“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-176
பயன நேரத்தை பயனுடையதாக்குங்கள்!
பெருநகர அன்றாட பயனியர் இரயிலில் என்ன நடக்கிறது. இருக்கை கிடைத்து அமர்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தலையில் ஒலிகேட்பானை மாட்டிக்கொண்டு பாடல்களையோ, நாடகத்தையோ, திரைப்படத்தையோ கேட்டும் / பார்த்தும் பயனிக்கிறார்கள். அவர்கள் அருகில் ஒரு வருடமாக பயனித்துக் கொண்டிருக்கும் சகபயனியின் பெயர் என்னவென்று இதுவரை கேட்டதில்லை! பெட்டியில் பயனித்த 70-80 நபர்களில் 2-3 நபர்கள் மட்டும் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலானவர்கள் கைபேசியில் சமூக வளைதளத்தில் உலவிக் கொண்டிருந்தனர். இரண்டு கல்லூரி ஜோடிகள் கூட தங்களுக்குள் பேசிக்கொள்ளாமல், சமூக வளைதளத்தில் பேசிக்கொண்டிருந்தனர். இப்படி நாம் எங்கே பயனித்துக் கொண்டிருக்கிறோம்?
அலுவலகத்திலிருந்து வீடு வந்த புகுந்ததும், மனைவி கேட்டார், வருகிற வழியில் அண்ணாச்சி கடை திறந்திருந்ததா என்று? பெரும்பாலும் ஆண்கள் தெரியவில்லை / கவனிக்கவில்லை என்றே பதிலளிக்கின்றனர். உறவினரை காண முதல்முறையாக அவரது ஊருக்கு சென்றிருப்பீர்கள். நன்றாக பேசிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் வருகின்ற வழியில் முதல் வளைவில் ஒரு ஒற்றைப் பனைமரத்துடன் நெல் பயிரிட்ட பூமியை பார்த்தீர்களே, அதுதான் எங்கள் நிலம் என்று நண்பர் சொல்வார். எந்த நிலம் என்று உங்களால் நினைவு கூற முடியவில்லை. ஏன்?
பணி நிமித்தமாக அன்றாடம் பயனியர் இரயிலில் பிரயானிக்கும் பலர், பயனுள்ள எதையும் செய்வதில்லை. வெறுமனே காலம் கடத்துவதைக் கண்டால், வாழ்வில் எந்தவொரு இலக்கும் இல்லாமல், சரியான செயல்திட்டம் இல்லாமல், முட்டாள்தனமாக அவர்கள் ஓடிக்கொண்டிருப்பது புலப்படுகிறது. கிட்டத்தட்ட 2 மணி நேரங்களுக்கு மேல் நகரங்களில் தினமும் பிரயாணம் செய்கின்றவர்கள், ஏன் அதை பயன்படுத்துவது குறித்து பொருட்படுத்துவதில்லை. வெகு சிலரைத்தவிற, எல்லோரும் வெறுமனே நேரம் வீணாகிறதென்ற புரிதல் ஏன் வருவதில்லை?
நீங்கள் பயனிக்கும் போது, உங்களைச் சுற்றி என்ன வந்து போகிறது, என்ன நடக்கிறது என்பதைப்பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு இருப்பதில்லை. கண்கள் திறந்திருந்தாலும், அதில் காண்பவைகள் எதுவும் உங்கள் மனதில் பதிவதில்லை. வெறுமனே பார்க்கும் நாம், அவற்றை விழிப்புணர்வுடன் கவனித்து மனதில் பதிவிடுவதில்லை. விளைவு, பயனத்தின் போது கண்கள் பார்த்தவை எதுவும் ஞாபகத்தில் இல்லை. இப்படி உங்கள் பயனம் பயனற்றதாய் இருக்க வேண்டுமா? பயனிக்கும் பாதையில் உள்ள எல்லாவற்றையும் பார்த்து, இரசித்து, விழிப்புணர்வுடன் மனதில் பதியவைத்து நீண்டகாலத்திற்கு பூரிப்படைய வேண்டுமா?
அன்றாடம் 1-3 மணிநேரம் பணி நிமித்தமாக பயனிக்கும் நாம், அந்த நேரத்தை சரிவர திட்டமிட்டால்
வாரமொரு புத்தகத்தை படித்து அறிவை வளர்க்கலாம்;
அன்றாட நாளிதழை முழுமையாக படித்து அரசியல் மற்றும் சந்தை நிலவரங்களை அறியலாம்;
நிறைய நண்பர்களை சேர்த்து பலவற்றை கலந்துரையாடி அறிவை விசாலப்படுத்தலாம்;
சில திட்டமிடல்களை முடிக்கலாம் / வாடிக்கையாளர் அழைப்புக்களை பேசி முடிக்கலாம்;
மக்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து மனிதவியல் அறியலாம்;
பயனம் என்பது வாழ்வின் தவிர்க்கமுடியாத ஒரு தேடல். அந்த தேடலில் தான், கொலம்பஸும், வாஸ்கோ டகாமாவும் தூரதேசங்களுக்கான வழிகளை கண்டனர். பயனம் தவிர்க்கமுடியாததாகும்போது, மேற்கொண்டு பயனத்தில் இருந்து என்ன ஆதாயம் கிடைக்க வாய்ப்பை உருவாக்கலாம் என்று யோசியுங்கள்.
உங்கள் பயன நேரத்தை பயனுள்ளதாக்க, மூலையை சுறுசுறுப்படன் வைத்திருங்கள். எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருங்கள். பயனத்தில் கற்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். இயற்கையின் இரம்மியத்தை இரசிக்கலாம். மாறுபட்ட மக்களை, மாறுபட்ட வாழ்க்கை முறையை அறியலாம். பயனத்தின் போது, அதை நன்றாக பயன்படுத்தினால், நேரம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். ஏதும் செய்யவில்லை என்றால், அந்த நேரத்தின் கட்டுப்பாட்டில் நீங்கள சிக்குண்டிருப்பீர்கள்;
வாழ்க்கையில் பயனம் என்பதே அபூர்வமாக இருந்த காலம்போய்
அன்றாட பயனமே வாழ்க்கையாகிவிட்ட சூழல் இன்று;
பயனம் தவிர்க்கமுடியாத தேவையாகிவிட்ட சூழலில்
பயனிக்கும் நேரத்தை எப்படி பயனுடையதாக்குவதென்று யோசித்தீர்களா?
பயன நேரத்தை
வீண் அரட்டை அடித்தும் கழிக்கலாம்;
புத்தகம் வாசித்தும் கழிக்கலாம்;
சாலை இருபுறங்களில் வேடிக்கை பார்த்தும் கழிக்கலாம்;
சமூக வளைதளத்தில் இலக்கின்றி உலாவியும் கழிக்கலாம்;
ஒன்றும் செய்யாமல் உறங்கியும் கழிக்கலாம்;
நீங்கள் இவற்றில் எதை செய்து கொண்டிருக்கிறீர்கள்?
- [ம.சு.கு 03.04.2023]
Comments