top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 233 - கடினமான வேலையை முதலில் முடியுங்கள்!"

Updated: May 31, 2023

[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-233

கடினமான வேலையை முதலில் முடியுங்கள்!


  • தமிழ் வழிகல்வி பயிலும் ஒரு மாணவனுக்கு, ஆங்கில பாடம் என்றால் மிகவும் பயம். 10-ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகள் பட்டியல் வெளியானது. இன்னும் 4 மாதங்கள் இருந்த நிலையில், எல்லாப் பாடத்தையும் கவனமாக படித்தால், நல்ல மதிப்பெண் பெறலாம் என்ற சூழ்நிலையில், தனக்கு பிடிக்காத ஆங்கிலபாடத்தை கடைசியாக படிக்கலாம் என்று தள்ளிவிட்டு மற்ற பாடங்களை படித்தான். தேர்வு நாள் நெறுங்கியபோது ஆங்கிலம் குறித்த அச்சம் இன்னும் அதிகரித்தது. ஆனால் அவனிடம் அவற்றை முழுமையாக பயில இப்போது நேரமில்லை. நாளை-நாளை என்று தள்ளிப்போட்டு கடைசியில் தேர்வுத் தேதியே வந்துவிட்டது. அரைகுறை படிப்புடன் ஆங்கிலத் தேர்வெழுதி தோல்வியுற்றான். மற்ற எல்லா பாடங்களிலும் 75% மேல் எடுத்தவன், ஆங்கிலத்தில் மட்டும் 10 மதிப்பெண்ணோடு நின்றிருந்தான்.;

  • உடல்பருமணாக இருந்த ஒருவரின் உடல் எடைகுறைய, தினமும் 5 கி.மீ ஓட்டப்பயிற்சி மேற்கொள்ள வேண்டுமென்று மருத்துவர் பரிந்துரைத்தார். சற்றே பருமணான அவருக்கு 100 மீட்டர் ஓடுவதே மிகவும் கடினம். பின் எங்கிருந்து 5 கி.மீ ஒடுவது. ஒடுவது கடினம் என்பதால், அதை காலையில் செய்யால் மாலையில் செய்யலாம் என்று தீர்மானித்து அப்போதைக்கு தள்ளிப்போட்டார். மாலை வேறுவேலைகளில் மூழ்கிவிடவே, ஓட்டப்பயிற்சி நடக்கவே இல்லை; மீண்டும் மறுநாள் அதே கதை தொடர்ந்தது. ஒரு வாரத்தில் ஒருமுறை கூட ஓடாமல் இப்படியே கடினமான பயிற்சியை தள்ளிப்போட்டால், எப்படி உடல் எடை குறை வழிபிறக்கும். ஆரோக்கியத்தை பேன, சில கடினமான விடயங்களை செய்துதானாக வேண்டும். கஷ்டப்படாமல் வெற்றி எப்படி சாத்தியம்?

கடினமான பாடங்களை அப்புறம் படிக்கலாம் என்று தள்ளிப்போட்டு எப்பவுமே படிக்கமுடியாமல் போனதால், தேர்வில் தோற்று மறுமுறை எழுதவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான். பாடங்கள் கடினமோ, எளிதோ, அதை அந்த மாணவன் தான் படித்தாக வேண்டும். எப்படியும் படித்தாகவேண்டும் என்ற கட்டாயம் இருக்கும்போது, எதற்காக நாளை படிக்கலாம் என்று அந்த கடினமான வேலையை தள்ளிப்போட வேண்டும். அப்படி தள்ளிப்போடுவதால் பாடத்தின் கடினம் குறைந்துவிடப்போகிறதா? இல்லை. உடனுக்குடன் படித்தால், போதிய நேரம் இருக்கும் காரணத்தினால் அவற்றை மறுமுறை படித்து, நினைவுகூர்ந்து வெற்றி பெறலாம். ஆனால் கடைசியில் படிக்கலாம் என்று தள்ளிப்போட்டு, கடைசி 1-2 நாட்களில் அதை படிக்கும் போது, தேர்வு குறித்த பயம் மேலும் அதிகரித்து மேற்கொண்டு படிக்கமுடியாமல் திணற நேருகிறது.


உடல் பருமண்குறைய உடற்பயிற்சி செய்தால் தான் முடியும். இதை நாமெல்லோரும் நன்றாக அறிவோம். அந்த உடல் பயிற்சி சற்று கடினமாகத்தான் இருக்கும். அந்த கடினமான பயிற்சியை மேற்கொள்ளாமல் ஏதேனுமொரு காரணத்தை சொல்லி தள்ளிப்போட்டால், உங்கள் உடல் மெலிவதற்கு பதிலாய் இன்னும் வளர்ந்துகொண்டேதான் போகும். உடற்பயிற்சி கடினம், உணவுக்கட்டுப்பாடு கடினம், துரித உணவை தவிர்ப்பது கடினம், என்று எல்லா ஆரோக்கியமான விடயங்களின் கடினத்தை மட்டும் பார்த்து, அதை பின்னர் செய்யலாம் என்று தள்ளிப்போட்டால், எல்லா தவறான பழக்கங்களும் தொடர்ந்துகொண்டே இருக்குமே!


உங்கள் அன்றாட வாழ்வில் நிறைய கடினமான மற்றும் கடினமான வேலைகள் கலந்து வரும். அவற்றில் எளிமையானவற்றை செய்ய உங்கள் மனம் தயாராக இருக்கும். எல்லா கடினமான காரியங்களையும் பின்னர் செய்யலாம் என்று தள்ளிப்போடத்தான் எல்லோரும் மனமும் விரும்பும். ஆனால், எவ்வளவு தள்ளிப்போட்டாலும், அவற்றை நீங்கள்தான் மீண்டும் முன்னின்று செய்ய வேண்டுமென்ற யதார்த்தத்தை உணர்ந்தால், பின்னர் செய்யலாம் என்று தள்ளிப்போடுவதற்கு பதிலாய், இன்றே, இக்கணமே செய்ய துவங்குவீர்கள். எவ்வளவுக்கெவ்வளவு கடினமான காரியங்களை தள்ளிப்போடாமல், உடனுக்குடன் செய்து முடிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு நீங்கள் புதியவற்றை சந்திக்க தயாராக இருப்பீர்கள். கடினமான காரியங்கள் முன்னரே முடிக்கப்படுவதால், எளிய காரியங்களை பின்னர் யார்வேண்டுமானாலும் எளிதாக செய்து காரியத்தை வெற்றிகரமாக முடிப்பது சாத்தியமாகிறது.


  • கடினமான செயல்களை முன்னரே எடுத்து முடித்துவிடுவதால், உங்கள் அன்றாட உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது.

  • அன்றைய தின வேலையை முழுவதுமாக முடித்த மனநிம்மதியும், திருப்தியும் ஏற்படுகிறது;

  • நாளை செய்யலாம் என்று தள்ளிப்போட்டு எல்லாவற்றையும் கடைசி நேரத்தில் அவசரமாகவும், தரக்குறைவாகவும் செய்யும் அவலநிலையிலிருந்து தப்பித்துக் கொள்கிறீர்கள்;

  • நேரமேலாண்மை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது;

  • வேலைகள் முடிந்துவிடுவதால்,

  • மீதமுள்ள எளிமையான வேலைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்து செயல்படுத்துவதும் சாத்தியமாகிறது;

செயல் எதுவானாலும், உங்கள் வெற்றிக்கு நீங்கள் கடுமையாக உழைத்தால்தான் முடியும். அந்த கடின உழைப்பானது, உங்கள் இலக்கை நோக்கிய திட்டமிட்ட செயல்பாடாக இருந்தால், நீங்கள் எண்ணியவற்றை எண்ணியாங்கு சாதிக்கலாம். உங்களின் எல்லாச் செயல்களையும் சரியாக செய்துமுடிக்க

  • நீங்கள் செய்யவேண்டிய அவசியமான-அவசரமான செயல்களை பட்டியலிடுங்கள்;

  • அவற்றில் எது அவசரம், எந்த செயல்களுக்கு நேரம் குறைவாக இருக்கிறது என்பதை அலசி, அதற்கேற்ப செயல்களை செய்யும் முறைமைகளை மாற்றியமையுங்கள்;

  • வேலை எவ்வளவு கடினமானதாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; அவற்றை சிறிது சிறிதாக பிரிந்து படிப்படியாக செய்யும்போது, எல்லாமே சாத்தியமாகும்;

  • இவை எல்லாவற்றையும் தாண்டி, சிக்கல்கள் நிறைந்தால், உரிய மருத்துவரின் உதவியை நாடுங்கள்;

உங்கள் வேலைகளை அதன் தன்மைக்கேற்ப, செய்துமுடிக்க சரியான திட்டம் வேண்டும். திட்டத்தில் கடினமான வேலைகளை நாளை என்று தள்ளிப்போட்டால், அந்த நாளை என்பது என்றுமே வராது. வேலை எளிதோ? கடினமோ? இன்றே, இக்கணமே முடிப்பவர்களால் மட்டுமே, புதிதாய் வரும் வேறு வேலைகளுக்கு தயாராக இருக்கமுடியும்;


இன்றைய கடினப்பட்டியலை

நாளை என்று தள்ளிப்போட்டால்

அந்த நாளை என்றுமே வராது;


நாளை செய்யலாம் என்று எதிர்பார்த்து தள்ளிப்போடுகிறீர்கள்

ஒருவேலை நாளை என்பது உங்களுக்கு இல்லாமல் போனால்?


- [ம.சு.கு 30.05.2023]


[திரு, பிரயன் டிரேசி எழுதிய “காலை எழுந்தவுடன் ஒரு தவளை சாப்பிடுங்கள்” என்ற நூலை வாசியுங்கள்.]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page