top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-168 - அடுத்தவர் கண்ணோட்டத்தில் பார்த்திருக்கிறீர்களா?"

Updated: Mar 27, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-168

அடுத்தவர் கண்ணோட்டத்தில் பார்த்திருக்கிறீர்களா?


  • பீகாரைச் சேர்ந்த ஒரு சிறுவன், கடையில் உணவுப்பொருளைத் திருடியதற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தபடுகிறான். அந்த வழக்கை விசாரத்தி நீதிபதி ஒருகனம் கண்கலங்கி, திருடிய சிறுவனை விடுவித்து, அரசாங்கம் அவனது குடும்பத்திற்கு “குடும்ப அட்டை, சில உடைகள் மற்றும் இதர பொருட்களை வழங்க அரசாங்கத்திற்கு உத்தரவிட்டார். இது நியாயமா?

  • வெளியே சென்று வீடுதிரும்பும்போது, எந்தவொரு அறிவிப்பும் இன்றி நாண்கு நண்பர்களை வீட்டிற்கு சாப்பிட அழைத்து வருகிறீர்கள். வந்ததும், மனைவியிடம் எல்லோரும் சாப்பிட உணவு பரிமாற உத்தரவிடுகிறீர்கள். வீட்டில் இருவருக்கு மட்டுமே சமைத்து வைத்துள்ள இல்லாலில் நிலை எப்படி இருக்கும்? மனைவியின் முகம் வாடிவிட்டதை கண்டு நண்பர்களுக்கு சரியாக சாப்பாடு போட மறுக்கிறாய் என்று மனைவியை கோபிப்பது நியாயமா?

தன் தாய் நோய்வாய்ப்பட்ட நிலையில், அவரை காக்கவும், தன் பசியின் காரணமாகவும் ஒரு சிறுவன் திருடியிருக்கிறான் என்பதை புரிந்துகொண்ட நீதிபதி, ஒருபுறம் அவன் திருந்தி வாழ வாய்ப்பளித்து, மறுபுறம் அரசு மற்றும் சமுதாயத்தின் அக்கரையின்மையை சுட்டிக்காட்ட விரும்பி அபராதத்தை அரசாங்கத்திற்கு விதித்தார். அந்த தீர்ப்பு எல்லாத்தரப்பினராலும் வரவேற்கப்பட்டாலும், இந்த நிலை ஏன் உருவாகிறதென்று ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும்? எல்லோரும் தனிமனித இலாபத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்காமால் அந்த கஷ்டப்படும் சிறுவனுக்கு ஒரு வேலை கொடுத்திருந்தாலோ, அல்லது ஏதாவதொரு சமூகசேவை அமைப்பின் உதவியைநாட வழிகாட்டியிருந்தாலோ, இந்த திருட்டு தவிர்க்கப்பட்டிருக்கலாம்!


விருந்தோம்பல் நம் கலாச்சாரம் என்பதை மறுப்பார் யாருமில்லை. ஆனால், அதற்குத் தேவையான தகவலையும், நேரத்தையும் கொடுத்தால் தானே வீட்டில் எல்லாவற்றையும் தயார் செய்ய முடியும். இருவருக்கு மட்டுமே சமைத்து வைத்துள்ள இடத்தில், திடீரென்று மதியம் 1 மணிக்கு 4 நண்பர்களை அழைத்துவந்து உணவு பரிமாற சொன்னால், எங்கிருந்து உணவு வரும். நண்பர்களை உணவு உண்பதற்கு அழைத்துவருவதற்கு முன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டில் தகவல் சொல்லியிருந்தால் ஏதாதவது ஏற்பாடு செய்திருப்பார், அல்லது அவர்கள் வந்ததும், குறைந்தது அரைமணி நேரம் அளித்தால், அவசரத்திற்கு ஏதாவது தயார் செய்வார். எதையும் செய்யாமல், உடனே உணவு பரிமாற சொன்னால், எங்கிருந்து கொடுப்பது? சில கணவன்மார்கள், இப்படித்தான் இல்லாலின் நிலையை புரிந்து கொள்ளாமல், அவர்களை சிக்கலில் சிக்கவைக்கின்றனர்.


நீங்கள் செய்யும் செயல்களில் சில முடிவுகளை எடுக்கும் போது, மற்றவரின் கண்ணோட்டத்திலும் அதை பார்த்து முடுவெடுப்பது அதிமுக்கியம்.

  • உங்களால் சக ஊழியரின் கண்ணோட்டத்தில் பார்த்து, அவர்களை வழிநடத்த / ஆறுதல் சொல்ல முடிந்தால், ஊழியர்களுக்குள் பரஸ்பர நம்பிக்கை வளர்ந்து, ஒற்றுமை பெருகும்;

  • மற்றவரின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், நீங்கள் சொல்வதை எப்படி புரிந்துகொள்வார் என்ற புரிதல் உங்களுக்கு வரும்போது, மேற்கொண்டு எதை? எப்படி சொல்ல வேண்டும்? என்ற தெளிவு உங்களுக்கு வரும்;

  • உங்கள் கண்ணோட்டத்தில் மட்டுமே பிடிவாதமாக நிற்காமல், பிறரது கண்ணோட்டத்திற்கும், கருத்துக்கும் செவிசாய்க்கும் போது, சண்டை-சச்சரவுகளும், பொறாமை, வஞ்சனைகளும் இல்லாமல் குழுவின் செயல்பாடு மேம்படுகிறது;

  • பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் கண்ணோட்டத்தில் பிரச்சனைகளை கவனிக்கும் பொழுது, பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையும், புரிதலும் அதிகரிக்க வழிபிறக்கிறது;

  • இல்லறத்தில், உங்கள் தேவைகள் கடந்து, உங்கள் துணையின் கண்ணோட்டத்தில் எப்படி நீங்கள் செய்த / செய்யப்போகும் ஒரு விடயம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்ற புரிதல் உங்களுக்கு இருந்து, அதற்கு ஏற்ப உங்கள் செயல்பாடுகளை வகுத்துக் கொள்வதில்தான் உங்கள் இல்லறத்தின் வெற்றி இருக்கிறது.

ஒருபுறம் மற்றவரின் கண்ணோட்டத்தையும் பார்க்க வேண்டியது, அவசியமென்றாலும், சில சமயங்களில் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தவும் செய்யும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  • ஒரு மாபெரும் சாதனை படைக்க குழுவாக போராடும் இடத்தில், எல்லோரும் அவரவர்களின் தனிப்பட்ட கஷ்டங்களை கடந்து முழுமையாக போராட வேண்டும். அங்கு சக ஊழியருக்கு வரும் கஷ்டத்தை பார்த்து மனமிறங்கிக் கொண்டிருந்தால் எந்தவொரு சாதனையும் சாத்தியமில்லை. எல்லோரும் உடல் வருத்தி உழைத்தால் தான் சாதனைகள் சாத்தியப்படும்.

  • நீங்கள் செய்யும் செயலில், எல்லோரையும் ஒரு சேர திருப்திபடுத்த முடியாது. ஒரு சிலருக்கு பலனளிப்பது, மற்ற சிலருக்கு பயனில்லாமல் இருக்கலாம். எல்லோருடைய கண்ணோட்டத்தையும், இலாப-நட்டத்தையும் பார்த்துக்கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. பெரும்பாலான மக்களுக்கு நன்மை கிடைப்பவற்றை செய்ய வேண்டுயதுதான்.

தனிமனித செயல்பாடுகளில், மற்றவர்களின் கண்ணோட்டத்திலும் பார்த்து, முடிவுகள் எடுப்பது பல சிக்கல்களை தீர்க்க வழிவகுப்பது போல, தேசங்களுக்கிடையேயும் இந்த புரிதல் அவசியமாகிறது. தேசங்களுக்கிடைய எண்ணற்ற நெருக்கடியான சூழ்நிலைகள் வரும்போது, மிக நுண்ணிய அளவில் அதை ஆராய்ந்து இலாப-நட்டங்களை கணக்கிடாமல், மற்ற நாட்டின் அரசியல், பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, சில கருத்துக்களுக்கு, சில செயல்களுக்கு எதிர்வினையாற்றாமல் இருப்பது தேவையற்ற சண்டைகளை தவிர்த்து அமைதியை நிலைநாட்ட வழிவகுக்கும்.


உங்களுக்கு சரியானதை நீங்கள்

செய்வதற்கு முற்படுகிறீர்கள் – ஆனால்

உங்களுக்கு சரியானது இன்னொருவருக்கும்

சரியில்லாமல் இருக்கலாம்;

அப்பொழுது என்ன செய்ய?


மற்றவருக்கு ஏற்படும் பாதிப்புக்களைவிட

நீங்களும் சமுதாயமும் அடையும் பலன் அதிகம் இருந்தால்

அதை செயல்படுத்துவதில் அர்த்தம் இருக்கிறது;

செயல்படுத்துவதால் வரும் ஆதாயமும்

அதனால் அடுத்தவருக்கு ஏற்படும் பாதிப்பும்

சமமாக இருந்தால்,

செய்வது நல்லதா? செய்யாமல் விடுவதுநல்லதா?


உங்களுக்கு சரியென்று பட்டதை செய்வதற்குமுன்

அதனால் பாதிக்கப்படுபவர்கள் யாரேனும் இருப்பின்

அவர்கள் கண்ணோட்டத்தில் ஒரு நிமிடம் யோசியுங்கள்!


ஒருவேளை அந்த பாதிக்கப்படும் நபர்

உங்கள் நண்பரென்றால், உங்கள் நெருங்கிய உறவென்றால்

அந்த செயலை செய்வீர்களா என்று யோசியுங்கள்!


உங்கள் நண்பர், உறவினர் என்றால் செய்யமாட்டேன் என்றால்

அதை மூன்றாம் நபரிடத்திலும் செய்யாமல் இருப்பது தர்மம்!


உங்களுக்கு சரியானதை, மற்றவருக்கு சிறமமில்லாமல்

செய்வதெப்படி என்று யோசித்து செயல்படுத்தினால்

எல்லாமும், எல்லோருக்கும், எப்போதும் நன்மையில் முடியும்;


- [ம.சு.கு 26.03.2023]


Recent Posts

See All

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 361 - செல்வாக்குடையவர் முக்கியம்!"

நீங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டுமானால் – ஒன்று நீங்கள் செல்வாக்கு படைத்தவராகவோ அல்லது செல்வாக்குள்ளவரின் முழு ஆதரவுள்ளவராகவோ இருக்கவேண்டும்

Post: Blog2 Post
bottom of page