top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-175 - யாரையும் காத்திருக்க வைக்காதீர்கள்!"

Updated: Apr 3, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-175

யாரையும் காத்திருக்க வைக்காதீர்கள்!


  • புகழ்பெற்ற மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற செல்கின்றீர்கள். அவரைக்காண உங்களுக்கு முன்னால் 10-15 நோயாளிகள் காத்திருக்கின்றனர். இப்போது அவரை பார்க்க வேண்டுமானால், நீங்கள் குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது காத்திருக்க வேண்டும்; இப்படி மருத்துவரைக் காண காத்திருப்பதால் நேரம் வீணாகிறதென்று விமர்சிக்கிறீர்கள். உங்களின் இந்த விமர்சனம் சரியா? தவறா? மருத்துவர் இவர்களை காக்கவைப்பது சரியா?

  • உங்கள் கைப்பேசி இணைப்பில் அடிக்கடி கோளாறு ஏற்படுகிறது. குறிப்பாக பேசிக்கொண்டிருக்கும் போது, இணைப்பு தானாக துண்டித்து விடுகிறது. இந்த பிரச்சனையை சரிசெய்ய வேண்டி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைக்கிறீர்கள். அங்கு சேவை அதிகாரிகள் குறைவாக உள்ளதால், உங்கள் காத்திருப்பு நேரம் 8 நிமிடம் என்று கூறுகிறது. சற்று நேரம் கழித்து அழைத்தால், காத்திருப்பு நேரம் 9 நிமிடம் என்கிறது. இந்து முறை காத்திருந்து பேசுகிறீர்கள். சேவை ஊழியர் பேசவரும்போது இணைப்பு துண்டித்து போகிறது. நேரடியாக ஊரில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று குறையை தெரிவிக்கிறீர்கள். உங்கள் பிரச்சனை தீர 2-3 நாட்கள் ஆகிறது. அடுத்த முறையும் இதே பிரச்சனை வந்தால், வாடிக்கையாளர் என்ன செய்வார்? சேவை மையத்திற்கு வருவாரா? அல்லது தன் கைபேசி இணைப்பை வேறு நிறுனத்திற்கு மாற்றிக்கொண்டு சென்று விடுவாரா?

மருத்துவமனையில், நிறைய மருத்துவர்கள் இருப்பார்கள். உங்களின் நோயின் தன்மைக்கு இணங்க அத்துரையில் பயிற்சிபெற்ற மருத்துவர்களும் இருப்பார்கள். உங்கள் பிரச்சனை சார்ந்த துறையில் உள்ள ஏதாவதொரு மருத்துவரை சென்று பார்ப்பதானால், சீக்கிரத்தில் பார்த்துவிடலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட புகழ்பெற்ற மருத்துவரை மட்டுமே பார்க்க வேண்டுமென்றால், உங்களைப்போல பலரும் அவரைக்காண விரும்பினால், காத்திருக்கவேண்டியது கட்டாயமாகிவிடுகிறதே. அந்த மருத்துவரும் இரண்டு கை-கால் கொண்ட சாதாரண மனிதர் தானே. அவரால் ஒவ்வொரு நோயாளியாகத்தானே பார்க்க முடியும். இங்கு அவரைக்காண காத்திருப்பது உங்கள் குற்றமா? அவரது குற்றமா?


இது வாடிக்கையாளர் சந்தை. நிறைய உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளரை கவர போட்டி போட்டுக் கொண்டிருக்கும் சூழலில், நிறுவனம் வாடிக்கையாளர் சேவையை தாமதப்படுத்தினால், வெகு சீக்கிரத்தில் வாடிக்கையாளர்கள் குறைந்து விடுவார்கள். முதல் கட்டம் குறைகள் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மீறி ஏற்பட்டால், வாடிக்கையாளரை காக்கவைக்காமல், சீக்கிரத்தில் அவரது பிரச்சனையை கேட்டு தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அந்து வாடிக்கையாளரை இழக்க நேரிடும்.


எவ்வளவு காக்கவைத்தாலும், வேறுவழியின்றி மக்கள் காத்துக்கொண்டிருப்பது நீதித்துறையிடமும், அரசாங்கத்திடமும் மட்டுமே. ஏனைய எல்லா இடங்கிளிலும், மக்கள் அடுத்த ஒன்றிற்கு மாறிச் சென்று விடுகிறார்கள்.


வியாபாரம், குடும்பம், உறவுகள், சமுதாயம் என்று எல்லாவற்றிலும் எப்படியெல்லாம் காக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர்.

  • வாடிக்கையளர் சேவையில் தாமதம். வாடிக்கையாளர் காத்துக் காத்து பொறுமையிழந்து வேறு கடைக்கு மாறிவிடுகிறார்;

  • ஊழியர்களுக்கு குறித்த நேரத்தில் சம்பள உயர்வு, பதவிஉயர்வு அளித்து அவர்களின் நம்பிக்கையை தக்கவைப்பதில்லை. அடிக்கடியான ஊழியர் சுழற்சியில் நிறுவனத்தின் வளர்ச்சி பாதிக்கிறது;

  • குடும்பத்தினருக்கு போதிய நேரம் ஒதுக்காமல், காக்கவைத்து வெறுப்பை சம்பாதிக்கின்றனர்;

  • உறவுகள் & நண்பர்களிடம் சொன்ன சொல்லை குறித்த நேரத்தில் காப்பாற்றாமல், எல்லாவற்றிற்கும் காக்கவைத்து அவர்களின் நம்பிக்கையை இழக்கின்றனர்;

  • நம்பி வாக்களித்த மக்களின் குறைதீர்ப்பதற்கான வழிகளை கவனிக்காமல், அவர்களை தொடர்ந்து காக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் அடுத்த முறை தேர்தலில் தோற்கிறார்கள்;

வியாபாரத்தில், உங்களோடு வர்த்தகம் புரிபவர்கள் சில மணித்துளிகள் மட்டுமே காத்திருப்பார்கள். காலம் செல்லச்செல்ல, அடுத்தடுத்த கடைகளுக்கு நகர்ந்து விடுவார்கள். வியாபாரத்தைத் தாண்டி, உறவுகளுக்குள்ளும், நட்பிற்குள்ளும் இந்த காத்திருக்க வைக்கும் பழக்கம், அவர்களின் நம்பிக்கையை சிதைத்து தூரப்படுத்தி விடுகிறது.


காத்திருக்க வைப்பது தேவையற்றதென்றாலும், சில சமயங்களில் அந்த காத்திருப்பு சில நேர்மறை ஆதாயங்களை கொடுக்கக்கூடும்;

  • உங்கள் பிள்ளைகள் கேட்டவுடன் பொருட்களை வாங்கித்தராமல், சற்று காத்திருக்க வைப்பது அவர்களின் பொறுமையை வளர்க்க உதவும்;

  • பிரச்சனைகளுக்கான தீர்வுகள் உங்களுக்கு தெரிந்திருந்தாலும், உங்கள் ஊழியர்களே ஆராய்ந்து கண்டுபிடிக்கட்டும் என்று விடுவது, அவர்களின் திறமையை வளர்க்க உதவும்;

  • சில பொருட்கள், சில சேவைகள் நீண்ட காத்திருப்பிற்கு பின்னர் கிடைக்கும் போது, அதன் உண்மையான பலனை உணர அதிக வாய்ப்பாகிறது. உடனடியாக வெற்றியும், மகிழ்ச்சியும் கிடைத்து விட்டால், அதன் அருமை அவ்வளவாக நமக்கு தெரியாமலே போய்விடும்;

காத்திருப்பு யாருக்காக, எதற்காக என்பதைப் பொருத்து நேர்மறை-எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். சூழ்நிலை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஒரு தனிமனிதனாக, உங்களை நம்பியவர்களை எப்போதும் காக்க வைக்க வேண்டாம். எவ்வளவிற்கு எவ்வளவு நீங்கள் காக்க வைக்கிறீர்களோ, அவ்வளவிற்கு அவ்வளவு உங்கள் மீதான நம்பிக்கையின் அளவு குறைய வாய்ப்பாகும்.


வாடிக்கையாளரை, ஊழியரை, அரசாங்கத்தை

குடும்பத்தினரை, உறவினரை, நண்பர்களை

பெற்றவரை, கொடுத்தவரை என்று யாராக இருந்தாலும்

உங்கள் முக்கியத்துவத்திற்காக காக்க வைக்காதீர்கள்!


உங்களைக் காண வந்தவர்களை காக்கவைப்பதில் என்ன பயன்!

பார்க்க வேண்டுமென்றால் கூடியவிரைவில் பார்த்தனுப்புங்கள்;

வேண்டாமென்றால் முடியாதென்று கூறியனுப்புங்கள்;

காக்கவைப்பது ஆனவத்தின் அடையாளம்;

காக்கவைப்பது அதிகார வர்கத்தின் கொடூரம்;


காக்கவைக்காமல், உங்களால் முடிந்ததை செய்தனுப்பினால்

நம்பிக்கை வளர்ந்து, இடைவெளி குறையும்;

வியாபாரமோ, குடும்பமோ, உறவுகளோ

நம்பிக்கை வளர்ந்து இடைவெளி குறைந்தால்

வாழ்க்கை அர்த்தமுடையதாகவும், பயனுடையதாகவும் அமையுமே!



- [ம.சு.கு 02.04.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page