top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-146 - நேரம் வீணாவது தெரிவதில்லை!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-146

நேரம் வீணாவது தெரிவதில்லை!


 • பொதுவாக நிறைய ஆண்கள், காலையிலும்-மாலையிலும் தொலைக்காட்சியில் செய்திகளை கேட்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அத்துடன் ஒரு சில விவாதங்களையும் கேட்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள், கேட்ட செய்தியையே அன்றைய தினம், மறுதினம் என்று குறைந்தது 3-4 முறை கேட்கிறார்கள். திரும்பத்திரும்ப அதே செய்தியை கேட்பதால் என்ன மாறிவிடப்போகிறது? நாட்டு நடப்புக்களை தெரிந்து வைத்துக்கொள்வதற்காக கேட்கிறேன் என்று இதற்கொரு காரணத்தையும் சொல்வார்கள். ஆனால் கேட்டதையே பலமுறைதிரும்ப கேட்டு நேரத்தை வீணடிக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள்;

 • கைபேசி செயலியில் ஏதாவது ஒரு தகவல் நண்பரிடம் இருந்து வந்திருக்கும். அந்த தகவலை பார்க்க ஆரம்பித்து, அப்படியே சமூக வளைதளங்களுக்குள் பிரவேசித்து, ஒவ்வொரு படங்கள், தகவல்கள், என்று தொடர்ந்து பார்க்க ஆரம்பிப்பார்கள். பின்னர் அது 10 நிமிடத்தில் முடிகிறதா? இல்லை ஒரு மணிநேரம் எடுக்கிறதா? என்பது தெரியாமல் காலத்தை அதனுள் மூழ்கி வீண்டிப்பது இன்று சர்வசாதாரணமாக இருக்கிறது. இதில் உச்சம் எண்ணவென்றால், இப்படி செயலிகளில் மூழ்கி நேரம் செலவாகிறதென்று பாதிபேருக்கு நன்றாக தெரிகிறது – ஆனால் திருத்திக்கொள்வதில்லை. மீதி பாதிபேருக்கு இந்த நேரம் வீணாவது குறித்த புரிதல் இன்னும் வரவில்லை; என்ன செய்வது?

கேட்ட செய்திகளையே திரும்பத்திரும்ப அலசிப்பார்ப்பதில் நேரம் வீணாவது ஒருபுறம் இருக்க, அதேபோல நிகழ்தவற்றை பலரிடம் பலமுறை பேசுவது, என்ன வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாமல் வெறுமனே கனிப்பொறியிலும், தொலைக்காட்சியிலும் ஏதாவதொன்றை தேடுவதும் / திறந்து-மூடுவதும் / மாற்றுவதுமாக நேரத்தை வீணடிப்பது, தேவையே இல்லாத காகிதத்தை எடுத்தக் கொண்டு ஊழியர்களை அழைத்து விசாரித்து நேரம் கடத்துவது...போன்ற எண்ணற்ற செயல்களை எதற்காக செய்கிறோம் என்கின்ற குறிக்கோள் இல்லாமல் கை சும்மாயிருக்கிறதே என்ற எதையாவது செய்கிறார்கள். நேற்று எத்தனை நேரத்தை இப்படி நீங்கள் வீண்டித்தீர்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள்;


கைபேசி கையில் வந்து சமூக வளைதளம் திறந்துவிட்டால், யாருடன் என்ன பேசுகிறோம் என்ற குறிக்கோளே இல்லாமல், “ஹாய்”-ல் துவங்கி, சாப்பிட்டாச்சா, என்ன சாப்பாடு, என்ன படம், என்ன துணி, என்ன கொண்டாட்டம், அப்புறம் – இப்புறம் – எப்புறம் என்று நேற்று கேட்டதையே இன்றும் கேட்டு பலபேருடன் தகவல் பரிமாறி நேரத்தை கடத்துகிறது இன்றைய இளைய தலைமுறை. நண்பர்களுடன் தொடர்பில் இருக்க, தொலைபேசியில் ஒருமுறை அழைத்து பேசினால் முடிந்துவிடும். ஆனால் அதை சமூகவளைதளத்தில் மணிக்கணக்கில் செய்கிறார்கள். இதனால் அடையும் பயன் என்ன என்று கேட்டால், அவர்களிடம் பதில் இல்லை.


மேற்சொன்ன சிறுய உதாரணங்களால் எந்த மாற்றமும் நம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பது உங்களுக்கும், எனக்கும் தெரிந்ததுதான். நீங்களாக உங்கள் நேரத்தின் பயன்பாட்டை அலசி சரிசெய்யாமல் எந்தவொரு மாற்றமும் நிகழ்ந்துவிடாது. அன்றாட வாழ்வில் நானும், நீங்களும் எங்கெல்லாம் தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கிறோம்?

 • அலுவலகத்தில் நிர்வாகிகளின் கூட்டத்தை அழைத்து, ஏதாவதொரு விடயத்தை முடிவில்லாமல் விவாதிப்பது;

 • தேவையே இல்லாத மின்னஞ்சலுக்கு 10 நிமிடம் செலவிட்டு பதிலளிப்பது;

 • ஊழியரிடம் கொடுத்து செய்ய வேண்டிய வேலையை, தானே உட்கார்ந்து மணிக்கணக்கில் செய்து நேரத்தை போக்குவது;

 • இரைச்சாலான சத்தங்களைத் தவிர்க்காமல் அப்படியே வேலை செய்யும் போது, தேவையற்ற கவனச்சிதறல்களால் 10 நிமிட வேலையை 2 மணி நேரம் செய்வது;

 • தன் குறிக்கோளுக்கு சம்மந்தமே இல்லாத வேலையை தேவையில்லாமல் செய்துகொண்டிருப்பது;

 • முடிந்துபோன தேவையற்ற விடயங்களை தொடர்ந்து யோசித்து, கவலைப்பட்டு நேரம் கழிப்பது;

 • பல வேலைகளை ஒரு சேர துவங்கி, இதில் 10 நிமிடம், அதில் 10 நிமிடம் என்று ஒவ்வொன்றிற்கும் தாவி, எதையும் குறித்த நேரத்தில் செய்துமுடிக்காமல் திண்டாடுவது;

 • பத்திரிக்கையில் தேவையற்ற துணுக்குகளையும், கிசுகிசுக்களையும் பற்றி படித்து நேரம் கடத்துவது;

 • களத்தில் விளையாடி ஆரோக்கியமாக இருப்பதற்கு பதிலாக, கணினி, கைபேசியில் விளையாடி நேரத்தை வீண்டித்து கண்ணையும் கெடுத்துக்கொள்வது;

 • ஒரளவிற்கு இருந்தால் போதும் என்கின்ற இடத்தில், சரியாக செய்கிறேன் என்றபேரில் 100% நேர்த்திக்கு தேவையில்லாமல் நேரத்தை வீணடிப்பது;

 • இப்போது செய்ய வேண்டிய அவசியமான வேலையை, பின்னர் செய்யலாம் என்று தள்ளிப்போட்டு விட்டு, அவசரமில்லாத எளிய வேலைகளை வெறுமனே செய்துகொண்டிருப்பது;

இந்த பட்டியல் எல்லையில்லாமல் விரிந்து கொண்டே போகும். உங்களுக்கு, உங்களின் நேரம் எங்கெல்லாம் வீணாகும் என்று எடுத்துக்காட்டுவதற்காக சிலவற்றை மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளேன். உங்களின் பொன்னான நேரத்தை எங்கெல்லாம், எப்படியெல்லாம், எந்த பயனற்ற செயல்களிலெல்லாம் வீணடிக்கிறீர்கள் என்பதை நீங்கள்தான் சுய ஆய்வு செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.


பொதுவாக ஒரு மனிதன், தன்னுடைய ஒரு நாள்பொழுதில் 3-6 மணிநேரத்தை பயனற்ற செயல்களில் செலவிடுவதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. இதில் நீங்கள் 3 மணி நேர எல்லையில் உள்ளீர்களா? 6 மணி நேர எல்லையில் உள்ளீர்களா? அல்லது இடைபட்ட நிலையா? என்பதை நீங்களே அலசிப்பாருங்கள். அதே புள்ளிவிபரம், பெரிய வெற்றியாளர்கள் தங்களின் ஒவ்வொரு நாளிலும் 1 மணி நேரத்திற்கு குறைவாகவே பயனற்ற செயல்களில் வீணடிப்பதாக கூறுகிறது. இப்படி வெற்றியாளர்ளோடு ஒப்பிடும் போது, ஒரு நாளைக்கு 2-5 மணி நேரத்தை தேவையில்லாமல் செலவு செய்துவிட்டு, தனக்கு மட்டும் அதிர்ஷ்டம் இல்லை, வெற்றி கிட்டவில்லை, சமுதாயம் என்னை அங்கீகரிக்கவில்லை என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கும்!!


உங்களுக்கும் எனக்கும்

ஒரு நாளில் இருப்பது 24 மணிநேரம் தான்;

வெற்றியாளர்களுக்கும் அதே நேரம் தான்;


இருக்கின்ற 24 நேரத்தில்

யார் யார் எதை எதை செய்கிறார்கள்

என்பதைப்பொறுத்து – அவரவர்களின்

வெற்றியும் தோல்வியும் நிர்ணயமாகிறது;


தினம் 2 மணி நேர வீணடிப்பை குறைத்து

புத்தகம் படித்தால் - வருடத்திற்கு

குறைந்தது 50 புத்தகம் முடிக்கலாம்;


புதிய திறன்களை கற்றால் – வருடத்திற்கு

இரண்டு கலைகள்/திறன்களில் நிபுணத்துவம் பெறலாம்;


கட்டுரைகள் எடுதினால் – வருடத்திற்கு

ஒரு புத்தகம் வெளியிடலாம்;


தொடர்புவட்டத்தை வளர்த்தால் – வருடத்திற்கு

50-100 புதிய வாடிக்கையாளர் கிடைக்கலாம்;


உங்கள் நேரம் உங்கள் கையில்

எப்போது? என்ன செய்ய வேண்டுமென்று

சீக்கிரமாக யோசித்து முடிவெடுங்கள்!!- [ம.சு.கு 04.03.2023]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page