“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-203
போட்டியாளர்கள் சமமானவரா?
சில மாதங்களுக்கு முன்னால் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் நன்கு பேசப்பட்டது. அதில் ஒரு பிள்ளை தன் தாயிடம் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்ததாக பெருமையாக கூறி பாராட்டுதலை பெற்றுக் கொண்டிருப்பான். அப்போது அவனது தந்தை அங்கு வரவார். தாயார் தங்கள் பிள்ளையின் இரண்டாம் பரிசை பெருமையாக கூறுவார். தந்தை அவனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, போட்டியில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்று கேட்பார். பிள்ளை இருவர் என்று பதில் சொல்ல, ஒரு நிமிடத்தில் தாயார் நிலைமை புரிந்து கொண்டு குழந்தையின் குறும்புத்தனத்தை கண்டிக்க விரட்டுவார்!
நம் அன்றாட உபயோகத்திற்கான எண்ணற்ற பொருட்களை உலகின் முன்னனி நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்கின்றன. அதே சமயம், அதே பொருட்களை உள்ளூரிலும் யாராவதொருவர் சிறிய அளவில் தயாரித்து அந்த ஊரளவில் சிறிதாக விற்பனை செய்துகொண்டிருப்பார். முன்னனி நிறுவனங்கள் இந்த சிறு உற்பத்தியாளர்களை பெரிதாக பொருட்படுத்தி நேரடி போட்டியாக களம் இறங்குவதில்லை. தனக்கு ஈடான பெரிய நிறுவனங்களையே குறிவைத்து தன் விளம்பரங்களை வடிவமைக்கிறது. ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?
இருவர் மட்டுமே பங்குபெற்ற ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடத்திற்கான பரிசு பெற்ற குழந்தை, பாதி தகவலை மறைத்து பெறுமையாக அவன் பரிசை சொல்வான். அந்தப் இரண்டாம் பரிசு அவனுக்கு ஓடாமல் மெதுவாக நடந்திருந்தால் கூட கிடைத்திருக்கும். குழந்தை அந்த வாய்ப்பை பயன்படுத்தி தன் தாய் தந்தையரிடம் பெறுமையாக கூறி பாராட்டு பெறலாம். பிள்ளைகளுக்கு அதுவும் ஒரு சுட்டித்தனம் தான். ஆனால் அது போல பெரியவர்கள் எந்த உழைப்புமே இல்லாமல் வரும் வெற்றிக்கு தன் பேரை வைத்து பெறுமை பேசுவது சரியா?
ஊரளவில் இருக்கும் சிறிய உற்பத்தி நிறுவனங்கள், வாடிக்கையாளருடன் நேரடி தொடர்பில் இருக்கும். அவர்களது வீட்டுத் தேவையென்ன என்று தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்திருக்கும். ஆனால் பெரிய உற்பத்தியாளர்களுக்கு அது சாத்தியமில்லை. இந்த சிறு உற்பத்தியாளர்களும் சற்றே வளரும்போது, சந்தைக்கும் அவர்களுக்குமான தூரம் அதிகரிக்கும்போது, பெரிய உற்பத்தியாளர்களைப்போல நிறைய நிர்வாகச் சிக்கல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். அந்த சிறிய உற்பத்தியாளர்களில் ஒரு அளவிக்கு மேல் வளர முடியாது என்ற தைரியத்தில் தான் அந்த பெரிய உற்பத்தியாளர்கள், சிறியவர்களை பெரிதாய் பொருட்படுத்தாமல் விட்டு விடுகிறார்கள்; அவர்களுக்கு தெரியம் ஒரு சிறிய நிறுவனத்துடன் போட்டியிட்டு வெற்றிகொள்வதில் பெரிய பயனேதும் இல்லை என்று!
உங்களைவிட சிறிய நபர்களுடன், அனுபவமற்றவர்களுடன், போட்டியிட்டால் என்ன ஆகும்?
நீங்கள் வெற்றி பெறுவீர்கள், ஆனால் நீங்கள் புதிதாய் எதையும் கற்க வாய்ப்பு கிடைத்திருக்காது
உங்களுக்கு அனுபவமும், போட்டிகளும் குறைந்திருக்கும். உங்கள் திறமைகளின் தரம் தாழ்ந்து போகக்கூடும்;
போட்டியில் கவனக்குறைவுக் அதிகரிக்கும். அதனால் இழப்புகளும் அதிகரிக்கும்;
உங்களுக்கு சமமானவருடனோ, உங்களைவிட கீழானவரிடமோ போட்டியிடும்போது, அவர்கள் உங்கள் எதிரியாக கருதக்கூடும்;
நீங்கள் யாருடன் போட்டியிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் உங்கள் வெற்றியின் மகிழ்ச்சி கூடும்;
உங்களுக்கு சமமானவருடனோ அல்லது அதைவிட மேம்பட்டவருடனோ போட்டி நடந்தால், உங்களின் திறமைகள் படிப்படியாக வளரும்;
போட்டி நிறைந்த உலகத்தில், நீங்கள் உங்களுக்கு தேவையானது எல்லாவற்றையும் போட்டியில் கற்றுக்கொள்ள வேண்டும்; கைபேயிலும், இன்டர்நெட்டிலும் பெரிதாய் மாற்றங்கள் ஏதுமில்லை;
உங்கள் போட்டியளார்களை அவ்வப்போது கவனித்து, அவர்களின் முன்னேற்றம், வளர்ச்சி குறித்து தெளிவான திட்டம் தாயாரிக்க வேண்டும்.
நீங்கள் வெற்றிபெற நீங்கள் மட்டும் போதாது. உங்களைச் சுற்றியுள்ள எண்ணற்ற நபர்களின் கூட்டு முயற்சியில் தான் மிகப்பெரிய வெற்றிகள் ஒளிந்திருக்கின்றன.
யாருமே பங்கேற்காத போட்டியில்
நீங்கள் பெறுகின்ற முதல் பரிசும்
கத்துக்குட்டிகளுடன் மோதி
நீங்கள் வென்ற முதல் பரிசும்
பேருக்குத்தான் முதல் பரிசு!!
வெற்றியோ ! தோல்வியோ !
உங்களுக்கு சமமானவருடனோ அல்லது
உங்களைவிட பலசாலியிடமோ மோதி
வெற்றிபெறுவதில் தான் உண்மையான
வெற்றிக்கான மகிழ்ச்சியும், மனநிறைவும் இருக்கிறது!
எப்போதும் மேலிருப்பவருடன் மோதி
உங்கள் திறமைகளை வளர்க்கப் பாருங்கள்;
கீழிருப்பவர்களுடன் மோதினால்
உங்கள் முழுத்திறமைகள் சோதிக்கப்படாமல்
வீரியம் குறைய வாய்ப்பாகலாம்!
விளையாட்டு, வியாபாரம், வாழ்க்கை
களம் எதுவானாலும்
உங்களுக்கு சமமான / மேம்பட்ட வீரர்களுடன் மோதுங்கள்
வெற்றியோ ! தோல்வியோ !
கற்பதற்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும்!
- [ம.சு.கு 30.04.2023]
留言