top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-161 - ஏதாவதொன்றை செய்து கொண்டேயிருங்கள்!"

Updated: Mar 20, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-161

ஏதாவதொன்றை செய்த கொண்டேயிருக்கவேண்டும்;


 • ஒவ்வொரு வார விடுமுறையிலும், சிலபல காரியங்களை செய்துமுடித்துவிட வேண்டுமென்று எல்லோரும் திட்டமிடுவது இயல்பு. ஆனால் நடைமுறையில், விடுமுறை தினங்களில், சோம்பேறித்தனம் ஆக்கிரமித்து, செய்ய எண்ணியதில் ஓரிரண்டைக்கூட செய்துமுடிப்பதில்லை. இந்த சூழ்நிலை நான் உட்பட எல்லோருக்கும் உருவாகும் இயல்பான ஒன்று. செய்வதற்கு நிறைய இருந்தும், சிறிது நேரம் கழித்து செய்யலாம் என்று தள்ளிப்போட்டு, உறக்கத்திலோ அல்லது தொலைக்காட்சி முன்னரோ நேரத்தை வீணடித்துவிடுவது பலருக்கு வழக்கமாகி விடுகிறது. அடுத்தநாள் காலையில் நேற்று இதை செய்திருக்க வேண்டுமென்று உங்களை நீங்களே திட்டிக்கொண்டு, அவசரத்தில் ஓடவேண்டிய சூழல்.

 • எழுவது வயதை கடந்த நபர் ஒருவர், செய்வதற்கு ஒன்றுமில்லை, நேரம் தன்னை கொன்று கொண்டிருக்கிறதென்று தன் சகநண்பர்களிடம் வேதனைப்பட்டார். வீட்டில் தன் பேரப்பிள்ளைகள் இருந்தாலும், ஏனோ அவரால் அவர்களுடன் கலந்திருக்க முடியவில்லை. எல்லோரையும் விட்டு விலகியே இருந்ததால், வீட்டிலும் அவரையாரும் பெரிதாய் பொருட்படுத்தவில்லை; ஒன்றும் செய்யாமல், நேரத்தை கொள்வதென்பது மிகக் கொடுமையான விடயம். அந்த சூழ்நிலையில் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி ஆறு மாதத்தில் படுத்த படுக்கையாகி உயிர்துறந்தார்.

நிறைய காரியங்களை செய்துமுடிக்கவேண்டுமென்று எண்ணுகிறோம். அவற்றை எப்படி செய்யவேண்டு என்று சிலசமயம் விளக்கமாக திட்டமிடுகிறோம். ஆனால் விடுமுறைவந்தால், காலை எழுவதில் தாமதம் துவங்குகிறது. பின்னர் தொலைக்காட்சியில் பொழுது கழிகிறது. நினைத்தவைகளை செய்யாமலே அன்றைய தினம் நகர்கிறது. இந்த தொலைக்காட்சி உட்பட உங்களை சுற்றியுள்ள வீண்நேரம் கடத்திகளை சற்று கவனமாக புறந்தள்ளி, செய்ய திட்டமிட்டவைகளை ஒரு ஐந்து நிமிடம் துவக்கிவிடுங்கள். நீங்கள் துவக்கிவிட்டால், அது தானாக உங்களை உள்ளிழுத்து செய்து முடிக்க வழிவகுத்துவிடும்; எப்போதும் நீங்கள் வெல்கிறீர்களா? அல்லது உங்களை சோம்பேறித்தனம் வெல்கிறதா? என்பது தான் தொடர் போட்டி. நீங்கள் வெல்ல ஆசைப்பட்டால், அவசர காரியங்கள் ஏதுமில்லை என்றாலும், பயனுள்ள ஏதாவதொன்றை சீக்கிரத்தில் துவக்கிவிடுங்கள். ஏதாவதொன்றை செய்துகொண்டிருந்தால், தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் வளர வாய்ப்பாகும்.


நம்மைச் சுற்றி எண்ணற்ற வயதானவர்களின் நிலை இப்படி செய்வதற்கொன்றுமில்லை என்று இருக்கிறது. அதனால், சில வயதான பாட்டிமார்கள் தேவையற்ற விவாதங்களில் இறங்கி வம்புகளை வரவழைப்பதும் நடக்கிறது. அப்படி நிறைய வயதானவர்கள் இருப்பதால் தான், தொலைக்காட்சியில் பெரிய தொடர் நாடகங்கள் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. தன்காலம் முடிந்துவிட்டதென்று அவர்கள் நினைத்துவிடுவதுதான் அவர்களின் இந்த நிலைக்கு காரணம். இருக்கும் காலம்வரை தன்னால் இயன்றதை, புதியவைகளை சாதித்துக் கொண்டிருப்பேன் என்று எண்ணுபவர்களுக்கு ஏதேனுமொன்று செய்வதற்கு இருந்துகொண்டே இருக்கிறது.


ஒன்றும் செய்யாமல் இருந்தால் என்ன ஆகிறது?

 • எல்லாவற்றிற்கும் முதலாக, உங்கள் உடல் சோம்பேறித்தனத்தில் ஊறித்திளைக்க பழகுகிறது; அதை பின்னர் கட்டுப்படுத்துவது கடினம்;

 • உங்கள் தன்னம்பிக்கை படிப்படியாக குறையும். உங்களால் எதையும் செய்ய முடியாத நிலைக்கு சீக்கிரத்தில் தள்ளப்படுவீர்கள்;

 • எதிர்மறை எண்ணங்கள் வளர்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம்;

 • உங்கள் வளர்ச்சிக்கான எண்ணற்ற வாய்ப்புக்களை தவறவிட நேரும்.

 • உங்கள் உடல் நலமும், மனநலமும் படிப்படியாக குன்றும்;

உங்களை எப்போதும் ஆக்கப்பூர்வமான இயக்கத்தில் வைத்திருக்க, என்ன செய்யலாம்?

 • முதலாவது முயற்சியாக, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, அனுதினமும் சிறிது நேரம் வாசிக்கும் பழக்கத்தை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள்.

 • உங்கள் இலட்சியம் / இலக்கு என்ன என்கிற கேள்விக்கு உங்ளிடம் பதில் இருந்தால், பெரும்பாலும் செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற சூழ்நிலை வராது. அப்படி வந்தால், உங்கள் இலக்குகளை மறுபரிசீலனை செய்யுங்கள்;

 • உங்கள் இலக்குகளை அடைய என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்ற முழுமையான திட்டத்தை எழுதுங்கள். அதில் செய்யவேண்டிய ஒவ்வொரு சிறுசெயலையும் பட்டியலிடுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம், அவசர-அவசியங்களுக்கு ஏற்ப, ஏதாவதொன்றை செய்து முடியுங்கள். இன்றைக்கு அவசரமில்லாவிட்டாலும், இருக்கின்ற நேரத்தில் அதைசெய்தால், நாளை வேறு வேலைகள் செய்ய நேரம் இருக்கும்;

 • எதையும் ஒரேயடியாக செய்து முடிக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. எதைசெய்வதற்கும் ஒரு முறைமையை ஏற்படுத்தி அனுதினமும் தவறாமல் சிறிதளவு செய்துவந்தாலே போதும், உங்கள் இலக்குகளை கட்டாயம் அடைந்திடலாம்;

 • ஏதாவது மன உளைச்சலின் காரணமாக எதையும் செய்ய முடியாத நிலை நீடித்தால், உரிய மனநல ஆலோசகரை உடனடியாக சந்தித்து உதவி பெறுங்கள்;

இன்றைய வேலையை நாளை செய்யலாம் என்று தள்ளிப்போடாமல் இருப்பதும், உங்கள் இலக்கை நோக்கிய பயனத்தில் என்னவெல்லாம் முன்னேறப்பாடுகளை செய்துவைக்கலாம் என்கிற திட்டமும் உங்களை எப்போதும் இயக்கத்திலேயே வைத்திருக்கும்;


செய்வதற்கு ஒன்றுமில்லை என்று சொல்வதற்காண

சூழ்நிலை எப்போதும் யாருக்குமே இல்லை;

உலகில் கோடான கோடி செயல்கள் நடந்துகொண்டிருக்க

அவற்றில் ஒன்று உங்களுக்கு முன்னேரே பணிக்கப்பட்டுள்ளது;


எதைச் செய்தால் முன்னேறலாம்

எதைச் செய்தால் பெயர்கெட்டுவிடும்

என்பதை அறிந்து நாம் செயலாற்றினால்

வெற்றிக்கனியை எளிதில் பரிக்கலாம்;- [ம.சு.கு 19.03.2023]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page