top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 225 - அதற்குரிய இடத்தில் வைத்திருங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-225

அதற்குரிய இடத்தில் வைத்திருங்கள்!


  • ஒரு நடுத்தர அளவுடைய உற்பத்தி நிறுவனத்திற்கு, புதிய வியாபார ஒப்பந்தம் பேசுவது குறித்து, ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி வந்திருந்தார். ஒப்பந்த விடயங்களை இடைநிலை அலுவலர்கள் பேசிக்கொண்டிருக்க, அந்த தலைமைச் செயலதிகாரி அந்த நிறுவனத்தின் உற்பத்தி தளத்தை பார்வையிட சென்றார். அங்கு எல்லா பொருட்களும் பரவலாக வைக்கப்பட்டிருக்க, எல்லா ஊழியர்களும் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தனர். முழுதொழிற்கூடத்தையும் பார்வையிட்டு வந்த பின்னர், தன் அதிகாரிகளிடம், தற்சமயம் ஒப்பந்த வேலைகளை நிறுத்துமாறு கூறிவிட்டு, அந்த நிறுவன முதலாளியிடம், எங்கள் பொருட்கள் எந்தவொரு பிழையுமில்லாமல், தரம் குறையாமல் இருக்க வேண்டும். அதற்கு உங்கள் தொழிற்கூடம் தயாராக இல்லை என்று கூறிவிட்டு, அடுத்த ஆண்டு உங்கள் தொழிற்கூடத்தை மேம்படுத்திவிட்டு கூறுங்கள், என்று சொல்லிவிட்டு சென்றார்!

  • இரவு 11 மணியளவில் வீட்டின் பின்புறத்தில் ஒரு பிள்ளைக்கு பாம்பு கடித்துவிட்டது. பக்கத்து தெருவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவர்களின் நான்கு சக்கர வாகனத்தின் சாவியை தேடினார்கள். 5 நிமிடம் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அவர்கள் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள். அந்த பிள்ளைக்கு சற்று வேகமாக விஷம் ஏறியிருந்ததால், காப்பாற்ற பெரும்பாடாகிவிட்டது. 10 நிமிட நேர தாமதத்தால், விஷம் சற்று கடுமையாக பரவி சிக்கலாக்கியது. இரவு வீட்டிற்கு வந்தவுடன் வாகனத்தின் சாவியை எங்கு வைக்கவேண்டும் என்ற விதியில்லாமல், கைவரும் இடத்திலெல்லாம் வைத்தால், தேவையான நேரத்தில் அது கிடைக்கப்பெறாமல் திண்டாடவேண்டியதுதான்;

நுட்பமான வேலைகளை செய்யும்போது, அதை செய்வதற்கு ஏற்ற சூழல் இருக்க வேண்டும். அவற்றை முதல் முறையில் சரியாக செய்யவேண்டுமென்றால், அவற்றிற்கு தேவையான எல்லா பொருட்கள் சரியாகவும், தயாராகவும் இருக்க வேண்டும். ஒன்றை செய்வதற்கு எடுக்கும்போது, அதற்குத் தேவையான எல்லா மூலப்பொருட்களும், தேடித்தேடி எடுக்கவேண்டிவந்தால், எப்படி உரிய நேரத்தில் உற்பத்தியை முடிக்க முடியும். உற்பத்திக் கூடத்தில் பொருட்கள் ஒரே சீராக அடுக்கிவைக்கப்படவில்லை என்றால், என்ன இருக்கிறது, என்ன இல்லை, இருப்பவை எவ்வளவு இருக்கிறது. ஏதேனும் பற்றாக்குறையா? என்று எப்படி தெரியும். இவை தெரியாமல் எப்படி பெரிய நிறுவனங்களுக்கு தரமான பொருளை சரியான நேரத்தில் தொடர்ந்து கொடுக்க முடியும்? உற்பத்திக்கூடும் ஒழுங்காக இல்லாவிட்டால், உங்களுக்கு வருகின்ற வியாபாரம் தடைபடத்தானே செய்யும்!


எப்போதும் வாகனங்களை, அவசரத்திற்கு எடுத்து பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவசரத்திற்கு பயன்படாத வாகனம், இருப்பதில் பயனேதும் இல்லை. யாருக்கு எப்போது மருத்துவ உதவி தேவைப்படும், காவலர் பாதுகாப்பு தேவைப்படும் என்ற விடயங்களை நம்மால் முழுமையாக கணிக்க முடியாது. போகப்போக நிறைய மாற்றங்கள் வரும். ஆனால் நம்மால் இயன்ற உதவியை எக்கணமும் செய்யத் தயாராக இருந்தால், அதற்குத் தேவையான எல்லாவற்றையும் உரிய இடத்தில் தயாராக வைத்திருந்தால், உங்களால் எளிதில் வெற்றிகான முடியும்;


உங்களில் எத்தனைபேர்

  • தினமும் சாவியைத்தேடியும், மூக்குகண்ணாடியை தேடியும் சிலநிமிடங்களை வீணடிக்கிறீர்கள்;

  • முக்கிய கோப்புக்களை தேடித்தேடி நீங்கள் எப்போது வேலையை முடிக்கிறீர்கள்?

  • உங்களுக்கு தேவையான ஆடையை 1 நிமிடத்திற்குள் எடுக்கமுடிகிறது?

  • உங்களுக்குத் தேவையான எல்லாப் பொருளையும், ஒரே நிமுடத்தில் உங்களால் தேடியெடுக்க முடியுமா?

நீங்கள் வெற்றிபெற விரும்பினால், நல்ல தரமான பொருட்களை குறைந்த நேரத்தில் தயாரித்து சந்தைப்படுத்த வேண்டும். செய்கின்ற எல்லா வேலைகளையும், முதல் முறையிலேயே சரியாகவும், சீக்கிரமாகவும் செய்ய வேண்டும். அப்படிச்செய்ய, முதலில், அவற்றிற்கு தேவைப்படும் பொருட்கள் யாவும், அதற்குரிய இடங்களில் எப்போதும் தயாராக இருக்கவேண்டும். மூலப்பொருளும், தேவையான ஆயுதங்களும், இயந்திரங்களும் இல்லாவிட்டால், நீங்கள் எவ்வளவு போராடினாலும், எதையும் குறித்த நேரத்தில் தரமாக முடிக்க முடியாது. உங்கள் செயல்களின் வெற்றிக்கு

  • உங்கள் செயல்களுக்கென்று ஒரு சிறு விதியை உருவாக்கிக் கொள்ளுங்கள்

  • தேவையற்ற பொருட்களை முதலில் கழித்துவிடுங்கள். அவை தேவையே இல்லாமல் உங்கள் இடத்தை அடைப்பதோடு, உங்கள் பொருளையும் வீணாக்கும்,

  • உங்கள் செயல்களின் மீதான உங்கள் கவனம் இன்னும் பலமடங்கு அதிகரிக்கட்டும்;

  • எடுத்தவற்றை, மீண்டும் எடுத்த இடத்தில் வைத்துப் பழகுங்கள். அது நீங்கள் உண்ணும் தட்டானாலும் சரி, படிக்கும் புத்தகமானாலும் சரி;

  • நீங்கள் மட்டும் முறையாகவும், கட்டுப்பாடாகவும் இருந்தால் போதாது. எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்கும் கலாச்சாரம் உங்கள் நிறுவனம் முழுவதும், உங்கள் குடும்பம் முழுவதும் பரவ வேண்டும். யாரொருவர் மாற்றிவைத்தாலும், எல்லோரும் தேட வேண்டிவரும்;

  • எல்லா பொருட்களை வைக்கவும், குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்து, அதற்குரிய குறியீடுகளை நன்றாக தெரியும் வண்ணம் குறித்திடுங்கள். அப்போதுதான், ஏதேனுமொன்று அங்கில்லாது போனால், உங்கள் கண்களுக்கு எளிதில் தெரியும்;

  • பொருட்களை எடுத்து வைக்கும் முறைமை, உற்பத்தி முறைமை, என்று எல்லாவற்றிற்கும், ஏற்ற சரியான பழக்கவழக்கத்தை படிப்படியாய் நிறுவனத்தில் கட்டமையுங்கள்;

  • ஒவ்வொரு முன்னேற்றத்தையும் அங்கீகரித்து ஊக்குவியுங்கள்.


எல்லாவற்றிற்கும் ஒரு இடம் உண்டு

எல்லாவற்றையும் அதற்குரிய இடத்தில் வையுங்கள்

இருக்கவேண்டியது இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால்

வேலைகளை முடிப்பதில் சிரமமிருக்காது

பொருட்களை தேடி நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை;


உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு

ஜப்பானியர்களின் 5S முறையை படியுங்கள்;


ஜப்பானியர்களின் 5S முறைமை புரியவில்லை என்றால்

உங்கள் வீட்டு அட்டிலறையில்

உங்கள் மனைவி பொருட்களை

கையாளும் முறைமையை கவனியுங்கள்;


உப்போ, சக்கரையோ, புளியோ,

இருக்கவேண்டிய ஜாடியில்.

இருக்கவேண்டிய இடத்தில் இருக்கும்;

இந்த முறைமை உங்கள் அலுவலகத்தில்,

தொழிற்கூடத்தில், கல்விச்சாலையில்

எப்படி பயன்படுத்தவதென்று யோசியுங்கள்!!


- [ம.சு.கு 22.05.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page