top of page

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-177 - சரியா கட்டணத்தை வாங்குங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-177

சரியான கட்டணத்தை வாங்குங்கள்!


  • சிறந்த கட்டிட வடிவமைப்பு பொறியாளர் ஒருவர், தன் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப கட்டிட வரைபடைத்தை செய்து கொடுத்தார். கட்டிடத்தின் வடிவத்திற்கேற்ப, அதன் உறுதித்தன்மை எப்படி இருக்க வேண்டும், நீர் மற்றும் மின்சார இணைப்பு முறை என்று எல்லாவற்றையும் தெளிவாக நிர்ணயித்துக் கொடுத்தார். பொதுவாக இந்த வேலைக்கு 50,000/- வரை கட்டணம் வசூலிப்பார். ஆனால் இந்த வாடிக்கையாளர் மிகவும் தெரிந்தவர் என்பதால், வெறும் 5,000/- மட்டுமே கட்டணம் வாங்கினார். பணத்தை கொடுத்துச் சென்ற வாடிக்கையாளருக்கு, குறைவான கட்டணம் வாங்கியதால், திடீரென்று இவர் திறமை மற்றும் வேலையின் மீது சந்தேகம் வந்துவிட்டது. அதனால் அந்த வரைபடத்தை இன்னொரு பொறியாளரிடம் கொடுத்து சரிபார்க்கச் சொன்னார். அவர் மேலோட்டமாக ஓரிரு மாற்றங்களை செய்துவிட்டு ரூ.25,000/- கட்டணம் வசூலித்தார். இது தேவையா?

  • அனுபவம் வாய்ந்த பட்டயக் கணக்காளர் ஒருவர், நிறுவனப் பணியிலிருந்து வெளியேறி, சொந்தமாக அலுவலகம் திறந்தார். வருகின்ற வாடிக்கையாளருக்கு சிறந்த சேவையளித்தார். கணக்கு வழக்குகள், தணிக்கை அறிக்கைகள் குறித்த சந்தையின் தற்போதைய கட்டண நிலவரம் தெரியாததால், தன் வாடிக்கையாளரிடம் ரூ.500/-, ரூ.1000/- என்று குறைவான கட்டணத்தை வாங்கினார். அவரிடம் தொடர்ந்து நிறைய வாடிக்கையாளர்கள் வந்தனர். வேலை நிறைய இருந்தாலும், அவரது வருவாய் பெரிதாய உயரவில்லை. தான் நிறுவனத்தில் பணி செய்தபோது பெற்ற 2-3 இலட்ச ரூபாய் ஊதியத்தில் பாதியைக் கூட அவரால் இங்கு சம்பாதிக்க முடியவில்லை. ஏன்?

நீங்கள் மிகச்சிறந்த நிபுணராக இருக்கலாம். ஆனால், அதற்குரிய கட்டணத்தை வசூலிக்காவிட்டால், உங்கள் வேலையை மற்றவர்கள் அவ்வளவாக மதிப்பதில்லை. சாமானிய மக்கள் விலையுயர்ந்த பொருள் அதிக தரமானதென்றும், மலிவானவை தரம் குறைந்ததென்றும் ஒரு பொதுவான கருத்தை கொண்டுள்ளனர். இந்த கருத்து பல சமயங்களில் சரியாக இருந்தாலும், சில இடங்களில் தவறாகக் கூடும் [நம் பொறியாளரின் சேவை போல]. நடைமுறையை உணராமல் இங்கு தவறு செய்தது பொறியாளர் தான். தன் வேலைக்கேற்ற ஊதியத்தை அவர்தான் கேட்டுப் பெறவேண்டும். குறைவாக கேட்டால், உங்கள் வேலை தரத்தின் மீது வாடிக்கையாளர் சந்தேகப்படுவது இன்றைய சந்தை இயல்பு.


குறைவான கட்டணம் வாங்குவதினால், நிறைய வாடிக்கையாளர்கள் வருவார்கள். நிறைய சின்னச்சின்ன வேலைகள் வரும்போது, உங்கள் அனுபவத்தை முற்றிலும் சோதித்துப்பார்க்கக்கூடிய பெரிய வேலைகளை எடுத்து செய்ய உங்களுக்கு நேரம் இருக்காது. மேலும், இப்படி சிறிய வேலைகளை செய்து கொண்டிருப்பவரிடம், பெரிய வேலைகளை நம்பி ஒப்படைக்க யாரும் விரும்ப மாட்டார்கள். குறைந்த கட்டணம் வசூலிப்பதை ஒரு சேவையாக நீங்கள் நினைத்து செய்தாலும், அந்த சேவையை பெருபவர்கள் அதே கண்ணோட்டத்தில் அதை பார்க்க மாட்டார்கள். நிறைய சிறிய வேலைகளை ஏற்றுக்கொண்டு, பின் முக்கியமான வேலைகளைச் செய்ய நேரமில்லாமல் திணற வேண்டிய சூழ்நிலையும் வரலாம்.


எப்படி சரியாட கட்டணத்தை நிர்ணயிப்பது என்பது அனுபவத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய கலை. கட்டணம் நிர்ணயிக்கும் முன், கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்கள் என்னென்ன;

  • சந்தையில் போட்டியாளர்கள் யார்? யார்?

  • சந்தையில் குறிப்பிட்ட பொருளுக்கு, சேவைக்கு குறைந்தபட்சம் என்ன விலை வாங்குகிறார்கள்? அதிக பட்சம் என்ன விலை வாங்குகிறார்கள்?

  • குறைந்த / அதிக விலை வாங்குபவர்கள் என்ன மாதிரியான சேவை தரத்தை வழங்குகிறார்கள்?

  • சந்தையில் நிலவும் சேவைகள், இப்போது வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கக்கூடியதாக இருக்கிறதா?

  • சந்தையிப் மற்ற போட்டியாளர்கள் வழங்கும் சேவைக்கும், உங்களின் சேவைக்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது?

  • நீங்கள் வழங்கும் சேவைக்கு, உங்கள் மூலதனச் செலவு எவ்வளவு?

  • உங்கள் குறிப்பிட்ட வாடிக்கையாளர் கூட்டத்தின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு எவ்வளவு? அதிகபட்ச எதிர்பார்ப்ப என்ன?

இவை எல்லாவற்றையும் தாண்டி, தற்போதைய பொருளாதார சூழ்நிலை, வாடிக்கையாளரின் தரம் என்ற மற்ற விடயங்களையும் கருத்தில் கொண்டு உங்கள் சேவைக்கான விலையை நிர்ணயம் செய்யுங்கள்.


ஒருவேலை உங்களுக்கு தெரிந்தவரிடம் சற்று குறைவான கட்டணம் வசூலிக்க முடிவெடுத்தால், அவரிடம் முழுமையான கட்டணம் என்ன என்றும், நீங்கள் அவருக்காக குறைத்து வாங்குகிறீர்கள் என்பதையும் தெளிவு படுத்திவிடுங்கள். இல்லாவிட்டால், குறைந்த கட்டணத்தை பெற்றதற்காக, நீங்கள் தரத்தில் குறைத்திருப்பீர்கள் என்று சந்தேகத்திலேயே இருப்பார்.


வேலை உங்களுடையது!

கட்டணம் நிர்ணயமும் உங்களுடையது!

குறைவாக வாங்கினால் உங்களுக்கு நஷ்டம்!

அதிகமாக வாங்கினால் அடுத்தமுறை அவர் வரமாட்டார்!


குறைவிற்கும் அதிகத்திற்கும் இடைப்பட்ட எண்ணை

நீங்கள் தான் தேடிப்பிடிக்க வேண்டும்;

ஆரம்பத்தில் ஒரு சில தவறுகள் நேரலாம்;

அனுபத்தில் போகப்போக சரிசெய்துகொள்ளங்கள்;


குறைவாக வசூலித்தால் நிறைய வருவார்கள்

சேவை வழங்குவதில் சிரமம் ஏற்படும்;

தரமான சேவை வழங்க, சரியாண கட்டணத்தை வசூலித்தால்

சரியான வாடிக்கையாளர் கூட்டம் மட்டும் வந்துசேரும்;


- [ம.சு.கு 04.04.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page