top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-124 - தொடர்பு வட்டம் வளர்கிறதா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-124

தொடர்புவட்டம் வளர்கிறதா?


  • நீங்கள் தீடீரென்று ஒரு வழக்கு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறீர்கள். சிலசமயம் அது கைதாகும் அளவிற்கு விபரீதமாகக் கூட இருக்கலாம். அவசரத்திற்கு, உங்கள் வழக்கை கையாள எந்த வழக்கறிஞரை அணுகுவது? உங்களுடைய வழக்கு உள்ள துறையில் சிறந்த வழக்கறிஞர் யார்? இந்த கேள்விகளுக்கு உங்களிடம் உடனே பதில் இல்லாவிட்டால், நெருக்கடியான சூழ்நிலையை எப்படி சமாளிப்பீர்கள்?

  • நீங்கள் புதிதாய் வியாபாரம் தொடங்குகிறீர்கள். வியாபாரத்திற்கு மூலப்பொருட்கள் வாங்குவது முதல், கடையை அழகுபடுத்துதல், வாடிக்கையாளர்களை தொடர்புகொள்ளுதல் என்று எண்ணற்ற வேலைகள் இருக்கின்றன. இவையனைத்திலும் நீங்கள் கைதேர்ந்தவராக இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு 100% தெரியாது என்பதற்காக அந்த செயலை துவங்காமலே இருக்க முடியாது. உங்களுக்கு தெரியாவிட்டாலும், உங்களுக்கு பழக்கப்பட்ட வேறு நபர்களுக்கு அந்த பொருட்கள், வியாபார உத்திகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறதே. அந்த தெரிந்த நபரின் உதவியை நாடி, உங்களுக்கு தேவையானதை செய்யலாமே! அப்படி பல்வேறு விடயங்களை / நபர்களைப் பற்றி தெரிந்த நபர்கள் எத்தனை பேரை உங்களுக்கு தெரியும்?

இந்த உலகம் மிக வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் எல்லாத்துறைகளிலும் எண்ணற்ற புதிய சிக்கல்கள் உருவாகி வருகின்றன. எப்போது எந்த சிக்கலில் யார் மாட்டுவார்கள் என்று யாராலும் கணிக்க முடியாது. அந்த சிக்கலில் இருந்த வெளிவர, உரிய வகையில் உதவக்கூடிய நபர்கள் சிலர் இருப்பார்கள். ஆனால் எந்த சிக்கலுக்கு யாரை அணுகவேண்டுமென்று உங்களுக்க எப்படி தெரியும். எல்லோருக்கும் ஊரில் உள்ள எல்லோரைப்பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்காக பிரச்சனையை நாமே சந்திக்க வேண்டுமா? என்றால் கட்டாயம் அது சாத்தியமில்லை. உங்களுக்கு சிறந்த வழக்கறிஞரை தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் நண்பருக்கு அந்த வழக்கறிஞரை தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறதே. அவரது உதவியை பெற்று அந்த வழக்கறிஞரை சந்திக்க நேரம் கேட்கலாமே! உங்கள் ஊரிலோ, அல்லது வெளியூரிலோ, ஒரு வழக்கறிஞரையோ, மருத்துவரையோ, வியாபாரியையோ, பத்திரிக்கையாளரையோ நீங்கள் சந்திக்க உங்களின் நண்பரோ, அல்லது அவருக்கு தெரிந்தவரோ எளிதில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.


எல்லா வியாபாரமும் முதலில் ஆரம்பிக்கும் போது எல்லோருக்குமே புதியதுதான். களத்தில் குதித்து, உங்களுக்கு தெரிந்தவர்கள் எல்லோரிடமும் அது குறித்து கேட்டறிந்து ஒவ்வொன்றாய் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு நிபுணத்துவம் பெறலாம். அதற்கு முக்கியத்தேவை, அந்த துறை பற்றி தெரிந்தவர்களை உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்க 10 நண்பர்கள் இருந்தால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் 10-10 நண்பர்கள் இருப்பார்கள். உங்கள் பத்து நண்பர்களின் உதவியுடன் உங்களால் அந்த 10 x 10 = 100 நபர்களை எளிதில் சென்றடைய அடையலாமே. அவர்களிடம் பழக ஆரம்பிக்கும்போது, உங்களுக்கு தெரிந்தவர் என்ற வட்டம் தானாக வளரத்துவங்குகிறது. நீங்கள் சந்திக்கும் நபர்களிடம் நட்பு பாராட்டி, அவர்களுக்கு உங்களால் முடிந்து சிறிய உதவி ஏதேனும் செய்துகொடுத்தால், அவர்கள் உங்களுக்கு புதிய தொடர்புகளுக்கு வழிவகையாவார்கள்.


உங்களுக்கு ஒருவரை நேரடியாக தெரியாவிடிலும், அந்த குறிப்பிட்ட நபருக்கு நெருக்கமானவரை நீங்கள் தெரிந்து வைத்திருந்தால், அவரை சென்றடைவது சுலபமாகிவிடும். கணக்கு மிகவும் எளிது - 10 x 10 x 10 = 1000!! உங்கள் முதல் வட்டத்தில் எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியம். அவர்களுக்கு தெரிந்தவர்கள் எல்லோருமே உங்களின் அடுத்த வட்டத்தில், சென்றடையும் எளிதான தூரத்தில் இருப்பார்கள். இத்தோடு வட்டம் நிற்பதில்லை. அந்த இரண்டாம் வட்டத்தில் இருப்பவருக்கும் அடுத்தகட்ட வட்டம் இருக்கும். உங்கள் தொடர்பு வட்டம் முதல் நிலையில் உங்கள் நேரடித்தொடர்பில் இருப்பவர்களிடம் துவங்கி, 1-2-3-4 என்று அடுத்தடுத்த நிலைக்கு வளர்ந்து கொண்டே போகும். இந்த தொடர்பு வட்டம் எவ்வளவுக்கு எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, உங்கள் வியாபாரத்தை அவ்வளவு எளிதாக விளம்பரப்படுத்தி விரிவுபடுத்த முடியும்.


இன்று முகநூல், வாட்ஸ்ஸப் என்று எண்ணற்ற தகவல் தொடர்பு முறைகள் வந்துவிட்டன. நீங்கள் ஒரு தகவலை கைபேசியில் பகிர்ந்தால், அது அடுத்தடுத்து 1000 நபர்களுக்கு அடுத்த 1 மணி நேரத்தில் பறந்து விடுகிறது. நீங்கள் உங்களுக்கு தெரிந்தவருக்கு பகிர்கிறீர்கள். அவர்கள் அவர்களுக்கு தெரிந்தவருக்கு பகிர்கிறார்கள். இது எல்லையற்ற வட்டம். அந்த தகவல் இன்னொருவரிடம் இருந்து உங்களுக்கே மீண்டும் வரலாம்.


உங்கள் தொழில், திறமை பற்றி ஊரில் எல்லோருக்கும் தெரியவேண்டுமானால், அந்த தகவல் உங்கள் முதல் தொடர்புவட்டத்தில் துவங்கி அடுத்தடுத்து விரிய வேண்டும். அடுத்தடுத்த நிலையில் இருக்கும் எண்ணற்றவர்களிடம் நீங்கள் பேசி, அவர்களை உங்கள் முதல் வட்டதில் சேர்க்க வேண்டும். அடுத்தடுத்த நிலைகளில் இருக்கும் ஒவ்வொருவரையும், மேலும் பழகி வட்டத்தில் அடுத்தநிலைக்கு முன்னேற்றிக் கொண்டே இருக்கு வேண்டும்.

  • பல முக்கிய நபர்களை சென்றடைய உங்கள் நட்பு வட்டமும், அவர்களின் நண்பர்களும் உதவலாம்;

  • புதிய வாடிக்கையாளரை பெற, உங்களின் தற்போதைய வாடிக்கையாளர்களே சிறந்த விளம்பரதாரராகலாம்;

  • அவசர உதவிக்கு மருத்துவர், வழக்கறிஞர்களை அணுக உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும், நண்பரும் உதவலாம்;

எதைச் செய்வதானாலும், அதிலுள்ள நுணுக்கங்களை அறிந்துகொள்ள, அந்த துறையைப் பற்றி பறந்த அறிவுகொண்ட நபரை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். அவரை நேரடியாக தெரிந்து கொள்ள, உங்களின் நட்பு வட்டம், வியாபார வட்டங்கள் உதவலாம். எவ்வளவுக்கு எவ்வளவு உங்களின் தொடர்பு வட்டம் விரிவடைகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பதுதான் வியாபாரத்தின் வெற்றி!


உங்களுக்கு தெரிந்தவர்கள் நண்பர்கள் வட்டத்தை

தினம் தினம் வளர்த்துக் கொண்டிருங்கள்;


தெரிந்தவர்கள் அதிகரித்தால்,

வியாபாரத்திற்கு அவர்களே புதிய வாடிக்கையாளர் ஆகலாம்;


தெரிந்தவர்களை அதிகரிக்க

கிடைக்கும் வாய்ப்பில் பயனுள்ளவற்றை பகிர்ந்து

தொடர்பு வட்டத்தை பெரிதாக்குங்கள்!



- [ம.சு.கு 10.02.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page