top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-3 – வாழ்க்கையே ஒரு பரிசோதனை முயற்சிதான், தோல்வியுற்ற முயற்சிகள் வரு...."

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-3

வாழ்க்கையே ஒரு பரிசோதனை முயற்சிதான், தோல்வியுற்ற முயற்சிகள் வருந்துவதற்கல்ல!!


  • உங்கள் குழந்தை கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதி இருக்கும். ஏனோ காரணத்தினால், மதிப்பெண் குறைந்து இருக்கும். அதற்காக அந்த குழந்தையை திட்டுவதில் ஏதும் பயன் இருக்கிறதா? இந்த முறை இல்லாவிட்டால் அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று குழந்தையை ஆறுதல்படுத்தி, தன்னம்பிக்கை ஊட்டினால் அடுத்தமுறை அது சாதிக்கிறது. அதைவிட்டு நடந்து முடிந்ததை நோன்டி நோன்டி திட்டினால் வேதனைதான் மிஞ்சும்.

  • ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளரின் வியாபாரத்தை பெற நீங்கள் கடுமையாக முயற்சித்திருப்பீர்கள். ஆனால் அது வராமல் போயிருக்கலாம். சிலசமயம் உங்கள் ஊழியர்கள் ஏதேனும் சொதப்பியிருக்கலாம். அதையே நினைத்து அதிகம் வருந்தி என்ன பயன். வாருங்கள், அடுத்த முயற்சியை தொடங்கலாம். புதிய வாடிக்கையாளரை அனுகலாம். ஊழியர்களையும் பயிற்றுவிக்கலாம். பரந்த உலகில் வியாபார வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

  • நீங்கள் அன்றாடம் அதிகாலையில் நடைபயிற்சி செய்பவராக இருக்கலாம். முந்தைய நாள் தாமதமாகத் தூங்கியதாலோ, அல்லது சற்று வயிறு சரியில்லாததாலோ இன்று அதிகாலை எழுந்து செல்ல முடியாமல் போயிருக்கலாம். ஐயோ ! இன்று நான் செல்லவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை. நாளை தவறாமல் எழுந்து சென்று விடுங்கள். இதுதான் யதார்த்தம். அவ்வளவுதான் வாழ்க்கை.


ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ” – என்ற ஔவையின் வரிகள் நம் உயிருக்கு மட்டுமில்லாமல் நமக்கான நேரத்திற்கும் பொதுவானது. கடந்தகாலத்தை திரும்பப்பெற முடியாது. ஆதலால் கடந்தவைகளைப் பற்றி கவலைப்பட்டுப் பயனில்லை.

ஒன்று இல்லையென்றால் இன்னொன்று

ஒரு நாள் தவறினால் அடுத்தநாள்

என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டால் மனஅழுத்தமின்றி அடுத்த வேலைக்கு போகலாம்.


அறிவியல் கூடங்களில் ஆயிரமாயிரம் பரிசோதனை முயற்சிகள் நடக்கின்றன. வெகு சிலவே வெற்றியில் முடிகின்றன. பெரும்பாலான முயற்சிகள் தோல்வியில் முடிவது அங்கு இயல்பான ஒன்று. பெரும்பாலானவற்றில் தோல்வி ஏற்படுகிறது என்பதற்காக, பரிசோதனை முயற்சிகளை கைவிட்டால், புதியவைகளை என்றுமே கண்டுபிடிக்க முடியாது.


1000 முறை முயன்று தோற்றபின் தான் எடிசன் மின் விளக்கை கண்டுபிடித்தார். ஒரு குழந்தை கேட்டது, ஏன் அந்த 1001 வது முயற்சியை சரியாக முதலிலேயே எடிசன் செய்திருக்கக்கூடாதென்று? கேள்வி சரிதான் ! அந்த 1001-வது வெற்றிகரமான முயற்சிக்கு தேவைப்பட்ட அறிவானது, அவருடைய முந்தைய 1000 முயற்சிகளில் பெற்ற படிப்பினையின் கூட்டுத்தொகை என்பது புரிந்தால் வாழ்வின் யதார்த்தம் புரிந்துவிடும்.


எங்கும் வெற்றியென்பது முதல் முறையிலேயே கிட்டும் என்று உறுதிபட சொல்ல முடியாது. ஏனெனில் இங்கு எல்லாமே சோதனை முயற்சிதான். யாரொருவர் தொடர்ந்து சோதனை முயற்சிகளை செய்கிறாரோ, அவரால் மட்டுமே வெற்றியின் அருகில் சீக்கிரத்தில் நெருங்க முடியும். பரிசோதனை முயற்சிகளில் வரும் தோல்விகளை படிப்பினையாக எடுத்து, அடுத்த முயற்சியை சீக்கிரம் துவக்குங்கள்.


வெற்றி நிச்சயம்!


- [ம.சு.கு 12-10-2022]



8 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

Post: Blog2 Post
bottom of page