top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-121 - எதுவானாலும் முழுக்கவனம் தேவை!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-121

எதுவானாலும் முழுக்கவனம் தேவை!


  • இன்றைய பள்ளி மாணவர்கள், பாட புத்தகத்தைக் காட்டிலும் கைப்பேசியிலும், சமூக வளைதளத்திலுமே அதிகமாக நேரம் செலவழிக்கின்றனர். நூற்றுக்குநூறு மதிப்பெண் எடுப்பதை பெறுமையாக கருதிய காலம் போய், அவர்கள் சமூகவளைதளத்தில் போட்ட பதிவிற்கு எத்தனை விருப்பத்தேர்வுகளும், பதில்களும் வந்திருக்கின்றன என்பது பெறுமைக்குறிய விடயமாகிவிட்டது. புத்தகம் கையில் இருக்கும்போது, பாதி கவனம் கைப்பேசியில் இருக்கிறது. பாடங்கள் மனதில் ஏறுவதைக்காட்டிலும், கைப்பேசி ஒலிகள், மொழிகள் எளிதாய் மனதில் பதிகிறது. 25 ஆண்டுகளுக்கு முன் விளையாட்டில் கவனம் செலுத்தி படிப்பை தவிர்த்தனர். இன்று கைப்பேசியில் கவனம் செலுத்தி படிப்பதை தவிர்க்கின்றனர், காலங்கள் மாறினாலும், பிள்ளைகளுக்கு படிப்பில் கவனம் சிதறுவதுமட்டும் குறைந்தபாடில்லை;

  • வீட்டுச் சமையலில் எத்தனை முறை உப்பு, காரம் குறைந்து இருந்தது. அன்றைய தினம் உங்களின் கவனம் சமையலில் எந்தளவிற்கு இருந்தது. மிகுந்த ஈடுபாட்டுடன் சமைக்கப்படும் உணவின் சுவையும், தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டே சமைக்கப்படும் உணவின் சுவையும் எப்படி இருக்கிறது. கவனம் குறையும் போது, சேர்க்கப்படும் பொருட்கள், அவற்றின் அளவு, சேர்க்கப்படவேண்டிய நேரம், வேகவைக்கப்படவேண்டிய அளவு என்று எல்லாவற்றிலும் சிறிது முன்பின் மாற்றம் ஏற்படுவதும், சேர்த்தோமா, இல்லையா என்று குழப்பம் ஏற்படுவதும் இயல்பு. இந்த தடுமாற்றத்தின் விளைவு – உணவின் சுவை குறைகிறது!

முந்தைய காலத்திற்கு ஒப்பிடும்போது, இன்று கற்றறிய வேண்டிய பாடங்கள் பலமடங்கு அதிகம். அதற்கு ஈடாக பிள்ளைகளின் அறிவுத்திறனும் மிகஅதிகமாகவே இருக்கிறது. ஆனால், அந்த பிள்ளைகள் எத்தனை பேர் கல்வியை கவனத்துடன் கற்கிறார்கள் என்பதுதான் இன்று மிகப்பெரிய சவால். ஒரு காலத்தில் தொலைக்காட்சி கல்வியை பாதிக்கிறதென்று வாதிட்டார்கள். இன்று தொலைக்காட்சிமுன் பிள்ளைகள் குறைந்துவிட்டனர். இரண்டுவயது குழந்தை முதல் எல்லோருக்கும் நேரத்தைப்போக்க கைப்பேசிதான் மாயஉலகமாகிவிட்டது.


கைபேசியும், சமூகவளைதளமும், கல்வியில் கவனத்தை முற்றிலுமாய் சிதறடித்துவிட்டது. அந்த கவனக்குறைவினால் ஏற்பட்டுள்ள கற்றல் திறன் பாதிப்பை நாம் கண்கூட காண்கிறோம். பாடத்தில் இருக்கும் கேள்வியை சற்றே மாற்றிக்கேட்டால் அவர்களால் புரிந்துகொண்டு பதிலளிக்க முடிவதில்லை. அவசரத்திற்கு முடிந்ததை மனனம் செய்து தேர்வில் எழுதிவிட்டு என்ன கற்றோம் என்பதே தெரியாமல் அடுத்த வகுப்பிற்கு முன்னேறுகின்றனர். அதுவும் குறிப்பாக பட்டப்படிப்பு மாணவர்களில் [பொறியியில், வணிகவியல், மேலாண்மை போன்ற பாடப்பிரிவு மாணவர்கள்] பாதிக்கும் அதிகமானவர்களுக்கு இந்த கவனக்குறைவினால் அந்தந்த பாடப்பிரிவுகளின் அடிப்படைகள் கூட தெரிவதில்லை. இப்படி அரைகுறை அறிவுடன் தான் எண்ணற்ற பட்டதாரிகள் நாட்டில் வேலைதேடிக் கொண்டிருக்கின்றனர்.


கற்பதில் கவனத்தின் அவசியத்தைப் பார்த்தோம். அதே சமயம் கவனமில்லாமல் உணவு சமைத்தால் எண்ணவாகும் என்று எல்லோருக்கும் பல தருணங்களில் அனுபவம் ஏற்பட்டிருக்கும். கவனம் குறையும்போது, சேர்க்கவேண்டியவற்றில் ஏதேனுமொறு தவறு செய்வோம். அந்த சிறிய தவறு உணவில் சுவையை பாதிக்கும். சமையலைத் தாண்டி கைவினைப்பொட்கள் செய்வது, ஓவியம் வரைதல், காவியம் படைத்தல், சிலைகள் செதுக்குதல் என்ற எல்லாவற்றிற்கும் கவனம் தான் அதிமுக்கியம். எந்த அளவிற்கு கவனமாக செய்கிறோமோ, அந்த அளவிற்கு வேலையில் சுத்தமும், நேர்த்தியும் அதிகரித்து தவறுகள் குறையும்.


ஒரு சிலையை வடிப்பவன், அதை முழுமையாக முடிக்கும் தருணத்தில் சற்று கவனக்குறைவினால், அதன் முகத்தில் உளியின் கீரல் தென்பட நேர்ந்தால், அந்த சிலையின் அழகில் எத்தனை பாதிப்பு ஏற்படும். கற்களில் ஏற்படும் பிழைகளை திருத்தமுடியாது. சிலையை வேறுகல்லில் முதலில் இருந்து வடிக்கவேண்டி வரும். சிறு கவனக்குறைவினால் எண்ணற்ற பொருளும், நேரமும் வீணாகுமல்லவா?


கவனமாக செய்தால் வெற்றிவாய்ப்பு அதிகம். ஆனால் கவனமாக செய்தவர்களும் அவ்வப்போது தோற்கிறார்களே என்ற நீங்கள் கேட்கலாம். உண்மைதான். ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள் – கவனமாக செய்தவர்கள் சிலர் வெற்றியடையாமல் இருக்கலாம், ஆனால் கவனக்குறைவோடு செய்தவர்கள் யாரும் வென்றதில்லை.


நீங்கள் செய்யும் வேலையில், கவனம் முழுமையாக இருந்தால் என்னபயன் – கவனம் குறைந்தால் என்னவாகும் என்பதை சிறுபட்டியலாக இங்கு கொடுக்கிறேன்:

இந்தப் பட்டியல் வளர்ந்து கொண்டேபோகக்கூடிய ஒன்று. அதீத கவன ஒருமுகப்படுதலால் சில தீமைகள் இருக்கலாம், ஆனால் அதன் மூலம் ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டால், தீமைகளின் பாதிப்பு குறைவுதான். ஆதலால், எப்போதும், எதிலும், எத்தருணத்திலும் செய்கின்ற வேலையை மிகவும் கவனமாக செய்துமுடியுங்கள். வெற்றி தானாக வந்து சேரும்.


கவனத்தோடு செய்தால் வெற்றி நிச்சயம்

கவனம் தப்பினால் மரணமும் நேரலாம்;


கவனித்து உண்டால் உணவின் சுவை தெரியும்

கவனிக்காமல் உண்டால் உப்பிருக்கிறதா என்றே தெரியாது;


கவனம் தான் நம் வாழ்வின் சிறந்த வழிகாட்டி

கவனத்தை சிதறடித்தால் சாதிப்பதற்கு ஏதுமிருக்காது

கவனம் அதிகரித்தால், சாதனைகள்யாவும் கைவசப்படும்;


- [ம.சு.கு 07.02.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page