top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-46 – பரிசுச்சீட்டு வாங்கினால் தானே பரிசு விழும்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-46

பரிசுச்சீட்டு வாங்கினால் தானே பரிசு விழும்!


  • நிறைய இளைஞர்களுக்கு சச்சின், தோனி, விராட் போல சிறந்த மட்டைப்பந்தாட்ட வீரராக வேண்டும் என்று ஆசை. அந்த ஆசையில் தவறேதுமில்லை. ஆனால் அந்த சிறந்த நிலையை அடைய அவர்கள் எத்தனை கடுமையான பயிற்சியை செய்தார்கள், எத்தனை தடைகளை, அவமானங்களை தாண்டி, தொடர்ந்து முயற்சித்தார்கள் என்பதையும் தெரிந்து வைத்துக் கொண்டு, அதைவிட ஒருபடி மேல் பயிற்சியும், முயற்சியும் செய்கிறார்களா? அந்த அளவுக்கு கடுமையான பயிற்சிகளை எடுக்காவிட்டால், தேர்வாளர்களின் சோதனைகளை கடக்க முடியுமா?

  • உங்களுக்கு மிதிவண்டி (சைக்கிள்) ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும். முதலில் தன்னால் இயலுயுமா? என்ற தயக்கம். அடுத்ததாக கீழேவிழாமல் ஓட்டிப் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பு. உலகில் எவரேனும் கீழேவிழாமல் [வண்டியோ / பழகுபவரோ] மிதிவண்டியை ஒட்டி பழகி இருக்க முடியுமா? மிதிவண்டி பழக வேண்டுமானால், முதலில் ஆரம்பகட்ட தயக்கத்தை வென்று, கீழேவிழுவது குறித்து பயத்தையும் சமாளித்து களத்தில் இறங்க வேண்டும். உங்களின் தயக்கத்தையும், பயத்தையும் வென்று, தொடர்ந்து முயற்சி செய்தால், 10-15 நாட்களில் மிதிவண்டி உங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிடும். சின்ன சின்ன காயங்களுக்கு பயந்தால், தவங்காமல் தூரத்திலேயே நிற்க வேண்டியது தான்.


இளைய தலைமுறையினர், தொலைக்காட்சியில் பல வெற்றியாளர்களைப் பார்த்து, அந்த வெற்றியாளரைப்போல சாதிக்க ஆசைப்படுகின்றனர். அதேசமயம், போதுமான திட்டமிடலுடன் அவற்றை தொடங்குகிறார்களா? என்றால், வெகுசிலரே முறையாக ஆரம்பிக்கிறார்கள். அப்படி ஆரம்பித்தவர்கள், இடையிடையே வரும் சிறுசிறு சறுக்கல்களை தாங்கி, தொடர்ந்து குறிக்கோளை நோக்கி கடுமையாக உழைக்கிறார்களா? என்றால், அது அடுத்த பெரிய கேள்வி. வீட்டு மதில்சுவருக்குள் மட்டும் மட்டைப்பந்தை சுழற்றிக் கொண்டிருந்தால், லன்டன் ஓவல் மைதானத்தில் விளையாட என்றுமே வாய்ப்பு கிடைக்காது.


எல்லா கஷ்டங்களையும், தடைகனையும் தாண்டி,

முட்டு மோதினால் தான் எங்கேனும் வாய்ப்பு கிடைக்கும்;

முட்டி மோதத் தயங்கினால், மறுதலிப்புக்கு பயந்தால்

முட்டி வலிக்காமல் விட்டிலேயே காலங்கழிக்க வேண்டியது தான்;


மிதிவண்டியை ஒரு கையில் வல்லமையுடன் ஓட்டுபவர்களும், கையை விட்டுவிட்டு ஓட்டுபவர்களும், ஒருசக்கர மிதிவண்டி ஓட்டுபவர்களும் நிறைய உண்டு. அவர்களை போல், நாமும் ஓட்ட ஆசை இருக்கிறது. ஆனால் துவங்குவதற்கு பயமாயிருக்கிறது என்றால், ஒன்றும் செய்ய முடியாது. ஒன்று நீங்களாக தயக்கத்தை கடந்து தொடங்க வேண்டும், இல்லாவிட்டால் மிதிவண்டுயை மறந்துவிட வேண்டும். முயற்சி செய்யாமல் மிதிவண்டி வசப்பட வேண்டும் என்றால், அது யாருக்கும், என்றைக்குமே சாத்தியமில்லை.


பரிசுச்சீட்டில், பெரிய பரிசு வேண்டுமானால், முதலில் ஒரு பரிசுச்சீட்டை வாங்க வேண்டும். யாராவது ஒருவர் வாங்கி உங்களுக்கு இலவசமாக தருவார் என்று நீங்கள் எண்ணியிருந்தால், அப்படியே எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதுதான். இன்றுவரையிலும் அப்படி யாருக்கும் பரிசுச்சீட்டு இலவசமாக கொடுக்கப்பட்டு, அந்த பரிசுச்சீட்டில் பெரிய பரிசுத்தொகை விழுந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. அப்படிப்பட்ட வாழைப்பழ சோம்பேறி நாட்டில் இருப்பது, தேசத்திற்கு தான் மிகப்பெரிய பாரம்.


உழைப்பவருக்கு மட்டும் தான் வெற்றி என்பது உலகம் அறிந்த உண்மை. இடையிடையே வந்து போகும் ஒரு சில சலசலப்புக்கள், பிறருடைய செல்வாக்கினால் வந்துபோகின்றவை. அவையென்றும் நிரந்தரமில்லை. அவர்கள் தங்களின் தேவைக்கு ஒருவரை முன்நிறுத்தி, வெற்றியாளராக காண்பித்து, தங்களுக்கு வேண்டியதை சாதித்துவிட்டு, அந்தநபரை பாதியிலேயே விட்டு விட்டு சென்று விடுவார்கள்.


நீங்கள் சாதிக்க வேண்டும் என்று விரும்பினால், எதில்? என்ன சாதிக்க வேண்டும்? என்று தெளிவை முதலில் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் இலட்சியத்தை போதுமான அளவு சிந்தித்து, அலசியாராய்து துவக்கியபின், அதில்வரும் சிலபல சறுக்கல்களை கண்டு பயந்து பின்வாங்காமல், எந்த இடையூறுகளையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து போராடுங்கள்.


துவங்குவதற்கு எல்லோருக்குமே ஒருவித தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதைத்தொடர்ந்து பயமும் வரும். ஆரம்பகட்டத்தை நம்பிக்கையோடும், தைரியத்துடனும் தாண்டிவிட்டால், அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேற தானாக வழிபிறக்கும். தொடர்ந்து கற்றுக் கொண்டு, எல்லா நிலைகளிலும் கடுமையாக உழைத்தால், கவனமாக செயல்பட்டால் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறி வெற்றியாளராக வலம் வரலாம்.


பயந்து கொண்டிருந்தால்

பயந்து கொண்டே இருக்க வேண்டியது தான்

துணிந்தவனுக்கு மட்டும்தான் – வையத்தையாளும்

தகுதியும் வாய்ப்பும் கைகூடும்.


- [ம.சு.கு 24.11.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page