top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : குறிப்பெடுங்கள்

ஒரு போட்டியில் கலந்து கொண்டு சவாலை முடிக்கிறோம். அந்த சவாலை குறித்த நேரத்தில் முடித்து வென்றோமா? தோற்றோமா? என்று அறிந்து கொள்கிறோம்.


ஒரு தேர்வு எழுதுகிறோம். அதில் எத்தனை மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றோம் என்பதை அறிந்து கொள்கிறோம்.


அன்றாடம் ஏன் அளவிடுவதில்லை


பங்கெடுக்கும் ஏதேனும் போட்டியிலோ, தேர்விலோ தோற்றால், நாம் பெற்ற மதிப்பெண் நமக்கு ஒரு அளவுகோலாக இருந்து, அடுத்த முறை என்ன செய்யவேண்டும் என்று திட்டமிட உதவுகிறது. இப்படி ஒரு போட்டியில் நமது செயல்பாட்டை அளவுகோல் கொண்டு அளப்பதால், நமக்கு மதிப்பீடும், பின்னூட்டமும் கிடைப்பது போல, நாம் ஏன் தினம் தினம் ஒரு அளவுகோல் கொண்டு நமது பயணத்தை, செயலை, முன்னேற்றத்தை அளவிடக் கூடாது?


அன்றாடம் அளந்து குறித்துக்கொள்ளுங்கள்


உடல் பருமனை குறைக்க வேண்டுமா?

ஒவ்வொரு வேலையும், என்ன சாப்பிடுகிறீர்கள்?

எவ்வளவு சாப்பிடுகிறீர்கள்?

என்பதை குறித்துக் கொள்ளுங்கள். வெறுமனே சரியாக குறிப்பெடுத்து வந்தாலே போதும். உங்களுக்கே என்ன தவறு செய்கிறோம் என்பது தெளிவாக புரியும்.


வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தி வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஆசையா?

தினமும் எத்தனை வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு பேசுகிறீர்கள் என்பதை குறித்துக்கொண்டு, அந்த அழைப்புகளையும் அனுகுமுறைகளையும் செம்மைபடுத்துங்கள். வாடிக்கையாளர் எண்ணிக்கை தானாகவே உயரும்.


நிறைய நூல்களைப் படித்தறிந்து அறிவை விருத்தி செய்ய ஆசையா?

தினமும் எத்தனை பக்கங்கள் படிக்கிறீர்கள், என்பதை குறித்துக்கொள்ள துவக்குங்கள். தானாக புத்தகம் படிப்பதை அதிகரிப்பீர்கள்.


அளந்தால் தானே தெரியும் – வளர்ந்தோமா என்று?


எடுத்துக் கொண்ட இலட்சியத்தில் வளர்ச்சியடைந்து நீங்கள் வெற்றி பெற விரும்பினால், தினம் தவறாமல் என்ன செய்கிறோம்? எவ்வாறு செய்கிறோம்? என்பதை குறித்துக் கொண்டு அதை தினம்-தினம் சற்றே ஆய்வு செய்தால், நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு பிறக்கும். அளவீடுகளுடனான தெளிவான செயல்பாடு, படிப்படியான வளர்ச்சியை கொடுத்து, வெற்றியை உறுதிசெய்யும்.


மறந்துவிடாதீர்கள்


தொடர்ந்து உங்கள் செயல்களையும்

வளர்ச்சியையும் குறிப்பெடுங்கள்;

அந்த குறிப்புக்களை தொடர்ந்து

பகுத்தாய்வு செய்யுங்கள்;

அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதை

நீங்களே உணர்வீர்கள்;

நீங்கள் ஆய்ந்து உணர்ந்ததை செயல்படுத்துங்கள் - வெற்றி உங்களுக்கே உரித்தாகும்!!

வெற்றி தொட்டுவிடும் தூரம்தான் - அளந்தறிந்து அறிவுடன் செயல்படுபவர்க்கு !!


- [ம.சு.கு – 12-02-2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page