top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-196 - தெரியாதவர்க்கு தினமொரு சிறு உதவி.....!"

Updated: Apr 24, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-196

தெரியாதவர்க்கு தினமொரு சிறு உதவி....!


  • பயனங்களுக்கான முன்பதிவு செய்யும்போது, எல்லா படிவங்களிலும் நீங்கள் மருத்துவர் என்றால் குறிப்பிடவும் என்ற வேண்டுகோள் இருக்கும். தொடர்வண்டி, விமானங்களின் பயனியர் பட்டியலில், மருத்துவர் யாராவது இருந்தால், அவரது பெயர் மட்டும் கூடுதல் குறியீடுடன் அச்சிடப்பட்டிருக்கும். ஏன் மருத்துவருக்கு மட்டும் அப்படியொரு தனி மதிப்பு?

  • நகரங்களில், குறிப்பிட்ட நேரங்களில்ர போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்படும். முக்கிய சாலைகளில் போக்குவரத்து காவலர்கள் நின்று போக்குவரத்தை சரிசெய்து விடுவார்கள். ஆனால் ஆங்காங்கே பல குறுக்கு சாலைகளில் ஏற்படும் நெரிசலை, ஏதாவதொரு வாகன ஓட்டுனரோ, பயனியோ, அல்லது அங்கிருக்கும் யாராவதொரு நபர் முன்வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்திவிட முயற்சி செய்வார். அந்த சேவைக்கு யாரும் அவருக்கு ஊதியம் எதுவும் கொடுக்கப்போவதில்லை. ஆனால் அவர் தானாக முன்வந்து உதவியது, அவசரத்தில் அந்த நெரிசலில் மாட்டியிருந்த பலருக்கு மிக உதவிகரமாக இருந்திருக்கும். அப்படி நீங்கள் இதுவரை எங்காவது? யாருக்காவது? உதவியிருக்கிறீர்களா!

பயனம் செய்பவர்களில், யாருக்கு வேண்டுமானாலும் திடீரென்று அவசர மருத்துவ உதவி தேவைப்படலாம். நடுவானில் பயனம் செய்யும்போது, மருத்துவ உதவிக்கு எங்கே போவது. எப்படி போராடினாலும் விமானத்தை தரையிரக்கி மருத்துவ உதவி பெற, குறைந்தபட்சம் அரைமணி நேரத்திற்கு மேலாகும். அதுவரை பயனி தாக்குபிடிக்க வேண்டமே! அதேசமயம், விமான பயனியரில் மருத்துவர் யாராவது இருந்தால், அவசர மருத்துவ உதவியை செய்து அந்த அரைமணி நேரத்தை அபாயமின்றி கடக்கச் செய்யலாம். உலகம் முழுவதும் நடக்கும் பயனங்களில் தினம்தினம் யாராவது சிலருக்கும இப்படி மருத்துவர்கள் உதவிக்கொண்டேதான் இருக்கிறார்கள். இதற்கு அந்த மருத்துவர்கள் எந்த கட்டணத்தையும் எதிர்பார்ப்பதில்லை. அவரக்ளின் பயனத்தினூடே, தேவையேற்பட்டவருக்கு அப்போதைக்கு தன்னால் முடிந்து மருத்துவ உதவியை செய்து நோயாளிகளை காப்பாற்றிச் செல்கின்றனர்.


எல்லா போக்குவரத்து நெரிசல்களுக்கும் காரணம். அவசரமாக செல்லவேண்டுமென்று எல்லோரும் விதிகளை மீறிசெல்ல முற்படுவதாலேயே நிகழ்கிறது. ஒருகட்டத்தில் நெரிசலில் சிக்கிக்கொள்கிறார்கள். மற்றவர்களின் விதிமீறலை குறைசொல்லிக்கொண்டே வாகனத்தில் பலர் அமர்ந்திருக்க, யாரோ ஒருவர் தன்னால் முடிந்த உதவியாக போக்குவரத்தை சரிசெய்கிறார். அவருக்கு அது வேலையில்லை. ஆனாலும் சமுதாய நலனுக்கு அதைச் செய்கிறார்.


ஆம்! மற்றவர்களுக்கு உதவுவது உங்களின் வேலையில்லாமல் இருக்கலாம். ஆனால் அவ்வப்போது சிறுசிறு உதவிகளை செய்யவேண்டியது உங்களின் கடமையாகும். எங்காவது

  • திடீரென்று மயங்கிய ஒருவருக்கு அருகில் இருக்கும் ஒரு மருத்துவர் உதவுகிறார்;

  • போக்குவரத்தை சரிசெய்ய ஒரு பயனி உதவுகிறார்;

  • வயதானவர் சாலையை கடக்க ஒரு பாதசாரி உதவுகிறார்;

  • பேருந்தில் குழந்தைகளை கையில் வைத்திருப்பவர் அமர ஒருவர் தன் இருக்கையை கொடுக்கிறார்;

  • அவசரத்தில் இருப்பவருக்கு வரிசையில் முன்செல்ல ஒருவர் அனுமதிக்கிறார்;

  • சாலையில் கிடக்கும் பெரிய கல்லை அப்புறப்படுத்திவிட்டு ஒரு ஓட்டுனர் செல்கிறார்;

  • பசியால் வாடும் பிச்சைக்காரருக்கு யாரோ ஒருவர் உணவு வாங்கித் தருகிறார்;

  • மருத்துவ சிகிச்சைக்கு அவசரமாக தேவைப்படும் இரத்தத்தை வழங்க யாரோ ஒருவர் வருகிறார்;

  • குறிப்பிட்ட முகவரிக்கு செல்ல யாரோ ஒருவர் வழிகாட்டுகிறார்;

  • யாரோ ஒருவர் செய்த கண்தானத்தில், யாரோ ஒருவருக்கு கண் பார்வை கிடைக்கிறது;

இப்படி அன்றாடம் எல்லா இடங்களிலும் யாராவது ஒருவருக்கு முன்பின் தெரியாத யாராவது ஒருவர் உதவிக்கொண்டே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட உதவிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பதால் தான், சமுதாயத்தில் பல சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு அமைதி நிலவுகிறது.


இந்ந உதவிகளை செய்வதால் உங்களுக்கு என்ன நேரடிப்பயன் என்று கேள்வி எழலாம். பல சமயங்களில் உடனடிப் பயன் ஏதுமிருக்காது. ஆனால் அந்த உதவியை செய்யாவிட்டால், மற்றவருக்கு இழப்பு நேரலாம். நீங்களோ, உங்கள் குடும்பத்தினரோ எங்காவது திக்குத்தெரியாமல் சிக்கித்தவிக்கும்போது, யாராவது இப்படி வந்து உதவுவார்கள். அப்போது அந்த உதவியின் பயனை உணர்வீர்கள்.


என்னைப் பொருத்தவரை, வாழ்க்கையின் போக்கில் ஆங்காங்கே சிறுசிறு உதவிகளைச் செய்வது ஒவ்வொரு மனிதனின் கட்டாய கடமையென்றே சொல்வேன். ஏனெனில், அப்படி தேவைப்படும் நேரத்தில் செய்யும் பல சிறிய உதவிகள் தான், எண்ணற்வர்களின் உயிர்களை காத்திருக்கிறது. சமுதாயத்தில் ஏற்படவிருந்த பல சிக்கல்களை தவிர்த்திருக்கிறது. சந்தேகத்திற்குரிய பல பொருட்கள், பல நபர்கள் குறித்து யாராவதொருவர் காவல்துறைக்கு தெரிவிக்கும் தகவல்கள்தான், பெரிய அசம்பாவிதங்களை தவிர்க்க வழிவகுக்கிறது.


இப்படி முகம் தெரியாத பலரும் செய்யும் சிறு உதவிகளால் தான், உங்களின் வாழ்க்கை அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. இப்படி மற்றவர்களின் உதவிகளை தெரிந்தும், தெரியாமலும் பெற்று வரும் நீங்கள், மற்றவர்களுக்கு என்ன செய்தீர்கள் என்று யோசித்துப்பாருங்கள்.


தினம்தினம் எதாவதொரு உதவியை நீங்கள் செய்துவருவீர்களானால், சமுதாயம் சீராக இயங்க உங்கள் பங்களிப்பும் ஒரு அங்கமாகும். அமைதியான சமுதாயம் நீடித்தால், உங்கள் வியாராரமும், வாழ்க்கையும் அமைதியாக பயனிக்கும்.



நீங்கள் தேவைக்கு அதிகமாக வாங்கிய உணவை வீணாக்காமல்

போகிற வழியில் தென்படும் யாசகருக்கு கொடுத்துவிடுங்கள்;


தெரிந்தவர்களுக்கு உதவினால்

அவர்களை பார்க்கும் போதெல்லாம் அது நினைவில் இருக்கும்;

அவர்களிடம் பிரதிபலனை வேறு சூழ்நிலைகளில் எதிர்பார்க்கும்;

தெரியாதவர்களுக்கு உதவினால்

சில நாட்களின் உதவி பெற்றவரின் முகமும், உதவியும்

உங்கள் நினைவுகளில் இருந்து மங்கிவிடும்;


பிரதிபலனை எதிர்பார்த்து செய்யும் உதவியில்

நிம்மதிக்கு பதிலாய் வியாபாரம் மட்டுமே இருக்கும்!

யார்? எவர்? எதற்கென்று? தெரியாதவர்மாட்டு செய்யும் உதவியில்

பிறருக்கு உதவிய நிம்மதியும், அமைதியும் முழுமையாயிருக்கும்;


ஆசிரமத்தில் ஒருகுழந்தை வளர பொருளுதவி செய்யுங்கள்;

தினமொரு ஏழை பசியாற உணவு வழங்குங்கள்;

வாரமொருமுறை உங்கள் வீதிகளை சுத்தப்படுத்துங்கள்;

இல்லையென்று யாசித்தவருக்கு இல்லையெனாது கொடுங்கள்;

இவற்றில் ஏதாவதொன்றை முகமறியாத முகத்திற்கு

நீங்கள் செய்துவாருங்கள்

காலம் கடந்த காலத்தில்

உண்மையான உதவி புரிந்த மனநிம்மதி கிடைக்கும்;



- [ம.சு.கு 23.04.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page