top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-155 - என்ன வேண்டுமென்பதில் தெளிவிருக்கிறதா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-155

என்ன வேண்டுமென்பதில் தெளிவிருக்கிறதா?


  • இன்றைய போக்குவரத்து நெரிசல் நிறைந்த அன்றாட பயனமுறையில், எல்லோரும் வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கினர். கொரோனா பெருந்தொற்று அதை அவர்களுக்கு சாத்தியப் படுத்தியது. ஆனால் மூன்றே மாதத்தில், எப்போது அலுவலகம் திறப்பார்கள் என்று எதிர்பார்க்கத் துவங்கிவிட்டனர்.

  • ஒரு நல்ல இடம் வாங்கி வீடுகட்ட நண்பர் ஆசைப்பட்டார். அவரது வருமானத்திற்கு ஏற்ற அளவில் மட்டுமே வங்கி கடன் கொடுத்தது. தன் கனவு விட்டிற்கு பணம் போதாததால், தன் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லோரிடமும் சிறுசிறு தொகையை கடனாக பெற்று வீட்டை சிறப்பாக கட்டி முடித்தார். சுற்றமும் நட்பும் சூழ பெரும் மகிழ்ச்சியுடன் புதுமனை புகுவிழா நடத்தி முடித்தார். ஆனால் மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையில் அந்த வீடு வங்கியால் ஏலம் விடப்பட்டது. பழைய படி தன் வாடகைவீட்டில் வாழ்க்கையை கடனோடு கழிக்கிறார்;

பலரின் வீட்டுச் சூழல் பணிக்கு ஒத்துவரவில்லை. மேலும் நண்பர்கள், சக ஊழியர்களுடனான தொடர்பு பெரிதாய் பாதித்தது. அலுவலகத்தில் பலருடன் சேர்ந்து பணிபுரிவதன் மூலம் நிறைய தெரிந்துகொள்ள வாய்ப்பிருந்தது. வீட்டிலிருந்து பணி புரியும் போது, இவையனைத்தையும் இழப்பதாக பலர் கருதினர். வீட்டில் இருந்து வேலை செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய பலர், தங்களின் எதிர்பார்ப்பை மாற்றிக் கொண்டனர். ஆனால், ஒருசிலருக்கு வீட்டிலிருந்து பணிபுரிவது இன்றும் சிறந்த வரப்பிரசாதமாக இருக்கிறது!


பெரிய வீடுகட்ட ஆசைப்பட்டு, தன் சக்திக்கு மீறி பணத்தை புரட்டினார். அவர் எதிர்பார்த்தளவு வியாபார விருத்தி அடையாததால், கடனை திருப்பிச் செலுத்து திண்டாடினார். வாங்கிய கடனை திருப்பித் தராததால் உறவினர்கள், நண்பர்களின் முகத்தை காண முடியாமல் விலகி ஓடினார். உறவுகள் பொருத்தாலும், வங்கி பொருத்திருக்கவில்லை. அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஏலம் விட்டு கடனை வசூலித்தது. இப்போது உறவுகள், நண்பர்களின் கடனை அடைக்க தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். தனக்கு இவ்வளவு பெரிய வீடு வேண்டுமென்று ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் தன் வருவாயின் அளவிற்கு அது ஏற்புடையதில்லை என்று தெரிந்தும், தேவையில்லாமல் அகலக்கால் வைத்து தன் சேமிப்பையெல்லாம் தொலைத்துவிட்டு, இன்று வாடகை வீட்டில் கடனாளியாய் குடும்பமே கஷ்டப்படுகிறது.


சிலசமயம் ஆசைப்பட்டு அடைந்தவைகள்

  • சீக்கிரத்தில் திகட்டிவிடுகிறது;

  • தக்கவைத்துக்கொள்ள முடியாமல் கைநழுவுகிறது;

  • ஏன் அடைந்தோம் என்று வேதனைப்பட வைக்கிறது;

நமக்கு இவ்வளவு பணம், இந்த பதவி, இந்த சொத்து, இந்த துணைவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கற்பனையில், அதை அடைவதற்கு ஆசைப்படுகிறோம். அந்த ஆசைகளை நிறைவேற்ற இரவுபகல் பாராது கடினமாக உழைத்து அவற்றை அடைகிறோம். ஆனால், ஆசைப்பட்ட அப்பொருளை, அவ்விடத்தை அடைந்ததும் வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்ததா? என்று கேட்டால் என்ன பதில்கள் வருகிறது;

  • உயர்பதவி கிடைத்தது மகிழ்ச்சயளித்தது. ஆனால் அதனுடன் வந்த அதீத பொருப்புக்கள் பெரும் சுமையாகிவிட்டது. இப்போதெல்லாம் என் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடிவதில்லை! இல்லத்தையும், இல்லாலையும், இன்முக பிள்ளைச் செல்வங்களையும் படிப்படியாய் இழக்கிறேன்!

  • நிறைய செல்வம் சேர்த்துவிட்டேன். ஆனால் யாரை நம்பியும் பணத்தை முதலீடு செய்ய பயமாக இருக்கிறது. எல்லோரும் தங்களின் கற்பனை திட்டங்களை கூறி என்னிடம் பணத்தைக் கரக்க முயற்சிக்கின்றனர். குறைவான செல்வம் இருந்துபோது இருந்த நிம்மதி இப்போது இல்லை!

  • இவரை துணையாக அடைந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்குமென்று எண்ணியிருந்தேன். ஆனால் அவருடனான வாழ்க்கை எதிர்பாரத்தவிதத்தில் இல்லை. தினம்தினம் சண்டை சச்சரவுகளுடன் வாழ்க்கை நரகமாக உள்ளது!

  • இந்த படிப்பை முடித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து படித்தேன். ஆனால், சந்தை நிலைமை மாறிவிட்டது. இந்த வேலைக்கான சந்தை தேவை முற்றிலுமாய் குறைந்துவிட்டது. எதிர்பார்த்த வேலைகிடைக்காமல், கிடைத்த சிறு வேலையில் திண்டாடுகிறேன்!

  • இந்த பொம்மை கிடைத்தால் விளையாட நன்றாக இருக்கும் என்று குழந்தை ஆசைப்பட்டது. அது கிடைத்ததும் பெரும் மகிழ்ச்சி அடைந்தது. ஆனால் 2-3 நாட்களில் அந்த பொம்மை கசந்துவிட்டது. இப்போது வீட்டின் மூலையில் கேட்பாரற்று கிடக்கிறது!

இந்த எதிர்பார்ப்பும், வாழ்வின் நிதர்சனமுமான பட்டியல் நீண்டுகொண்டே போகும். ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான எதிர்பார்ப்புக்கள். அவற்றை அடைந்ததும் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் எவ்வளவு காலம் அது நீடிக்கிறதென்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி? எப்படி குழந்தைகளாக இருக்கும்போது பெரியவர்களாக ஆசைப்படும் நாம், பெரியவர்களாகி கஷ்டப்படும்போது, குழந்தைப்பருவமே நன்றாக இருந்ததென்று கூறுவது போல, நிறைய எதிர்பார்ப்புக்களை, அதன் சாதக-பாதகங்கள், இன்ப-துன்பங்கள் குறித்த முழுமையான புரிதல் இல்லாமல் வளர்த்துக்கொள்கிறோம். கஷ்டப்பட்டு அவற்றை அடைந்தபின், முந்தைய நிலைமையே பரவாயில்லை என்று ஏங்குகிறோம்.


மற்றவர்களிடம் இருக்கிறதைப்பார்த்து, அதைப்போல வேண்டும் என்று குழந்தை மிட்டாய்க்கு ஆசைப்படுவது போல, எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டு, அதை அடைய கஷ்டப்பட்டு நேரத்தை வீணடிக்காதீர்கள்.

  • உங்களின் தற்போதைய தேவைகள் என்ன? குறுகிய கால தேவைகள் என்ன? நீண்ட கால தேவை என்ன? என்று தெளிவாக பட்டியலிடுங்கள்;

  • உங்கள் தேவைகளின் சாதக-பாதகங்கள், இலாப-நஷ்டங்கள், இன்ப-துன்பங்கள் என்னவாக இருக்கும் என்பதை ஆராய்ந்து பாருங்கள்;

  • எதைப் அடைந்தாலும், ஒருநாள் அது திகட்டிவிடும் என்ற வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.

  • கூடியவரை பொருட்களின் மீதான பற்றுதலை குறைத்து, அதன் பயன்பாடுகள் மீதுமட்டும் கவனம் செலுத்துங்கள்;

உங்கள் எண்ணங்கள், ஆசைகளுக்கு எல்லையிருக்காது. அவற்றை உங்களால் கட்டுப்படுத்தவும் முடியாது. அதேசமயம் அவற்றில் உங்களின் அத்தியாவசியத் தேவைகள் என்ன என்பதை தெளிவாக ஆராய்ந்து, அவற்றின் மீது போதுமான அளவு கவனம்செலுத்தி, அவற்றை அடைந்து அதன் பயனை அனுபவியுங்கள். பொருட்களின் மீதான பற்றுதலை குறைத்து, தேவைகள், பயன்கள் மீதுமட்டும் கவனம் செலுத்தி வாழ்க்கைப் பயனத்தை அர்த்தமுடையதாக்குங்கள்!!


உங்களுக்கு என்ன தேவையென்பதில்

வீண் குழப்பம் வேண்டாம்!

தேவைகள் மாறிக்கொண்டே இருக்கும்;

இன்று கிடைத்தது நாளை திகட்டிவிடும்;

நாளை புதியவற்றிற்காக மனம் ஏங்கும்!


மனித மனம் குரங்கென்பதை எல்லோரும் அறிவோம்;

உங்கள் தேவைகளை சரியாக வகைப்படுத்துங்கள்;

சிற்றின்பங்களை அளிக்கும் தேவைகளை குறைத்து

நீண்ட காலம் பயனளிக்கும் விடயங்களுக்கு

அதிகநேரம் செலவிட்டு பெற முயற்சி செய்யுங்கள்;


கண்கெட்டு பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல

தேவைகள் குறித்த புரிதல் பலருக்கு முதிர்ந்தபின் வருகிறது;

நீங்கள் புத்திசாலியாய் இருந்தால்

உங்கள் தேவைகள் குறித்த புரிதலை மேம்படுத்தி

அளவோடு ஆசைப்பட்டு

அறிவோடு செயல்பட்டு

வாழ்வை மகிழ்ச்சிகரமானதாக வழிநடத்துங்கள்!


- [ம.சு.கு 13.03.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page