top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-172 - கருத்துக்களை சொல்வதில் கவனமாக இருங்கள்!"

Updated: Mar 31, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-172

கருத்துக்களை சொல்வதில் கவனமாக இருங்கள்!


  • உங்கள் துணைவியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, ஏதோவொரு ஒரு உதாரணத்திற்காக அவரது பிறந்தகத்தில் நடந்த ஒரு தவறான நிகழ்வை நீங்கள் சொல்கிறீர்கள். அதை உங்கள் துணை, அவரை குத்திக்காட்டும் வகையில் சொல்வதாக புரிந்துகொண்டால் நிலைமை என்னவாகும்? அடுத்த பல மணி நேரங்களுக்கு நீங்கள் செய்த, செய்யாமல் விட்ட எல்லா சரிதவறுகளும் உங்கள் துணைவியாரால் பட்டியலிடப்பட்டு, எதற்காக அந்த உதாரணத்தை சொன்னேனோ என்று வருத்தப்படும் அளவிற்கு நீங்கள் நேரடியாகவோ / மறைமுகமாக அவமானப்படுத்தப் படலாம்.

  • அரசியல் தலைவர்களை ஆங்காங்கே பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுப்பார்கள். பேட்டிகளில், பல்வேறுபட்ட குறுக்குக் கேள்விகள் கேட்டு தலைவரை திண்டாட வைக்க பத்திரிக்கையாளர் திட்டமிடுவார். அந்த கேள்விகளை எப்படி சமாளிக்க வேண்டுமென்று அனுபவம்வாய்ந்த அரசியலாளர்களுக்கு தெரியும். சிலசமயங்களில், அவர்கள் சொல்லும் பதில்கள், வேறொன்றோடு சம்பந்தப்படுத்தி தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. அடுத்த நாள், அந்த தலைவர் தான் சொன்ன கண்ணோட்டம் வேறு, நான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதென்று மறுப்பரிக்கையோ, விளக்கமோ வெளியிடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார். சில தலைவர்கள, பத்திரிக்கையாளர்களின் கேள்விகளில் கோபமடைந்து பேசி, சில சிக்கல்களில் சிக்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம்;

உங்கள் துணைவியிடம், உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள உங்களுக்கு முழுஉரிமை இருக்கலாம். ஆனால், அவர்களைப்பற்றி, அவர்களின் பிறந்தகத்தைப்பற்றி சொல்லும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.தேவையற்ற ஒரு கூடுமல் வார்த்தை, மிகப்பெரிய ஊடலாக மாறக்கூடும். தேவையற்ற கருத்துக்களை, அபிப்பிராயங்களை, அவர்கள் கேட்டாலும் சொல்லாமல் இருப்பது சாலச் சிறந்தது. அவர்கள், தான் அழகாக இருக்கிறேனா என்று கேட்டால், 1-2 தருணங்களில் எதிர்மறையாக சொல்லிப்பாருங்கள், அவர் பிறந்தகத்தைப் பற்றி 1-2 முறை குறைகூறிப்பாருங்கள், அதன் பின்விளைவுகள் உங்களுக்கு சிறந்த வாழ்க்கைப்பாடத்தை கற்றுக்கொடுக்கும். பின்னால், உறக்கத்திலும் விழிப்புடன் பேசுவீர்கள்!


ஒரு தலைவராக நீங்கள் இருக்கும்போது, உங்களைச் சுற்றியுள்ள நபர்கள், நிகழும் செயல்கள், கேட்கப்படும் கேள்விகள் பல உங்களுக்கு உடன்பாடில்லாதவைகளாக இருக்கக்கூடும். ஆனால் அவற்றை நேரடியாக எல்லா சமயங்களிலும் விமர்சிக்க முடியாது. இடம், நபர்கள், செயலின் தன்மை குறித்து ஆராய்ந்து நிலைமைக்கு ஏற்ப கருத்துக்களை கூறவேண்டும். எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டுமானால், ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் குறை கூறாமல், தன் காதுகளுக்கு வரும் குற்றங்குறைகளை ஆக்கப்பூர்மாக களைந்து, செயல்பட்டால் மட்டுமே, ஒரு நல்ல தலைவராக பரிணமிக்க முடியும்.


அன்றாட வாழ்வில், உங்கள் எண்ணவோட்டங்கள் பல்வேறு திசைகளில், நொடிக்கு நொடி பல்வேறு அபிப்பிராயங்களுடன் வந்து போய்க்கொண்டே இருக்கும். எல்லாவற்றையும் அப்படியே வெளியில் சொல்லமுடியாது. ஒரு போராட்டக்குழுவின் கொள்கையில் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால், அதை அமைதியான முறையில் சமூக ஊடகத்திலோ, பத்திர்க்கை செய்தியாகவோ சொல்லலாம். ஆனால் அந்த போராட்டக்காரர்கள் கூட்டத்திற்குள் நின்று கொண்டு அவர்களுக்கு எதிராக அவதூரு கருத்துக்களை சொன்னால், நிலைமை மோசமாகி அடிதடிகள் நிகழக்கூடும். என்ன சொல்ல வேண்டும், எங்கு சொல்லவேண்டுமென்று தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்காவது சிக்கலில் சிக்க வாய்ப்பாகிவிடும்.


எந்த ஒரு நபரின் மீதும், எந்த ஒரு பொருளின் மீதும், எந்தவொரு கொள்கையின் மீதும், உங்களது, அபிப்பிராயத்தை, கருத்துக்களை சொல்வதற்கு முன், நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய சில அடிப்படை விடயங்கள் என்னென்ன?

  • நீங்கள் சொல்லவேண்டியதை சுருக்கமாக, தெளிவாக சொல்ல வேண்டும். தேவையற்ற முன்கதைகளும், பின் கதைகளும், தவறான புரிதலை ஏற்படுத்தக் கூடும்;

  • கருத்துக்கள் ஆக்கப்புர்வமானதோ, எதிர்மறையானதோ – அவற்றை சொல்ல நாம் எந்தமாதிரியான வார்த்தைகளை உபயோகிக்கிறோம் என்பது அதிமுக்கியம்;

  • யாரிடம் பேசும்போதும், மரியாதைக்குரிய வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும்;

  • உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் முன்னர், மற்றவர்கள் சொல்லவருவதை முழுமையாக கேட்க வேண்டும்;

  • எதைப்பற்றி பேசும்போதும், இடம்-பொருள்-ஏவல் அறிந்து பேச வேண்டும்.

  • உங்கள் கருத்துக்களை எப்படி மற்றவர் செவிகொடுத்து கேட்கிறோரோ, அதேவண்ணம் அவருடைய கருத்துக்களையும் செவிகொடுத்து கேளுங்கள்; நீங்கள் அமைதியாக மற்றவர்களின் கருத்துக்களை கேட்டாளேபோதும், பாதி பிரச்சனைகள் ஆரம்பத்திலேயே அடங்கிவிடும்;

  • எங்கும், எப்போதும் ஏட்டிக்கு, போட்டியாய் நிற்காதீர்கள்; கூடியவரை விட்டுக்கொடுத்துபோக முயற்சி செய்யுங்கள்;

  • யாரையும் தாழ்வாகவும் கருதாதீர்கள். எந்த வேலையையும் தாழ்வாக விமர்சிக்காதீர்கள்;

இந்த அறிவுகரைகள் நீண்டு கொண்டே போகும். ஒவ்வொரு சூழ்நிலையிலும், நடந்தவை, நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை குறித்து, நீங்களாக ஒரு அனுமானத்தை ஏற்படுத்திக் கொண்டு, உங்களுக்குள் தோன்றும் எண்ணங்கள், கருத்துக்கள், அபிப்பிராயங்களை, தோன்றியது தோன்றியவாறே வெளிப்படுத்தாமல், சற்று யோசித்து, அவசியமாக சொல்லவேண்டியவற்றை ஆக்கப்பூர்வமான வார்த்தைகளில், யாருடைய மனமும் புண்படாத வகையில் வெளிப்படுத்தும் வழியை யோசித்து பேசுங்கள்;


எந்த நபர் மீதும், எந்த பொருள் மீதும்

உங்களுக்கென்று தனிப்பட்ட கருத்தையும், அபிப்பிராயத்தையும் கொள்ள

உங்களுக்கு முழு உரிமை உண்டு – ஆனால்

அதை அப்படியே வெளிப்படுத்த உரிமை உண்டா? என்றால்

அது சற்று யோசிக்கப்பட வேண்டிய கேள்விதான்;


உங்களின் தனிப்பட்ட கருத்து அபிப்பிராயம்

எப்போதும் உங்களுடையது மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்;

உங்கள் கருத்தை, அபிப்பிராயத்தை அப்படியே வெளிப்படுத்தும் உரிமை

உங்களுக்கு முழுமையாய் இல்லை;

எங்கும், யாரிடத்தும் இடம் பொருள் ஏவல் அறிந்துதான்

உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்;


நம் நாட்டில் கருத்துச் சுதந்திரம் இருக்கிறதென்பதற்காக

நீங்கள் நினைத்ததையெல்லாம் அப்படியே பேசிவிட முடியாது;

உங்கள் கருத்து எந்த ஒரு தனிமனிதனையும், ஒரு சமூகத்தையும்

பாதிக்காத வரை எந்த பிரச்சனையும் இல்லை;


நீங்கள் சொல்லும் கருத்து உண்மையே ஆனாலும்

இடம், பொருள், ஏவல் அறிந்து சொன்னால்

உங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் உறுதியாகும்;


- [ம.சு.கு 30.03.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page