top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-130 - ஆரோக்கியம் அதிமுக்கியம்!


“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-130

ஆரோக்கியம் அதிமுக்கியம்!


  • நீங்கள் விரும்பியாடும் கால்பந்து விளையாட்டில், மாநில அளவில் விளையாடும் அணிக்கான தகுதித் தேர்வு நாளை நடக்கவிருக்கிறதென்றும், அந்த தகுதித் தேர்வில் உங்களை கலந்துகொள்ளுமாறும் அழைப்பு வருகிறது. உங்கள் வாழ்வின் இலட்சியமான தேசிய கால்பந்தாட்ட அணியில் விளையாடும் கனவு மெய்யாவதற்கான பொன்னான ஆரம்ப வாய்ப்பு இது. இதை நண்பர்களுடன் சேர்ந்து விருந்துண்டு கொண்டாடி மகிழ்கிறீர்கள். போட்டிகான அடுத்த நாள், கடுமையான வயிற்றுவலி ஏற்படுகிறது. முந்தைய தின உணவு செரிக்காததனால் வயிற்றுவலி பிரச்சனை வந்துள்ளது. சற்று கவனக்குறைவினால் உணவை கவனிக்கத்தவறி, தகுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து நிற்கிறீர்கள்!

  • நிறைய உழைத்து செல்வம் சேர்க்குறீர்கள். சொந்த வீடு, தோட்டம், வேலைக்கு ஆட்கள் என்று எல்லாமும் இருக்கிறது. அத்தோடு இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமண் போன்ற எண்ணற் வாழ்வியல் சார்ந்த உடல் உபாதைகளும் வருகின்றன. சேர்த்த செல்வத்தை பேனிக்காப்பதற்கு, மேற்கொண்டு அதைவைத்து முதலீட்டில் பெருக்குவதற்கு ஒருபுறம் நீங்கள் முயற்சித்துக் கொண்டிருக்க, மறுபுறம் தேவையான ஆரோக்கிய பராமறிப்பு வேலைகளை தவிர்த்ததனால் உடல் உபாதைகள் வாழ்வின் அங்கமாகி அன்றாடம் வாழ்க்கையே போராட்டமாகிவிடுகிறது;

அபூர்வமாக கிடைக்கக்கூடிய ஓரிரு வாய்ப்புக்கள் எப்போது வேண்டுமானலும் வரலாம். அந்த வாய்ப்புக்களை கிரகித்து வெற்றிக்கு படிக்கல்லாக மாற்றும் வித்தை உங்கள் கையில்தான். அதேதருணம், கவனக்குறைவின் காரணமாக எண்ணற்ற எளிமையான வாய்ப்புக்களை பலரும் தவறவிட்டுக்கொண்டிருக்கின்றனர். விளையாட்டாகட்டும், கல்வியாகட்டும், வியாபாரமாகட்டும், நமக்கு வாய்ப்பு வரும்போது, அதை முழுமையாக ஏற்றுசெய்ய நம் ஆரோக்கியம் ஒத்துழைக்க வேண்டும். ஆரோக்கியம் பேனாமல், எதையும் நீண்டகாலத்திற்கு உங்களால் தக்க வைத்துக்கொள்ள முடியாது;


எத்தனைதான் செல்வம் சேர்த்தாலும், அத்தோடு இன்று இலவசமாக வாழ்வியல் வியாதிகளும் வந்துவிடுகின்றன. சேர்த்த செல்வங்களை குதூகலமாக அனுபவிக்க ஆரோக்கிய சீர்கேடு ஒருபெரிய தடைக்கல்லாக உருவெடுத்திருக்கிறது;


அடுத்ததாக, ஆரோக்கியம் என்பது உங்கள் உடல் சம்பந்தப்பட்டதோடு நின்றுவிடாமல், உங்கள் மனம், ஆன்மா என்று மனிதனின் உள்ளுக்குள்ளும் எல்லையின்றி பயனிக்கிறது; அன்றாடம் சத்தான உணவை எடுத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், தியானம், யோகம், காலை உடற்பயிற்சி என்று எண்ணற்ற உடல் பராமறிப்பிற்கான பயிற்சியையும் செய்தால், உங்களின் மீதமுள்ள வேலைகள் யாவும் எளிதாக முடிந்துவிடும்;

நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்,


  • உங்களால் வேலையில் நன்கு கவனம் செலுத்தமுடியும். எண்ணற்ற வேலைகளை எளிதாக செய்துமுடிக்க முடியும்;

  • உங்கள் உடலின் ஆற்றலும், சக்தியும் அதிகரிக்கும்;

  • தியானம், யோகம் போன்ற பயிற்சிகளின் மூலம் ஆரோக்கியம் காக்கும் போது, உங்கள் மனமும், சிந்தனைகளும் எளிதாக ஒன்று குவியும்;

  • சீரான உறக்கமும், ஆரோக்கியமும் உங்களின் சிந்தனை தெளிவாக்கி, முடிவெடுக்கும் ஆற்றலை நன்றாக வளர்க்கும்;

  • உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால், உங்களைச் சுற்றி ஆக்கப்பூர்வமான நிகழ்வுகளே நிறைந்திருக்கும்;

  • எத்தனைதான் செல்வம் சேர்த்தாலும், அதை அனுபவிக்க நீங்கள் இருக்கு வேண்டும். நீங்கள் இல்லாவிட்டால், நீங்கள் சேர்த்த செல்வங்கள் எதுவும் உங்கள் குடும்பத்தினருக்கு முழுமைதாராது.

ஒன்றை மறந்துவிடாதீர்கள்!

இந்த சுழலும் உலகத்தில்

உங்களை பொறுத்தமட்டில்

எல்லாமே உங்களை சுற்றித்தான்;


நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்

வெற்றியை நோக்கி எளிதில் முன்னேறலாம்;

பெற்ற வெற்றியை நன்றாக அனுபவிக்கலாம்;

ஆரோக்கியம் பேனாவிட்டால்

இரண்டுமே பயனற்றதுதான்!



- [ம.சு.கு 16.02.2023]


Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page