top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 236 - பொறுமையும் – பொறுமையின்மையும்!"

Updated: Jun 3, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-236

பொறுமையும் - பொறுமையின்மையும்!


  • ஆப்பிள் நிறுனத்தை பற்றியும், அதன் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கணிணிகளிலும், கைபேசியிலும் பல புதிய தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் அதிவேகமாக புகுத்தினார்கள். பத்தாண்டுகளுக்கு பின்னால் தேவைப்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு இன்றே அவர்களின் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனைகள் நடந்து கொண்டிருந்தன. அடுத்து என்ன புதுமை கொண்டுவரலாம் என்று தினம்தினம் ஒரு தலைவர் யோசித்து விரட்டிக்கொண்டிருந்தார். புதிய தொழில் நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்கு முன் பொறுமையாக பல சோதனைகளை ஒரு புறம் செய்வதோடு, மறுபுறம் தொழில்நுடப மாற்றங்களுக்காக பொறுமையாக காத்திருக்காமல், தானே முன்னின்று அந்த தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தினார். அவரது பொறுமைக்கும், பொறுமையின்மைக்கும் அவர்கள் நிறுவனத்தின் புதிய கணிணியும், கைபேசியுமே பெரிய சாட்சி!

  • நீங்கள் சிறுவயதில் முயல்-ஆமை கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். முயலுக்கும் ஆமைக்குமான போட்டியில் முயல் தூங்கியதால், ஆமை தொடர்ந்து ஓடி வென்றது. இதை பொறுமையாகவும், மனவுறுதியோடும் தொடர்ந்து உழைப்பவர்கள் வெற்றிபெறுவார்கள் என்ற நோக்கத்தில் உவமையாக சொல்வார்கள். உண்மைதான், ஆமையின் கண்ணோட்டத்தில் மனவுறுதியுடனான தொடர் உழைப்பு வெற்றியை தந்தது. அதேசமயம் முயலின் கண்ணோட்டத்தில் ஆமையைப்பற்றிய தவறான கனிப்பும், பொறுமை காக்கலாம் என்ற முடிவும் அதன் தோழ்விக்கு வழிவகுத்துவிட்டது. இன்றைய மேலான்மைக் கல்வியில் இந்த கதைக்கு அடுத்த இரண்டு பாகத்தை சேர்த்திருக்கிறார்கள். இணையத்தில் தேடிப் படியுங்கள்;

பொறுமை இருந்தால் தான் வெற்றிபெற முடியும் என்பதை எல்லோரும் அறிவோம். ஏனெனில், நாம் என்னதான் அவசரப்பட்டாலும், நெல் விளைய குறைந்தபட்சம் 3-4 மாதம் காத்திருக்கத்தான் வேண்டும். அதேசமயம் விவசாய வேலைகளை எளிதாக்க எண்ணற்ற சாதனங்களை புகுத்துவதில் பொறுமைகாப்பதில் பயனில்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் தன் ஊழியர்கள், அவரவர் கையில் இருக்கும் வேலையை சிறப்பாக செய்ய போதிய நேரம் கொடுத்து பொறுமை காப்பார். அதேசமயம் புதிய தொழில்நுட்பம் பற்றிய ஆலோசனைகளில், ஆராய்ச்சிகளில் தன் குழுவினர் என்னதான் பொறுமையாக செய்ய வேண்டுமென்று சொன்னாலும், அவர் அங்கு பொறுமைக்கு இடமளிக்கவில்லை. சாத்தியமில்லை, கடினம் என்று சொல்கின்ற விடயங்களை தானே முன்னின்று பரிசோதிக்க வழிநடத்தி வெற்றிகண்டார். அவரது பொறுமையின்மையின் பயனாய்தான் நமக்கு அதிநவீன ஆப்பிள் கைபேசிகள் வருடாவருடம் கிடைத்தன.


முயல் ஓடிய வேகத்தில் தொடர்ந்திருந்தால், அதன் வெற்றியை யாராலும் தடுத்திருக்க முடியாது. ஆனால் ஆமையின் வேகத்தை பார்த்து தவறான கணக்கிட்டு பொறுமை காக்க ஆரம்பித்தது. பொறுமை உறக்கத்தை கொடுத்து தோல்வியை கொடுத்துவிட்டது. ஆம்! தேவையில்லாத இடங்களில் பொறுமை காத்தால் சோம்பேறித்தனம் வளர்ந்து வெற்றி உங்களை விட்டு விலகிப்போகும். இயற்கையை நம்மால் மாற்ற முடியாது. வேகத்தை அதிகரிக்க முடியாது. அங்கு பொறுமை காப்பதைத்தவிர வேறு உபாயமில்லை. அதே சமயம், அதைச் சார்ந்த மற்ற செயல்களை செய்து முடிக்க நமக்கு வாய்ப்பிருக்கும் போது, அதை செய்யாமல் பொறுமை காத்தால், நாம் முட்டாள்களாகிவிடுவோம். திரைப்படம் எடுக்க பூஜைபோடும்போதே, அதை மக்கள் மத்தியில் இன்று விளம்பரப்படுத்த துவங்கிவிட்டனர். படம் வெளியாகும் நாளுக்கு 3-4 மாதத்திற்கு முன்னரே அதன் விளம்பரமும், முன்னோட்டமும், பாடல்களும் சந்தையை கலக்க வகைசெய்கின்றனர். படம் முழுமைபெற்று வெளியீட்டுக் தயாரான காலம் மலையேறிப்போய், படம் எடுப்பவர்கள் ஒருபுறம் பொறுமையாக எடுத்துக்கொண்டிருக்க, அதை விளம்பரப்படுத்த ஒருகுழு பொறுமைகாக்காமல் படுவேகமாக சந்தையில் எதிர்பார்ப்புக்களை வளர்க்கின்றனர்.


“பொறுமையுடன் பொறுமையில்லாமல் ஓடுவது” வெற்றிக்கான அத்தியாவசிய யுக்தி. நூறபேர் ஒடும் பந்தயத்தில், நீங்கள் சராசரியாளராக பொறுமையுடன் ஓடினால், அந்த சராசரிகளுடன் அதேயளவு பயனைத்தான் பெறமுடியும். அந்த சராசரியாளர்களின் பொறுமைக்கு மத்தியில், புதுமைகளை புகுத்தி உங்கள் வேகத்தை அதிகரித்தால், வாடிக்கையாளருக்கு புதிய சேவைகளை வழங்கினால், உங்கள் வெற்றிவாய்ப்பு பிரகாசமாகும். பொறுமை தேவைதான், அதேசமயம் அளவுகடந்த பொறுமை உங்களை சராசரியாளர்களுடன் நிற்கச் செய்துவிடும். அந்த பொறுமைகளுக்கு மத்தியில், உங்கள் மதியூகத்தில் என்ன புதுமை படைக்கப் போகிறீர்கள் என்பதில் உங்களின் வெற்றி அடங்கியிருக்கிறது.


பொறுமையுடன் பொறுமையில்லாமல் ஓடுபவர்களால்

  • தங்களின் சோம்பேறித்தனத்தை வென்று உத்வேகத்தை தக்கவைக்க முடிகிறது;

  • எங்கு பொறுமைகாக்க வேண்டும், எங்கு பொறுத்திருக்காமல் ஓடவேண்டும் என்பதை ஆராய்ந்து வெற்றியை துரிதப்படுத்த முடிகிறது.

  • பொறுமை சில தோல்விகளை ஏற்றுக்கொள்ளச் செய்கிறது. பொறுமையின்மை அந்த தோல்வியை கடந்து அடுத்த முயற்சியில் இறங்கச் செய்கிறது;

  • பொறுமை கற்றவற்றை ஜீரணித்து திறமையாக்குகிறது; பொறுமையின்மை புதியவற்றை தேடித்தேடி கற்கவைக்கிறது;

  • பொறுமை உறவுகளையும், நட்பையும் வளர்க்க உதவுகிறது; பொறுமையின்மை புதிய உறவுகளை, நட்பை, கலாச்சாரத்தை, தேடிப்பிடிக்க வழிவகுக்கிறது.

பொறுமை முக்கியம், அதேசமயம் பொறுமை சோம்பேறித்தனத்தை வளர்த்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். செயல்கள் ஒரு புள்ளியில் தங்கும் சமயத்தில், பொறுமைகாத்தால், நீங்கள் நிரந்தரமாக தங்கி விடுவீர்கள். ஒரு புள்ளியில் சிக்காமல், அடுத்த கட்ட வாய்ப்புக்களை பொறுமைகடந்து தேடுபவர்கள் புதிய பாதைகளை வகுத்து முன்னேறுகிறார்கள். நீங்கள் எப்படி?


நீங்கள் சாதிக்க வேண்டுமென்றால்

தொடர்ந்து வாய்ப்புக்களை தேடி

ஓயாது உழைக்க வேண்டும்

எல்லாம் தானாக நடக்குமென்று

பொறுமையாக காத்திருந்தால், எதுவும் நடக்காது

அதேசமயம் நடப்பவை எல்லாம்

உங்கள் எண்ணம்போல் வெகுவேகமாக

உங்களுக்கு சாதகமாக நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்து

பொறுமையிழந்து கத்தினால் பயனேதுமிருக்காது;


சில இடங்களில் பொறுமைகாத்து சாதிக்க வேண்டும்

சில இடங்களில் பொறுமைகாப்பதில் பயனிருக்காது

இருப்பதை சகித்துக்கொண்டு காலம்தாழ்த்தாமல்

புதியவற்றை படைக்க புது வழிகளை தேடவேண்டும்;


எங்கு பொறுமை காக்க வேண்டும்

எங்கு ஓடிபிடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க

உங்கள் அனுபவம் தான் வழிநடத்தும்;


- [ம.சு.கு 02.06.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

תגובות


Post: Blog2 Post
bottom of page