top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-103 – வெற்றிக்கு - 80/20 பாரிடோ விதியொரு சிறந்த வழிகாட்டி!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-103

வெற்றிக்கு 80/20 பாரிடோ விதியொரு சிறந்த வழிகாட்டி!


  • உங்கள் வியாபாரத்தில், வாடிக்கையாளர் வருகையின் முறைமையையும், அவர்கள் கொடுக்கும் வியாபாரத்தின் அளவுகளையும் சற்று விரிவாக அலசிப் பாருங்கள். வியாபாரத்தின் பெரும் பகுதியை ஒரு குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் மட்டுமே கொடுத்துக் கொண்டிருப்பார்கள். மற்ற எல்லா வாடிக்கையாளர்களும் ஒருசேர சிறுபகுதியை மட்டுமே அளிப்பார்கள். இது வாடிக்கையாளர் என்று மட்டுமல்லாது, விற்கப்படும் பொருள்களில் இருந்து ஈட்டும் இலாபத்திலும் அதே கதைதான். நிறைய பொருட்களை விற்றாலும், அதிகப்படியான இலாபம் ஒருசில பொருட்களில் இருந்து மட்டுமே வரும். ஏனைய பெரும்பாலான பொருட்கள் மொத்தத்தில் குறைவாகவே இலாபத்தை கொடுக்கும். அந்த பெரிய அளவு வியாபாரத்தை தரக்கூடிய குறிப்பிட்ட வாடிக்கையாளர்களையும், அதிக லாபம் தரக்கூடிய ஒரு சில பொருட்களையும் சரியாக இணங்கண்டு, அவற்றிற்கு போதிய முக்கியத்துவம் அளித்தால், வியாபாரத்தை நல்லபடியாக பெருக்கலாம்.

  • நடந்து முடிந்த எந்த ஒரு மட்டைப்பந்தாட்ட ஓட்ட எண்ணிக்கைகளையும் அலசிப் பாருங்கள். 11 வீரர்களில், 2-3 வீரர்கள் மட்டுமே பெரும்பாலான ஓட்டங்களை எடுத்திருப்பார்கள். கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம் என்று எந்த விளையாட்டிலும், கிட்டத்தட்ட 20% வீரர்கள் மட்டுமே அன்றைய போட்டியில் பெரும்பாலான எண்ணிக்கைகளை குவித்திருப்பார்கள். ஏனையவர்கள் கூட்டாக சொற்ப எண்ணிக்கையை மட்டுமே சேர்ந்திருப்பார்கள். அன்றைய தினம் விளையாட்டில் பங்குபெறும் எல்லாருக்கும், சிறப்பாக விளையாடும் வாய்ப்பு சமமாக இருந்திருந்தாலும், ஏனோ ஒருசிலர் மட்டுமே சிறப்பாக விளையாடி அதிகபட்ச எண்ணிக்கைகளை குவிக்கின்றனர். ஏனையயவர்கள் சராசரிக்கும் குறைவாகவே விளையாடி இருப்பது பெரும்பாலும் எல்லா இடங்களிலும், எல்லா விளையாட்டுக்களிலும் இயல்பாக காணப்படும் ஒரு நிலை.

எந்தவொரு வியாபாரத்திலும் நிறைய வாடிக்கையாளர்கள் வந்துபோவார்கள். ஒவ்வொருவருக்கும் தேவைகளும், தேவைப்படும் அளவுகளும் வேறுபடும். நிறைய பொருட்களை வாங்குபவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். ஏனெனில் எல்லோரிடமும் செல்வம் நிறைந்திருப்பதில்லை. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நடுத்தர வர்க்கத்தினர். அவர்களுக்கு தேவைகளும், ஆசைகளும் நிறைய இருந்தாலும், தங்களிடம் உள்ள செல்வத்திற்கேற்ப, தங்களின் தேவைகளை குறைத்துக் கொண்டு அளவாக வாங்குவார்கள். குறைவாக வாங்குபவர்களை வேண்டாம் என்று ஒதுக்கிவிட முடியாது. அதே சமயம் நிறைய பொருட்களை வாங்கக்கூடிய வாடிக்கையாளர்களையும், சாதாரணமாக நடத்த முடியாது. அவரவர்களுக்குரிய கவனத்தை கொடுத்தால்தான் அடுத்தமுறை அவர்கள் வருவார்கள். சிலசமயம் அதிகம் வாங்கும் வாடிக்கையாளர்கள், தொலைபேசியில் சொன்னாலே, அவர்கள் வீட்டுக்கே பொருட்களை அனுப்பி வைக்கவும் தயாராக இருக்க வேண்டும். இப்படி எங்கு சேவையை மேம்படுத்த வேண்டும் என்று கவனித்து செயல்படுத்தினால் வியாபாரத்தை எளிதில் விரிவுபடுத்தலாம்...


நடைமுறையில் 80 / 20 என்கிற பாரிடோ விதி முக்கியமானவற்றை பிரித்தறிய பயன்படுத்தப்படுகிறது. அதாவது உலகின் 80% சொத்துக்களை, 20% பேர் கட்டுப்படுத்துகின்றனர். 80% பழங்களை பெரும்பாலும் 20% மரங்களே தருகின்றன. மீதமுள்ள 20% சொத்துக்களையும் / 20% பழங்களையுமே ஏனைய 80% மக்களும் / மரங்களும் கட்டுப்படுத்துகின்றன என்கின்றனர்.


இந்த 80/20 விதியை உங்களின் வியாபாரத்திற்கு பொருந்தி பாருங்கள். 80% வியாபாரம் 20% வாடிக்கையாளர்களிடம் இருந்து வருகின்றது. மீதமுள்ள 20% வியாபாரத்தை, மற்ற 80% வாடிக்கையாளர்கள் தருகிறார்கள். அதேபோல 80% இலாபத்தை 20% பொருட்கள் தருகின்றன. ஏனைய 80% பொருட்கள் வெறும் 20% இலாபத்தை மட்டுமே தருகின்றன. இந்த 80 / 20 என்கிற எழுதப்படாத விதி, வியாபாரம் உட்பட எந்தத் துறையில் கணக்கிட்டுப் பார்த்தாலும், ஆங்காங்கே ஓரிரு சதவிகித ஏற்றத்தாழ்வுகளை தவிர்த்து, நடைமுறையில் அப்படியே பெரும்பாலும் பொருந்தி வரும்.


விளையாட்டிலும், ஒவ்வொரு முறையும் 80% ஓட்டங்களை 20% வீரர்களே எடுத்திருப்பார்கள். மீதமுள்ள 80% வீரர்களின் பங்களிப்பு வெறும் 20% ஆக மட்டுமே இருக்கும். கால் பந்தாட்டத்திலும் 80% சதவிகித நேரம், பந்தின் கட்டுப்பாடு, 20% வீரர்களிடமே இருக்கும். ஒரிரு சதவீதம் முன்பின் இருக்கலாமே தவிர, பெரும்பாலும் இந்த 80/20 விதி அப்படியே பொருந்தி வரும்.


கல்வி, விளையாட்டு, அலுவலகப்பணி, வியாபாரம் என்று எந்தத் துறையானாலும், இந்த 80/20 விதி பெரும்பாலும் அப்படியே பொருந்திவரும். இந்த விதி பொருந்துகிறதா என்கிற ஆராய்ச்சி நமக்கு தேவையில்லை. இந்த 80/20 விதியை புரிந்து கொண்டு, எல்லாத் துறைகளிலும் அந்த முக்கியத்துவம் வாய்ந்த 20% மனிதர்களை, 20% செயல்களை, 20% நேரத்தை இணங்கண்டு, உரிய கவனம் செலுத்தி சிறப்புடன் செய்தால், நம்முடைய பெரும்பான்மையான வேலைகள் (80%) எளிதில் நிறைவேறிவிடும்.


உங்கள் 80% செயல்களை கட்டுப்படுத்தும் 20% நேரத்தையும்,

உங்களின் 80% நேரத்தை கட்டுப்படுத்தும் 20% மக்கள்/செயல்களையும்

இணங்கண்டு உரிய கவனம் செலுத்துங்கள்;

உங்கள் 80% வெற்றி எழுதில் உறுதியாககும்;


எழுதப்படாத 80/20 பாரிடோ விதியை நினைவில் வைத்து

எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்து

கவனமாக செயல்பட்டு வெற்றி காணுங்கள்;


- [ம.சு.கு 20.01.2023]


Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page