top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-163 - நிறைய பயனம் செய்யுங்கள்!"

Updated: Mar 22, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-163

நிறைய பயனம் செய்யுங்கள்!


  • விபத்தில் தன் காலை இழந்த ஒரு செல்வந்தரின் பிள்ளை, ஏனோ மனம் ஒடிந்து வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தார். அந்த செல்வந்தரின் ஒரே பிள்ளை என்பதால் குடும்பமே கதிகலங்கி நின்றது. ஆரம்பத்தில் ஓரிரு மருந்துகளை எடுத்துக்கொள்ளச் சொன்ன மருத்துவர்கள், பின் மருந்துகளை தவிர்த்து வெளிப்பிரயானத்தை கட்டாயப்படுத்தினர். அன்றிலிருந்து கிட்டதட்ட மூன்று மாதங்களில் 2 நாடுகளுக்கு எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல், கையில் குறைவான காசை வைத்துக்கொண்டு எளிமையாக பயனித்தார்கள். அந்த பயனத்திற்கு பின்னால், அந்த பிள்ளை முற்றிலும் மாறியிருந்தால். சிறிது காலத்தேலேயே தன் தந்தையின் வியாபாரத்தை கையிலெடுத்து பெரிய அளவில் கோலோச்சினார். பயனம் அப்படி என்ன மாற்றத்தை அவரில் ஏற்படுத்தியிருக்கும்?

  • பள்ளியில் சிறுபிள்ளைகளை அவ்வப்போது அந்தந்த ஊரில் இருக்கும் சில புராதண சின்னங்களை காண, விலங்கியல்/தாவரவியல் பூங்காக்களை காண அழைத்து செல்கின்றனர். என்னதான் புத்தகங்களில் சிங்கத்தையும், மானையும் கண்டாலும், குழந்தைகளுக்கு நேரில் பார்த்தறியும் பூரிப்பு அளவற்றது. புத்தகங்களில் வாசிப்பதற்கும், நேரில் காண்பதற்கும் என்ன பெரிய வித்தாயசம்? தாஜ்மகாலை புத்தகத்தில் பார்த்ததற்கும், நேரில் சென்ற பார்ப்பதற்கும் அப்படி என்ன வேறுபாட்டை உணர்வீர்கள்?

பெரிய திட்டமிடல் இல்லாமல் பயனத்தில் இறங்கியபோது, ஒவ்வொரு நாளும் உண்ணும் உணவு, தங்கும் இடம், பயனிக்கும் வாகனம் என்று எல்லாமே தங்கள் கையில் இருக்கும் சொற்ப பணத்தில் செய்துமுடிக்க வேண்டிய கட்டாயத்தில், தங்களின் செல்வச் செழிப்பை மறந்து யதார்த்தத்தை கையிலெடுத்தனர். அந்தப் பயனம் புதிய மக்களை [குறிப்பாய் நடுத்தர வர்க்கத்தை], புதிய உணவு வகைகளை [குறிப்பாய் மக்களின் அன்றாட எளிமையான, விலை மலிவான உணவு வகைகளை], எளிமையான வாழ்க்கை முறையை உணர்த்தியது. ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கி பழக்கப்பட்டவர்களுக்கு, மூன்று மாதகால எளிமையான பயனம் முற்றிலும் புதிய அனுபவமாய் இருந்தது. வாழ்க்கை குறித்த அந்த பிள்ளையின் கண்ணோட்டமும் முற்றிலுமாய் மாறியது. ஒரு கால் இழப்பென்பது வாழ்க்கையின் முடிவல்ல என்பதை நன்றாய் உணர்ந்தவருக்கு, பின் எதுவுமே தடையாய் தெரியவில்லை!


குழந்தைகள் புத்தகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் கண்டதை, நேரில் காண்பதில் அடையும் மகிழ்ச்சி எல்லையற்றது. கோவிலில் யானையை பார்ப்பது, கடற்கறையில் குதிரை சவாரி செய்வதென்று நேரில் பார்க்கும் போது அலாதியான மகிழ்ச்சி. குழந்தைகள் மட்டுமல்லாது, பெரியவர்களும் அவர்கள் காணவிரும்பிய ஒன்றை நேரில் சென்று பார்க்கும்போது மகிழ்ச்சியும், மனநிறைவையும் பெருகின்றனர். குளிரை அனுபவித்து உணர ஊட்டியையும், காஷ்மீரையும் புத்தகத்தில் படிப்பதில் என்னபயன். பயனம் மேற்கொண்டு இரண்டுநாள் தங்கினால் தான், மலைகளின் அழகும், குளிரின் அளவும் கண்டுணர முடியும்.


இருக்கின்ற சிறிய கிணற்றை விட்டு வெளியே வந்தால் தான், தவளைக்கு உலகம் எவ்வளவு பெரிதென்று தெரியும். கிணற்றைவிட கடல் எவ்வளவு விசாலாமானதென்று தெரியும். அந்த கிணற்றிற்குள்ளேயே இருந்துகொண்டு, தான் இருக்கும் இடம்தான் பெரிதென்று வாதிடுவதானால், வெறுமனே வாதிட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். உலகத்தை கண்டவர்கள், அதை முட்டாள் தனமான பேச்சென்று பெரிதாய் பொருட்படுத்தாமல் நகர்ந்து சென்றுவிடுவார்கள்.


உங்கள் ஊரை விட்டு வெளி மாநிலங்களுக்குச் சென்றால், அங்குள்ள மக்களின், மொழி, கலாச்சாரம், உணவுக் பழக்கவழக்கங்கள், மரியாதை, அறிவியல் வளர்ச்சி என்று எல்லையில்லாமல் புதியவற்றை தெரிந்து கொள்ள முடியும். ஒருவேளை உங்கள் ஊர்/நாடு மிகவும் முன்னேறியதாக இருந்தாலும், பின்தங்கிய நாடுகளுக்கு செல்லும்போது தான், நீங்கள் அனுபவிக்கும் செல்வச்செழிப்பிற்கு நன்றிபாராட்ட தோன்றும்.


ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு இனமக்களும், ஒவ்வொரு மொழியும் உங்களுக்கு எண்ணற்றவற்றை கற்றுக்கொடுக்கும் அறிவுப் பெட்டகத்தை தன்னுள் அடக்கியுள்ளது. அதை அறிந்து, உரிய வகையில் கற்றுணர்வது உங்கள் கையில் உள்ளது. இங்கு யாரும் வந்து “இது உனக்கு சிறந்ததென்று” வழிகாட்டப் போவதில்லை. உங்களுக்கானதை, நீங்களேதான் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும்.


எது புதியது? எது உங்களுக்கு ஏற்றது? என்பதை முயற்சித்துப் பார்த்தால்தான் தெரியும். முயற்சிப்பதற்குமுன், சந்தையில் புதியவைகள் என்னென்ன இருக்கிறதென்பது நமக்கு தெரியவேண்டும். புதியவைகளை தெரிந்துகொள்ள ஒன்று அவை நம்மை நோக்கி வரவேண்டும் [அல்லது] புதியவற்றை நோக்கி நாம் பயனிக்க வேண்டும். புதியவைகள் தானாக நம்மிடம் வர வெகுகாலமாகும். சீக்கிரத்தில் புதுமைகள் வேண்டுமானால், அவற்றை நோக்கி நாம்தான் ஓடவேண்டும். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் புதிதாய் வருவது, இந்தியாவிற்கு வர 5-10 வருடங்கள் ஆனது. ஆனால், தொலைத்தொடர்பும், பயனமும் அசுரவேகத்தில் வளர்ந்துவிட்டது. அமெரிக்காவில் வெளியிடப்படுவது, அடுத்தநாள் விமானத்தில் இந்தியாவில் வந்திரங்கி விடுகிறது.


உங்கள் குறிக்கோளை நோக்கி கடுமையாக உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும் என்பதற்காக, வெளியுலகம் செல்லாமல், ஒரே இடத்தில் ஒன்றையே செய்துகொண்டிருந்தால், உலகில் வருகின்ற புதுமைகள் எதுவும் தெரியாமல் போகும். உங்கள் இலட்சியத்தை நோக்கிய பயனத்தில், புதிய ஊர்களை, நாடுகளை காண்பதும், கலாச்சாரங்களை தெரிந்து கொள்வதும் கட்டாயம் ஒரு அங்கமாக இருக்கட்டும். உலகமயமாகி வரும் சந்தை முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய அவசர உலகில், பரந்துபட்ட அறிவு உங்கள் வெற்றிக்கு எளிதான வழிகாட்டும். புதிய இடம், புதிய கலாச்சாரம், புதிய பழக்கவழக்கம், உங்கள் அறிவை விசாலப்படுத்தி புதிய கண்ணோட்டத்திற்கு வழிவகுக்கும்.


வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் பயனத்தை மேற்கொள்ளுங்கள். புதிய மனிதர்களில் உங்களுக்கு புதிய ஆசான்கள் கிடைக்கலாம். புதிய சிந்தனைகள் பிறக்கலாம். எல்லையற்ற உலகில், எல்லைக்குட்பட்ட நம் வாழ்க்கைப் பயனத்தை அர்த்தமுடையதாக்க, எல்லையில்லாமல் பயனம் செய்து வாழ்வை இரசிப்போம்;அண்டத்தில் உலகம் மிகச் சிறியது;

உலகத்தில் நம் தேசம் மிகச்சிறியது;

தேசத்தில் நம் நகரம் மிகச் சிறியது;

நகரத்தில் நம் வீடு மிகச்சிறியது;


சிறிய வீட்டில், ஊரில் இருந்துகொண்டு

கிணற்றுத் தவளையாய் வாழ்வதில் பயனென்ன இருக்கிறது?

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்

பெட்டியைக்கட்டிக்கொண்டு பயனத்தை துவக்கிடுங்கள்;


பயனம் புதிய மனிதர்களையும்,

புதிய கண்ணோட்டத்தையும் அளித்து

உங்கள் பார்வையை விசாலப்படுத்தி

புதிய முயற்சிகளுக்கு வழிவகுக்கும்;


கொலம்பஸைப் போல கண்டுபிடிக்க இனி நாடுகள் இல்லை – ஆனால்

கண்டுணர ஆயிரமாயிரம் கலாச்சாரங்கள் உண்டு;


ஆக்கிரமித்து அடிமைப்படுத்த தேசங்கள் இல்லை – ஆனால்

கற்றுணர நிறைய மொழிகளும் அறிவுக்களஞ்சியங்களும் உண்டு;


- [ம.சு.கு 21.03.2023]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page