top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : வியாபாரத்தில் யார் வெற்றி பெறுகிறார்?

Updated: Nov 30, 2021

  • தினந்தோறும் எண்ணற்ற புதிய வியாபார நிறுவனங்கள், கடைகள் திறக்கப்படுகின்றன !

  • அதேசமயம் எண்ணற்ற கடைகளும், வியாபார நிறுவனங்களும், தொடர்ந்த நஷ்டத்தின் காரணமாக மூடப்பட்டும் வருகின்றன

தொழிலை துவங்கும் எல்லோரும், அதை சிறப்பாக செய்து வெற்றியாளராக, பெரும் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் துவங்குகின்றனர். எல்லோருடைய குறிக்கோளும் ஒன்றாக இருந்தாலும், ஏன் 75 சதவீதத்திற்கும் மேலான இந்த புதிய துவக்கங்கள் 2 - 3 ஆண்டுகளைக்கூட கடந்து நிற்பதில்லை.


ஹோட்டல் கடை, டீ கடை, துணிக்கடை, மொபைல் கடை, மளிகை கடை, பேன்சி கடை என்று எண்ணற்ற கடைகள் நம் சாலைகளில் புதிதாய் துவங்கினாலும், அவற்றில் பல, 2 - 3 ஆண்டுகளிலேயே மூடப்பட்டு விடுகின்றன, அல்லது கை மாறி விடுகிறது. ஏன்?


இந்தக் கேள்வி எனக்கு எழுந்தது போல, தொழில்முனைவோராக விரும்பும் ஒவ்வொருவர் மனதிலும் அவ்வப்போது வந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த கேள்விக்கான சரியான விடை இன்னதென்று எவராலும் அறுதியிட்டு சொல்ல முடியாவிட்டாலும், மிகப்பொதுவானதும், பெரும்பான்மையானதுமான காரணங்களாக இருக்கக் கூடியவை இவைகளே !



இந்த வேறுபாடுகள் எல்லாம் பொதுவான காரணங்கள் தான். இவற்றையும் தாண்டி, ஒவ்வொரு தொழிலுக்கும், அதற்குரிய தனித்துவங்களும், செயல்முறையில் வெவ்வேறு புதுமையான வழிமுறைகளும் இருக்கும். எந்தத் தொழிலாக இருந்தாலும், அந்த தொழிலின் அடிப்படையையும், நுனுக்கங்களையும், நெளிவு சுளிவுகளையும் நன்கறிந்து கொண்டு, முழு ஈடுபாட்டுடனும், விடாமுயற்சியோடு சமயோஜிதமாக செயல்பாட்டால், அது எந்த தொழிலாயினும், அதன் வெற்றிக்கனி எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், கட்டாயம் நமக்கு கிடைத்தே தீரும்.



- [ம.சு.கு - 15-09-2021]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comentarios


Post: Blog2 Post
bottom of page