top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-191 - பிடிவாதம் எவ்வளவுதூரம் அவசியம்?"

[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-191

பிடிவாதம் எவ்வளவுதூரம் அவசியம்?


 • ஆயிரம் முறை தோற்றபின் தான் எடிசன் மின்விளக்கை கண்டுபிடித்தார் என்று வரலாறு சொல்கிறது. இன்று ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் தங்கம் வென்றவர்கள் பலர், தன் ஆரம்பகால போட்டிகளில் படுந்தோல்வி அடைந்திருக்கிறார்கள். அவர்களின் அடுத்தடுத்த முயிற்சிகளும் பெரிய தோல்விகளை சந்தித்தன. அவர்களை சுற்றியுள்ளவர்கள் பலர், உனக்கு இது தேவையற்றதென்று அறிவுரைகூறியுள்ளனர். ஆனாலும், ஏதோ தைரியத்தில், தங்கள் மீதான நம்பிக்கையில் தொடர்ந்து பிடிவாதமாக போராடி வென்றார்கள். ஆனால் அப்படி பிடிவாதமாக போராடியவர்கள் எல்லோருமே தங்கம் வென்றார்களா? என்ற கேள்விக்கு முழுமையான பதில் இல்லை. ஏனெனில், ஒருவருக்குத்தான் தங்கம் என்கின இடத்தில், பலரும் பிடிவாதமாக இருந்தால், அவர்களில் சிறந்தவர் ஒருவருக்குத்தான கிட்டும். மற்றவர்களுக்கு அடுத்தடுத்த நிலைதான் கிட்டும். ஆனாலும், அவர்களின் விடாமுயிற்சியும், சாதனையும் கட்டாயம் ஒருநாள் வேறுவிதங்களில் பயனளித்திருக்கிறது.

 • திரைப்படங்களையும், கதைகளையும் பார்த்துவிட்டு, ஒரு விஞ்ஞானி காலப்பயனத்திற்கான இயந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். காலபயனத்திற்கு எல்லோருக்கும் ஆசையிருக்கும். ஆனால் அது நடைமுறையில் சாத்தியப்படுமா? முடிந்துபோனவைகளை நினைவு கூறமுடியுமே தவிர, அவற்றை நேரில் திரும்ப காணமுடியுமா? வேண்டுமானால், நிழற்படமாக, திரைப்படமாக எடுத்துவைத்து திரும்ப பார்க்கலாம். ஆனால் நீண்டகாலம் தொடர்ந்து முயற்சித்தார். அவரால் 1% முன்னேற்றம் கூட காணமுடியவில்லை. அவரது நண்பர்கள், சக விஞ்ஞானிகள் பலரும் அறிவுரை கூறியும் கேட்காமல் ஆராய்ச்சியை தொடர்ந்தார். இறுதியில், எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் அவர் ஆராய்ச்சியில் இருந்து விலகினார்.

விடாமுயற்சியில் மட்டுமே மிகப்பெரிய வெற்றிகள் உருவாகின. சுழலும் மோட்டார் முதல், இன்றைய கணினி வரை, எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்பும், முடியாது என்றவர்கள் மத்தியில், என்னால் முடியும் என்று பிடிவாதமாக போராடியவர்கள் உருவாக்கியதுதான். விளையாட்டில் தங்கம் வென்ற எல்லா நெஞ்சங்களும் வைராக்கியமாக விடாமுயற்சியுடன் போராடிய நெஞ்சங்களே. சாதிப்பதற்கு விடாமுயற்சிதான் முக்கியம். முந்தைய காலத்தில் 100 மீட்டரை 20 நொடிகளில் ஒடினார்கள். இன்று 8-9 நொடிகளில் ஒட வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. சாதிப்பதற்கான இலக்குகள் கடினமாகி விட்டன. அவற்றை நிறைவேற்ற, வைராக்கியம் அதிமுக்கியம். விலங்குகளால் 5 நொடியில் 100 மீட்டர் ஒடமுடியுமென்றால், ஒருநாள் மனிதனாலும் அது சாத்தியப்படும். வரும் ஆண்டுகளில் அதையும் வைராக்கியமாய் சாதித்துக் காட்டுவார்கள்.


காலப்பயனம் கேட்பதற்கு இனிமையாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கும். காலப்பயனம் புத்தகங்கள் வாயிலாக கற்பனையிலும், படங்களின் வாயிலாகவும் நிகழ வாய்ப்பிருக்கிறது. ஆனால், அது நிஜத்தில் நிகழ்த்தலாம் என்று முயற்சிப்பது எவ்வகையில் சாத்தியப்படும். இழந்த ஒரு நொடியைக்கூட நம்மால் திரும்பப்பெற முடியாது என்று எல்லோரும் அறிந்திருந்தாலும், காலப்பயனத்தை சாத்தியப்படுத்துவேன் என்று பிடிவாதம் பிடித்தால், அது முட்டாள்தனமன்றி வேறென்ன பெயர் வைப்பது.


யதார்த்த வாழ்வில், சாதிப்பதற்கான இலக்குகள் கடினமாகிவிட்டன. சாதிக்க கடுமையான முயற்சிகள் அவசியமாகிவிட்டன. சாதாரன முயற்சிகளை நம்பிக்கொண்டிருந்தால், வெறுமனே சாதாரணமானவராக வாழ்ந்து மடியவேண்டியதுதான். கடுமையான இலக்குகளை அடைய, பல தோல்விகளை கடந்து, விடாமுயற்சியுடன் போராடினால் தான் அது சாத்தியப்படும். ஆனால் அந்த பிடிவாதும்

 • இயற்கைக்கு முறனானதாக இருக்கும்பட்சத்தில் [காலப்பயனம், இறந்தவரை உயிர்பித்தல்...], பயனற்றுப்போகும்;

 • ஒரே கண்ணோட்டத்தில் மட்டும் பிடிவாதமாக இருந்து, மற்ற நல்ல வழிமுறைகளை தவிர்த்தால், காலவிரயமும், பொருள் விரயமும் அதிகரிக்கும்;

 • சில பிடிவாதங்கள், தேவையற்ற அகங்காரத்தையும், போட்டியையும் உருவாக்கி வளர்ச்சியை பாழாக்கிடும்;

உங்களின் பிடிவாதம் என்பது

 • விடாமுயற்சியாக, முன்னர் சாதித்தவர்களைவிட 1-10% சதவிகிதம் சிறப்பாக செய்வதானால் முயற்சி பலனளிக்கலாம்;

 • உங்கள் சுய ஒழுக்கத்தை மேம்படுத்தி, கடமையை சிறப்புற செய்ய வழிவகுத்தால், எல்லாம் ஆக்கப்பூர்வமாக நிகழ்ந்தேறும்;

 • உங்களின் தேடலை அதிகரித்து, அறிவை வளர்த்தால், புதுமைகள் படைக்க வழிபிறக்கும்;

 • உங்களின் நம்பிக்கையை வளர்ந்து, மேலும் ஆக்கத்திற்கான வழிகளை தேட ஊக்குவித்தால், மனிதகுலம் இன்னும் மேம்படும்;

தனிமனிதனின் பிடிவாத குணம், சில தருணங்களில் மிகப்பெரிய சாதனைகளை படைத்தாலும், பல சமயங்களில், அவர்களின் தனிப்பட்ட முன்னேற்றத்தை வெகுவாக பாதித்திருக்கிறது. சாத்தியமில்லாதவைகளின் பின்னால் சென்று பொருளையும், நேரத்தையும் ஏமாந்திருக்கிறார்கள். உங்கள் பிடிவாத முயற்சியை, ஆக்கப்பூர்வமானதாக்க வேண்டுமானால்

 • நீங்கள் செய்யும் செயலில் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும்;

 • உங்கள் கருத்துக்கள், எண்ணங்களைத் தாண்டி, பிறரது கருத்துக்களுக்கு செவி சாய்க்கவேண்டும்;

 • குறுகிய கால பயனை தவிர்த்து, நீண்டகால பயன்குறித்து அறிந்து செயல்படவேண்டும்;

 • தேவைப்படும் இடத்தில், தேவைப்படும் நேரத்தில், தேவைப்படும் நபர்களிடம், சூழ்நிலைகளுக்கேற்ப சமரசம் செய்து ஆக்கத்தை நோக்கி முன்னேற தயாராக இருக்க வேண்டும்;

 • சிக்கலான தருணங்களில், பிறரது ஆலோசனைகளை முழுமனதுடன் கேட்டு செயல்பட தயாராக இருக்க வேண்டும்.


அதிகமாக பிடிவாதம் பிடிப்பது நல்லதன்று என்று

பெரியவர்கள் நமக்கு போதித்திருக்கின்றனர்;

அப்படியானால் பிடிவாதம் தவறானதா?


நான் பிடித்த முயலுக்கு மூனுகால் என்று நிற்பது பிடிவாதம் – அதேசமயம்

அநீதிகளின் மத்தியில் தான் நியாயமானவனாக நிற்பது பிடிவாதமாகுமா?


எல்லோரும் முடியாதென்று தோல்வியை ஏற்று ஒதுங்குமிடத்தில்

நூற்றுக்கும் மேற்பட்ட முறை தொடர்ந்து முயன்று

இறுதியில் வெற்றி காணும் பிடிவாதம் தவறாகுமா?


முடியாததை முடிப்பதற்கு ஒரு பிடிவாதம் வேண்டும்;

இந்த முடிப்பதற்கான விடாமுயற்சியில் தவறேதும் உண்டா?


மனிதகுலத்தின் வளர்ச்சிக்கான எல்லா பிடிவாத முயற்சியும்

ஆக்கத்திற்கான எல்லா பிடிவாத முயற்சியும்

தனிமனித சாதனைகளுக்கான எல்லா பிடிவாத முயற்சியும்

தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதாலேயே

கற்காலத்திலிருந்து இக்கணினிக்காலம் வரை

நம் வாழ்க்கைத் தரமும், அறிவும் மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது!!

- [ம.சு.கு 18.04.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

コメント


Post: Blog2 Post
bottom of page