“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-220
வெற்றிக்கு கொள்கைகள் முக்கியம்!
2009 ஆண்டு “சத்தியம் கம்பியூட்டர்ஸ்” நிறுவனத்தின் வீழ்ச்சியைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தியாவின் முன்னனி கணிணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக கொடிகட்டிப் பறந்த அந்த நிறுவனம், அதன் நிர்வாக இயக்குனர்களின் முறைதவறிய கணக்குவழக்குகளால் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. புகழின் உச்சியில் இருந்த திரு. இராமலிங்க இராஜூ, தேசத்தின் அவமானச் சின்னமாக மாறினார். ஏன்?
ஒரு நிறுவனத்தின் முதலாளி, அரசாங்கத்திற்கு கட்டும் வரிகளை ஏமாற்ற, தன் விற்பனைகளை தினமும் குறைத்து கணக்கெழுதினார். வியாபார நிர்வாக மென்பொருளில் போட்ட இரசீதுகள் சிலவற்றை அழித்து கணக்குகளை ஏமாற்றினார். சில மாதங்களுக்குப்பின், அந்த கணக்குகளை பரிசோதித்த அவரது ஆலோசகர், இவர் ஏமாற்றிய கணக்குகள் தவிர்த்து, மேலும் நிறைய இரசீதுகள் அழிக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தார். கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக இரசீதுகள் அழிக்கப்பட்டு, பணம் களவாடப்பட்டிருப்பது தெரிய வந்தது. அன்றிலிருந்து இரண்டு ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. அவர்களை தேடிப்பிடிக்கவும் முடியவில்லை. காவல் துறையில் புகார் அளிக்கவும் அந்த முதலாளிக்கு வழியில்லை. “திருடனுக்கு தேள்கொட்டின” கதைதான் அவருக்கு!
எந்த ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கும் அடிப்படைத் தேவை, நம்பிக்கையும், நாணயமும் தான். ஊழியர்கள், அரசாங்கம், முதலீட்டாளர்கள், வங்கிகள், வர்த்தகம் புரியும் வியாபாரிகள் என்று எல்லோர் மத்தியிலும், நிறுவனத்தின் நம்பிக்கையும், நாணயமும் எந்தளவு இருக்கிறது என்பதைப் பொருத்துத்தான், அந்த நிறுவனத்தின் நீண்ட கால இருப்பும், வளர்ச்சியும் நிர்ணயமாகிறது. சத்தியம் மென்பொருள் நிறுவனம், தன் முதலீட்டாளர்களை ஏமாற்ற, பொய்யான வியாபார கணக்குகளையும், முதலீடுகளையும் வெளியிட்டது. ஒருநாள் அது எல்லைமீறும்போது, அந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனரால் சமாளிக்க முடியாமல் சரணடைய நேரிட்டது. புகழ்பெற்ற அந்த சத்தியம் நிறுவனத்தை, இன்று வேறொருவர் எடுத்து நன்றாக நடத்துகிறார். நிறுவனத்தின் அடிப்படை கொள்கைகளிலிருந்து விலகிய இராமலிங்க இராஜூவிற்கு, பல்லாயிரம் கோடி மதிப்புடைய தன் முதிலீடு இழப்பும், அவமானமும் தான் மிஞ்சியது.
அரசாங்கத்திற்கு கட்டவேண்டிய வரியை ஏமாற்ற கணக்குகளை மாற்றினார். அதை தினமும் ஊழியர்களை கொண்டு திறம்பட செய்தார். அந்த வத்தையை கற்ற ஊழியர்கள், தங்கள் முதலாளியை ஏமாற்ற அதே உத்தியை கையாண்டார்கள். காவல் நிலையத்திற்கு சென்றால், யார் களவாடியது, எப்படி களவாடப்பட்டது என்று தெளிவாக விளக்க வேண்டும். அப்படி விளக்கினால், அந்த முதலாளி ஏமாற்றிய பலகோடி ரூபாய் வரியை வட்டியோடு கட்டவேண்டும். எப்படியொரு இக்கட்டாண சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அந்த முதலாளியே அந்த ஊழியர்களை கண்டுபிடித்து விசாரித்தபோது, அவர்கள் இவரை மிரட்டியுள்ளனர். அவர் செய்த வரி ஏய்ப்பு தகவல்கள் அனைத்தையும் தாங்கள் ஆதாரத்துடன் வைத்திருப்பதாகவும், அவற்றை அரசாங்கத்திற்கு கொடுத்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். திருடச் சென்ற வீட்டில், தேள்கொட்டினால், சத்தம் போட முடியாமல், யாரையும் உதவிக்கு அழைக்கமுடியாமல் திருடன் கஷ்டப்படுவது போலத்தான் அந்த முதலாளியும், ஊழியர்களின் ஏமாற்றுதல்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியாமல் நின்றார்.
ஒரு தனிமனிதனோ, நிறுவனமோ, அதன் அடிப்படை கொள்கைகளிலிருந்து விலகி, எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று துவங்கினால் நிலைமை என்னவாகும்;
உங்களைச் சார்ந்தவர்களின் நம்பிக்கையை படிப்படியாக இழக்க நேரிடும். “அவன் காசுக்காக எதையும் செய்வான்” என்ற அவப்பெயர் வந்துசேரும்;
உங்களைச் சுற்றியுள்ளவர்களும் அதே நோக்கில் உங்களை அனுகுவர். நீங்கள் ஒருவரை ஏமாற்றினால், இன்னொருவர் உங்களை ஏமாற்றுவதில் தவறில்லை என்று நியாயம் கற்பிப்பர்;
நிறுவனம் கட்டுக்கோப்பற்று, எல்லோரும் அவர்கள் இஷ்டம்போல் செயல்பட நேரிடலாம்;
கொள்கையற்ற செயல்களால், அப்போதைக்கு இலாபம் அடைந்ததுபோல இருந்தாலும், நீண்டகால நோக்கில் பெரிய பொருளாதார இழப்புக்களையும், சட்ட வழக்குகளையும் சந்திக்க நேரிடும்;
நீங்கள் எடுத்துக்கொண்ட இலட்சயத்தில் வெற்றிகாண, நீங்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள்;
உங்களை மனிதனாக வழிநடத்தவும், உங்கள் நிறுவனத்தின் ஆணிவேராகவும் இருக்கவேண்டிய அடிப்படை கொள்கை என்ன என்பதில் தெளிவு இருக்க வேண்டும்;
உங்கள் குழுவை வழிநடத்த, முதலில் நீங்கள் உங்கள் கொள்கைகளின் வழி நடந்து காட்ட வேண்டும்;
தொடர்ந்து கற்றலையும், உங்கள் திறன்களை மேம்படுத்த வேண்டும்;
கூடியவரை வெளிப்படைத் தன்மையை உங்கள் நிறுவனத்தில் கட்டமைக்க வேண்டும்;
எல்லா செயல்களுக்கும், ஒரு இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும்;
உங்கள் நேரப் பயன்பாட்டின் மீது தொடர்ந்த கவனம் இருக்க வேண்டும்;
மற்றவர்களின் கருத்துக்களையும், குறைகளையும் பொறுமையாக கேட்டு, தேவையான மாற்றங்களை சிந்தித்து செயல்படுத்த வேண்டும்;
எந்தவொரு செயல்திட்ட முடிவுகளை எடுக்கும்போதும், உங்கள் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து விலகி விடக்கூடாது. உங்கள் அடையாளம், உங்களின் அடிப்படை கொள்கைகள் தான்.
சக ஊழியருடன், வியாபார தொடர்புகளுடன் உங்கள் உறவையும், பரஸ்பர புரிந்துணர்வை தொடர்ந்து மேம்படுத்துங்கள்;
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் குடும்பத்துடன் மகிழ்ந்து கழிக்கவேண்டிய அடிப்படை நேரத்தை எதற்காகவும் தவறவிட்டுவிடாதீர்கள்;
நீங்கள் எதற்காக, எதை செய்கிறீர்கள் என்ற தெளிவுடன் செயல்பட்டால், உங்களுக்கென அடிப்படை கொள்கைகளை வகுத்து அந்த கொள்கை வட்டத்திற்குள் கட்டுக்கோப்புடன் செயல்பட்டால், உங்களின் வெற்றியை நோக்கிய பயனம், அர்த்தமுடையதாக இருக்கும்.
உங்களிடம் நிறைய வேண்டுகோள்கள் வரலாம்;
ஊழியர்கள் சிலவற்றை மாற்றித்தர கேட்கலாம்;
ஆனால், எதை ஏற்க வேண்டும்?
எதை செய்ய வேண்டும்? என்று
உங்களுடைய கொள்கைகள் தான் தீர்மானிக்கும்;
நீங்கள் எப்படிப்பட்ட மனிதர் என்பதை முதலில்
நீங்கள் திர்மானிக்கவேண்டும்;
உங்கள் தீர்மானத்தை தொடர்ந்துதான்
உங்களை சமுதாயம் அங்கீகரிக்கும்;
உங்கள் தீர்மானம் தான் உங்களின் அடிப்படை கொள்கை;
உங்கள் கொள்கைகள் தான் உங்களின் அடையாளம்;
நிறுவனம் தனக்கென கொள்கைகளை வகுத்து
முறையாக செயல்படுத்தினால்
அதன் ஊழியர்களுக்கும்,
நிறுவனத்துடன் இணைந்த மற்ற அனைவருக்கும்
அங்கு என்ன செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது
என்ற தெளிவும், முறைமையும் ஏற்படுவதுடன்
நிறுவனத்தின் கலாச்சாரமாக அது நிலைபெற்றிருக்கும்;
- [ம.சு.கு 17.05.2023]
உங்களிடம் நிறைய வேண்டுகோள்கள் வரலாம்
ஊழியர்கள் சிலவற்றை மாற்றித்தர கேட்கலாம்
ஆனால், எதை ஏற்க வேண்டுத்
எதை செய்ய வேண்டும் என்று
உங்களுடைய கொள்கைகள் தான் தீர்மானிக்கும்;
நீங்கள் எப்படிப்பட்ட மனிதர் என்பதை முதலில்
நீங்கள் திர்மானிக்கவேண்டும்;
உங்கள் தீர்மானத்தை தொடர்ந்துதான்
உங்களை சமுதாயம் அங்கீகரிக்கும்;
- [ம.சு.கு 17.05.2023]
Comentarios