top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-199 - ஒழுக்கம் தான் எல்லாமே!!"


“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-199

ஒழுக்கம் தான் எல்லாமே!!?

  • உங்கள் ஊர் ஆற்றில் சிறப்பாக நீச்சல் அடிக்கத்தெரிந்த உங்களுக்கு, உலகின் சிறந்த நீச்சல் வீரராக வேண்டுமென்று ஆசை. சில தகுதித் தேர்வுகளில் வெற்றிபெற்று தேசிய நீச்சல் பயிற்சிக்கூடத்தில் சேர்கிறீர்கள். பயிற்சியாளர் தினமும் என்னென்ன பயிற்சி மேற்கொள்ள வேண்டும், என்ன சாப்பிடவேண்டும், எத்தனை மணிக்கு உறங்கி எழ வேண்டும் என்று எண்ணற்ற கட்டளைகளையும், கட்டுப்பாடுகளை விதிக்கிறார். ஆரம்பத்தில் ஒத்துக்கொண்ட நீங்கள், போகப்போக அவற்றை ஒழுங்காக செய்வதில்லை. உணவுக்கட்டுப்பாட்டை தவறவிடுவதால் எடை சற்று கூடுகிறது. அதிகநேரம் நண்பர்களுடன் நகரில் சுற்றுவதாலும், மதுப்பழக்கம் ஏற்படுவதாலும், அன்றாட பயிற்சிகளில் கவனம் குறைந்துவிடுகிறது. இந்த சூழ்நிலையில் பயிற்சிக்கூடத்தில் அடுத்தகட்ட சோதனைத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. சிறந்த வீரர்களுக்கு இடையே நடக்கும் இந்த போட்டி மிகக் கடுமையாக இருக்கிறது. ஆற்று நீச்சலில் எளிதாய் வென்ற நீங்கள், இந்த களத்தில், உங்களின் கூடிவிட்ட எடையுடன், பயிற்சிக் குறைபாடுகளுடன் வெற்றிபெற்று சர்வதேச அளவில் செல்ல முடியுமா?

  • நிறுவன வேலையில் இரண்டு நண்பர்கள் திறம்பட செயலாற்றினார்கள். அவர்களில் முதலாமவர் நேர்மையும், வாக்கும், நேரமும் தவறாதவர். இரண்டாமவர் மிகச்சாதுர்யமானவர். மேலாளரிடம் நற்பெயர் எடுப்பதற்காக அவ்வப்போது குறுக்குவழிகளை பயன்படுத்திவிடுவார். மேலும் பொருள் சேர்க்கும் நோக்கத்தில், அவ்வப்போது நேர்மை தவறிய செயல்களிலும் அவர் ஈடுபடுவதாக நிர்வாகத்திற்கு தகவல்கள் கிடைத்தன. சரியான ஆதாரங்கள் இல்லாததால் நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அந்த சமயத்தில், வெளிநாடு சென்று புதிய திட்டத்தை கையாளும் பெரிய வாய்ப்பொன்று அந்த நிறுவனத்திற்கு வந்தது. இரண்டாமவர் மிகவும் சாதுர்யமானவராகவும், திட்டத்திற்கு ஏற்றவராக இருந்தாலும், அவரது ஒழுக்கம் தவறிய செயல்களை கருத்தில் கொண்டு, நிர்வாகம் முதலாமவரையே அந்த வேலைக்கு பரிந்துரைத்தது. தனக்கு எல்லாத் தகுதிகள் இருந்தும், அவ்வப்போது செய்யும் குறுக்குவழி முயற்சிகளும், நேர்மையற்ற செயல்களும், பெரிதாக பொருட்படுத்தப்பட்டு, ஒழுக்கமற்றவர் என்று முத்திரை குத்தி, பெரிய வாய்ப்பை கொடுக்க மறுத்துவிட்டனர். இதை அவர் புரிந்துகொள்ளும்போது, அவரது பெயர் தவறாக முத்திரைகுத்தப்பட்டிருந்தது.

நீச்சல் களத்தில் உடல் தகுதி, மனஉறுதி, கடுமையான பயிற்சி மற்றும் விடாமுயற்சி இருந்தால் மட்டுமே, பெரிய போட்டியாளர்களை விஞ்ச முடியும். சரியான உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடித்தால் மட்டுமே களத்தில் உடல் உங்களுக்கு ஒத்துழைக்கும்: தினம் தவறாமல் பயிற்சி செய்தால் மட்டுமே, கள மாற்றங்களை தாண்டி களத்தில் நிற்க முடியும்; மன உறுதியும், வைராக்கியமும் இருந்தால் மட்டுமே எதிர்வரும் எல்லாத் தடைகளையும் தாங்கி போராட முடியும். பயிற்சியாளர் விதிக்கும் கட்டுப்பாடுகளை நீங்களாக தளர்த்திக் கொண்டு சோம்பேறித்தனத்தை வளர்த்தால், போட்டிநாளில் உங்களால் முழுமையாக செயல்பட முடியாது. கைவலி, கால்வலி, பயம் என்று எல்லா காரணங்களும் உங்களைத் தொற்றிக்கொள்ளும். கடுமையான பயிற்சியுடனும், கட்டுப்பாட்டுடனும் இருப்பவரால் தன்னம்பிக்கையுடன் எந்த வீரரையும் எதிர்கொள்ள முடியும்;


நீங்கள் சாதிக்க நினைத்தால், முதலில் உங்களைச் சார்ந்தவர்கள் மத்தியில் நற்பெயரை காப்பாற்றுவது முக்கியம். ஏனெனில் எல்லாவாய்ப்புகளும் நேரடியாக உங்களிடமே வராது. வாய்ப்புக்களைப்பற்றி வெவ்வேறு நபர்களுக்கு தெரியவரும்போது, உங்களது நம்பிக்கைக்குரியவர்களும், நண்பர்களுமே உங்கள் பெயரை பரிந்துரைக்கின்றனர். உங்களுக்கும் அழைத்து சொல்லி தயார்படுத்துகின்றனர். உங்களின் திறமையின் மேல், நாணயத்தின் மேல் அவர்களுக்கு நம்பிக்கை குறைந்தால், உங்கள் பெயரை பரிந்துரைப்பதை நிறுத்தி விடுவார்கள். நீங்கள் மேலாளருக்கு உதவி செய்து உங்கள் கைக்குள் போட்டு வைக்கலாம். ஆனால், உண்மையான நாணயமும், ஒழுக்கமும் இல்லாவிட்டால், நீண்ட நாட்களுக்கு வேஷத்தை தொடரமுடியாது. நிறுவனத்தின் உரிமையாளர், உங்களையும். மேலாளரையும் சேர்த்தே கவனித்துவருவார். நேர்மையும், ஒழுக்கமும் தவறியவர்கள், நிறுவனங்களில் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது. அரசாங்க உத்தியோகத்தில் கையூட்டு பெற்று காலத்தை கடத்தலாம். ஆனால், ஒருநாள் சிக்கியே தீருவார்கள். அன்றைய தினம் சேர்த்த பொருளும், பெயரும் தானாய் பறிபோகும்.

  • மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற ஆசையிருந்தால், பாடங்கள் தொடங்கிய நாள்முதல் சரியாக கவனித்து எல்லாவற்றையும் தினம் தவறாமல் படித்து தயாராக வேண்டும். நாட்களை கோட்டை விட்டால், மதிப்பெண்கள் தானாக விலகிவிடும்.

  • பிள்ளைப் பருவத்தில், குழந்தைகளுக்கு ஒழுக்கம், நன்னடத்தை குறித்து அறிவுரைகளையும், செயல்விளக்கத்தையும் ஆசிரியர்கள் செய்து காண்பித்தால், எல்லாம் தானாக சரியாகிவிடும்;

  • வேலைக்கு காலை 9 மணிக்கு வரவேண்டுமென்று நிர்பந்தமிருந்தாலும், எல்லா ஊழியர்களும் அதற்குள் வந்து சேர்ந்து விடுகிறாரா?

சுய ஒழுக்கம், சுயகட்டுப்பாடு குறித்து நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த சுயஒழுக்கம்தான் வெற்றிக்கான முதல் நிலைப்படி. சில அவசர காரணங்களால், ஒருசில குறுக்குவழிகளை கையாண்டாலும், அது நிறந்தர வழியில்லை என்பதை நினைவில் கொள்ளளலளண்டும்.


நீங்கள் செய்வது நல்லதோ - கெட்டதோ

செய்வதை தொடர்ந்து செய்து வெற்றிகாண

முதலில் அதை முறையாகவும், தொடர்ச்சியாகவும்

செய்கின்ற பழக்கமும், ஒழுக்கமும் தேவை;


அன்றாடம் குறித்த நேரத்தில் செய்கின்ற

பழக்கமும், ஒழுக்கமும், கட்டுப்பாடும்

உங்களுக்கு நீங்கள் விதித்து செயல்படுத்தமுடிந்தால்

நீங்கள் நினைத்ததை அடைவதற்கான வாகனம் தயார்;

இனி களமும், பந்தயமும் உங்கள் புத்திசாலித்தனம்தான்;



- [ம.சு.கு 26.04.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page