top of page

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 230 - தானியங்கி யாக்குங்கள்...!

Writer: ம.சு.கும.சு.கு

Updated: Jan 14

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-230

தானியங்கி ஆக்குங்கங்கள்;


  • வங்கிகள், தங்கள் வர்த்தகத்தைப் பெருக்க, நிறைய வாடிக்கையாளர்களை தொடர்ந்து சேர்க்க வேண்டியுள்ளது. அதே சமயம், வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும்போது, அவர்களுக்குகான பணம் செலுத்துதல், எடுத்தல் தேவைகள் அதிகரிக்கின்றன. அதை கையாள எண்ணற்ற ஊழியர்கள் தேவைப்பட்டார்கள். ஒரு வங்கிக் கணக்கில் வரவு செலவு நிகழ, அதை செய்வதற்கு ஒருவர்,, சரிபார்ப்பதற்கு ஒருவர் என்று குறைந்தபட்சம் இரு ஊழியர்கள் தேவைப்பட்டனர். பண வரவும், கணக்கிலிருந்து கொடுப்பதும் வழக்கமான ஒன்றுதான். அவற்றை வரவு வைப்பதும், பற்று வைப்பதும் தொடரும் வழக்கம்தான். ஆனால், அதை மனிதன் செய்யாமல், ஒரு இயந்திரம் செய்தால் எப்படி என்று யோசித்தார்கள். ஐந்து ஊழியர்கள் செய்யக்கூடிய பண வரவு-செலவு வேலையை, ஒரே இயந்திரம் “தானியங்கி பணம் வழங்கும்” இயந்திரம் (ATM) செய்யத் துவங்கியது. அலுவலக வேலைநேரம் தாண்டி, 24 மணிநேரமும் அந்த தானியங்கி இயந்திரம், வாடிக்கையாளர்களுக்கான வரவு-செலவு வேலையை கவனித்தது.

  • திருப்பதி என்றால், நம் நினைவிற்கு வருவது லட்டு. ஒருகாலத்தில், நூற்றுக்கணக்கான லட்டுகளை கையால் அனுதினமும் ஊழியர்களைக் கொண்டு தயாரித்தனர். ஒரேயளவு மாவு, ஒரேயளவு வெல்லம், ஒரே குறிப்பிட்ட அளவு இதர பொருட்கள் என்று தொடர்ந்து செய்ததையே செய்தவர்களால், அதிகரிக்கும் லட்டு தேவைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஏன் இதை இயந்திரம் கொண்டு செய்யக்கூடாதென்று யோசித்தார்கள். இன்று அனுதினமும் இலட்சக்கணக்கில் லட்டுகள் இயந்திரத்தின் உதவியுடன் ஒரேசீராக தயாராகின்றன.


செய்ததையே, திரும்பத்திரும்ப செய்ய வேண்டிய இடத்தில், அதை செய்வதற்கு மனிதன் சலிப்படைகிறான். ஆனால் இயந்திரம் சலித்துக்கொள்வதில்லை. எத்தனை இலட்சம் முறை செய்வதானாலும், அது ஒரே மாதிரி கவனமாகவும், சீராகவும் செய்வதால், மனிதன் செய்வதைவிட, இயந்திரம் செய்வது இன்று மேம்பட்டதாகிவிட்டது. அது பணம் வழங்கும் தானியங்கி இயந்திரமோ, லட்டு செய்யும் இயந்திரமோ, திரும்பத் திரும்ப ஒரே செயலைச் செவ்வணே செய்வதில், இயந்திரத்தை மனிதனால் என்றுமே மிஞ்ச முடியாது.


அன்றாட செயல்களை தானியங்கியாக்கி, இயந்திரத்திடம் கொடுத்துவிட்டால், மனிதனின் தேவை இல்லாமல் போய்விடும். இங்கு நிறைய பேருக்கு வேலை பறிபோகும் என்று காரணம் சொன்னார்கள். ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். கடந்த 2-3 நூற்றாண்டுகளில் எல்லாத் துறைகளில் இயந்திரம் நுழைந்திருந்தாலும், பல மடங்கு பெருகிவிட்ட மக்கள் தொகைக்கு வேலை இருந்து கொண்டேதான் இருக்கிறது. வேலை பறிபோய்விடும் என்பதெல்லாம் இயலாதவர்களின் சாக்கீடுகள். புத்திசாலிகள், அதைக் கடந்த அடுத்த கட்டத்திற்கு எளிதாக நகர்ந்துவிடுகிறார்கள். காலங்காலமாய் செய்தவைகளெல்லாம், தானியங்கி ஆகும்போது, புதுப்புது தொழில்களும், முறைமைகளும் வந்துகொண்டே இருக்கிறது.


உங்களின் அன்றாட செயல்களை தானியங்கியாக்குவதன் மூலம்;


  • உங்களின் நேரத்தை மிச்சப்படுத்தி, அடுத்த கட்ட நகர்வுகளுக்கு உங்களை நீங்கள் தயார் படுத்திக்கொள்ளலாம்;

  • உங்கள் உற்பத்தித் திறன் பண்மடங்கு அதிகரிக்க வழி ஏற்படும்;

  • உங்கள் வேலைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்து நிர்வகிக்க ஏதுவாகும்;


உங்கள் செயல்களை தானியங்கியாக்கும் போது, எல்லாமே ஒரேமாதிரி நடக்கும். காலத்திற்கேற்ப மாற்றங்கள் தானாக நிகழாது. தேவையான மாற்றங்களை அவ்வப்போது நீங்கள்தான் கவனித்து ஏற்படுத்தவேண்டும். மனிதர்கள் சோர்வடைவதுபோல, இயந்திரங்களும் தேய்ந்து சேதாரமாகக்கூடும். முன்னெச்சரிக்கையுடனான பராமரிப்பு வேலைகள், சிக்கல்களை தவிர்க்க வழிவகுக்கும்;


செயல்கள் தானியங்கியாக்கி, உற்பத்தியை பெருக்குவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. அதை நீங்கள் சரிவர நிறைவேற்றத் தவறினால், உங்கள் போட்டியாளர்கள் எல்லாவற்றையும் விழுங்கிச் சென்றுவிடுவார்கள். இங்கு எதையெல்லாம் தானியங்கி ஆக்கலாம் என்று தொடர்ந்து சிந்தியுங்கள், செயல்கள் பெரியதோ, சிறியதோ, கூடியவரை எல்லாவற்றையும் தானியங்கி ஆக்குவது, இன்றைய போட்டியுலகில், உங்களை ஒருபடி மேலே நிறுத்தும்;


இந்த கட்டுரை எழுதும் நாட்களில், இன்னும் செயற்கை நுண்ணறிவு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவ்வளவாக வந்திருக்கவில்லை. அதேசமயம், அதற்கான எண்ணற்ற ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்துகொண்டிருக்கிறது. இதை 10 ஆண்டுகள் கழித்து வாசிக்க நேர்ந்தால், இங்கு நான் குறிப்பிடும், தானியங்கியாக்குவதென்ற தேவை, தானாகவே செயற்கை நுண்ணறவுகளின் மூலம், இயந்திர மனிதர்கள் மூலம், முழுமையாக நிகழ்திருக்கும்.



செய்ததையே எத்தனை நாளைக்கு வெறுமனே

செய்து கொண்டிருப்பது?

எதைச் செய்வதற்கு இதற்குமேல் பெரிதாய்

மனிதமூலை தேவையில்லையோ

அதை இயந்திரமயமாக்கி தானியங்கியாக்குங்கள்!


செய்ததையே நீங்கள் செய்துகொண்டிருந்தால்

உங்கள் மூலையும் சிந்தனைத்திறணும் மழுங்கலாம்!

இயந்திரத்தில் தானியங்கி ஆக்கிட

ஆரம்பத்தில் ஆயிரம் தடங்கலும், பயமும் வரலாம்;

எல்லாவற்றையும் கடந்து

தானியங்கி ஆக்கிவிட்டால் – இனி

உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள்தான் எஜமானன்!



- [ம.சு.கு 27.05.2023]

!

Recent Posts

See All

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page