top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 206 - இருள் நீங்க விளக்கேற்றுங்கள்!"

Updated: May 4, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-206

இருள் நீங்க விளக்கேற்றுங்கள்!


  • நம் தேசம் விடுதலைபெற்று அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் முதல் இன்றுவரை எல்லா அரசாங்கங்களும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை தொடர்ந்து கொண்டே வருகின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட உன்னதமான தலைவர்களும், மேதைகளும் இதை அரை நுற்றாண்டுக்கும் மேலாக தொடரவே செய்தனர். இதிலுள்ள அரசியல் ரீதியிலான காரணங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், இன்றும் எண்ணற்ற விவாதங்களுக்கு இடையே கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டு முறை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இன்றைய விஞ்ஞான உலகிலும் ஏன் இப்படிபட்ட பாரபட்சமான நிலைமை / சாதிவாரியான இட ஒதுக்கீட்டு முறை தொடர்கிறது?

  • உலகப் பிரசித்திபெற்ற “ஹாரிபார்டர்” என்ற நாவலை எழுதிய பெண்மணி ஜெ.கே.ரவுலிங் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இன்று பலகோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கும் அவர், ஆரம்பத்தில் குடும்ப பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனைகளில் சிக்கித் தவித்த ஒரு சாதாரண பெண்மணி. சிக்கல்கள் மட்டுமே நிறைந்திருந்த தன் வாழ்வில், இருளை நீக்க அவர் தன் கற்பனை திறனையும், எழுத்தாற்றலையும் கையில் எடுத்தார். ஆரம்பத்தில் அவரது நாவலை பதிப்பேற்ற யாரும் முன்வரவில்லை. ஆனால், அவரது அடுத்தடுத்த நூல்களை வெளியிட எல்லா பதிப்பகங்களும் வரிசையில் நின்றன. குடும்ப சிக்கல்களில் எல்லாம் முடிந்துவிட்டதென இருளில் நிரந்தரமாக மூழ்கிவிடாமல், தனக்கான விளக்கை அவர் ஏற்ற முயற்சித்தார். நீங்கள அப்படி எந்த இருளில் மாட்டியிருக்கிறீர்கள்?

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு நீங்கள் எவ்வளவு பணத்தை வாரி வழங்கினாலும், அது அப்போதைக்கு உணவளிக்குமே தவிர, அவர்களின் வாழ்க்கை தரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கல்வியறிவும், அடிப்படை வேலை வாய்ப்புக்களையும் பெற்றால், சமுதாயத்தில் படிப்படியாக மேலேறி வரமுடியும். அதேசமயம் அவர்கள் கற்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவும், வேலைவாய்ப்பில் மற்றவர்களுடன் சமமாக போட்டியிட்டு வெல்வதற்கான வாய்ப்பும் குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதற்கு பதிலாக கட்டாய இட ஒதுக்கீடுகள் மூலம் அவர்களின் இருண்ட வாழ்வில் நிரந்தர ஒளியேற்ற அரசு முயற்சிக்கிறது.


ஜெ.கே.ரவுலிங் போல எல்லாராலும் எழுத்தின் மூலம் கோடீஸ்வரராக முடியாமல் போகலாம். ஆனால், அவரவர்கள் திறமைக்கேற்ப, அவர்கள் இருக்கும் துறையில் சராசரிகளை கடந்து கட்டாயம் முன்னேற முடியும். நீங்கள் பிறந்ததுமுதல் இறப்புவரை, ஏதேனுமொரு வகையில் சிக்கல்கள் தொடரந்து கொண்டேதானிருக்கும். அந்த சிக்கல்களைக்கண்டு பயந்து இருளில் நிரந்தரமாக மாட்டிக்கொண்டால், பாரதி குறிப்பிடும் வேடிக்கை மனிதராய் பூமிக்கு பாரமாய் வாழ்ந்து மடிய வேண்டியதுதான். ஆனால் உங்களால் முடிந்ததை தொடர்ந்து முயற்சித்தால், உங்களின் இருள் விலக கட்டாயம் வழி தென்படும்.


உங்களுக்கான ஒளியை ஏற்ற வெளியாட்கள் யாரும் வரமாட்டார்கள். உங்களுக்கு நீங்கள்தான் கண்டுபிடித்து ஏற்ற வேண்டும். சில நல்ல உள்ளங்கள் உங்களுக்கு வழிகாட்டலாம். ஆனால், அதைப் பற்றி முன்னேற வேண்டியது உங்கள் கடமை.

  • உடல் ஆரோக்கிய குறைபாடுகள் நிறைய இருக்கலாம். ஆனால் அன்றாட உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, சரியாண உறக்கம் என்ற மாற்றத்திற்கான ஒளியை நீங்கள் தான் ஏற்ற வேண்டும்;

  • உங்கள் உறவுகளில் விரிசல் ஏற்பட்டு இருண்டுவிடாதிருக்க, வாய்ப்புக்களை ஏற்படுத்தி மனம்விட்டு நீங்கள் தான் பேச வேண்டும். அகந்தையில் பேச்சை தவிர்த்தால், விரிசல் நிரந்தரமாகிவிடும்.

  • வேலையில் மந்த நிலைவந்தால், சிக்கல்கள் வந்தால், உங்கள் திறன்களை வளர்ந்து முன்னேற்றத்திற்கான ஒளியேற்ற நீங்கள்தான் முயற்சிக்க வேண்டும்;

  • மனஅழுத்தும், மனஉளைச்சல் போன்ற உளவியல் சார்ந்த பிரச்சனைகள் வந்துகொண்டேதான் இருக்கும். மனதை அமைதிப்படுத்தி ஞானத்தை உணரும் வழிகளை நீங்கள்தான் தேடவேண்டும்;

  • வியாபாரத்தில் நிறைய போட்டி பொறாமைகள் இருக்கும். எல்லாவற்றையும் சமாளித்து சந்தையில் நிலைக்க, தொடர்ந்து புதுமைகளை புகுத்தி, வாடிக்கையாளர் சேவையை நீங்கள்தான் மேம்படுத்த வேண்டும்;

  • உங்களுக்குள் நிறைய சுயசந்தேகங்களும், தாழ்வுமனப்பான்மையும் அவ்வப்போது வந்துபோகும். அவற்றிலிருந்து வெளியேறி தன்னம்பிக்கை ஒளியை நீங்கள்தான் ஏற்றிக் கொள்ள வேண்டும்;

  • உங்கள் வரவுக்கு மீறிய செலவுகள் இருந்தால், வாழ்க்கை கடன் தொல்லையில் இருண்டுவிடும். உங்கள் வரவு செலவுகளுக்கு நீங்கள் தான் அதிபதி. கடனில் வாழ்க்கை இருள்வதும், சேமிப்பில் ஒளியேற்றுவதும் உங்கள் கைகளில்தான் இருக்கும்


இருட்டில் எதை தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது

உங்களுக்கு எது வேண்டுமானாலும்

முதலில் இருளை நீக்கி தேட வேண்டும்;

இருளை நீக்க உங்களால் சூரியனை வரவழைக்க முடியாது

ஆனால் ஒரு சிறு விளக்கை ஏற்றி வைக்க முடியுமே;


வியாபாரத்தில் பணச்சிக்கலும், ஆள்குறைபாட்டு சிக்கலும்

வந்துகொண்டேதான் இருக்கும்;

சிக்கலை பிரம்மிப்போடு பார்த்தால், அதை என்றுமே தீர்க்கமுடியாது;

சிக்கலுக்கான காரணத்தை பகுத்தாய்ந்து – அதற்கான

தீர்வுகளை படிப்படியாக செயல்படுத்த துவங்கவேண்டும்;


ஒரே இரவில் சிக்கல் தீரவேண்டுமென்றால் சாத்தியமில்லை

இனிமேல் சிக்கலே வரக்கூடாதென்றாலும் சாத்தியமில்லை

வந்துவிட்ட சிக்கலை

படிப்படியாக தீர்க்கும் பயனத்தில் கிடைக்கும் அனுபவம்,

புதிய சிக்கல்கள் உருவாவதை முன்கூட்டியே தடுக்க பயன்படும்;


இருள் தினந்தோறும் வந்துகொண்டேதான் இருக்கும்

இருளை சமாளிக்க நீங்கள் தான் விளக்கேற்ற வேண்டும்;

நீங்கள் விளக்கேற்றினால் உங்களுக்கான இருள் நீங்கும்

அதேபோலத்தான், உங்களுக்கான வாழ்க்கை போராட்டத்தில்

எண்ணற்ற இடையூறுகளும், பிரச்சனைகளும் வந்துகொண்டே இருக்கும்

அவற்றை தீர்க்க நீங்கள் முதல் அடியை தீர்க்கமாக எடுத்துவைத்தால்

எல்லா பிரச்சனைகளும் படிப்படியாக தீர வழிபிறக்கும்;


- [ம.சு.கு 03.05.2023]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page