அவ்வப்போது பெரிய வாக்குவாதங்களும் ஏற்பட்டு தேவையின்றி அடுத்த வாடிக்கையாளர்களையும் அது பாதிக்கும். இப்படி குடைச்சல் அதிகமான வாடிக்கையாளர்கள் என்ன செய்வது?

  • சிறிய அளவில் அடுக்குமாடி வீடுகள், வணிகவளாகங்கள் கட்டி ஒரு கட்டுமான நிறுவனர் விற்றுவந்தார்., அந்த பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதி பெரிய கட்டிடம் கட்டுவது குறித்து அவரிடம் பேசினார். 10 கோடி முதலீட்டில் கட்டும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு வேலை துவங்கியது. இந்த முதலீட்டில், பெருமளவில் கருப்புப் பணம் பயன்படுத்தப்படும் என்று தெரிந்தே அந்த ஒப்பந்தத்தில் சேர்ந்தார். கட்டிட வேலைகள் பாதியளவு நடந்த நிலையில், அந்த அரசியல்வாதி ஊழல் விவகாரத்தில் சிக்கினார். அவரது ஆவணங்களில் எழுதப்பட்டிருந்த குறிப்புக்களை தொடர்ந்து இந்த கட்டுமான நிறுவனர் வீட்டிலும்ம சோதனைகள் நடந்தன. அரசியல்வாதியின் கருப்புப்பணத்தை கையாண்ட குற்றத்திற்காக சிலமாதங்கள் சிறை செல்ல நேர்ந்ததோடு, அவரது வியாபாரம் முற்றிலுமாக முடங்கியது. அந்த அரசியல்வாதியின் வர்த்தகத்தில் பெரிதாய் ஒன்று சம்பாதிக்கவில்லை. ஆனால் அவரது கருப்புப் பணத்தை கையாண்ட குற்றத்திற்காக, இவரது சொத்துக்கள் எல்லாமே முடக்கப்பட்டன. ஒரு பெரிய வர்த்தகத்திற்கு ஆசைப்பட்டு இப்படி நிரந்தரமான சிக்கலில் சிக்குவது தேவையா?

தொழிலில் பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். ஒரு சில வாடிக்கையாளர்கள் மிக கண்ணியமாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலர் ஏமாற்றுப் பேர்வழிகளாக இருக்கக்கூடும். ஒருசிலர் பெரிய குறை சொல்லிகளாக இருக்கக்கூடும். பொதுவாக எல்லா வாடிக்கையாளர்களையும் அனுசரித்துத்தான் வியாபாரம் செய்தாக வேண்டும். அதேசமயம், எல்லோரையும் அனுசரிக்கிறேன் என்ற பெயரில் ஒருசில வாடிக்கையாளர்களிடம் அதீத நேரத்தை செலவழிப்பது, உங்களின் நேரத்தை திண்று வளரச்சியை பாதிக்கக் கூடும். கூடியவரை கடனுக்கு வியாபாரம் செய்வதையும், அதீத குறைசொல்லிகளையும் தவிர்த்துவிடுவது நல்லது. கடனை வசூலிக்க அலைவதில் பலர் நேரத்தையும், பொருளையும் இழக்கின்றனர். கடை பெரியதோ, சிறியதோ, நீங்கள் வர்த்தகம் செய்யும் வாடிக்கையாளர் குறைந்தபட்ச கண்ணியத்தை கடைபிடிப்பவராக இருந்தால் நல்லது. இல்லாவிடில், அடிப்படை கண்ணியமற்ற வாடிக்கையாளர்களை சாதுர்யமாக தவிர்த்து விடுவது மிகநல்லது.


சிறிய அளவில் வியாபாரம் செய்து அளவான இலாபத்தோடு நிம்மதியாக இருக்கலாம். அதேசமயம், பெரிய அளவில் வளர்ச்சிகான, வங்கிகளில் கடன் வாங்கி முதலீட்டை அதிகரித்து வர்த்தகத்தை விரிவுபடுத்தலாம். இவையனைத்தும் நியாயமான முறைகளில் நடந்துகொண்டிருக்கும் வரை, பெரிய பிரச்சனைகள் இருக்காது. ஆனால், அதிக பொருள் சேர்க்கவேண்டுமென்ற ஆசையில், தவறான வாடிக்கையாளர்களுடன் கூட்டு சேர்ந்தால், அவர்கள் அகப்படும்போது, வியாபாரியும் சிக்கிக்கொள்ளக்கூடும். அப்படித்தான் இந்த கட்டிட நிறுவனரும் ஒரு பெரிய வர்த்தகத்திற்கு ஆசைப்பட்டு, ஊழல் பேர்விழியின் கருப்புப்பணத்தை கட்டிட முதலீட்டில் கையாண்டு மாட்டியுள்ளார். ஒரு வியாபாரியாக, நீங்கள் ஏதாவது தவறுசெய்பவர்களுடன் தெரிந்தோ, தெரியாமலோ கைகோர்த்திருக்கிறீர்களா?


வாடிக்கையாளர்தான், ஒரு நிறுவனத்தின் பெரிய சொத்து. நல்ல நம்பகமான வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெற்றால், நிறுவனத்தின் வளர்ச்சியானது தானாக நிகழ்ந்துவிடும். அப்படி நல்ல வாடிக்கையாளர்களை தேடித்தேடி சேர்க்கவேண்டியதுதான் வியாபாரியின் தலையாய கடமை. அந்த கடமையில், எங்கெல்லாம் தவறுகள் நேரலாம் என்று முன்கூட்டியே யூகித்து கவனமாக இருந்துவிட்டால், சிக்கலான வாடிக்கையாளர்களை தவிர்த்துவிடலாம். எந்தெந்தமாதிரியான வாடிக்கையாளர்களை தவிர்ப்பது நல்லது;

  • திருட்டுப் பொருட்களை விற்க வருபவர்களை இணங்கண்டு விலக்குவது அதிமுக்கியம். ஏனெனில் அவர்கள் சிக்கும்போது, தேவையில்லாத சோதனைகள் உங்கள் கடையில் நடக்கும். கடையின் நற்பெயர் முற்றிலுமாய் பாதிக்கப்படும்;

  • கூடிய வரை கடனுக்கு விற்பதை தவிர்க்க வேண்டும். கடனுக்கான வியாபாரம் தவிர்க்கமுடியாவிட்டால், சிறிய அளவில் துவங்கி வாடிக்கையாளர்களின் நாணயத்தை கவனமாக பரிசீலித்துக் கொண்டே இருக்கவேண்டும்; சொன்ன சொற்களை காப்பாற்றாத வாடிக்கையாளர்களை படிப்படியாக தவிர்த்துவிடுவது நல்லது;

  • அதீதமான குறை சொல்லிகளையும், உங்கள் நேரத்தை அளவுக்கு அதிகமாக திண்பவர்களையும் இணங்கண்டு விலக்க வேண்டும்;

  • சம்பந்தமில்லாத புதிய வாடிக்கையாளர்களை, கவனமாக அலசிப்பார்த்து வர்த்தகம் செய்யுங்கள், ஒருவேளை உங்கள் உள்ளுணர்வு எச்சரித்தால், கூடியவரை விலகிவிடுங்கள்;

அப்படி இணங்கு சிலவாடிக்கையாளர்களை விலக்கினால்

  • பெரிய பணச்சிக்கல் வராமல் தவிர்க்கமுடியும் [கடன் கொடுத்த வசூலிக்கமுடியாமல் மூடப்பட்ட நிறுவனங்கள் தான் இங்கு ஏராளம்]

  • நிறுவனர் மற்றும் அவரது ஊழியர்களின் மனஉலைச்சல் குறையும் [குறைசொல்லிகளும், தேவையற்று சத்தம் போடுபவர்களும், புறங்கூறுபவர்களையும் விலக்கினால்]

  • நிறுவனத்தின் நற்பெயர் பாதிகாக்கப்படுவதை தவிர்க்கலாம் [தவறான வாடிக்கையாளர்களுடனான கூட்டினை தவிர்த்தால், சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு சிக்குவது தவிர்க்கப்படும்]

யார் உங்கள் வாடிக்கையாளர் என்ற

தெளிவு உங்களுக்கு இருந்தால் தான்

விற்க வேண்டிய பொருளை சரியாக விற்க முடியும்;


ஆடம்பரப் பொருளை ஏழைகளிடத்தும்

மலிவான பொருட்களை பணக்காரர்களிடத்தும்

விற்க முயற்சிப்பதில் பலன் குறைவுதான்;


அளவிற்கு அதிகமான நேரத்தை எடுப்பவர்களையும்

தேவையற்ற குறை சொல்லிகளையும்

இணங்கண்டு விலக்க வேண்டும்;


உங்களின் பொருளுக்கேற்ற சந்தையையும், வாடிக்கையாளர்களையும்,

விளம்பர முறையையும் கவனமாக தேர்ந்தெடுங்கள்;


தவறான வாடிக்கையாளர்களோடு செல்லும் பயனம்

முன்னேற்றமின்றி ஆரம்பத்திலேயே திரும்ப நிறுத்தும்;

பொருளின் தரத்தை சரிபார்ப்பது போல

உங்கள் வாடிக்கையாளர்களின் தரத்தையும் நீங்கள்

எப்போதும் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்;


- [ம.சு.கு 04.05.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page